Friday, June 26, 2020

கட்டுப்பட்டதைக் கொண்டு...

இரண்டும் ஒன்றை ஒன்று
சார்ந்தே இருப்பதெனினும்
இரண்டில் ஏதோ ஒன்றே
எப்போதும் நம் கட்டுப்பாட்டில்..

கட்டுப்பட்டதைக் கொண்டு
கட்டுப்படாததை சமாளித்தலே
ஆகக் கூடியது மட்டுமல்ல
அதுவே புத்திசாலித்தனமும் கூட

கட்டுப்பட்டது வரவெனில்
கட்டுப்படாத செலவதனை ..

கட்டுப்பட்டது கிடைப்பதெனில்
கட்டுப்படாத எதிர்பார்ப்பினை ...

கட்டுப்பட்டது உடலெனில்
கட்டுப்பட்டாத மனதினை...

கட்டுப்பட்டது வேகமெனில்
கட்டுப்படாத தூரத்தினை

கட்டுப்பட்டது யோகமெனில்
கட்டுப்படாத காமமதை

இப்படி உதாரணங்கள்  நூறு எதற்கு
மிகச் சுருக்கமாகவும்
நமக்கு மிகவும் நெருக்கமாகவும்
                                                                        கட்டுப்பட்ட சமூக இடைவெளியைக் கொண்டு                                                                   கட்டுப்படாத கொரோனாவை கட்டுப்படுத்துதல் போலவும்                                     
கட்டுப்பட்ட கீழ்த்தாடையினைக்  கொண்டு
கட்டுப்படாத மேல்தாடையை
தினமும் சமாளித்தல் போலவும்...



8 comments:

KILLERGEE Devakottai said...

சொல்லிய விதம் அழகு....

ஸ்ரீராம். said...

கடைசி வரிகளில் விஷயத்துக்கு வந்து விட்டீர்கள்!!

திண்டுக்கல் தனபாலன் said...

சிரமம் தான்...!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

Abinaya said...

nice presentation. my best wishes. admired.

G.M Balasubramaniam said...

கட்டுப்பட்ட வார்த்தைக்ளில் கட்டுப்படாத உம் திறனை விளக்குதல் எளிதோ

Thulasidharan V Thillaiakathu said...

நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்

துளசிதரன்

சமூக இடைவெளியைக் கடைபிடித்தால் கொஞ்சமேனும் கட்டுப்படும் ஆனால் அது இல்லாததால்தான் சிரமமாகிப் போகிறது. சொல்லியிருப்பது நன்றாக இருக்கிறது

கீதா

koilpillai said...

அருமை.தங்கள் எழுத்துக்கும் சொல்லாண்மைக்கும் என் மனம் கட்டுப்பட்டது

Post a Comment