Tuesday, July 24, 2018

அடைகாத்தல்..

"விடுவி
இல்லையேல்
என்னைக் குறித்து
விசாரம் கொள்

காரணமின்றி
ஆயுள் கைதியினைப்போல்
அடைபட்டுக் கிடக்க
எனக்குச் சம்மதமில்லை "

பிதற்றிக் கொண்டே இருக்கிறது...

இன்னும் முழு வளர்ச்சிக் கொள்ளாத..

அடைபடுதலுக்கும்
அடைகாத்தலுக்குமான
வித்தியாசம் புரியாத...

விரும்பி என்னுள்
நான் இட்டுவைத்த உயிர்க்கரு.

கொக்கரித்துத் திரியும்
புறச் சேவல்களால்
மீண்டும் கருவுறாதபடியும்...

என் கவனச் சூடு
தவறியும் துளியும்
சிதறிவிடாதபடியும்...

நான் அன்றாடம் படும்பாடு..
நிச்சயம் கருவுக்குப் புரிய
சாத்தியமில்லாததால்...

அது பிதற்றிக் கொண்டே இருக்கிறது

 தாய்மைக்கே உரிய
அக்கறையுடனும் அவஸ்தையுடனும்
அதனை அடைகாத்துக் கொண்டிருக்கிறேன்...

இன்றும் எப்போதும்போலவே 

6 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

1) விரும்பிய உயிர்ப்பான வரி:

//விரும்பி என்னுள் நான் இட்டுவைத்த உயிர்க்கரு//

-oOo-

2) மிகவும் ரஸித்த வரிகள்:

//கொக்கரித்துத் திரியும் புறச் சேவல்களால்
மீண்டும் கருவுறாதபடியும்...//

என் கவனச் சூடு தவறியும் துளியும்
சிதறிவிடாதபடியும்...//

-oOo-

3) யதார்த்தமான வரிகள்:

//தாய்மைக்கே உரிய
அக்கறையுடனும் அவஸ்தையுடனும்
அதனை அடைகாத்துக் கொண்டிருக்கிறேன்...//

-oOo-

தாய்க்கோழியும் அதன் குஞ்சும் வாழ்க வாழ்கவே !

திண்டுக்கல் தனபாலன் said...

தாய்மை சிறப்பை அழகாக சொல்லியுள்ளீர்கள் ஐயா...

மோ.சி. பாலன் said...

அருமை

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ரசித்தேன், மனதார.

Anuprem said...

மிக சிறப்பு ஐயா.

K. ASOKAN said...

தாய்மையின் சிறப்பு அருமை பாராட்டுக்குரியது

Post a Comment