Thursday, June 23, 2011

வாழும் வகையறிந்து.....

அந்த அழகிய ஏரியில்உல்லாசப் படகில்
எல்லோரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள்
அதில் நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள்
அறியாதவர்களும் இருந்தார்கள்

அறிந்தவர்கள் எல்லாம்
ஏரி நீரின் குளுமையை
கரையோர மலர்களை
படகு செலுத்துவோனின் லாவகத்தை
ரசித்து மகிழ்ந்து
உல்லாசமாய் பயணித்துக்கொண்டிருந்தார்கள்

அறியாதவர்கள் எல்லாம்
ஏரியின் ஆழத்தையும்
படகின் வேகத்தையும்
இதற்கு முன் நடந்த விபத்தையும்
எண்ணி எண்ணிப்  பயந்து
படகுக்குள்  ஒடுங்கிக் கிடந்தார்கள்

படகில் பயணம் செல்வதற்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது
நிச்சயம் அவசியமில்லைதான்
உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்


42 comments:

வெங்கட் நாகராஜ் said...

படகில் உல்லாசப் பயணம் செய்ய நீச்சல் அவசியம் தெரிந்திருக்க வேண்டும் - எஞ்சாய் பண்ண வேண்டுமெனில்....... நல்ல கவிதை....

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உல்லாசமாக பயணம் செய்வதற்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது அவசியம்//

ஆமாம். சரியாகச்சொன்னீர்கள். ரிஸ்க் எடுக்கும் போதுதான் உல்லாசமே ஏற்படும்.

பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

படகில் பயணம் செல்வதற்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது
நிச்சயம் அவசியமில்லைதான்
உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்//

அற்புதம். வாழ்க்கைக் கடலில் வாழ்வத்ற்கு அதிகம் தெரிய வேண்டியதில்லை.
ஆனால் சிற்ப்பாக வாழ வாழும் கலை தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

தமிழ் உதயம் said...

சிறப்பான கவிதை.

A.R.ராஜகோபாலன் said...

ஆஹா
அருமையான கருத்தை
கவிதையாய் சொல்லிய விதம்
அருமை
அறியாமைக்கும்
அறிந்தவைக்கும்
இடையேயான
இன்னலான
வேறுபாடுகளை
வேறுபடுத்தியவிதம்
வேதம்
ரசிப்புதன்மையின்
உச்சம்
அதை அறிந்து கொள்வதிலும்
புரிந்துகொள்வதிலும் தான்
உள்ளது என்பதை
நீச்சலின் வழியே
நிதர்சனமாய்
நிர்ணயம் செய்தது
அமர்க்களம் சார்

கவி அழகன் said...

சட்டப்படி நல்ல கவிதை

MANO நாஞ்சில் மனோ said...

உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்//

சரியா சொன்னீங்க குரு....

G.M Balasubramaniam said...

காசியில் ஹனுமன் காட்டிலிருந்து, திரிவேணி சங்கமம் வரை துடுப்புப் படகிலும், ஹொகனேகல்லில் பரிசலிலும், கொடைக்கானல் ஏரியில் படகிலும் சென்று மகிழ்ந்திருக்கிறேன். எனக்கு நீச்சல் தெரியாது. இப்போது அதை நினைத்துப் பார்க்கையில் பயமாக இருக்கிறது. கவிதையைக் குறித்த என் அபிப்பிராயம் திரு. ஏ.ஆர்.ஆர். ஐ வழி மொழிகிறேன். 100% அமர்க்களம். உறவுகள் தொடர் நீங்கள் எழுதலாமே.

MANO நாஞ்சில் மனோ said...

உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்//

சரியான உள்குத்தும் இருக்கு உள்ளே....

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

சைக்கிள் ஓட்டக் கற்றபின் தரையைப் பார்த்து ஓட்டுவது பழக்கம். நேரே மோதல்தான்.

அதுபோல செய்யும் வினையின் தீவீரத்தை மட்டுமே கவனிக்கும்போது செயலின் ஆனந்தத்தைக் கை நழுவ விடுகிறொம்.

அருமையான கருத்து எளிய மொழியில்.

ஆச்சர்யம் இன்றைக்கு இரண்டாவது பின்னூட்டமிடமுடிகிறது.

பிரணவன் said...

வாழ்வியல் தத்துவத்தை மறைமுகமாக சொல்லும் கவிதை. . .அருமை sir. . .

சாகம்பரி said...

உண்மைதான். சிலருக்கு வாழும் கலை புரிந்துவிடுகிறது.

vidivelli said...

அறியாதவர்கள் எல்லாம்
ஏரியின் ஆழத்தையும்
படகின் வேகத்தையும்
இதற்கு முன் நடந்த விபத்தையும்
எண்ணி எண்ணிப் பயந்து
படகுக்குள் ஒடுங்கிக் கிடந்தார்கள்


உண்மைதான்
நல்லாயிருக்குங்க


எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் ஓடுகிறது ஓடிவாங்கோ..

குறையொன்றுமில்லை. said...

உண்மைதான் உல்லாசமாகப்பயணம் செய்வதற்கு நீச்சல் தெரிந்திருக்கவேண்டியதுதான்.

மோகன்ஜி said...

சரியான கருத்தை வித்தியாசமாய் சொல்லியிருக்கும் பாங்கு மனம் கவர்கிறது.

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.

சாந்தி மாரியப்பன் said...

//படகில் பயணம் செல்வதற்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது
நிச்சயம் அவசியமில்லைதான்
உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்//

எக்கச்சக்க அர்த்தங்களை உள்ளடக்கிய அருமையான வரிகள்.. அழகாருக்கு.

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_25.html//

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும். நன்றி.

VELU.G said...

அருமை

//உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்//

உண்மைதான்

Murugeswari Rajavel said...

வாழும் வகையறிந்தால்,
உல்லாசம் +,இல்லையெனில்
உல்லாசம் -. உயரிய கருத்தைச் சொல்லும் அற்புதமான கவிதை.

ADHI VENKAT said...

உல்லாசமாக பயணம் செய்வதற்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டுமென சரியான கருத்தை அழகாக கவிதை மூலம் விளக்கியுள்ளீர்கள் சார்.

nilaamaghal said...

க‌டைசி ப‌த்தி இள‌ந‌கை த‌ருவித்து நித‌ர்ச‌ன‌ம் காட்டி நிற்கிற‌து. அழ‌கிய‌ சிந்த‌னை சார்.

சிவகுமாரன் said...

அருமை. எனக்கு நீச்சல் தெரியாதே. ( நீச்சல் தெரிந்தவர்களைப் பார்த்தால் எனக்கு பொறாமையாய் இருக்கும் )

S.Venkatachalapathy said...

இன்றைய நிகழ்வு ஒன்றை பொருத்தமாக ஒப்பிட முடிகிறது.

மிகப்பெரிய ஷாப்பிங் மாலில் நுழையும் போது அவள் கேட்கிறாள், பணம் எவ்வளவு கொண்டு வந்தீர்கள் என்று. நான்கு இலக்கத் தொகை ஒன்றை அவன் சொன்னான். கிரடிட் கார்ட் கொண்டுவந்தீர்களா என்று மேலும் கேட்டாள்

ஐந்து இலக்கத் தொகை இருப்பு இருக்கும் கிரடிட் கார்ட் இருப்பதாய் சொன்னான். ஷாப்பிங் மாலை ரசிக்க அவர்கள் மனங்கள் தயாரானது.

மாலின் பிரமாண்டத்தை ரசிக்க பணம் ஒன்றும் பெரிதாகத் தேவையில்லைதான். அனால் பையில் பணம் இருக்கின்றது என்ற தைரியம் எனோ தேவைப் படுகிறது.
மென்திறன் அறிவதால் என்ன பயன் என்ற கேள்வி என்னுள் பல முறை எழுந்ததுண்டு. வளவளவென்று ஒரு விளக்கம் மனத்தில் எழும். அனால் சட்டெனப் புரிய வைக்க ஒரு நிகழ்வுத் தேவைப் பட்டது. உங்கள் கவிதை அந்த சட்டென்ற விளக்கம்.

அபாரம் சார். சின்னக் கவிதைமூலம் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் உங்களை வெகுவாகப் பாராட்டுகின்றேன்.

மாலதி said...

//படகில் பயணம் செல்வதற்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது
நிச்சயம் அவசியமில்லைதான்
உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்//உல்லாசமாக பயணம் செய்வதற்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டுமென சரியான கருத்தை அழகாக கவிதை மூலம் விளக்கியுள்ளீர்கள் ....

மாலதி said...

//படகில் பயணம் செல்வதற்கு
நீச்சல் தெரிந்திருக்கவேண்டியது
நிச்சயம் அவசியமில்லைதான்
உல்லாசமாக பயணம் செய்வதற்கு
அவசியம் தெரிந்திருக்கவேண்டும்//
உல்லாசமாக பயணம் செய்வதற்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டுமென சரியான கருத்தை அழகாக கவிதை மூலம் விளக்கியுள்ளீர்கள் சார்.

Unknown said...

நல்ல பொடி வைத்துப் பாடலுக்குள்
சொல்ல வெடி வைத்தீர் தேடலுக்கும்
உள்ளத்தில் பயமிருக்க உல்லாசம் ஏதாம்
வெல்லத் தமிழ்வளர தூண்டுவதே ஈதாம்
இரமணி, அருமை பெற்றீர் பெருமை புலவர்
புலவர் சா இராமாநுசம்

கதம்ப உணர்வுகள் said...

கடைசி வரி நீங்க நிறுத்தினது எதற்குன்னு தெரிந்துவிட்டது ரமணி சார்...

படகு பயணத்திற்கு நீச்சல் தெரிஞ்சிருக்க அவசியம் இல்லை தான்..

ஆனால் உல்லாசமாய் படகில் பயணம் செய்ய தெரிந்திருக்கவேண்டியது அமைதியாக கிடைக்கும் வாய்ப்பை ஏரியின் அழகை இயற்கையை ரசிக்க தெரிந்திருக்க வேண்டும் கண்டிப்பாக...

இயந்திரம் போல் படகில் ஏறி அமர்ந்து இப்படி பயந்து பயந்து பயணம் செய்வதை விட பய்ணம் செய்யாமல் இருப்பதே நலம்....

எத்தனை முறை பயந்தாலும் அத்தனை முறை மரிக்கிறோமே.....

சாவு ஒரே ஒரு முறை தான்.... இப்படி போனதை நினைத்து பயந்து செத்து செத்து பிழைக்காமல் அமைதியாக அழகை ரசிக்க சொல்லி இருக்கும் விதம் மிக அருமை ரமணி சார்....

அன்பு வாழ்த்துகள் வித்தியாச வரிகளுக்கு....

raji said...

வாழ்வின் சவால்களை சந்திக்க தெரிந்தவர்கள் வாழ்வை ரசிக்க இயலும்
அதைக் கண்டு அச்சமுறுபவர்கள் எந்த நிமிடமும் மனோபயத்துடந்தான் இருக்க வேண்டும்.கருத்துள்ள கவிதை

ம.தி.சுதா said...

ஃஃஃஃஅறியாதவர்கள் எல்லாம்
ஏரியின் ஆழத்தையும்
படகின் வேகத்தையும்
இதற்கு முன் நடந்த விபத்தையும்
எண்ணி எண்ணிப் பயந்து
படகுக்குள் ஒடுங்கிக் கிடந்தார்கள்ஃஃஃஃ

வாழ்க்கையின் பிரதி பலிப்பு மிக மிக அருமை..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

சாகம்பரி said...

என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (2/11/11 -புதன் கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/ நன்றி.

Yaathoramani.blogspot.com said...

சாகம்பரி //

அறிமுகத்திற்கு மனமார்ந்த நன்றி
வாழ்த்துக்கள்

Asiya Omar said...

//அறியாதவர்கள் எல்லாம்
ஏரியின் ஆழத்தையும்
படகின் வேகத்தையும்
இதற்கு முன் நடந்த விபத்தையும்
எண்ணி எண்ணிப் பயந்து
படகுக்குள் ஒடுங்கிக் கிடந்தார்கள்//

அருமை...

Dhanalakshmi said...

azhagu......

Rathnavel Natarajan said...

அருமை

Yaathoramani.blogspot.com said...

asiya omar //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Dhanalakshmi //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Rathnavel //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

♔ம.தி.சுதா♔ //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

raji //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

கவிஞ்சனுக்குக் காண்பதெல்லாம் கவிதை
பக்தனுக்குக் காண்பதெல்லாம் கடவுள்
அறியாதவனுக்குப் பார்ப்பதெல்லாம் ஆபத்து.
களவும் கற்று மறப்போருக்கு இந்தத் தொல்லை
இல்லை போலும்.
நல்ல படிப்பினை ஊட்டும் கவிதை.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment