Saturday, October 3, 2020

ஜன்னலும் விண்டோஸும்

பால்கனியே பூங்கா ஆகிப் போக

காரிடரே வீதியாகிப் போக 

கிச்சனே ஸ்டார் ஹோட்டலாக 

ஹாலே கூட்ட அரங்காக 

வெறுமையில் தகிக்கும் மனதிற்கு...

அதிகாலையில் ஜன்னல் திறக்க

விரும்பி விரைந்து விருந்தாளியாய் நுழையும்  
குளிர்ந்த காற்றும் மஞ்சள் வெய்யிலும்

மனச் சுளுக்கெடுத்துப் போகிறது... 

ஒருவகையில் தனிமைத் துயர் நீக்க.. 

முக நூலாய்   
வாட்ஸ் அப்பாய் 
வலைத்தளமாய் 
வந்து மகிழ்வூட்டிப் போகும் 
விண்டோஸைப் போலவே...

10 comments:

KILLERGEE Devakottai said...

இன்றைய வாழ்வுநிலை பலருக்கும் இதுவே...

Yaathoramani.blogspot.com said...

ஆம்..இப்படித்தான் போகிறது ஒவ்வொரு ஒருவகையில் சிறைச்சாலையில் இருப்பதைப் போலவே.

வெங்கட் நாகராஜ் said...

பலருக்கும் இதே சூழல். பணி நிமித்தம் வெளியில் சென்று வரும் என்னைப் போன்றவர்களுக்கு வேறு சூழல்! வீடு திரும்பிய பின் நீங்கள் சொல்லியிருக்கும் சூழல்.

Yaathoramani.blogspot.com said...

ஆம் மன இறுக்கத்தை இப்போது பதிவுகளும் முகநூலுமே தளர்த்திப் போகிறது...

Jayakumar Chandrasekaran said...

//ஒருவகையில் தனிமைத் துயர் நீக்க.. முக நூலாய் வாட்ஸ் அப்பாய் வலைத்தளமாய் வந்து  மகிழ்வூட்டிப் போகும் விண்டோஸைப் போலவே...//
எனக்கு லினக்ஸ். விண்டோஸ் இல்லை 


 

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நல்ல பகிர்வு. அனைவருக்கும் எட்டு மாத காலமாக நீடிக்கும் இந்த நிலை கடினமாகத்தான் உள்ளது. அதை மிக அழகாக பதிவில் கூறியுள்ளீர்கள். முதலிரண்டு மாதங்கள் வித்தியாசங்களை ஏற்ற மனம் இப்போது கட்டிப் போட்டது போன்ற உணர்வை தருகிறது. பதிவர்களாகிய நாம் பதிவுகளினால் ஒரளவு சகஜ நிலையில் உள்ளோம். விரைவில் இந்த தொற்று ஒரு முடிவுக்கு வர அனைவரும் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டேயுள்ளோம். இறையருள் வெகு விரைவில் கிடைத்தால் நல்லது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

மிகப் பெரிய உண்மை.
இதோ திரைகளை அகற்றியதும் வரும் சூரியக் கதிர்களுக்கு நன்றி.
இன்னும் சில நாட்களுக்குப் பிறகு இவரும் தாமதமாக வருவார்.
இருந்தாலும் இன்றையப் பாதுகாப்புக்கு நன்றி சொல்கிறேன்.

அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்.
மனம் உறைந்து விடாமல் இருக்க ,நீங்கள் சொல்லும் அத்தனை சாதனங்களும்
தேவை. மிக மிக நன்றி ரமணி சார்.

ஸ்ரீராம். said...

இந்த மாதிரி ஒரு வாழ்வை கற்பனை செய்து கூடப் பார்த்திருக்க மாட்டோம்.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான்
இருப்பதில் மகிழ்வு காணக்கூடிய சூழல்தான்

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த நிலை மாறும்...

Post a Comment