Tuesday, November 26, 2024

தீதும் நன்றும்....

 _*இதைவிட ...  யார் உலக பாடத்தைச் சொல்லித் தர முடியும்.......?????!!!!!*_       இன்று கதைகளில்லாத பதிவு... 

           

_*சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம். இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் ஓன்று, இன்று உலகம் முழுவதும் உச்சரிக்கப்படுகிறது.*_


_*'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இதன் முதல் வரி மட்டுமே*_ _*பிரபலமாகி வருகிறது. பாடலின்*_


_*எல்லா வரிகளும் வாழ்வின் முழு தத்துவத்தைச் சொல்கிறது.....*_


_*முழு பாடலும்... அதன் பொருளும்....*_


_*"யாதும் ஊரே; யாவரும் கேளிர்;*_


_*தீதும் நன்றும் பிறர்தர வாரா;*_


_*நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;.....*_


_*சாதலும் புதுவது அன்றே;...*_


_*வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே;*_


_*முனிவின் இன்னாது என்றலும் இலமே;*_


_*மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது*_


_*கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று*_


_*நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்*_


_*முறைவழிப் படூஉம் என்பது திறவோர்காட்சியின் தெளிந்தனம்...*_


_*ஆதலின் மாட்சியின்*_


_*பெயோரை வியத்தலும் இலமே;*_


_*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.*_


_*கணியன் பூங்குன்றனார்*_


_*"யாதும் ஊரே யாவரும் கேளிர்...."*_


_*எல்லா ஊரும் எனது ஊர்....எல்லா மக்களும் எனக்கு உறவினர்என்று நினைத்து,*_


_*அன்பே வாழ்வின் அடிப்படை, ஆதாரம் என்று வாழ்ந்தால் , இந்த வாழ்வு நமக்கு எவ்வளவு இனிமையானது சுகமானது.*_


_*"தீதும் நன்றும் பிறர் தர வாரா...."*_


_*தீமையும்,நன்மையும் அடுத்தவரால் வருவதில்லை. எனும் உண்மையை,உணர்ந்தால்,*_


_*சக மனிதர்களிடம்,விருப்பு வெறுப்புஇல்லா ஒரு சம நிலை,சார்ந்த வாழ்வு கிட்டும்.*_


_*"நோதலும் தனிதலும் அவற்றோ ரன்ன...."*_


_*துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை, மனம் பக்குவப்பட்டால், அமைதி அங்கேயே கிட்டும்...*_


_*"சாதல் புதுமை யில்லை.."*_


_*பிறந்த நாள் ஒன்று உண்டெனில், இறக்கும் நாளும் ஒன்று உண்டு....*_


_*இறப்பு புதியதல்ல, அது இயற்கையானது எல்லோருக்கும் பொதுவானது....*_


 

_*இந்த உண்மையை உணர்ந்தும், உள் வாங்கியும் வாழ்ந்தால் எதற்கும் அஞ்சாமல், வாழ்க்கையை, வாழும் வரை ரசிக்கலாம்.*_


_*"வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே*_


_*முனிவின் இன்னாது என்றலும் இலமே."*_


_*இந்த வாழ்க்கையில் எது, எவர்க்கு, எப்போது, என்னாகும் என்று எவர்க்கும் தெரியாது. இந்த வாழ்க்கை மிகவும் நிலை அற்றது. அதனால்,இன்பம் வந்தால் மிக்க மகிழ்வதும் வேண்டாம்...*_


_*துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம். வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழ்வோம்.*_


 

_*"மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ....."*_


_*இந்த வானம் நெருப்பாய், மின்னலையும் தருகிறது. நாம் வாழ மழையையும் தருகிறது. இயற்கை வழியில்அது,அது அதன் பணியை செய்கிறது. ஆற்று வெள்ளத்தில், கற்களோடு, அடித்து முட்டி செல்லும்படகு போல, வாழ்க்கையும், சங்கடங்களில் அவர், அவர் ஊழ்படி அதன் வழியில் அடிபட்டு போய்கொண்டு இருக்கும். இது இயல்பு என மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்...*_


_*"ஆதலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே;*_


_*சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."*_


_*இந்த தெளிவு பெற்றால், பெரிய நிலையில் உள்ள பெரியவர்களைப் பாத்து மிகவும் வியர்ந்து பாராட்டவும் வேண்டாம். சிறிய நிலையில் உள்ள சிறியவர்களைப் பார்த்து ஏளனம் செய்து இகழ்வதும் வேண்டாம். அவரவர் வாழ்வு அவரவர்க்கு. அவற்றில் அவர், அவர்கள் பெரியவர்கள்...*_


_*இதை விட வேறு எவர்*_


_*வாழ்க்கைப் பாடத்தை*_


_*சொல்லித் தர முடியும்?*_


_*வாழ்வினிது*_

_*சிந்தித்து செயலாற்றுங்கள்._

Wednesday, November 20, 2024

நமக்குள்ளே ...

 எந்தவொரு சூழ்நிலையிலும்

ஆனந்தமாக இருக்க....

 

ஓஷோ சொல்லும் வழிமுறை..

 

அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில  அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும்  முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே  இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை.

 

அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார்.மறுநாளும் அலைச்சல்  இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ  வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும்  மத்தியில் ஓஷோ அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.

 

ஓஷோவை எழுப்பிய அமைச்சர், ''என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு சத்தத்துக்கு  மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?'' என்று புலம்பினார்.

 

ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்: ''அந்த நாய்கள், உங்களுக்கு  ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை! பாவம், அந்த  நாய்களுக்கு... இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிகை  படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும்  உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

 

அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்!'' என்றார்.

 

 ''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்?'' என்றார் அமைச்சர்.

 

 உடனே ஓஷோ, ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள்.  அப்படிப் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல... உங்கள் எதிர்ப்பு  உணர்வு. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்;இந்த நாய்கள்  குரைப்பதை நிறுத்தினால்தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி  விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை.


நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை. ஆனால், நிபந்தனையை  விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும்  அதுதான்!

 

நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன...பார்த்தீர்களா? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்!''என்றார் ஓஷோ.

 

 'உதவாக்கரை யோசனை!' என்று மனதுக்குள் பழித்தபடி போனார் மந்திரி. ஆனால்  காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர்!

 ''ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள்  குரைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே  உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர்.

 

ஓஷோ நமக்குச் சொல்கிறார்:  ''இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ  எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான  காரணம் நீயாகத்தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக  இருந்திருக்கும். அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய்.  அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம். உலகத்தை நமக்கேற்ப  நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும்போது நீ  வெறுப்படைகிறாய்'' என்கிறார். 

 

ஓஷோ....(அன்றாடம் நாம் தொலைக்காட்சி மூலமும் செய்தித்தாள்கள் மூலமும் பெறுகிற செய்திகளும் தகவல்களும்அந்த நாய்களைப் போலவே எதிர்மறை வகையானவைகளாகவும் நம் தூக்கத்தைக் கெடுப்பவைகளாகவுமே உள்ளன.ஓசோ அவர்களின் கூற்றுப்படி அவைகளை உள்ளே ஏற்றிக் கொள்ளாது வாழப் பழகுவோம் )

Friday, November 15, 2024

படித்ததில் பிடித்தது

 1836-ஆம் ஆண்டு நெல்லை கலெக்டர் ஆர்.ஈடன் எழுதியிருந்த குறிப்பிலிருந்து...


திருநெல்வேலி-

பாளையங்

கோட்டை இரட்டை நகரங்கள். 


இரண்டிற்கும் இடையில் 800 அடி அகலம் உள்ள தாமிரபரணி ஆறு,


ஏப்ரல்-மே மாதங்கள் தவிர, ஆண்டு முழுவதும் வெள்ளம் கரை புரண்டோடும். 


ஆற்றைக் 

கடந்திடப் படகில் தான் பயணித்திட

வேண்டும்


படகிற்காகப் பலமணி நேரம் காத்திருத்தலும் வேண்டும்,


குழுவாகச் செல்வோர் எல்லோரும் ஒன்றாக ஒரே நேரத்தில் சென்று விடவும் முடியாது


படகில் இடம் பிடித்திட முதலில் பயணிக்க லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் வாடிக்கையாகி

விட்டது,


சமூக

விரோதிகளின் திருவிளை

யாடல்களுக்குப் பஞ்சமிருக்காது


களவும்,

கலகமும் குழப்பமும் பழகிவிட்ட நடைமுறை,


1840-ஆம் 

ஆண்டு, மார்ச் மாதம் 10-ஆம் நாள் இரவு, 

E.P.தாம்சன் ஜில்லா கலெக்டராகப் பொறுப்பேற்று 

5 நாட்களே ஆன நிலை,


தாமிரபரணிப் படகுத் 

துறையில் குழப்பம் கலகம் நாலைந்து கொலைகள் 


எனவே, 

கலெக்டர் இரவு முழுவதுமே

தூங்காமல் தவித்துக் கொண்டிருந்தார்...


நெல்லை-

பாளை நகரங்களுக்

கிடையே பாலம் ஒன்றிருந்தால் சிந்தித்துக் கொண்டெ உறங்கியும் போனார்,


ஆலோசனைக் கூட்டமும் 

அரை லட்ச மதிப்பீட்டில் பாலங் கட்டத் தீர்மானமும்

கேப்டன் பேபர் 

W.H. ஹார்ஸ்லி நமது சுலோசன முதலியார் (தாசில்தார்) பதவிக்குச் 

சமமான சிராஸ்தார் பதவி வகித்ததால் அழைக்கப் பட்டவர் கலெக்டர் தாம்சன் தலைமையில் ஒன்று கூடினர்...


உடனடியாகப் பாலங்கட்டத் தீர்மானிக்கப்

பட்டது,


கேப்டன் 

பேபரிடம் 

பொறுப்பு ஒப்படைக்கப்

பட்டது,


வரைபடமும் தயாரானது...


760 அடி நீளம்,

21.5 அடி அகலம், 

60 அடி விட்டம் கொண்ட 11 ஆர்ச்சுக்கள் அவற்றைத் தாங்கிட இரட்டைத் தூண்கள்-என அமர்க்களமான வரைபடம் தயாரானது...


தூண்கள் ரோமானிய அரண்மனயை நினைவூட்டி

லண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வாட்டர்லூ பாலத்தைப் போன்ற தோற்றப் பொலிவுடனே திகழ்ந்தது...


திட்ட மதிப்பீடு அரை லட்சம் கலெக்டர் உட்பட அனைவருமே மலைத்துப் போயினர்


இன்றைய மதிப்பில் 

அது பல கோடியைத் 

தாண்டி விடும்...


ஆனாலும் மகிழ்ச்சியுடன் கலெக்டர் ஒப்புதல் அளிக்கின்றார்...


பணத்திற்கு 

என்ன செய்வது எங்கே போவது..??


மக்களிடம் 

வசூல் செய்வது என்று தீர்மானிக்

கின்றார்..


அதே சமயம் கலெக்டர் அவரிடம் சிரஸ்தாராக வேலை பார்க்கும் சுலோசன முதலியார் பக்கம் கலெக்டரின் பார்வை செல்கின்றது...


யார் 

இந்த சுலோசன முதலியார்..??


திருமணம் தொண்டை மண்டலத்தில் உள்ள ஓர் சிற்றூர் இங்கிருந்து நெல்லைக்குக் குடியேறியவர்கள் தான் முதலியாரின் மூதாதையர்கள்...


கோடீஸ்வரக் குடும்பம்...


வீட்டில் தங்கக் கட்டிகள் பாளம் பாளமாய் அடுக்கி வைக்கப்

பட்டிருக்குமாம்... 


தங்கம், வெள்ளி நாணயங்க்கள் சாக்கு மூட்டைகளில் கட்டிப் போட்டிருப்பார்

களாம்... 


கௌரவத்திற்

காகவே கலெக்டர் ஆபீஸில் உத்தியோகம்...


குதிரை 

பூட்டிய கோச் வண்டியில் கலெக்டருக்குச் சமமாக அலுவலகத்திற்கு வருபவர்...


நீளமான 

அல்பேகா' கருப்புக் கோட்டு ஜரிகைத் தலைப்பா அங்கவஸ்திரம் வைரக் கடுக்கன் ஆகியவ்ற்றோடு அலுவலகத்திற்கு வருவதே  ஒரு கம்பீரமாக இருக்குமாம்...


மக்களிடம் 

வசூல் வேட்டை அவருக்குத் தர்ம சங்கடமான நிலை...


நடந்தனவற்றை வீட்டில் மனைவியிடம் சொல்கின்றார்...


மனைவி வடிவாம்பாள் கவலைப்

படாதீர்கள் தூங்குங்கள் காலையில் பார்த்துக் கொள்ளலாம் 

என ஆறுதல் அளிக்கின்றார்...


தூங்கிய 

சுலோசன மு்தலியாரின் நினைவலை

களின் சுழற்சி,


அப்பாவைப் பற்றிய எண்ணங்களில் மூழ்குகிறார்...


வீர பாண்டிய 

கட்ட பொம்மன் புகழ் மேஜர் பானர்மெனிடம் மொழி பெயர்ப்பாளராகத் தனது தந்தை வேலை பார்த்தது நினைவுக்கு வருகின்றது...


1799-ஆம் 

ஆண்டு கட்டபொம்மன் தூக்கிலிடப்

படுவதற்கு முன் கயத்தாறு மாளிகை விசாரணயில் முதல் சாட்சியே இவர் தந்தை இராமலிங்க முதலியார் தான்...


பின்னர், 

கர்னல் மெக்காலே தனது ஏஜெண்டாக்கித் திருவனந்த

புரத்திற்கு் அப்பாவை அழைத்துக் கொண்டது...


மனைவி வடிவாம்பாள் குடும்ப வசதி 

ஒரே மகன் வேதாத்திரிதாச முதலியார் திருவாங்கூர் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுவது.... என்றெல்லாம் நெஞ்ச்சத்

திரையில் நிழலாட பல்வேறு நினைவுகளுடன் இரவுப் பொழுதைக் கழிக்கின்றார், 

ஒரு முடிவெடுத்தும் விடுகின்றார்...


அவரது 

தந்தை மொழிப்

பாலமாக (மொழி பெயர்ப்பாளர்) இருந்து சம்பாத்தியம் செய்ததை 

ஆற்றுப் பாலத்தில் போட முடிவு செய்கின்றார் 


கணவனே கண்கண்ட தெய்வமென வாழும் வடிவாம்பாளும் மறுக்கவில்லை..


மறுநாள் காலையில் கலெக்டரிடம், பாலங்கட்ட 

ஆகும் மொத்தச் செலவையும் 

தாமே ஏற்றுக் கொள்வதாக வாக்குக் கொடுக்கின்றார்...


சொன்னதுடன் வெள்ளித் தாம்பாளத்தில் 

தன் மனைவி 

தந்த தங்க நகைகளையும் கொஞ்சம் பணத்தையும் அச்சாரக் காணிக்கை என்று சொல்லிக் கலெக்டரிடம் கொடுக்கின்றார்...


கலெக்டருக்கோ இன்ப அதிர்ச்சி திக்கு முக்காடிப் போகின்றார்,


வெள்ளையன்-

கருப்பன் பேதங்கள் காணாமல் போகின்றன.. 


மரபுகள் உடைகின்றன கலெக்டர், முதலியாரை, அப்படியே 

ஆவி சேர்த்து ஆலிங்கனம் செய்து பேச வார்த்தையின்றித் தவிக்கின்றார்...


பாலத் திருப்பணிக்குக் தனி மனிதர் 

தந்த நன்கொடை திருநெல்வேலி மாவட்டத்தையே திகைக்கச் செய்தது இன்றளவும் வரலாற்று உண்மை...


கலெக்டர் 

புது உத்வேகத்துடன் செயல்

படுகின்றார் பாலமும் கட்டிமுடிக்கப் படுகின்றது...


இன்றும் அது சுலோச்சனா முதலியார் பாலம் என்றே தான் அழைக்கப்

படுகிறது....


அப்பேர்பட்ட பாலத்துக்குத்

தான் இன்றைக்கு பர்த் டே...


திறப்பு 

விழாவில் சுலோச்சன முதலியார் முன் நடக்க....

கலெக்டர் உட்பட மற்றவர்கள் 

பின் நடந்த செய்தியும் உண்டு...


மக்கள் 

நலனுக்காக சொந்த பணத்திலேயே பாலம் கட்ட 

உதவிய மனிதர் வாழ்ந்த நாட்டில் இன்று எத்தகைய அரசியல் வாதிகள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது வேதனையாகவே உள்ளது....



Wednesday, November 13, 2024

ரோஜாவின் ராஜா..

 நேரு மாமா பிறக்கும் முன்பும்

ரோஜா இருந்தது  - அது
நூறு பூவில் தானும்  ஒன்று
என்றே   இருந்தது

நேரு மாமா மார்பில்  அதனைச்
சூடிக் கொண்டதும்-அதுவே
ரோஜா பூவின் ராஜா என்று
பெருமை கொண்டது

பஞ்சம் பசியும் பிணியும் உலகை
விட்டு விலகவும்  -எங்கும்
மிஞ்சும் போரை ஒழிக்க வென்று
உறுதிக் கொண்டதும்....

பஞ்ச சீலக் கொள்கை தன்னை
உலகு உய்யவே -தந்து
ஐந்து கண்டம்  புகழும் வண்ணம்
உயர்வு கொண்டதும் .....

முதலாய் இருத்தல்  மட்டும் பெருமை
என்று  இறாது  -அதிலே
தொடர்ந்து இருத்தல்  அதுவே பெருமை
என்று   உணர்ந்ததும் ......

ஐந்து ஆண்டுத் திட்டம் தந்து
பெருமை சேர்த்ததும் -நமது
இந்தி யாவும்  வளர்ந்து சிறக்க
வழியை வகுத்ததும் ......

நமது  வாழ்வு ஏற்றம் கொள்ள
வழியைத்  தந்தது - அதை  
உணர்ந்துப்   போற்றி நெஞ்சில் பதித்தல்
மகிழத்  தக்கது -

குழந்தை  நலமே நாட்டின் நலமாய்
மனதில் கொண்டதால்  -என்றும்
குழந்தைக் கூட்டம்   சுற்றி  இருக்க
விருப்பம் கொண்டதால்

குழந்தை  களுக்கே   உரிய தெனது
பிறந்த நாளது -என்று
உவந்து சொன்ன  நேரு மாமா
பிறந்த நாளதில்

அவர்தம்  பெருமை முழுதாய்  அறிந்து
மகிழ்ச்சி  கொள்ளுவோம்  -என்றும்
அவர்தம் கனவை  நிஜமென் றாக்க
உறுதி  கொள்ளுவோம்

Saturday, November 9, 2024

படித்ததில் பிடித்தது..

 இமயமலை அடிவாரத்தில் ஒரு மடம். அங்கே ஒரு சன்னியாசி இருந்தார். அவரிடம் ஒருவன் வந்தான்.


 சுவாமி ஆசையை உதற நினைக்கிறேன் முடியவில்லை ஒட்டிக் கொண்டே வருகிறது என்றான்.


 இப்படி உட்கார் ஒரு கதை சொல்கிறேன் என்றார்

 சன்னியாசி.


 ஒரு ஊரில் ஒரு ஆள் இருந்தான். அவன் பெயர் குப்புசாமி.

அவனிடம் எப்போதும் ஒரு பழைய தொப்பி இருக்கும். அதனால் அவனை தொப்பிசாமி என்றுதான் எல்லோரும் சொல்வது வழக்கம்.


 ஒரு புது தொப்பி வாங்கக் கூடாதா என்று நண்பர்கள் சொல்லிப் பார்த்தார்கள். பணத்துக்கு எங்கே போவேன். பணம் வைத்திருக்கிறான். செலவு பண்ண மனசு இல்லை. மகா கஞ்சன். பழைய பொருள்களை எல்லாம் வாங்கி விற்றுக் கொண்டிருந்தான்.


 அப்படி ஒரு தடவை பழைய கண்ணாடி பொருட்களை எடுக்கும்போது அதில் ஒரு அருமையான சென்ட் பாட்டில் கிடைத்தது. உடனே ஒரு ஐடியா செய்தான். அதை சின்ன சின்ன போத்தல்களில் அடைத்து ஜன்னல் ஓரமாக அடுக்கி வைத்து விட்டான். அதை விற்றால் நிறைய பணம் கிடைக்குமே.


 இதற்கிடையில் ஒரு நாள் அவன் நண்பன் வந்தான். என்னடா உன் பழைய தொப்பியை மாற்றக் கூடாதா ஊரில் எல்லோரும் கேலி செய்கிறார்கள் என்றான். சென்ட் பாட்டில் விற்றதும் பணம் வரும். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றான்.


 சரி வா நீச்சல் குளத்துக்கு போய் வருவோம் என்று கூப்பிட்டான். நண்பர்கள் இரண்டு பேரும் போனார்கள். அதே நேரம் அந்த ஊர் நீதிபதியும் அங்கே குளிக்க வந்தார். அவரிடம் இருந்த விலை உயர்ந்த புது தொப்பியை் அங்கிருந்த ஸ்டாண்டில் மாட்டிவிட்டு குளிக்க போனார். 


 இதற்கிடையில் குப்புசாமி குளித்துவிட்டு வந்தான் அவனுடைய பழைய தொப்பியை காணவில்லை. அந்த புது தொப்பியை பார்த்தான். இது நண்பனுடைய வேலை என்று புரிந்து கொண்டு அதை எடுத்துக் கொண்டு வந்துவிட்டான். நீதிபதி குளித்துவிட்டு வந்து பார்க்கிறார் தொப்பியை காணவில்லை. போலீசில் புகார் கொடுத்தார். அவர்கள் வந்துவிட்டார்கள் .அங்கே ஒரு மூலையில் பழைய தொப்பி கிடைத்தது. அடடா இது குப்புசாமி தொப்பி. அவன் வீட்டுக்கு போனார்கள். தொப்பி அங்கேயே இருந்தது. அவனுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டார்கள். கட்டிவிட்டு வந்தான். 


பழைய தொப்பி கண்ணில் பட்டது. உன்னால் தான் எனக்கு ஆயிரம் ரூபாய் நஷ்டம் என்று சொல்லி அதை எடுத்துக்கொண்டு போனான். அந்த ஊர் குளத்தில் வீசி எறிந்துவிட்டு வந்தான். அது மீன் பிடிக்கிற ஒருவன் கையில் சிக்கிக் கொண்டது. வருகின்ற வழியில் அதை எடுத்து வேகமாக வீசி எறிந்தான். அது நேராக குப்புசாமி வீட்டு ஜன்னல் வழியே உள்ளே வந்து போத்தல்கள் மேல் விழுந்து எல்லாம் உடைந்து நொறுங்கியது. 


குப்புசாமி தோட்டத்தில் ஆழமாக ஒரு குழி தோண்டினான். தொப்பியை போட்டான். மூடிவிட்டான். இதை அடுத்த வீட்டுக்காரன் பார்த்தான் ஏதோ புதையல் வைத்திருக்கிறான் என்று போலீசில் புகார் கொடுத்தான். மறுபடியும் போலீஸ் தோண்டினார்கள் .பழைய தொப்பி மறுபடியும் வந்தது .எல்லோரும் சிரிக்கிறார்கள்.


 அன்றிரவே இந்த தொப்பியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் . ஒரு கல்லோடு சேர்த்துக் கட்டி குடிநீர் தொட்டியில் போட்டு விட்டான் .ஒரு நாள் திடீரென்று குழாய் அடைபட்டு போனது. மாநகராட்சி அலுவலர்கள் வந்து என்னவென்று பார்த்தால் அந்தப் பழைய தொப்பி குழாயை அடைத்துக்கொண்டிருந்தது . இது குப்புசாமியின் தொப்பி என்பது எல்லோருக்கும் தெரியும். 


 குப்புசாமி 2,500 ரூபாய் அபராதம் போட்டது கட்டி விட்டு வெளியில் வந்தான் கடைசியாக முடிவு பண்ணினான். ஒரு நெருப்பு வைத்தான் தொப்பி எரிந்தது. எடுத்து வெளியில் எறிந்தான். கொஞ்ச நேரத்தில் தீயணைப்பு படை வந்து விட்டது. இவன் எடுத்து எறிந்தது வழியில் உள்ள  கூரையின் மேல் விழுந்து பற்றிக்கொண்டது. அவனுடைய பணத்தாசையும் அதோடு சேர்ந்து அழிந்து போனது என்று கதையை சொல்லி முடித்தார் அந்த இமயமலை அடிவாரத்தில் இருந்த சந்நியாசி.


 இப்போது அந்த குப்புசாமி எங்கே இருக்கான் என்று கேட்டார் எதிரில் இருந்தவர் . இதோ உன் எதிரிலேயே இருக்கிறார். நான்தான் அந்த குப்புசாமி என்றார் சந்நியாசி.


குப்புசாமியிடம் இருந்தது போல் ஒரு பழைய தொப்பி நம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது அதை எப்படி வைப்பது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம்.  நம்மைச் சூழ்ந்து இருக்கின்ற மாயைதான் அந்தத் தொப்பி என்கிறார் சுவாமி சின்மயானந்தர். 


ஞானம் எப்போது கிடைக்கிறதோ அப்போது மாயையும் எரிந்து போகும் என்கிறார் அவர். 

🙏🙏🙏

Tuesday, November 5, 2024

தெரிஞ்சு வச்சுக்குவோம்...(பயன் இருக்காது என்றாலும்‌)

 234 -எம் எல் ஏக்களும் இனிமே ஒரு கிளிக்கில் !!!

ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது.

இனிமேல் உங்கள் " நியாமான " கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம்.

பதில் வருமா வராதான்னு தெரியாது,

எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது 

அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம்.

234 தொகுதி எம் எல் ஏக்கு தனி தனியே ஈ மெயில் ஐடி கொடுக்கபட்டுள்ளது...SKV🙏


1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in

2 Alandur - mlaalandur@tn.gov.in

3 Alangudi - mlaalangudi@tn.gov.in

4 Alangulam - mlaalangulam@tn.gov.in

5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in

6 Anaicut -- mlaanaicut@tn.gov.in

7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in

8 Andimadam --- mlaandimadam@tn.gov.in

9 Andipatti----mlaandipatti@tn.gov.in

10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in

11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in

12 Arantangi-- mlaarantangi@tn.gov.in

13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in

14 Arcot --- mlaarcot@tn.gov.in

15 Ariyalur --mlaariyalur@tn.gov.in

16 Arni -- mlaarni@tn.gov.in

17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in

18 Athoor--- mlaathoor@tn.gov.in

19 Attur ---mlaattur@tn.gov.in

20 Avanashi ---mlaavanashi@tn.gov.in

21 Bargur ---mlabargur@tn.gov.in

22 Bhavani---mlabhavani@tn.gov.in

23 Bhavanisagar---mlabhavanisagar@tn.gov.in

24 Bhuvanagiri-----mlabhuvanagiri@tn.gov.in

25 Bodinayakkanur----mlabodinayakkanur@tn.gov.in

26 Chengalpattu-----mlachengalpattu@tn.gov.in

27 Chengam---mlachengam@tn.gov.in

28 Chepauk---mlachepauk@tn.gov.in

29 Cheranmahadevi---mlacheranmahadevi@tn.gov.in

30 Cheyyar---mlacheyyar@tn.gov.in

31 Chidambaram---mlachidambaram@tn.gov.in

32 Chinnasalem---mlachinnasalem@tn.gov.in

33 CoimbatoreEast----mlacoimbatoreeast@tn.gov.in

34 CoimbatoreWest----mlacoimbatorewest@tn.gov.in

35 Colachel---mlacolachel@tn.gov.in

36 Coonoor----mlacoonoor@tn.gov.in

37 Cuddalore---mlacuddalore@tn.gov.in

38 Cumbum---mlacumbum@tn.gov.in

39 Dharapuram---mladharapuram@tn.gov.in

40 Dharmapuri---mladharmapuri@tn.gov.in

41 Dindigul---mladindigul@tn.gov.in

42 Edapadi---mlaedapadi@tn.gov.in

43 Egmore---mlaegmore@tn.gov.in

44 Erode----mlaerode@tn.gov.in

45 Gingee---mlagingee@tn.gov.in

46 Gobichettipalayam---mlagobichettipalayam@tn.gov.in

47 Gudalur----mlagudalur@tn.gov.in

48 Gudiyatham----mlagudiyatham@tn.gov.in

49 Gummidipundi----mlagummidipundi@tn.gov.in

50 Harbour-----mlaharbour@tn.gov.in

51 Harur----mlaharur@tn.gov.in

52 Hosur---mlahosur@tn.gov.in

53 Ilayangudi---mlailayangudi@tn.gov.in

54 Jayankondam---mlajayankondam@tn.gov.in

55 Kadaladi---mlakadaladi@tn.gov.in

56 Kadayanallur---mlakadayanallur@tn.gov.in

57 Kalasapakkam----mlakalasapakkam@tn.gov.in

58 Kancheepuram---mlakancheepuram@tn.gov.in

59 Kandamangalam----mlakandamangalam@tn.gov.in

60 Kangayam---mlakangayam@tn.gov.in

61 Kanniyakumari----mlakanniyakumari@tn.gov.in

62 Kapilamalai----mlakapilamalai@tn.gov.in

63 Karaikudi----mlakaraikudi@tn.gov.in

64 Karur----mlakarur@tn.gov.in

65 Katpadi----mlakatpadi@tn.gov.in

66 Kattumannarkoil---mlakattumannarkoil@tn.gov.in

67 Kaveripattinam---mlakaveripattinam@tn.gov.in

68 Killiyoor----mlakilliyoor@tn.gov.in

69 Kinathukadavu---mlakinathukadavu@tn.gov.in

70 Kolathur---mlakolathur@tn.gov.in

71 Kovilpatti---mlakovilpatti@tn.gov.in

72 Krishnagiri----mlakrishnagiri@tn.gov.in

73 Krishnarayapuram---mlakrishnarayapuram@tn.gov.in

74 Kulithalai----mlakulithalai@tn.gov.in

75 Kumbakonam---mlakumbakonam@tn.gov.in

76 Kurinjipadi---mlakurinjipadi@tn.gov.in

77 Kuttalam---mlakuttalam@tn.gov.in

78 Lalgudi---mlalalgudi@tn.gov.in

79 MaduraiCentral---mlamaduraicentral@tn.gov.in

80 MaduraiEast---mlamaduraieast@tn.gov.in

81 MaduraiWest----mlamaduraiwest@tn.gov.in

82 Maduranthakam----mlamaduranthakam@tn.gov.in

83 Manamadurai----mlamanamadurai@tn.gov.in

84 Mangalore----mlamangalore@tn.gov.in

85 Mannargudi----mlamannargudi@tn.gov.in

86 Marungapuri-----mlamarungapuri@tn.gov.in

87 Mayiladuturai----mlamayiladuturai@tn.gov.in

88 Melmalaiyanur---mlamelmalaiyanur@tn.gov.in

89 Melur---mlamelur@tn.gov.in

90 Mettupalayam---mlamettupalayam@tn.gov.in

91 Mettur---mlamettur@tn.gov.in

92 Modakkurichi---mlamodakkurichi@tn.gov.in

93 Morappur---mlamorappur@tn.gov.in

94 Mudukulathur---mlamudukulathur@tn.gov.in

95 Mugaiyur----mlamugaiyur@tn.gov.in

96 Musiri---mlamusiri@tn.gov.in

97 Mylapore---mlamylapore@tn.gov.in

98 Nagapattinam----mlanagapattinam@tn.gov.in

99 Nagercoil---mlanagercoil@tn.gov.in

100 Namakkal---mlanamakkal@tn.gov.in

101 Nanguneri---mlananguneri@tn.gov.in

102 Nannilam----mlanannilam@tn.gov.in

103 Natham-----mlanatham@tn.gov.in

104 Natrampalli----mlanatrampalli@tn.gov.in

105 Nellikkuppam----mlanellikkuppam@tn.gov.in

106 Nilakottai---mlanilakottai@tn.gov.in

107 Oddanchatram---mlaoddanchatram@tn.gov.in

108 Omalur---mlaomalur@tn.gov.in

109 Orathanad---mlaorathanad@tn.gov.in

110 Ottapidaram---mlaottapidaram@tn.gov.in

111 Padmanabhapuram----mlapadmanabhapuram@tn.gov.in

112 Palacode---mlapalacode@tn.gov.in

113 Palani----mlapalani@tn.gov.in

114 Palayamkottai---mlapalayamkottai@tn.gov.in

115 Palladam---mlapalladam@tn.gov.in

116 Pallipattu---mlapallipattu@tn.gov.in

117 Panamarathupatti---mlapanamarathupatti@tn.gov.in

118 Panruti---mlapanruti@tn.gov.in

119 Papanasam---mlapapanasam@tn.gov.in

120 Paramakudi---mlaparamakudi@tn.gov.in

121 ParkTown----mlaparktown@tn.gov.in

122 Pattukkottai----mlapattukkottai@tn.gov.in

123 Pennagaram-----mlapennagaram@tn.gov.in

124 Perambalur----mlaperambalur@tn.gov.in

125 Perambur---mlaperambur@tn.gov.in

126 Peranamallur---mlaperanamallur@tn.gov.in

127 Peravurani---mlaperavurani@tn.gov.in

128 Periyakulam---mlaperiyakulam@tn.gov.in

129 Pernambut---mlapernambut@tn.gov.in

130 Perundurai---mlaperundurai@tn.gov.in

131 Perur---mlaperur@tn.gov.in

132 Pollachi---mlapollachi@tn.gov.in

133 Polur---mlapolur@tn.gov.in

134 Pongalur---mlapongalur@tn.gov.in

135 Ponneri---mlaponneri@tn.gov.in

136 Poompuhar---mlapoompuhar@tn.gov.in

137 Poonamallee----mlapoonamallee@tn.gov.in

138 Pudukkottai----mlapudukkottai@tn.gov.in

139 Purasawalkam----mlapurasawalkam@tn.gov.in

140 Radhapuram---mlaradhapuram@tn.gov.in

141 Rajapalayam---mlarajapalayam@tn.gov.in

142 Ramanathapuram---mlaramanathapuram@tn.gov.in

143 Ranipet---mlaranipet@tn.gov.in

144 Rasipuram----mlarasipuram@tn.gov.in

145 Rishivandiyam----mlarishivandiyam@tn.gov.in

146 Dr.RadhakrishnanNagar----mlarknagar@tn.gov.in

147 Royapuram---mlaroyapuram@tn.gov.in

148 Saidapet---mlasaidapet@tn.gov.in

149 Salem -I---mlasalem1@tn.gov.in

150 Salem-II---mlasalem2@tn.gov.in

151 Samayanallur---mlasamayanallur@tn.gov.in

152 Sankaranayanarkoi---mlasankaranayanarkoil@tn.gov.in

153 Sankarapuram---mlasankarapuram@tn.gov.in

154 Sankari---mlasankari@tn.gov.in

155 Sathyamangalam---mlasathyamangalam@tn.gov.in

156 Sattangulam----mlasattangulam@tn.gov.in

157 Sattur---mlasattur@tn.gov.in

158 Sedapatti----mlasedapatti@tn.gov.in

159 Sendamangalam----mlasendamangalam@tn.gov.in

160 Sholavandan---mlasholavandan@tn.gov.in

161 Sholinghur----mlasholinghur@tn.gov.in

162 Singanallur---mlasinganallur@tn.gov.in

163 Sirkazhi----mlasirkazhi@tn.gov.in

164 Sivaganga----mlasivaganga@tn.gov.in

165 Sivakasi---mlasivakasi@tn.gov.in

166 Sriperumbudur---mlasriperumbudur@tn.gov.in

167 Srirangam---mlasrirangam@tn.gov.in

168 Srivaikuntam---mlasrivaikuntam@tn.gov.in

169 Srivilliputhur---mlasrivilliputhur@tn.gov.in

170 Talavasal---mlatalavasal@tn.gov.in

171 Tambaram---mlatambaram@tn.gov.in

172 Taramangalam---mlataramangalam@tn.gov.in

173 Tenkasi----mlatenkasi@tn.gov.in

174 Thalli---mlathalli@tn.gov.in

175 Thandarambattu---mlathandarambattu@tn.gov.in

176 Thanjavur---mlathanjavur@tn.gov.in

177 Theni---mlatheni@tn.gov.in

178 Thirumangalam---mlathirumangalam@tn.gov.in

179 Thirumayam---mlathirumayam@tn.gov.in

180 Thirupparankundram---mlathirupparankundram@tn.gov.in

181 Thiruvattar---mlathiruvattar@tn.gov.in

182 Thiruverambur---mlathiruverambur@tn.gov.in

183 Thiruvidamarudur---mlathiruvidamarudur@tn.gov.in

184 Thiruvonam---mlathiruvonam@tn.gov.in

185 Thiruvottiyur---mlathiruvottiyur@tn.gov.in

186 Thondamuthur---mlathondamuthur@tn.gov.in

187 Thottiam---mlathottiam@tn.gov.in

188 Tindivanam---mlatindivanam@tn.gov.in

189 Tiruchendur---mlatiruchendur@tn.gov.in

190 Tiruchengode----mlatiruchengode@tn.gov.in

191 Tirunavalur----mlatirunavalur@tn.gov.in

192 Tirunelveli---mlatirunelveli@tn.gov.in

193 Tiruppattur-194----mlatiruppattur194@tn.gov.in

194 Tiruppattur-41---mlatiruppattur41@tn.gov.in

195 Tirupporur----mlatirupporur@tn.gov.in

196 Tiruppur----mlatiruppur@tn.gov.in

197 Tiruthuraipundi----mlatiruthuraipundi@tn.gov.in

198 Tiruttani----mlatiruttani@tn.gov.in

199 Tiruvadanai---mlatiruvadanai@tn.gov.in

200 Tiruvaiyaru----mlatiruvaiyaru@tn.gov.in

201 Tiruvallur---mlatiruvallur@tn.gov.in

202 Tiruvannamalai----mlatiruvannamalai@tn.gov.in

203 Tiruvarur----mlatiruvarur@tn.gov.in

204 TheagarayaNagar----mlatnagar@tn.gov.in

205 Tiruchirapalli-I---mlatrichy1@tn.gov.in

206 Tiruchirapalli-II---mlatrichy2@tn.gov.in

207 Triplicane----mlatriplicane@tn.gov.in

208 Tuticorin---mlatuticorin@tn.gov.in

209 Udagamandalam---mlaudagamandalam@tn.gov.in

210 Udumalpet---mlaudumalpet@tn.gov.in

211 Ulundurpet---mlaulundurpet@tn.gov.in

212 Uppiliyapuram---mlauppiliyapuram@tn.gov.in

213 Usilampatti---mlausilampatti@tn.gov.in

214 Uthiramerur---mlauthiramerur@tn.gov.in

215 Valangiman----mlavalangiman@tn.gov.in

216 Valparai----mlavalparai@tn.gov.in

217 Vandavasi----mlavandavasi@tn.gov.in

218 Vaniyambadi----mlavaniyambadi@tn.gov.in

219 Vanur----mlavanur@tn.gov.in

220 Varahur-----mlavarahur@tn.gov.in

221 Vasudevanallur---mlavasudevanallur@tn.gov.in

222 Vedaranyam---mlavedaranyam@tn.gov.in

223 Vedasandur---mlavedasandur@tn.gov.in

224 Veerapandi---mlaveerapandi@tn.gov.in

225 Vellakoil---mlavellakoil@tn.gov.in

226 Vellore---mlavellore@tn.gov.in

227 Vilathikulam---mlavilathikulam@tn.gov.in

228 Vilavancode---mlavilavancode@tn.gov.in

229 Villivakkam---mlavillivakkam@tn.gov.in

230 Villupuram---mlavillupuram@tn.gov.in

231 Virudhunagar----mlavirudhunagar@tn.gov.in

232 Vridhachalam---mlavridhachalam@tn.gov.in

233 Yercaud---mlayercaud@tn.gov.in

234 ThousandLights---mlathousandlights@tn.gov.in

முடிந்தவரை பிறருடன் பகிரவும்...

VERY IMPORTANT SO SHARE SHARE

Friday, November 1, 2024

படித்ததில் பிடித்தது

 *1). இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.*

===============

*நாங்களும் மாறினோம்.*

================

*இன்று அதையே* 

==============

*BARBECUE என்று BC,*

*KFC ,*

*MACDONALD இல் விக்கிறான்.*

===============

*2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம்.*

*பற்பசையை அறிமுகப் படுத்தினான்.*

==============

*இப்போது உங்கள் TOOTHPASTE இல்*

*SALT + CHARCOAL* *இருக்கா ?*

*என்று கேட்கிறான்.* 

==============

*3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்.*

===============

*உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.*

==============

*இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் STAR HOTEL களில் விக்கிறான் .*

=============

*4). நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்.*

=============

*ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்.*

=============

*இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின்  SPERM ஏற்றுமதி செய்கிறான்.*

===============

*5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.*

==============

*COKE, PEPSI ஐ கொண்டு வந்தான்.*

==============

*இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.*

==============

*6). CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொன்மைகளைத் தொலைத்த* 

================

         *" முட்டாள் "*

================

*இனம் நாமாகத்தானிருப்போம்.*

===============

*7). நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.*

==============

*8). வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,*

===============

*அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,*

===============

*ஆடு போட்ட புலுக்கையை அள்ளி காடு வளர்த்தோம்,*

===============

*காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியை விட்டோம்,*

==============

*வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம்,* 

===============

*நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம்,*

==============

*திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,*

==============

*உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.*

==============

*பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.*

=============

*இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிறது.*

===============

*நம் பாரம்பரியத்தை தொலைத்து அடிமுட்டாளாகி*

================

           *" நாகரிக கோமாளி "*

================

*ஆகி விட்டோம்.*


படித்ததில் பிடித்ததை 

பகிர்கிறேன் ...

___________________

🙏🙏🙏🙏