Sunday, June 28, 2020

கொரோனா நல்லது

ஞானம் தேடிப் போகப்
புத்தனுக்குக் கூட
மூன்று
வருத்தம் தரும் நிகழ்வுகள் தேவைப்பட்டது

நான்..
எனது...
எனக்கு...
என்பதனைக் கடந்து

எனக்குப் பின்.....
நான் இல்லையெனில்...
தடுக்கமுடியாததை
ஏற்றுத்தானே ஆகணும்..
எனவெல்லாம்

அனுபவங்களும்
நீதிபோதனைகளும்
தராத மாற்றத்தைத் தர  

சுய நலம் கடந்துத்
தெளிவாய் யோசிக்கும்
புதிய ஞானத்தைப்  பெற
....

உயிரற்ற
கடத்துபவரின்றி
நகரக் கூட முடியாத

கண்ணுக்குத் தெரியாத
இந்தக் கொரோனாக் கிருமியே
போதுமானதாய் இருக்கிறது..

அந்த வகையில்
கறை நல்லது என வரும்
விளம்பர வாசகம் போல்

இந்தக் கொரோனா கூட
நல்லது தானோ எனத் தோணுகிறது
சில நாட்களாய் எனக்கும்...

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னமோ... ம்...

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா

Thulasidharan V Thillaiakathu said...

கற்றுத் தந்தால் நல்லதே.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

தவறாக வந்து விட்டது முந்தைய கருத்து.

கற்றுத் தருவதை எல்லோரும் கற்றால், உணர்ந்தால், தொடர்ந்தால் நல்லதே

கீதா

G.M Balasubramaniam said...

tதவிர்க்க முடியாததை அனுபவித்துதானே ஆக வேண்டும்

Post a Comment