Saturday, April 30, 2011

வேண்டுதல் வேண்டாமை

சோறு வேண்டும் எங்களுக்கு
சொர்க்கம் வேண்டாம் - வீண்
வார்த்தைகளைச் சொல்லியெம்மை
ஏய்க்க வேண்டாம்

ஆடை வேண்டும் எங்களுக்கு
"அணிகள்" வேண்டாம்
மேடையேறி பொய் உதிர்த்து
"நடிக்க" வேண்டாம்

வீடு வேண்டும் எங்களுக்கு
"கோட்டை" வேண்டாம் - எம்மை
மன்னரெனச் சொல்லி நீங்கள்
சுருட்ட வேண்டாம்

வாழ்வு வேண்டும் எங்களுக்கு
"ஆறுதல்" வேண்டாம் - எல்லாம்
ஆண்ட்வனின் லீலை என்று
"அளக்க" வேண்டாம்

அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்!!!!!!!!!!

21 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மே தின வாழ்த்துக்கள். தொழிலாளர் தினத்துக்கு ஏற்ற மிகச்சரியான கவிதை. அருமை. வாழ்த்துக்கள். தொடரவும்.

//எம்மை மன்னரெனச் சொல்லி நீங்கள் சுருட்ட வேண்டாம்//

எல்லா விஷயங்களும் இதிலே சுருட்டப்பட்டுள்ளன.
அன்புடன் vgk

தமிழ் உதயம் said...

அருமையாக உள்ளது கவிதை. இன்னும் நிறைய வேண்டும், வேண்டாதவைகள் உள்ளன.

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

அருமையான தலைப்பில் அற்புத கவிதை.... மலையிலிருந்து இறங்கி வரும் நீரோடையின் சாயல், கவிதையின் துள்ளலில் தெறிக்கிறது.’மே’தினத்தில் ஒரு தொழிலாளியின் யதார்த்த நிலையை மிக அழகாய் புலப்படுத்திவிட்டீர்கள்... என்ன ... எப்போதும் யதார்த்தம் சுடத்தானே செய்யும்.

சக்தி கல்வி மையம் said...

மே தின வாழ்த்துக்கள்....
சரியான நேரத்தில் தேவையான கவிதை..
அசத்தல் ...

A.R.ராஜகோபாலன் said...

சுத்தி வளைக்காத
நெத்தியடி வார்த்தைகள் !
அவசியங்களை தராமல்
ஆடம்பரங்களை தருவதாக சொல்லும்
வாய் சொல்லி வீரர்களை
வேட்டையாடும் வேகமான சாட்டையடி வரிகள்

அற்புதமான கவிதை
நன்றி ரமணி சார் ...............

வெங்கட் நாகராஜ் said...

சாட்டையால் அடித்தது போன்ற ஒரு நற்கவிதை. அனைவருக்கும் மே தின நல் வாழ்த்துகள்.

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

அட்ரா சக்கை, சூப்பர் வார்த்தை சிலம்பம்....

MANO நாஞ்சில் மனோ said...

//வீடு வேண்டும் எங்களுக்கு
"கோட்டை" வேண்டாம் - எம்மை
மன்னரெனச் சொல்லி நீங்கள்
சுருட்ட வேண்டாம்///


சாட்டை.....

MANO நாஞ்சில் மனோ said...

//வாழ்வு வேண்டும் எங்களுக்கு
"ஆறுதல்" வேண்டாம் - எல்லாம்
ஆண்ட்வனின் லீலை என்று
"அளக்க" வேண்டாம்//

அசத்தல் குரு.....

MANO நாஞ்சில் மனோ said...

உங்களுக்கும் எனது மே'தின வாழ்த்துகள்.....

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

உங்களுக்கு வேண்டியதைப் பற்றி எங்களுக்கு என்ன அக்கறை?

Avargal Unmaigal said...

நீங்கள் மிக சிறிய பதிவுகளாக போட்டாலும் அதில் மிகப் பெரிய கருத்துக்கள் உள்ளன. சிந்திக்க வைக்கும் வைர வரிகள். நீங்கள் எழுத்துக்கள் மூலம் சாட்டை அடி அடிக்கிறீர்கள்.

Avargal Unmaigal said...

நண்பரே உங்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள் என்றென்றும்

சாகம்பரி said...

வேண்டுவன கிட்டவும் வேண்டாதவை அகலவும் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள். கருத்துமிக்க கவிதை

சிவகுமாரன் said...

வேலை வேண்டும் எங்களுக்கு
சோறு வேண்டாம்
காலை வரி விடும் உங்கள்
கட்சி வேண்டாம்.

இன்று வேண்டும் எங்களுக்கு
நேற்று வேண்டாம்.
கொன்று தின்று கூறுபோடும்
கூட்டம் வேண்டாம்.

நாளை வேண்டும் எங்களுக்கு
இன்று வேண்டாம்.
வேளை வரும் எங்களுக்கு
நீங்கள் வேண்டாம்.

சிவகுமாரன் said...

ஒரு வீரியம் மிக்க கவிதை தன்னோடு நின்று விடுவதில்லை. இன்னும் பல கவிதைகளை பிரசவிக்கிறது.
-- என் முந்தைய பின்னூட்டக் கவிதையின் தாய் தங்களின் கவிதை தான் என்று சொல்லவும் வேண்டுமோ ?

vanathy said...

அழகான வரிகள், அழகான கவிதை. வழக்கம் போலவே கவிதை அசத்தல்!

மனோ சாமிநாதன் said...

மே தினத்துக்கேற்ற அருமையான கவிதை! வரிகளினூடே உழைப்பாளிகளின் மன வலி தெறிக்கிறது!

ஆயிஷா said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam said...

வேண்டுதல் எல்லாம் வேண்டாது இருந்தால் நிம்மதி மிஞ்சி இருக்குமோ.?

Post a Comment