Wednesday, June 3, 2020

நிஜமாகும் கட்டுக்கதை...

ஏழுகடல் தாண்டி
ஏழுமலை தாண்டி
எங்கோ இருக்கும் மலைக் குகையில்
ஒரு கூண்டுக் கிளியிடம்  உயிரைவைத்து
ஊரில் உலவித் திரிந்த அரக்கனின் கதையை
நான் நம்பியதே இல்லை

உயிருக்கும் உடலுக்குமான
இடைவெளித் தூரம்
சாத்தியமற்றதென்றும்
அது ஒரு  தெளிவான கட்டுக்கதையென்றும்
ஆக்ரோஷமாய் விவாதித்திருக்கிறேன்

இப்போதெல்லாம் அப்படியில்லை

முகமறியாது பேசியறியாது
ஊரறியாது நாடறியாது
எங்கிருந்தோ என்னை ஊக்குவித்து

சாரமற்ற  என் படைப்பினுக்கு
உயிரளிப்போரை நினைக்க நினைக்க
புதிய சிந்தனைப் பிறக்கிறது

எங்கிருக்கும் உடலையும்
எங்கோ  இருக்கும்  உயிரும்
ஓயவிடாது  இயக்குதெலென்பது

அன்பிருந்தால் சாத்தியமென்று
தெளிவாகவும் புரிகிறது

இப்போதெல்லாம்
கட்டுக்கதை என நம்பிக்கைகொண்டிருந்த
அரக்கன் கதை  கூட
நிஜமாயிருக்கவும்
சாத்தியமென்றே படுகிறது

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அன்பே அனைத்தும்...

மாதேவி said...

அட...டா!

G.M Balasubramaniam said...

ஒருவேளை உண்மை என்று நினைப்பவையும்கட்டுக்கதைகளாகலாம்

ஸ்ரீராம். said...

அன்பினால், நட்பினால்  எல்லாம் சாத்தியமே

வெங்கட் நாகராஜ் said...

அன்பும் நட்பும் கிடைத்தால் எல்லாம் நலமே....

தொடரட்டும் உங்களுடைய சிறப்பான பகிர்தல்.

kowsy said...

உண்மைதான் நீங்கள் சொல்வது போல எனக்கும் சிந்திக்கத் தோன்றுகின்றது. கட்டுக் கதைகள் கூட ஏதோ அனுப்பவா படையல்கள் தான். இங்கிருக்கும் உடலில் எங்கோ இருக்கும் உயிர் இயக்குகின்றது அற்புதமான சிந்தனை

Yarlpavanan said...

தூர நோக்கிலான பார்வை
அருமை ஐயா!

Thulasidharan V Thillaiakathu said...

நல்ல சிந்தனை வரிகள்..தூய அன்பிருந்தால் எல்லாம் நலமே.

துளசிதரன்

எங்கிருக்கும் உடலையும்
எங்கோ இருக்கும் உயிரும்
ஓயவிடாது இயக்குதெலென்பது

அன்பிருந்தால் சாத்தியமென்று
தெளிவாகவும் புரிகிறது//

அதே. உண்மை!

கீதா

Post a Comment