தேடுதலையே... நினைவுகளில் தீர்க்கமாய். வாழ்வின் நோக்கமாய். எக்கணமும் கொண்டவர்கள்
எப்போதும்அலுத்து அமர்வதோ
சலித்து ஒதுங்குவதோ இல்லை
எட்டிய இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்பவர்கள்
என்றுமே
தேங்கி நிற்பதோ
சோர்ந்து சாய்வதோ இல்லை
அடைந்த சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்பவர்களுக்கு
எச் சூழலிலும்
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ இல்லை
இன்றைய விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
என்றென்றும் கொள்பவர்கள்
வெற்றிக்கு தடையினை
காண்ப தில்லை எப்போதும்.