Saturday, July 8, 2023

புத்தகத்தினும் வலைத்தளமே சிறப்பு

 சிறப்பாக என நிச்சயமாகச் சொல்லமுடியாது

என்பது உண்மையாயினும்

பன்னிரண்டாண்டுகளாக

விடாது தொடர்ந்து  மனதில் பட்டதை

வலைத்தளத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன்


பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல

வலைத்தளம் இப்போது விறுவிறுப்பாக

இல்லையென்றாலும்


மிகச் சிறப்பாக எழுதக் கூடிய பலர் இப்போது

எதனாலோ எழுவதைத் தொடர்வதில்லை

என்றாலும்..


என் போல சிலர் மட்டுமாவது எழுதிக் கொண்டிருப்பது

மிக்க மகிழ்வளிப்பதாகவே உள்ளது..


அதைவிட எழுதுவதில்லை என்றாலும் 

படிப்பவர்களின் எண்ணிக்கை குறையாமல்

இருப்பதுதான் மகிழ்வளிப்பதாக

மட்டுமல்லாது கூடுதல் ஆச்சரியமளிப்பதாகவும்

உள்ளது 


எம் எழுத்தினை புத்தக வடிவில் 

கொண்டுவந்திருந்தால் ஒரு பதிப்புக்கு

1000 என்கிற எண்ணிக்கையில் மூன்று

புத்தகங்கள் வெளியிட்டிருந்தாலும்...


அந்த மூவாயிரம் புத்தகங்கள் அனைத்தும்

விற்பனையாகி.....


அதை வாங்கிப் படித்தவர்கள் வியந்து

அடுத்து மூவரிடம் கொடுத்து படிக்கும்படியாகச்

செய்திருந்தாலும் கூட ஒன்பதாயிரம் அல்லது

பத்தாயிரம் பேர் படித்திருக்கவே சாத்தியம்


ஆனால் வலைத்தளப் பதிவாக வந்ததை

இதுவரை  எட்டு இலட்சத்திற்கு மிக நெருக்கமாகப்

பலர் படித்திருப்பதும்...


முப்பத்தாறாயிரத்துக்கு மேற்பட்டோர் 

பதிலுரைத்திருப்பதும்


நூற்று முப்பதுக்கும் மேற்பட்ட நாட்டினர்

விடாது தொடர்வதும்....


வலைத்தளத்தின் பலத்தினை நிரூபிப்பதாக மட்டுமல்லாது

எம் போன்று எழுதுபவர்களுக்கு அதிக

ஊக்கம் தருவதாகவும் உள்ளது  என்பதால்...

..

ஆம் தலைப்பில் சொல்லியபடி

புத்தகத்தினும் வலைத்தளமே

சிறந்தது என்பது மறுக்க முடியாததுதானே


(சிகரத்திற்கு அடுத்து சரிவு என்பது

தவிர்க்க முடியாதது என்பது போல

மிகச் சிறப்பாக நடைபெற்ற இரண்டு

பதிவர்கள் சந்திப்புக்குப் பின் சந்திப்பே

நடக்காது போனது என் போன்ற பலருக்கு

மிகுந்த வருத்தமே


புதுக்கோட்டைப் பதிவர்கள் மனது வைத்தால்

மீண்டும் அதைத் துவக்கி வைக்க முடியும்

ஆம் மனது வைத்தால்...

வாழ்த்துக்களுடன் )

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை...

ஸ்ரீராம். said...

வாழ்த்துகள்.

Jayakumar Chandrasekaran said...

வலைத்தளம் மூலம் வாசகர்களை அடைவது எளிது என்பது சரியே. ஆனாலும் சில சங்கதிகள் புத்தக வடிவில் இருந்தால் தான் சவுகரியம். மேலும் புத்தக வடிவில் வாங்குவதால் எழுத்தாளர்களுக்கும் கொஞ்சம் திட (பண) சன்மானம் கிடைக்கிறது அல்லவா! ஆகவே இரண்டும் அது அதனுடைய போக்கில் நிற்கட்டும்.

Jayakumar

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை ஐயா.
வலைதளத்தில் எழுதுவோர் வெகுவாகக் குறைந்து விட்டாலும், வாசிப்போர் எண்ணிக்கை சீராகவே உள்ளது.

Jayakumar Chandrasekaran said...

வலைத்தளம் மூலம் வாசகர்களை அடைவது எளிது என்பது சரியே. ஆனாலும் சில சங்கதிகள் புத்தக வடிவில் இருந்தால் தான் சவுகரியம். மேலும் புத்தக வடிவில் வாங்குவதால் எழுத்தாளர்களுக்கும் கொஞ்சம் திட (பண) சன்மானம் கிடைக்கிறது அல்லவா! ஆகவே இரண்டும் அது அதனுடைய போக்கில் நிற்கட்டும்.

Jayakumar

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் கருத்துகளை நானும் வழிமொழிகிறேன். தொடர்ந்து இங்கே எழுதுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி புத்தகங்கள் வெளியிடுவதில் இல்லை.

Bhanumathy Venkateswaran said...

புத்தகம் வெளியிடும் பொழுது விற்பனை மனதை ஆக்கிரமிக்கிறது.

மாதேவி said...

வலைத்தளம் வாசிப்போர் எண்ணிக்கை அதிகம் என்பது உண்மையே.

Post a Comment