Saturday, October 27, 2018

மார்கெட்டிங்கும் பிசினெஸ்ஸும்

'இத்தனை நாள் நான் பிஸினெஸ்ஸில்
இருக்கிறேன் எனத்தான் பேரு
நிஜமாகவே இந்த பயிற்சி வகுப்புக்குப் போய்த்தான்
மார்கெட்டிங்கிற்கும் பிசினெஸ்ஸுக்குமான
வித்தியாசம் புரிந்தது "என்றான் நண்பன்

நான் மெல்லச் சிரித்தபடிக் கேட்டேன்
"இந்தப் பயிற்சி வகுப்புக்கு எவ்வளவு செலவு"

'ஒரு முழு நாளுக்கு பத்தாயிரம்
உணவு உட்பட "என்றான்

'இதோ வெளியே எட்டிப்பார்
அந்தப் பயிற்சி இலவசமாகவே "என்றேன்

வெளியே நடுரோட்டின் கொட்டடித்துக்
கீரிப் பாம்புச் சண்டையென கூட்டம் கூட்டி
நல்ல கூடம் சேர்ந்ததும் தன் தாயத்தின்
மகிமையை விளக்கி விறபனை செய்து
கொண்டிருந்தான் அந்தப் பாம்பாட்டி

நண்பனின் முகம் இறுகிக் கொண்டிருந்தது.

10 comments:

KILLERGEE Devakottai said...

நடைமுறை உண்மை அழகாக சொன்னீர்கள்.

வெங்கட் நாகராஜ் said...

அனுபவப் பாடம் கிடைத்திருக்கும்.

10000 தண்டமாயிற்றே என்ற சோகமும்....

K. ASOKAN said...

யதார்த்தமான பதிவு பாராட்டுக்குரியது

vimalanperali said...

நடை முறை யதார்த்தம்,அதைச்சொன்னவுடன் நண்பர் மனம் வாடிப்போனது போலும்.பயிற்சிகளும் விஞ்ஞானமும் வியாபாரமும் வாழ்க்கை நடைமுறையிலேயே இருக்கிறதுதான் என்கிறார்கள்.

bandhu said...

பார்த்து / கவனித்து புரிந்து கொள்ள முடியாததை இந்த வகுப்புகள் எளிமைப் படுத்தி கொடுக்கிறது. எல்லா பயிற்சிகளும் உபயோகமானதல்ல. அதே போல், எல்லா பயிற்சிகளும் தண்டமும் அல்ல!

திண்டுக்கல் தனபாலன் said...

புரிந்து கொண்டால் சரி...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எளிதாகக் கிடைக்கின்ற பாடம். ஆனால் நாம் பெரும்பாலும் கவனிப்பதில்லை.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை உண்மை
அருமை

G.M Balasubramaniam said...

/வெளியே நடுரோட்டின் கொட்டடித்துக்
கீரிப் பாம்புச் சண்டையென கூட்டம் கூட்டி
நல்ல கூடம் சேர்ந்ததும் தன் தாயத்தின்
மகிமையை விளக்கி விறபனை செய்து
கொண்டிருந்தான் அந்தப் பாம்பாட்டி/ அது மார்க்கெட்டிங்கா பிசினெஸா

Yaathoramani.blogspot.com said...

கூட்டம் கூட்டுவது மார்கெட்டிங்.தாயத்து விற்பது பிசினெஸ்

Post a Comment