Saturday, July 14, 2018

பயிற்சியும் முயற்சியும் வளர்ச்சியும்

 (விடா முயற்சியும் தொடர்ப்  பயிற்சியுமே
நீடித்த வளர்ச்சியுடன்நிலையாக
சிகரத்தில் நிற்க வைக்கும்

இந்தப் பாலப் பாடம் அறிந்தால் போதும்
மற்றவை எல்லாம்
தானாய் நிழலாய்த்  தொடரும்

இந்தச் சூட்சமம் அறிந்தோர் அனைவருக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்வதோடு

திறமையும் தகுதியும் இருப்பதால்  தானே
 தலைவர்கள் ஆனோம்

 பின் வீணாய் இன்னும் எதற்கு
இந்த அயற்சித் தரும்கூடுதல்  பயிற்சி
 என நினைப்போர் மட்டும்

 சிந்திக்க ஒரு சிறிய முயற்சி
ஒரு சிறு கவிதையாய்)

அந்த அழகிய ஏரியில்
உல்லாசப் படகில்
பலரும் பயணத்துக் கொண்டிருந்தார்கள்

அதில் நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள்
 நீச்சல் அறியாதவர்களும் இருந்தார்கள்

 நீச்சல் அறிந்தவர்களின் கண்களும் மனமும்
ஏரியின் அழகில் அதன் குளுமையிலும்
மயங்கிக் களிக்க

அது அறியாதவர்களின்
 மனமும் நினைவும் ஏரியின் ஆழத்தையும்
இதற்கு முன் நடந்த விபத்தையும்
எண்ணியே  கலங்கிக் கொண்டிருந்தது

படகில் பயணம் செய்ய
நீச்சல் பயின்றிருக்க அவசியம் இல்லைதான்

ஆயினும் இரசித்துப் பயணிக்க
நீச்சல் அறிதல் நிச்சயம் அவசியம்

ஆம் எதையும்
வருந்திச் செய்யாது
விரும்பிச் செய்யவும்.
 விரும்பிச் செய்வதைத்
திருந்தச் செய்யவும்

பயிற்சி என்பது நிச்சயம் அவசியம்
.
 இன்றைய அரிமா மாவட்ட பயிற்சிமுகாமில்
கலந்து கொள்ளும் தலைவர் செயலாளர்
பொருளாளர் அனைவருக்கும் மனமார்ந்த 
வாழ்த்துக்களுடன்.

எஸ் வெங்கட சுப்பிரமணியன்
324B3 District  Area coordinator (Madurai )

8 comments:

vimalanperali said...

எதுவுமே பை பிராக்டிஸ்தான் என்பார்கள்,,,/

ஸ்ரீராம். said...

மனதின் அளவு அமைகிறது மகிழ்ச்சியும் கவலையும்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உண்மைதான். பயிற்சி மிகுந்த பலனைத் தரும்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. பயிற்சி முக்கியமானது.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... உண்மை...

G.M Balasubramaniam said...

ஒருகதை நினைவுக்கு வந்தது படகில் பயணித்தவர்களில் பலரும் படித்தது பற்றிப்பெருமைபேசிக் கொண்டிருந்தார்கள் அப்போது படகில் கோளாறு ஏற்பட்டு படகு கவிழத்தொடங்கியத் படகோட்டி யாருக்கெல்லாம்நீந்தத்தெரியுமெனக் கேட்டபோது பலரது முகத்திலும் பயம்தெரிந்தது உங்கள்படீபு உங்களைக்காப்பாற்றட்டுமென்று கூறி படகோட்டி நீரில் குதித்தானாம் நீந்திக்கரை சேர்ந்தானாம்வாழ்க்கைக்கு தேவையான படிப்புஅவசியம்

Thulasidharan V Thillaiakathu said...

அருமை....உண்மையும் கூட நன்றாக இருக்கிறது

K. ASOKAN said...

ஆழமான கருத்து பாராட்டுக்குரியது

Post a Comment