Tuesday, October 11, 2011

தேர்தல் -ஒரு சிந்தனை

நாம் சில சூழ் நிலைகள் ஏற்படவேண்டுமென்பதற்காக
எவ்வளவோமுயன்றிருப்போம் . போராடியிருப்போம்
அது அப்போதெல்லாம் நடக்காது போய் நாம் எதிர்பாராத
நேரத்தில் தானாகவே திடுமென தோன்றினால் எப்படி
இருக்குமோ அப்படி இந்த உள்ளாட்சித்தேர்தல்
நமக்கு வாய்த்திருக்கிறது

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஏதோ ஒரு
கொள்கை விளக்கம் கொடுத்து அணி மாறி மாறி
போட்டி இடும்.அவர்கள் அவ்வப்போது சொல்கின்ற
விளக்கங்களையும் காரணங்களையும் எண்ணிப் பார்த்தால்
மக்களை எவ்வளவு முட்டாள்களாக மதிக்கிறார்கள்
என்பது தெளிவாகத் தெரியும்.நான் அதற்குள் போகவில்லை

அனைத்து கட்சிகளுமே தனக்கென ஒரு ஓட்டு வங்கி
இருப்பதைப் போல ஒரு பெரிய மாயையை உண்டாக்கி
அதை வைத்தே கூட்டணி கணக்கு போடுவதும்
தொகுதி பங்கீடு  செய்வதுமான வேலைகளைச்
செய்து வருகின்றன.உண்மையில் யாருக்கு
எவ்வளவு வாக்கு வங்கி இருக்கிறது என்பதும்
வெறும் வாய் ஜாலத்தில் எத்தனை கட்சிகள் உதார்
விட்டுக் கொண்டிருக்கின்றன எனபதும்
இந்தத் தேர்தலில் நிச்சயம் தெரிந்து விடும்

எல்லா கட்சிகளிடத்தும் சில சிறப்புகளும்
சில கோளாறுகளும் உண்டு
என்ன காரணத்தினாலோ ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொருகட்சியை பிடித்துப் போயிருக்கும்
.இந்தத் தேர்தலை கட்சிகளின் உண்மையான பலத்தை
அறிய உதவும் தேர்தலாக நாம் பயன்படுத்த்க் கொள்ளலாம்
கட்சி சின்னமற்ற  உள்ளாட்சிப் பதவிகளுக்கு
நபர்களைப் பொருத்தும்கட்சி சின்னமுள்ள பதவிகளுக்கு
நபர்களைக் கணக்கில் கொள்ளாமல் கட்சிகளை
கணக்கில் கொண்டு அவரவருக்கு பிடித்த கட்சிகளுக்கு
வேறு ஜாதி உணர்வோ இன உணர்வோ இல்லாமல்
வாக்களித்தால்உண்மையான கட்சியின் பலமும் தெரியும்
வெறும் உப்புமா கட்சிகளின் சவுடாலும்  
நிச்சயம்   ஓய்ந்து போகும்

எனவே இந்தத் தேர்தலில் அனைவரும்
ஜாதி மத உணர்வுகளுக்கோ பணத்திற்கோ  ஆட்படாது
நாமனைவரும் தவறாது வாக்களிப்போம்
தமிழக அரசியல் கட்சிகளின் உண்மையான பலத்தை
அறிந்து கொள்வோம்
இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைவது கடினமே என்பதில்
தெளிவாய் இருப்போம்


 

76 comments:

vanathy said...

இதெல்லாம் தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகளுக்கு சகஜமான ஒன்று தானே. சூப்பரா சொல்லியிருக்கிறீங்க.

தமிழ் உதயம் said...

தாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி.

Unknown said...

//அனைத்து கட்சிகளுமே தனக்கென ஒரு ஓட்டு வங்கி
இருப்பதைப் போல ஒரு பெரிய மாயையை உண்டாக்கி
அதை வைத்தே கூட்டணி கணக்கு போடுவதும்
தொகுதி பங்கீடு செய்வதுமான வேலைகளைச்
செய்து வருகின்றன//
ரொம்ப ப்ராக்டிகலான வரிகள் அருமை
கட்சிய பாத்து ஓட்போடாம மக்கள் யோசிச்சு நல்லது செய்யரவர்களுக்கு வோட்டு போடணும்

Unknown said...

எதையும் மாத்தி யோசிப்பதில் ரமணி சார்க்கு நிகர் அவர் மட்டும்தான்

Madhavan Srinivasagopalan said...

அருமையான கருத்துக்களை.. சுருங்கச் சொல்லி விட்டீர்கள்.. :-)

மாய உலகம் said...

ஜாதி மத உணர்வுகளுக்கோ பணத்திற்கோ ஆட்படாது
நாமனைவரும் தவறாது வாக்களிப்போம்//

தேர்தல் நேரத்தில் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்.. பகிர்வுக்கு நன்றி சகோ!

vetha (kovaikkavi) said...

தேர்தல் பற்றிய உங்கள் கருத்து வாசித்தேன். நன்றி சகோதரனே! கருத்திடவில்லை...அனைத்துக் கருத்துகளையும் வாசிப்பேன்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Anonymous said...

அருமையான கருத்துக்கள் ரமணி சார்...சிறப்பாக சொல்லியுள்ளீர்கள்...

கோகுல் said...

நீங்கள் சொன்னது போல் இப்படி ஒரு சந்தர்ப்பம் இனி வாய்ப்பது மிகக்கடினம்.வாக்காளர்கள் கையில் மந்திரக்கோல்.என்ன செய்யப்போகிறார்களோ பொறுத்திருந்து பாப்போம்!

தெளிவான பார்வையுடன் கூடிய பதிவு!

கோகுல் said...

த.ம.4

ஸாதிகா said...

அருமையான தெளிவான அலசல்.சரியாக சொல்லி இருக்கீங்க சார்.

ஸாதிகா said...

///ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொருகட்சியை பிடித்துப் போயிருக்கும்
.இந்தத் தேர்தலை கட்சிகளின் உண்மையான பலத்தை
அறிய உதவும் தேர்தலாக நாம் பயன்படுத்த்க் கொள்ளலாம்
கட்சி சின்னமற்ற உள்ளாட்சிப் பதவிகளுக்கு
நபர்களைப் பொருத்தும்கட்சி சின்னமுள்ள பதவிகளுக்கு
நபர்களைக் கணக்கில் கொள்ளாமல் கட்சிகளை
கணக்கில் கொண்டு அவரவருக்கு பிடித்த கட்சிகளுக்கு
வேறு ஜாதி உணர்வோ இன உணர்வோ இல்லாமல்
வாக்களித்தால்உண்மையான கட்சியின் பலமும் தெரியும்
வெறும் உப்புமா கட்சிகளின் சவுடாலும்
நிச்சயம் ஓய்ந்து போகும்//நூறு சதவிகிதம் உண்மை.

Avargal Unmaigal said...

தம 5. தெளிவான கருத்துக்கள். உங்களைப் போல எத்தனை பேர் தெளிவாக சிந்திக்கிறார்கள் என்பது தேர்தலுக்கு அப்புறம் புரியும்

மகேந்திரன் said...

அழகா சொன்னீர்கள் நண்பரே..
ஜாதி மத உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு
தேர்வு செய்ய வேண்டும்..
நமது கையில் உள்ள ஆயுதத்தை
காசுக்காய் விற்று பின்னர்
விலைமதிப்பு மிக்க வாக்குகளை
விலைமதிப்பின்மை ஆக்கிவிடக்கூடாது..

காட்டான் said...

வணக்கம் ஐயா..
அருமையான கருத்தை முன் வைத்துள்ளீர்கள் வாக்காளர்கள் இதை செய்தால் லெட்டர் பேட் கட்சிகள் கானாமல் போகும் செய்வார்களா??

Unknown said...

நல்ல சிந்தனை

Yaathoramani.blogspot.com said...

vanathy //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தமிழ் உதயம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராக்கெட் ராஜா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Madhavan Srinivasagopalan //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாய உலகம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kavithai (kovaikkavi)

தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோகுல் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

காட்டான் //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கலாநேசன் //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை .

Yaathoramani.blogspot.com said...

நண்டு @நொரண்டு -ஈரோடு //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கருத்துகள்.... தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் - உண்மை... மீண்டும் மீண்டும் ஏமாந்துகொண்டுதான் இருக்கிறோம்....

Unknown said...

அண்ணே எளிமையா சொல்லி இருக்கீங்க...நன்றி!

G.M Balasubramaniam said...

தூரத்தில் இருந்து கணிக்க ஒரு வாய்ப்பு.(என் போன்றோருக்கு.)என்னைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தல்கள் கட்சி அடிப்படையில் அணுகக்கூடாது. ஆனால் நம்மிடையே எல்லாவற்றையும் கட்சி நோக்கோடு பார்த்துப் பழகி விட்டோமே. பார்ப்போம்.

M.R said...

அருமையாக தேர்தலைப் பற்றி சொல்லியிருக்கீங்க .
பார்த்து தெளிவாக வாக்கிடுவோம் நண்பரே

த.ம 12

காந்தி பனங்கூர் said...

மக்களுக்கு ஒரு சரியான சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. வாய்ச்சவடாலிலேயே கட்சி நடத்தும் தலைவர்களின் பலமும் பலவீனமும் இதில் தெரிந்துவிடும்.

RAMA RAVI (RAMVI) said...

//இந்தத் தேர்தலை கட்சிகளின் உண்மையான பலத்தை
அறிய உதவும் தேர்தலாக நாம் பயன்படுத்த்க் கொள்ளலாம்//

உண்மை.நல்ல பதிவு ரமணி சார்.

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விக்கியுலகம் //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் நன்றி
நானும் தங்கள் கருத்தைத்தான் பதிவு செய்துள்ளேன்

Yaathoramani.blogspot.com said...

M.R //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

காந்தி பனங்கூர்

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

RAMVI //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

அரசியலார் பதவி கொள்ளைக்கும், வாக்காளர் கொள்ளையில் பங்கிற்கும் போட்டியிடுவது சகிக்க முடியா ஒன்று!

மனோ சாமிநாதன் said...

அருமையான கருத்துக்கள்!

தங்களை என்னுடைய பதிவில் தொடர்பதிவிற்காக அழைத்துள்ளேன்.

MANO நாஞ்சில் மனோ said...

அனைத்து கட்சிகளுமே தனக்கென ஒரு ஓட்டு வங்கி
இருப்பதைப் போல ஒரு பெரிய மாயையை உண்டாக்கி//

சத்தியம் குரு...!!!

MANO நாஞ்சில் மனோ said...

தமிழக அரசியல் கட்சிகளின் உண்மையான பலத்தை
அறிந்து கொள்வோம்//

இந்த தேர்தல்ல உண்மையான பலம் யாருக்குன்னு தெளிவா தெரிஞ்சிடும் குரு...!

தனிமரம் said...

நல்ல கருத்தைச் சொல்லியிரிக்கிறீங்க ரமனிசார்!

பிரணவன் said...

மிகச் சரியா சொன்னீங்க sir, இதில் அவர் அவர்களுக்கே, தங்கள் பலம் என்ன என்பது தெரிந்து விடும். . .

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

மனோ சாமிநாதன் //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி
தாங்கள் தொடர் பதிவினுக்கு அழைத்தது
மகிழ்வளிப்பதாக இருப்பினும் நான்
மதுரை மா நகரைச் சேர்ந்தவன் .இப்போது மதுரை குறித்து
அறியாதவர்கள் யாரும் இல்லை எனச் சொல்லக் கூடிய அளவு
அதிகமான பதிவுகள் வந்துவிட்டன.சமீபத்த்ல் கூட
நமது பதிவர் திலகம் மணிராஜ் அவர்கள் மதுரை குறித்து
படங்களுடன் மிக அழகான பதிவினைக் கொடுத்திருந்தார்
எனவே வித்தியாசமான் முறையில் இடத்தைப் பற்றிச்சொல்லாது
மதுரை குறித்து வேறு விஷயங்கள் கொடுக்க முடியுமா என
யோசித்து ஒரு வித்தியாசமான பதிவைக் கொடுக்க முயல்கிறேன்

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தனிமரம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பிரணவன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம் 15

அருமையான கருத்துக்கள்.
நியாயமான எதிர்பார்ப்புகள்.
அப்படியே பின்பற்றுவோம்.

vgk

சாந்தி மாரியப்பன் said...

அருமையான அலசல்.. தீர்வு இப்ப நம்ம கையில இருக்கு.

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அமைதிச்சாரல் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

சரியா சொல்லி இருக்கீங்க சார் நல்ல சிந்தனை

காட்டு பூச்சி said...

நம்ம மக்கள் யோசிபாங்கனு நீங்க நெனைகிரிங்களா அய்யா?
நல்ல கவிதை அருமை

இராஜராஜேஸ்வரி said...

தமிழக அரசியல் கட்சிகளின் உண்மையான பலத்தை
அறிந்து கொள்வோம்
இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைவது கடினமே என்பதில்
தெளிவாய் இருப்போம்

பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி.

கடம்பவன குயில் said...

நியாயமான ஆதங்கம்தான். பொறுத்திருந்து பார்ப்போம். மக்கள் என்ன செய்கிறார்கள் என்று!

Yaathoramani.blogspot.com said...

ஜ.ரா.ரமேஷ் பாபு


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

காட்டு பூச்சி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கடம்பவன குயில் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ShankarG said...

நல்ல கருத்து. நிச்சயம் அதை பின்பற்றுவதில் தீர்மானமாய் இருக்கிறோம். நன்றி ரமணி.

கீதமஞ்சரி said...

தக்க சமயத்தில் தக்கதோர் அலசலும் அறிவுரையும். மக்கள் மனம் மாறும் நாள் விரைவில் மலரட்டும்.

Yaathoramani.blogspot.com said...

ShankarG //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கீதா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ரிஷபன் said...

தமிழக அரசியல் கட்சிகளின் உண்மையான பலத்தை
அறிந்து கொள்வோம்
இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைவது கடினமே என்பதில்
தெளிவாய் இருப்போம்

அருமையான கருத்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

ரிஷபன் //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Nagarajan cuddalore said...

Nagarajan(cuddalore): Nice

Yaathoramani.blogspot.com said...

Nagarajan cuddalore //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment