Monday, February 22, 2021

உள்ளொளி...

 என் அபிமான

நாடக நடிகரின் பெயரைச் சொல்லி

"இன்று எங்களூரில் 

அவர் நடிக்கும்

அரிச்சந்திரன் நாடகம் நடக்கிறது வருகிறாயா ?"

என்றான் நண்பன்


இத்தகவல் எனக்கு

அதிக ஆச்சரியமூட்டியது


கடந்த வாரம்தான் அவரை நான்

நேரில் சந்தித்திருந்தேன்.


கொரோனா ஆடிய பெரும் ஆட்டத்தில்

வாய்ப்பேதுமின்றி

அரை உடம்பாகி இருந்தார் அவர்


ஒழுங்காக

மூன்று வேளை சாப்பிட்டலும் கூட

அவர் ஒரு ஆளாகத் தெரிய

நிச்சயம் ஒரு மாதம் ஆகும்

என எண்ணி இருந்தேன்..


இந்நிலையில்

அது எப்படி நடிக்கச் சாத்தியம் ?

அதுவும் மன்னனாக ..?


ஆயினும்...

திரை விலகியதும்

அரியணையில் அவர் அமர்ந்திருந்த

கம்பீரக் காட்சி கண்டவுடன்

எழுந்த கைத்தட்டல் ஓய

வெகு நேரமாயிற்று....


எப்படி வந்தது

இந்தக் கம்பீரம்..?

என்னால் நம்ப முடியவே இல்லை


பின் நேற்று..

அவரை நேரடியாகச் சந்தித்தபோது

"இது எப்படிச் சாத்தியமானது ."என்றேன்


"பிறவிக் கலைஞன்

பிச்சைக்காரனாகவே ஆயினும்

கிரீடம் தரித்தால்

நிச்சயம் இராஜ கம்பீரம் வந்துவிடும்

அது எப்படி..?

அது அவனுக்கே தெரியாது

ஏனெனில்.அது உள்ளம் செய்யும் மாயம் "என்றார்


இந்தப் பதில்

என் ஆச்சரியத்தை 

அடியோடு நொறுக்கிப் போனது


ஆம்....

உள்ளொளி கொண்டவனுக்கு

எதற்குப் புறவொளி....

4 comments:

ஸ்ரீராம். said...

ராஜா வேஷம் போட்டு நடிப்பதன் பெருமையைப் பற்றி ராஜபார்ட் ரங்கதுரையில் சிவாஜி பேசும் வசனம் ஒன்று உள்ளது.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

//உள்ளொளி கொண்டவனுக்கு

எதற்குப் புறவொளி....// அருமை ஐயா

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பகிர்வு. உள்ளொளி இருக்க பயமேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

அதானே...!? அருமை...

Post a Comment