Tuesday, January 20, 2026

நன்றி சொல்வோம்..


இறைவன் செஞ்ச இந்த படைப்பு ஒரு மேஜிக்*. ❤️🤩


பாத்து செஞ்ச  நம்ம உடம்பு ஒரு லாஜிக்!


டயரு தேயுது ரோட்டுல... ஆனா,

நம்ம பாதம் இரண்டு பாருங்க 

நாடு சுற்றியும் தேய்மானம் இல்லை.. 😂

செருப்பு தான் அடிக்கடி பிஞ்சு போகுது,

ஆனா உள்ளங்கால் இன்னும் வழ வழப்பா இருக்குது!😂


உடம்புல முக்கால்வாசி தண்ணி இருக்கு,

ஆனா ஆயிரமாயிரம் ஓட்டை இருந்தும்

அரை சொட்டு கூட ஒழுகாம நிக்குது!😂


நூறு வாட்ஸ் பல்புக்கே வயரு சுவிட்ச் வாங்க வேணும்,

ஆனா பேட்டரி இல்லாமலே இதயம் துடிக்குது – அதுவும்

ரீசார்ஜ் இல்லாமலேயே ரிதமா அடிக்குது!😂


லட்சம் ரூபாய் கேமரா கூட மக்கர் பண்ணும்,சர்வீஸ் கேட்கும்!

நம்ம கண்ணு மட்டும் பளிச்சின்னு படத்தை பாக்க வைக்கும். 

 பாத்ததை பட்டுனு மூளைக்கு சொல்லும் 😂


நாக்குல மைக்ரோஸ்கோப் எதுவுமே இல்லை,

சாப்பிடும் உணவுல உப்பு குறைஞ்சா – அது

சப்பு கொட்டி சண்டை போடும் 😂

 

எப்பவோ தின்னது எல்லாம் செரிச்சு முழங்கை அளவு பிறந்த நம்மை முழுசா ஆக்கி முழங்க வைக்குது!


படிச்சதை எல்லாம் படிய வைக்குது, பட்டுனு பதில் சொல்லி பகுமானம் காட்டுது!


மிஷினுக்கு எல்லாம் சர்வீஸ் வேணும்,

நம்ம ரத்த ஓட்டத்துக்கு – எந்த

ஆயிலும் தேவையில்ல, 

on off  எதுவும் தேவையில்ல!

தொடர் ஓட்ட சாதனை புரியும்!


சென்சார் இல்லாமலே தோலு உணருது,

கொசு கடிச்சா – கை

சரியான ஸ்பாட்டுக்கு தானே பாயுது👏


எல்லா சத்தத்தையும் காது பிரிச்சு மேயுது!

ஆனா பொண்டாட்டி கூப்பிட்டா மட்டும் – அது

ஏனோ கேட்காத மாதிரி நடிக்குது!😂


எண்ணி எண்ணி பார்த்தும் எண்ணி முடியல!

இறைவன் செஞ்ச மேஜிக் அளவில்லை👌


பார்த்து பார்த்து நாம் செய்ய முடியுமா 👍


படைச்ச இறைவனுக்கு

நன்றி சொல்லி 

பத்திரமா பாத்துக்குவோம் 🙏           படித்ததில் பிடித்தது 


தினமும் காலையில

எழுவது கூட எவ்வளவு 

பெரிய மிராக்கிள் 🙏


 எல்லா படைப்பையும்

பார்த்து வியப்போம்!

பக்குவமா நடப்போம்!!

நன்றி 🙏🏼🤩

No comments:

Post a Comment