Friday, November 21, 2025

பீட்டர் பாண்டியன் ???

 


மதுரையில் மீனாட்சிக்கு நகைகள், பொக்கிஷங்கள், தான பட்டா நிலங்கள் என்று அளவிட முடியாத சொத்துக்கள் இருக்கின்றன. இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்தது, விரிவானது இந்த நகை கலெக்ஷன். இந்த நகைக்குவியலில் உள்ள ஒவ்வொரு நகைக்கும் ஒரு கதை இருக்கிறது.

அயல் தேசத்து மன்னர்கள், கொள்ளையர்களின் படையெடுப்பு காலங்களில், அம்மனின் நகைகள் ராமேஸ்வரம் போன்ற தூரதேச கோயில் லாக்கர்களில் டெபாசிட் பண்ண பட்டிருக்கிறது.

1837 முதல் இந்தியாவை ஆண்ட விக்டோரியா மகாராணிக்கு வைர நகைகள் என்றாலே தனி காதல். தனது கணவரிடம் சொல்லி உலகில் உள்ள பிரபல வைர நகைகளை கைப்பற்றி தனது அலமாரியில் சேர்த்து வைப்பார்.

அப்படி எந்த நகையையாவது விலைக்கு வாங்க முடியாவிட்டால், அதை இரவல் வாங்கி தனது கழுத்தில் போட்டு அழகு பார்க்கும் வினோத ஆசை அவருக்கு இருந்தது.

மீனாட்சி தேவியின் நகைகளில் பத்து பெரிய சபையர் கற்கள் பதித்த ஒரு நீல பட்டயம் உலகப் பிரசித்தம். அதன் ஆபூர்வ அழகு கண்களை பறிப்பதாக இருக்கிறது என்பதை மகாராணியும் கேள்விப்பட்டார் . அதன் மேல் காதல் கொண்டார்; "காண" விரும்பினார். கம்பெனிக்காரர்கள் ஏற்பாட்டில் பதக்கம் லண்டனுக்கு கப்பலில் சென்றது.

பதக்கத்தை பார்த்ததுமே, மனித காதல் கொள்ள அது சாதாரண நகையல்ல; மகாராணியாக இருந்தாலும் தான் அணிந்து கொள்ள ஏற்புடையதல்லை என்று உணர்ந்தார். மறு கப்பலில் பத்திரமாக அனுப்பப்பட்ட அந்த பதக்கம் மீனாட்சியை அலங்கரிக்க மீண்டும் மதுரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.மீனாட்சிக்கு அழகு சேர்க்க இப்படி பல வைர, வைடூரிய நகைகள் இருந்தாலும், ஒரு ஆங்கிலேயே முரட்டு பக்தன் இருநூறு வருடங்களுக்கு முன்னால் அம்மனுக்கு காணிக்கையளித்த ஷூக்கள் பற்றித்தான் இந்த பதிவு.

தங்கத்தால் இழைக்கப்பட்ட விலை மதிக்க முடியாத மாணிக்கங்கள் பதித்த ஒரு ஜோடி காலணிகளை தன் பக்தியின் காணிக்கையாக வழங்கியவர் அப்போதைய மதுரை கலெக்டர் ரவுஸ் பீட்டர்.

பீட்டர் துரை 1812ல் ஒருங்கிணைந்த மதுரை ஜில்லாவுக்கு கலெக்டராக ஆங்கிலேயே அரசால் நியமிக்கப்பட்டவர்.

மதுரையில் இப்போதெல்லாம் ஆறு மாதங்கள் ஆட்சியராக நீடிப்பது துர்லபம். பீட்டர் துரை பதினாறு நீண்ட வருடங்கள் அதாவது 1828 வரை மதுரை மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர்.

அப்போதெல்லாம் மதுரை கலெக்டர்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் தக்கார். கோயில் தக்கார் என்றால் கோயிலுக்கு தக்கவர் (Fit Person) மரியாதைக்குரியவர் என்று அர்த்தம்.

கோவில் தக்காரின் பணி என்னவென்றே தெரியாமல் முதலில் திணறி போனார் பீட்டர் துரை. பின்னர் அம்மனின் மகிமைகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்து, அவள் மேல் மரியாதையும், பக்தியையும் செலுத்த ஆரம்பித்தார்.

தினமும் தன்னுடைய குதிரையில் ஏறி மீனாட்சி அம்மன் கோயிலை வலம் வருவார். அதன் பிறகே தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குவார்.

கிழக்கு கோபுரத்துக்கு முன்பகுதிக்கு வந்ததும் குதிரையில் இருந்து இறங்கி விடுவார். தன் ஷூக்களை அகற்றிவிட்டு அனலாய் சுடும் அந்த கற்தரையில் வெறும் பாதங்களில் நின்று மீனாட்சியை வணங்குவார்.

தினமும் கோவில் கோபுர வாயிலில் நின்று மனமுருக வணங்கும் இந்த முரட்டு பக்தனை பார்த்து மதுரை மக்களுக்கு மட்டுமல்ல, அந்த மீனாட்சிக்கே மனசுருகி போயிருக்கும்.பீட்டர் ஆங்கிலேயராக இருந்தாலும்கூட, நம்முடைய கலாசாரத்தையும், ஆன்மிக உணர்வுகளையும் பெரிதும் மதிப்பவராக இருந்தார். மக்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் வராமல், அம்மனின் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்தார்.

மதுரை மக்கள், தங்களுக்கு யாரையாவது பிடித்து போனால் எல்லையில்லா அன்பும் நன்றியும் செலுத்துவார்கள். தங்களிடம் மிகுந்த பரிவு காட்டிய இந்த கலெக்டரை ஒரு மன்னனுக்கு நிகராக நினைத்த மதுரை மக்கள் அவரை பீட்டர் பாண்டியன் என்றே அழைத்தனர்.

ஒருநாள் இரவு மதுரையில் இடியும் மின்னலுமாகப் பெருமழை பெய்தது. பெருத்த காற்றுடன் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது.

வெள்ளத்தினால் மதுரைக்கும், மக்களுக்கும் பெரிய இடையூறு வருமே என்று கவலையுடன் உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தார் பீட்டர் துரை.

நள்ளிரவாகிவிட்டது. பங்களாவுக்கு வெளியே ஒரு சிறுமி அழைப்பது போல பீட்டருக்கு கேட்டது. எழுந்து வெளி வராந்தாவுக்கு வந்தார்.

அந்த இடத்தில் அவரை நெருங்கி வந்த மூன்று வயது மதிக்கும் சிறுமி ஒருத்தி தன்னுடைய தளிர்க் கரங்களால் அவருடைய கைகளைப் பிடித்து இழுத்து மாளிகைக்கு வெளியில் அழைத்து போனாள்.

சிறுமியும் கலெக்டரும் வெளியில் வந்ததுதான் தாமதம், அந்த மாளிகை அப்படியே இடிந்து விழுந்தது. மிரண்டு போனார் பீட்டர். தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய அந்த சிறுமிக்கு நன்றி சொல்ல தேடினார். சிறுமியை காணவில்லை.

பின்னர் கொட்டும் மழையில் சற்றுத் தொலைவில் அந்தச் சிறுமி சென்றுகொண்டிருப்பதைப் பார்த்த கலெக்டர் பின்தொடர்ந்து ஓடினார். பிடிக்கமுடியவில்லை. இறுதியில் அந்தச் சிறுமி மீனாட்சியின் திருக்கோயிலுக்குள் சென்று மறைந்தே போனாள்.

தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றியது அம்மன் மீனாட்சிதான் என்று கலெக்டர் ரவுஸ் பீட்டர் உறுதியாக நம்பினார்.

கொட்டும் மழையில் வெறும் காலோடு தன்னைக் காப்பாற்ற ஓடோடி வந்த அம்பிகையின் பாதங்களுக்கு அணியும்படி ஏதாவது அணிகலன் செய்து தரவேண்டும் என்று ஆலோசனை செய்தார். அவை தான் மேலே சொன்ன அந்த காணிக்கை காலணிகள்.

நன்றியுணர்வின் அடையாளமாக அவர் மீனாட்சிக்கு காணிக்கை அளித்த இந்த ஒவ்வொரு தங்க ஷூவின் எடை 28 டோலாக்கள் (ஒரு டோலா தங்கம் தோராயமாக 12 கிராம்).

இதுபோக 412 சிவப்பு கற்கள், 72 மரகதங்கள், 80 வைரங்கள் மற்றும் பூனை கண், முத்துக்கள், சபையர் என்று நவரத்தினங்கள் காலணிகளை அலங்கரிக்கின்றன....

அம்மனைத்தவிர அந்த நாட்களில் மதுரையில் குதிரை வலம் வருபவர் பீட்டர் மட்டும்தான். குதிரை சவாரி எவ்வளவு சிரமம் என்று அவருக்குத்தான் தெரியும். விழா காலங்களில் குதிரையில் வலம் வரும் அம்மன், சேணம் இல்லாததால் பேலன்ஸ் பண்ண சிரமபடுவதாக அவரின் பக்திக்கண்களுக்கு பட்டது.

வெள்ளைக்காரர்கள் எதையும் மிஸ் பண்ண மாட்டார்கள். "எடுறா தங்கத்தை, அடிறா சேணத்தை" என்று நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட இரண்டு தங்க சேணங்களையும் செய்து, அவற்றையும் அம்மனுக்கு காணிக்கையாகச் சமர்ப்பித்தார்.

(பட உபயம்: ஹிந்து நாளிதழ் : Enthralling story of ruby-studded stirrups)

இன்றைக்கும் சித்திரை திருவிழாவின் ஐந்தாவது நாளில், மீனாட்சி தேவி தங்கக் குதிரையில் இந்த விசித்திரமான அணிகலங்களை பூட்டி, புன்னகையுடன் மாசி வீதிகளைச் சுற்றி வருகிறாள்.

முப்பது ரூபாய் குழல் மின் விளக்கை கோயிலுக்கு தானம் கொடுத்தாலும் "இன்னார் உபயம்" என்று பொறித்து கொடுப்பதுதான் மதுரை மரபு. சரித்திரம் முக்கியமல்லவா. வெளிச்சமே தெரியாமல் போனாலும், விளக்கு முழுவதும் தெரியும்படி கொட்டை எழுத்துகளில் இனிஷியலோடு முழு பெயர், ஊருடன் எழுத படவேண்டும்.

அயல்நாட்டை சேர்ந்த பீட்டருக்கு இதன் தாத்பரியம் சரியாக பிடிபடவில்லை. பக்தியில் திளைத்த அவர், மீனாட்சி நடக்கும்போது அவள் திருப்பாதங்கள் தன் மேல் நடந்து போவதாக இருக்கட்டும் என்று சொல்லி, அவள் காலணிகளுக்கு அடிப்பாகத்தில் தன் பெயரை எழுத சொல்லிவிட்டார்.

பணி ஓய்வுக்குப் பின்னரும் பீட்டர் இங்கிலாந்துக்கு திரும்பவில்லை. தனது கடைசி நாட்களை மீனாட்சி பட்டிணத்திலேயே கழித்தார்.

மதுரையிலேயே காலமான அவர் மதுரை, மேல ஆவணி மூல வீதி் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

பீட்டரின் கல்லறை, தேவாலயத்தின் பலிபீடத்தின் அடியில் ஒரு பாதாள அறையில் அமைந்துள்ளது.

கிருஸ்துவ தேவாலயத்தின் அறையில் அவரது இறுதி விருப்பப்படி, அவர்தம் முகம் மீனாட்சி கோயிலை நோக்கி இருக்குமாறு அடக்கம் செய்யப்பட்டார்.

🌹🌹🌹🌹🌹🌹 படித்ததில் பிடித்தது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

SIR.. tracking

 BLOவிடம் நாம் கொடுத்த SIR படிவத்தை BLO தன்னுடைய mobile App மூலம் அவர் அனுப்பி விட்டாரா என்பதை உறுதி செய்ய:


voters.eci.gov.in/login என்கிற இணையதளத்துக்குச் செல்லவும். பிறகு


   1."Fill Enumeration Form" என்கிற 'மெனு'-வை கிளிக் செய்யவும்.

2. மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

3. வாக்காளர் அடையாள அட்டை (EPIC) எண்ணை கொடுக்வும்.


உங்கள் SIR படிவத்தை BLO அனுப்பியிருந்தால்,

 "your form has already been submitted “ 

என்ற செய்தி வரும்.(நான் செக் செய்து விட்டேன்..என்னுடையது சேர்ந்துவிட்டது)

Sunday, November 9, 2025

வாக்காளர் விவரம் அறிய...

 *வாக்காளர் பட்டியல்*

*பாகம் எண்,வரிசை*

*அறிய வேண்டுமா*


1⃣

கீழே உள்ள  *link* ஐ *click* செய்யுங்கள்

👇🏼👇🏼👇🏼


https://electoralsearch.eci.gov.in/


*Search by EPIC* என்பதை Click செய்யுங்கள்


2⃣

உங்கள் 

*Voter ID number* ஐ பதிவிடுங்கள்


3⃣

*"SUBMIT"* 

என்ற optionஐ 

Click செய்யுங்கள்


4⃣

வாக்காளர் பட்டியலில் 

உங்கள் 

*பாகம் எண்*

*வரிசை எண்*

*முகவரி*

போன்ற அனைத்து விவரங்களும் கிடைக்கும்.

Friday, November 7, 2025

SIR..கணக்கெடுக்கும் BLO அறிய..

 உங்கள் பகுதிக்கு வாக்காளர் SIR கணக்கெடுப்பு பகுதிக்கு வரும் BLO அலுவலர் மற்றும் அவரின் பெயர் தொலைபேசி எண்ணை கண்டறிய உதவிடும் லிங்க் 


உங்கள் ஏரியாவிற்கு யார் வாக்காளர் கணக்கெடுக்க வருகிறார்கள் என்பதை அறிய...

👇👇👇


https://erolls.tn.gov.in/blo/

Wednesday, November 5, 2025

Bio clock..

 *BIO CLOCK என்றால் என்ன?*


நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் *Bioclock*. 


நமக்கு தெரிந்த வட்டத்தில் எல்லோரும்

60 - 70 வயதில் இறந்து விடுகிறார்கள். எனவே நாமும் 60-70 வயதில் இறந்து விடுவோம். 


50 வயதில் எல்லா நோய்களும் வந்து விடும் என்று நம்பி நமது *Bioclock இல் செட் செய்துவிடுகிறோம்.*


அதனால்தானோ என்னவோ 50 வயதில் நோய் வருகிறது.

70 வயதில் செத்து விடுகிறோம். நமக்கு தெரியாமலே நமது *Bioclock ஐ தவறாக செட் செய்து விடுறோம்.* 


*சீனாவில் பெரும்பாலோனார் 100 வயது வாழ்கிறார்கள். அவர்களது Bioclock அப்படி செட் செய்யப் பட்டுள்ளது*. 


எனவே, அன்பான உறவுகளே...


1. நாம்  குறைந்தது *100 வயது*  வரை வாழ்வோம் என்று Bioclock ஐ மாற்றி அமைப்போம். 


 நமக்கு இந்த சின்ன வயதில் (40 இலிருந்து 60 வயதுக்குள்) எந்த நோயும் வர வாய்ப்பே இல்லை என நம்புவோம். 


சுறுசுறுப்பாக இருங்கள். *வாக்கிங்  போங்கள்*. 


 வயதாக வயதாக ஆரோக்கியம் கூடும் என்று நம்புங்கள். *(அது தான் உண்மை)*. 


எல்லாத்துக்கும் இந்த மனசு தான் காரணம். *Never, ever allow the bioclock set your ending.* 


எண்ணங்களே வாழ்க்கை.


முதுமை பாதத்திலிருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது!


 உங்கள் கால்களை செயல்பாட்டிலும் & வலுவாக வைத்திருங்கள் !! 

*Keep your Legs Active and Strong !!!*


 தினசரி வயதாகிக்கொண்டே இருக்கும்போது, ​​நம் கால்கள் எப்போதும் சுறுசுறுப்பாகவும் வலுவாகவும் இருக்க வேண்டும். நாம் தொடர்ந்து  வயதாகும்போது, ​​நம் தலைமுடி நரைத்து (அல்லது) சருமம் தளர்ந்து (அல்லது) முகத்தில் சுருக்கங்கள் வருவதற்கு நாம் பயப்படக்கூடாது.


நீண்ட ஆயுளின் அறிகுறிகளில், பிரபலமான அமெரிக்க பத்திரிகை *வருமுன் தடுப்பு (prevention)*(Not Health insurance ) மூலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வலுவான கால் தசைகள்  அனைத்திற்கும் மேலே மிக முக்கியமான மற்றும் இன்றியமையாத ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன. தயவுசெய்து தினமும் *நடந்து செல்லுங்கள்*.


உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால், உங்கள் உண்மையான கால் வலிமை 10 வருடங்கள் குறையும். 

*நடந்து செல்லுங்கள்*.


டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, முதியவர்கள் மற்றும் இளைஞர்கள், இரண்டு வாரங்கள் செயலற்ற நிலையில் இருந்தால்  கால் தசை வலிமை மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம் என்கிறது. இது 20-30 வருடங்கள் முதுமையடைவதற்கு சமம் !!

 எனவே, *நடந்து செல்லுங்கள்*.


கால் தசைகள் பலவீனமடைவதால், நாம் மறுவாழ்வு மற்றும் உடற்பயிற்சிகள் செய்தாலும், மீட்க நீண்டகாலம் பிடிக்கும். நடங்கள். அதனால், நடைபயிற்சி போன்ற வழக்கமான உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது.


 நமது முழு உடல் எடை/ சுமையை கால்களே தாங்குகிறது. 

கால்கள் ஒரு வகையான தூண்கள், மனித உடலின் முழு எடையையும் தாங்கும். 

*தினமும் நடைப்பயிற்சி.*

 

சுவாரஸ்யமாக, ஒரு நபரின் எலும்புகளில் 50% & தசைகளில் 50%, இரண்டு கால்களிலும் உள்ளன. 

*நடந்து செல்லுங்கள்* 


மனித உடலின் மிகப்பெரிய மற்றும் வலுவான மூட்டுகள் மற்றும் எலும்புகளும் கால்களில் உள்ளன.


 10,000 அடிகள் / நாள்

  வலுவான எலும்புகள், வலுவான தசைகள் மற்றும் நெகிழ்வான மூட்டுகள் உடலின் 

இரும்பு முக்கோணத்தை உருவாக்கி

  மனித உடலைச் சுமக்கிறது. 


ஒருவரின் வாழ்க்கையில் 70% மனித செயல்பாடு மற்றும் ஆற்றல் எரித்தல்(burning the calories) இரண்டு கால்களால் செய்யப்படுகிறது. இது உங்களுக்கு தெரியுமா?

 ஒரு நபர் இளமையாக இருக்கும்போது, ​​அவருடைய/ தொடைகள் *800 கிலோ* எடையுள்ள ஒரு சிறிய காரைத் தூக்கும் வலிமை கொண்டவை. 

*கால், உடல் நடமாட்டத்தின் (locomotion) மையம்*.


 இரண்டு கால்களும் சேர்ந்து மனித உடலின் 50% நரம்புகளையும், 50% இரத்தக் குழாய்களையும், 50% இரத்தத்தையும் அவற்றின் வழியே பாய்கிறது. இது உடலை இணைக்கும் மிகப்பெரிய சுழற்சி நெட்வொர்க். எனவே தினமும் *நடந்து செல்லுங்கள்*.


 கால்கள் மட்டும் ஆரோக்கியமாக இருக்கும்போது, ​​இரத்த ஓட்டத்தின் வளமையான மின்னோட்டம் சீராக செல்லும். எனவே வலுவான கால் தசைகள் உள்ளவர்கள் கண்டிப்பாக வலுவான இதயத்தைக் கொண்டிருப்பார்கள். 


ஒருவரது வயது, பாதத்தில் இருந்து மேல் நோக்கித் தொடங்குகிறது. ஒரு நபர் இளமையில் இருப்பது போலல்லாமல் வயதாகும்போது, ​​மூளை மற்றும் கால்களுக்கு இடையே நடைபெறும் ஆணைகள் பரிமாற்றத்தின் துல்லியம் மற்றும் வேகம் குறைகிறது.

*தயவுசெய்து நடந்து செல்லுங்கள்*


 கூடுதலாக, எலும்பின் உரமான கால்சியம் என்று அழைக்கப்படுவது விரைவில் அல்லது பின்னர் காலப்போக்கில் இழக்கப்படும், இதனால் வயதானவர்கள் எலும்பு முறிவுகளுக்கு ஆளாகிறார்கள்.

 *எனவே நடப்பது அவசியம்..*


வயதானவர்களில் எலும்பு முறிவுகள் தொடர்ச்சியான சிக்கல்களைத் தூண்டும், குறிப்பாக மூளை த்ரோம்போசிஸ் போன்ற ஆபத்தான நோய்கள். 


பொதுவாக  வயதான நோயாளிகளில் 15%,  தொடை எலும்பு முறிவு ஏற்பட்ட ஒரு வருடத்திற்குள்  இறந்துவிடுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

*தவறாமல் தினமும் நடந்து செல்லுங்கள்* 


 *கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது, 60 வயதிற்கு பிறகும் கூட தாமதமல்ல.   நம் கால்கள் படிப்படியாக வயதாகிவிட்டாலும், நம் கால்களுக்கு உடற்பயிற்சி செய்வது வாழ்நாள் முழுவதும் வேலை. 


*10,000 அடிகள் நடக்க*

 எப்பொழுதும் கால்களை அடிக்கடி வலுப்படுத்துவதன் மூலம், ஒருவர் மேலும் வயதானதை தடுக்கலாம் அல்லது குறைக்கலாம். 


*365 நாட்கள் நடைபயிற்சி* 

உங்கள் கால்களுக்கு போதுமான உடற்பயிற்சி கிடைப்பதற்கும், உங்கள் கால் தசைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்கும் தயவுசெய்து தினமும் குறைந்தது 30-40 நிமிடங்கள் நடக்க வேண்டும். 


*இந்த முக்கியமான தகவலை உங்கள் 40 வயது கடந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர வேண்டும், ஏனெனில் ஒவ்வொருவரும் தினமும் வயதாகி வருகிறார்கள்*(படித்ததில் பிடித்தது)