நாடு விட்டுத்தான் போகிறோம்
ஆயினும் பாஸ் போர்ட் தேவையில்லைஊரை விட்டுத்தான் போகிறோம்
ஆயினும் ஆடை அணிகலங்களோ
பெட்டி படுக்கைகளோ தேவையில்லை
போகாத ஊர்தான்
ஆயினும் ஊர் பற்றிய தகவல்களோ
வரை படங்களோ தேவையில்லை
பார்க்காத ஊர்தான்
ஆயினும் யாரும் உடன் வந்து
வழிகாட்டத் தேவையில்லை
உடலையே சுமையென விட்டுத்தான் போகிறோம்
என்வே சுமை கூலிப் பிரச்சனை
நிச்சயமாய் இல்லை
சாப்பாட்டுப் பிரச்சனையில்லை
பஸ் கட்டணப் பிரச்சனையில்லை
போக்குவரத்துப் பிரச்சனையில்லை
காசுப் பிரச்ச்னையில்லை
சக பயணிப் பிரச்சனையில்லை
புறப்படுகிற கணத்தில் மட்டும்
வலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
மீளாப் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை
4 comments:
மீளாப் பயணம் - சிந்தனைகள் நிதர்சனம். ஆனாலும் மீளாப் பயணம் குறித்த சிந்தனைகளை எவரும் விரும்புவதில்லை....
இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
யாரும் விரும்பிப் போகும் இடமும் அல்ல அது!!
இருவர் கருத்தும் மிகச் சரி...வாழ்த்துக்களுடன்
.
மதுரை மூன்றுமாவடியில் ஒரு கிளப் நடத்திய கூட்டத்திற்கு கவிஞர் வைரமுத்து வந்து உரையாற்றினார். அப்போது மனித உயிர் பிரிவது ஒரு ஆணின் பொறுப்பில் இருந்து இந்திரியம் வெளியேறுவது போல இருக்க வேண்டும் என்று பேசினார். ஆனால் அவர் மேடைக்கு வந்தது முதல் இறுதிப் பேச்சை முடிக்கும் வரையும் கூட்டத்தினர் யாரும் அவருடைய பேச்சை கவனம் செலுத்தவில்லை அதனை அவர் குறிப்பிட்டும் அவர்கள் கண்டு கொள்ளாமல் இருந்தனர் அவர் உண்மையில் மீளா துன்பத்தோடு சென்றார்
Post a Comment