Saturday, June 11, 2011

பார்வைகள்....

நீல
வானத் தட்டினிலே-காணும்
நிலவு சோற்றுருண்டை-நித்தம்
காணக் கண்சிமிட்டும்-விண்
மீன்கள் பருக்கைகள்

நீலக்
கடலின் நீரெல்லாம்-ஏழை
சிந்திய கண்ணீரே-அதில்
தவழும் அலையெல்லாம்-அவரைக்
கொல்லும் மன நிலையே

அனலாய்
தகிக்கும்  கதிரோனே-வறியோர்
வயிற்றில் பெரும்பசியாய்-பாலையில்
ஜொலிக்கும் கானல் நீர்-அவர்கள்
காணும் கனவுகளாய்

கடலாய்
செல்வம் நிறைந்திருந்தால்-உலகே
அழகிய பூங்காதான்-நீயே
அன்றாடக் காய்ச்சியெனில்-அதுவே
கொடிய நரகம்தான்

உலகில்
காணும் காட்சியெல்லாம்-என்றும்
இரு நிலை கொண்டிருக்கும்-நீ
வாழும் நிலைபொறுத்தே-அது
தன்னை வெளிப்படுத்தும்


33 comments:

A.R.ராஜகோபாலன் said...

இருநிலையையும்
ஒருநிலையென
ஏற்கும்
பக்குவம் சொன்ன
கவிதை
நம் வாழ்க்கை
நம் அளவில்
நம் வளம்
நம் கையில்
என்பதை அழகாய்
சொல்லி போன
கவிதை
நன்றி சார்

சாகம்பரி said...

இரு நிலை விளக்கம் அருமை சார். எடுத்துக் கொள்ளும் முறையில்தான் வேற்றுமை.நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கடலாய்
செல்வம் நிறைந்திருந்தால்-உலகே
அழகிய பூங்காதான்-நீயே
அன்றாடக் காய்ச்சியெனில்-அதுவே
கொடிய நரகம்தான்//

அருமையான கவிதை.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.

வலைச்சரத்தில் அறிமுகம் ஆகியுள்ளதற்கும் என் அன்பான வாழ்த்துக்கள், ஐயா.

தமிழ் உதயம் said...

கவிதையின் இறுதி பத்தி வெகு அழகாக, உண்மையாக...

பிரணவன் said...

ஏழ்மை நிலையை கதிரவனின் கொடுமையோடு ஒப்பிட்டது சரியானது. கவிதை நன்று sir. . .

இராஜராஜேஸ்வரி said...

இருநிலை கொண்ட உலக வாழ்வை
ஒருநிலையாய் அருமையாய் உரைத்த
அருமைக் கவிதைக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

இராஜராஜேஸ்வரி said...

உலகில்
காணும் காட்சியெல்லாம்-என்றும்
இரு நிலை கொண்டிருக்கும்-நீ
வாழும் நிலைபொறுத்தே-அது
தன்னை வெளிப்படுத்தும்//

வாழும் முறையைச் செம்மையாக்க
வழிகாட்டி உதவும் அரிய கருத்து.

ஹேமா said...

சூழ்நிலை ஒருவருக்கு இனிப்பாக இருந்தால் அதே சூழ்நிலை இன்னொருவருக்குக் கசப்பாக.அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் !

Anonymous said...

/////கடலாய்
செல்வம் நிறைந்திருந்தால்-உலகே
அழகிய பூங்காதான்-நீயே
அன்றாடக் காய்ச்சியெனில்-அதுவே
கொடிய நரகம்தான்/////அத்தனையும் நிதர்சனமான வரிகள் ...நல்லாய் இருக்கு ஐயா ..

Anonymous said...

//உலகில்
காணும் காட்சியெல்லாம்-என்றும்
இரு நிலை கொண்டிருக்கும்-நீ
வாழும் நிலைபொறுத்தே-அது
தன்னை வெளிப்படுத்தும்//

அருமை .. சகோ.

எல் கே said...

என்றும் எல்லாமும் இரண்டுதானே இவ்வுலகில்

வெங்கட் நாகராஜ் said...

Good One Sir. வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டதற்கும் வாழ்த்துகள்.

Unknown said...

அருமையான கவிதை.வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam said...

There are two sides to a coin என்னும் சொற்பிரயோகம் ஆங்கிலத்தில் உள்ளது. திரு.எல். கே. அவர்களும் குறிப்பிட்டுள்ளார். இதை கவிதையில் ஒப்பீட்டு முறையில் விளக்கியுள்ளது அருமை. முதல் கவிதையும், மூன்றாவதும் மிகவும் ரசித்தேன். தொடர வாழ்த்துக்கள்.

கவி அழகன் said...

அழகான கவிவரிகள்

கீதமஞ்சரி said...

யதார்த்தம் உணர்த்தும் வரிகள். மிக அருமை!

அன்புடன் மலிக்கா said...

உலகில்
காணும் காட்சியெல்லாம்-என்றும்
இரு நிலை கொண்டிருக்கும்-நீ
வாழும் நிலைபொறுத்தே-அது
தன்னை வெளிப்படுத்தும்.//

அனைத்தையும் நாம் எடுத்துக்கொள்ளும் நிலைபொறுத்தே.
மிக அருமையான விளக்கத்துடன்கூடிய வரிகள்..

RVS said...

நமது கோணம் உணர்த்தும் நிலைகள். அற்புதம் சார்! ;-)

ரிஷபன் said...

நீல
வானத் தட்டினிலே-காணும்
நிலவு சோற்றுருண்டை-நித்தம்
காணக் கண்சிமிட்டும்-விண்
மீன்கள் பருக்கைகள்

ஆஹா.. ஆரம்பமே சபாஷ் போட வைத்தது

Murugeswari Rajavel said...

உலகில் காணும் காட்சியெல்லாம்-என்றும்
இரு நிலை கொண்டிருக்கும்-நீ
வாழும் நிலைபொறுத்தே-அது
தன்னை வெளிப்படுத்தும்

சரியான''பார்வைகளின்''வரிகள்.

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

Dhavappudhalvan said...

சிந்திக்க வைக்கும் சொற்கோவை.

மாலதி said...

//உலகில்
காணும் காட்சியெல்லாம்-என்றும்
இரு நிலை கொண்டிருக்கும்-நீ
வாழும் நிலைபொறுத்தே-அது
தன்னை வெளிப்படுத்தும்//அனைத்தையும் நாம் எடுத்துக்கொள்ளும் நிலைபொறுத்தே.
மிக அருமையான விளக்கத்துடன்கூடிய வரிகள்..

Seminar topics for eee said...

Very interesting poem and very happy to go through it , I enjoyed the poem. keep going .....

மனோ சாமிநாதன் said...

"அனலாய்
தகிக்கும் கதிரோனே-வறியோர்
வயிற்றில் பெரும்பசியாய்-பாலையில்
ஜொலிக்கும் கானல் நீர்-அவர்கள்
காணும் கனவுகளாய்"

அருமையான வரிகள்!

பார்வைக‌ள் என்றுமே மன நிலையின் வெளிப்பாடுகள் தான்!

Anonymous said...

கவிஞசர் தமக்கொரு கண்ணுன்டே-அவர்
காணும் காட்சியை உட்கொண்டே
செவிகள் குளிர தருவாரே-பலர்
செப்பிட புகழும் பெறுவாரே
புவியில் நிலைத்து வாழுமதே-காலப்
போக்கை உணர்ந்து எழதுவதே
நவிலும் உம்முடை கவிதைகளே-நல்
இதயத்தில போட்ட விதைகளே

புலவர் சா இராமாநுசம்

கதம்ப உணர்வுகள் said...

வார்த்தை கோர்வை மிக அருமை ரமணி சார்.....

அழகிய கவிதைக்கு அன்பு வாழ்த்துக்கள் சார்.

kowsy said...

மிக அருமையான விளக்கத்துடன் அமைந்திருந்த கவிதை

Ashwin-WIN said...

//உலகில்
காணும் காட்சியெல்லாம்-என்றும்
இரு நிலை கொண்டிருக்கும்-நீ
வாழும் நிலைபொறுத்தே-அது
தன்னை வெளிப்படுத்தும்//
அழகான கவிதை அழகு தமிழ் பேசுது..

vidivelli said...

நீலக்கடலின் நீரெல்லாம்-ஏழை
சிந்திய கண்ணீரே-அதில்
தவழும் அலையெல்லாம்-அவரைக்
கொல்லும் மன நிலையே

நல்லாயிருக்குங்க...........
அற்புதமான வரிகள்...


!!!நம்ம பக்கமும் காத்திருக்கு உங்க கருத்துக்காக!

vanathy said...

வழக்கம் போலவே அசத்தல் கவிதை வரிகள். தொடருங்கள்...

Anonymous said...

உண்மைதான். கடவுள் என்றால் கடவுள் , கல் என்றால் கல் தானே.
கடலாய் இல்லாவிடினும் வீட்டுக் கிணறாய் இருந்தாலும் போறுமே
அவன் கண்களுக்கு சொர்க்கம் தெரியுமே ...
"அனலாய்
தகிக்கும் கதிரோனே-வறியோர்
வயிற்றில் பெரும்பசியாய்-பாலையில்
ஜொலிக்கும் கானல் நீர்-அவர்கள்
காணும் கனவுகளாய்" ---- மிக பிடித்த வரிகள்.
உங்கள் மனிதநேயம் சொல்லிப் போகிறது.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

பொருட்கள் எல்லாம உலகில் ஒன்றாகத்தான் உள்ளன
காதல் வயப்பட்டவன் பார்வையிலேயே
இயற்கை அழகைப் பாடி
பசித்தவன் பார்வையை
கவிஞர்கள் மறந்து போனார்கள்
அவன் பார்வையிலும் பார்த்துப் பார்ப்போமே
எனற எண்ணத்தில் எழுதியது
தங்கள் வாழ்த்துக்கு நன்றி

Post a Comment