Tuesday, July 27, 2021

படித்ததும் பகிரப்பிடித்தது..

 *இன்றைய சிந்தனைக்கு 🤔🤔🤔🤔🤔🤔அபார்ட்மென்ட் வீடு உணர்த்தும் உண்மை*


👌👌👌👍👍👍👌👌👌

எஸ்

ஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம் ஒரு கோடியாவது ஆகும்.


அந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது? 


நமது FLAT ன் தரைப்பகுதியை நம்முடையது என்று சொல்லமுடியுமா?! முடியாது. 


காரணம், அது, கீழ் மாடியில் இருப்பவனுடைய கூரை; ஆகவே, அவனுக்கும் சொந்தம்!


நம் தலைக்கு மேலிருக்கும் கூரையை நம்முடையது என்று சொல்லமுடியுமா? அதுவும் முடியாது; அது, மேல் மாடியில் இருப்பவனுடைய தரை. 


ஆகவே, அவனுக்கும் சொந்தமானது!


சரி... வலது பக்க சுவரை நம்முடையது என்று சொல்ல முடியுமா? முடியவே முடியாது... 

அது அந்தப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது!


சரி, இடது பக்க சுவர்?! அதுவும் இடதுப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது!


நாம் பயன்படுத்துகின்ற படிக்கட்டுகள், லிப்ட் ?! அவையெல்லாம் மொத்த அபார்ட்மென்டுக்கும் சொந்தமானது!


சரி, நமக்கென்று அபார்ட்மென்ட் வளாகத்தில் ஒரு பத்து சதுரடி இடமாவது கொடுத்திருக்கிறார்களா?


நிச்சயமாக இல்லை... இடம் எல்லோருக்குமே பொதுவானது! அப்படியென்றால்,

*அந்த ஒரு கோடிக்கு நமக்கு கொடுக்கப்பட்டது என்ன?!*


1500 சதுர அடி கொண்ட காலியான அந்த SPACE தான் நமக்கு கொடுக்கப்பட்டது!


சுற்றி இருக்கும் சுவர்களோ, கூரையோ, தரையோ நம்முடையது அல்ல, அந்த சுவர்களுக்கு இடையே உள்ள SPACE மட்டுமே நமக்கு கொடுக்கப்பட்டது!


*அபார்ட்மென்ட் வளாகத்தில் உள்ள அத்தனை வசதிகளையும் பயன்படுத்தலாம்*, *அனுபவிக்கலாம்*, 

*ஆனால்*

*என்னுடையது என்று உரிமை கொண்டாட முடியாது*!


*கடவுள் நமக்கு கொடுத்ததும் அதுதான்*.


இந்த பூமியில் வாழ்வதற்கான SPACE மட்டும்தான் கொடுத்திருக்கிறார்; 


அந்த SPACE ல் இருந்துகொண்டு, உலகத்தில் உள்ள *அத்தனை சந்தோஷங்களையும் ரசித்து அனுபவிக்கலாம்*,


*மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம்*!


*ஆனால், இங்கு இருக்கின்ற எதையும் உரிமை கொண்டாட முடியாது*. 


*கொண்டுசெல்லவும் முடியாது*!


*என்னுடைய அம்மா எனக்கு தானே சொந்தம் *என்று சொல்லலாம்*,

*ஆனால்*, *அவர் அப்பாவின் மனைவி*, 

*அவருக்கு தான் சொந்தம்*. 


*அதன் பின்புதான் குழந்தைகள் வந்தது*!


*சரி... அம்மா, அப்பாவுக்காவது சொந்தமா என்றால் அதுவும் இல்லை*. 


*அவர் இன்னொருவரின் மகள்*; *தாத்தாவுக்கு தான் சொந்தம்*! 


*தாத்தாவும் தனியாக சொந்தம் கொண்டாட முடியாது*,

*காரணம் பாட்டிக்கும் அதில் சம பங்கு இருக்கிறது*!


*இப்படி இந்த பூமியில் இருக்கின்ற ஒரு துரும்பு கூட நமக்கு சொந்தமானது இல்லை*! 


*நாம் இங்கு நிரந்தரமாக இருக்கப் போவதுமில்லை*...


*பிறகு ஏன் பிற மனிதர்கள் மீது கோபம், போட்டி, பொறாமை, வெறுப்பு, வஞ்சகம், சுயநலம் எல்லாம்*!?


*நமக்கு கொடுக்கப்பட்ட SPACEல் சந்தோஷமாக இருப்போம்*. 


*சக மனிதர்களையும் நேசிப்போம்*. 


*முடிந்தால், பிறர் சந்தோஷப்படும்படி எதாவது செய்வோம்!*

என்றும் அன்புடன்::.         குமரவேல் ஆச்சாரியார்


👉 *படித்தில் பிடித்தது...*

10 comments:

KILLERGEE Devakottai said...

மறுக்கவே இயலாத நிதர்சனமான உண்மை.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நல்லதொரு உண்மையான சிந்தனைகள். எதுவுமே நிரந்தரமில்லை, நமக்கானதும், நம்மை சேர்ந்ததுமில்லை. படித்ததில் பிடித்தது அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

யதார்த்தம். கூறிய விதம் சிறப்பு.

Jayakumar Chandrasekaran said...

சிந்தனையைத் தூண்டிய தத்துவம். ஆனால் எல்லோரும் சொந்தத்தையும் பந்தத்தையும் உரிமை என சொல்லப்படுவதையும் விட்டு விட்டு கிடைத்தால் சாப்பாடு, இல்லையேல் பட்டினி, உறங்க இடம் இல்லையேல் கிடைக்கும் இடத்தில உறங்கும் சந்யாசிகள் ஆக முடியுமா?

 Jayakumar

வல்லிசிம்ஹன் said...

மிக மிக உண்மை. நல்லதொரு பகிர்வுக்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை

கோமதி அரசு said...

எனக்கும் இன்று காலை இந்த செய்தி வந்தது.
சக மனிதர்களை நேசிப்போம்.
நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்.

நிலாமதி said...

நல்லதோர் எடுத்துக் காட்டு . புதைந்து கிடந்த உண்மைகளை உரக்க சொல்லி இருக்கிறீர்கள் .பாராட்டுக்கள்

ஸ்ரீராம். said...

வாடகைக்கு கிடைத்த உடலில் நடிக்க வந்த மேடை பூமிப்பந்து. ஆட்டுவிப்பவனுக்கே அனைத்தும் சொந்தம்!​

திண்டுக்கல் தனபாலன் said...

இது பல வருடங்களாகவே "சுற்றிக் கொண்டிருக்கும்" அருமையான தகவல்...

Post a Comment