Wednesday, October 26, 2011

பயணம்

நாங்கள் பயணித்துக்கொண்டிருந்த
புகைவண்டிப் பெட்டிக்குள்
அந்த அழகிய வண்ணத்துப் பூச்சி
எப்படி வந்தது எனத் தெரியவில்லை

தன் வண்ணங்களில்
தானே கௌரவம் கொண்டபடி
தான் பயணிக்கும் திசையையும் வேகத்தையும்
முடிவெடுக்கும் அதிகாரம்
தன்னிடம் இருப்பதான மமதையில்
மிக மிக சந்தோஷமாய்
பெட்டிக்குள் வலைய வந்து கொண்டிருந்தது
அந்த அழகிய வண்ணத்துப் பூச்சி

பெட்டிக்குள் பயணிக்கும் எது குறித்தும்
எவ்வித சிந்தனையுமற்று
வடக்கு திசை நோக்கி
அதி வேகத்தில் பறந்து கொண்டிருந்தது 
அந்த அதிசயப் புகைவண்டி

90 comments:

ShankarG said...

பயணம் மிகவும் சிந்திக்க வைக்கிறது. என்ன ஒரு கற்பனை? நல்ல படைப்பு. வாழ்த்துக்கள்.

ரிஷபன் said...

தொலைக்காட்சியில் பயணம் பார்த்து விட்டு இங்கு வந்தால் பயணம் கவிதை!

அழகிய வண்ணத்துப் பூச்சி சொல்லிப் போன கவிதை அழகு.

முனைவர் இரா.குணசீலன் said...

அழகு..

அருமையான பகிர்வு..

முனைவர் இரா.குணசீலன் said...

பெட்டிக்குள் பயணிக்கும் எது குறித்தும்..

நமக்கு அது எதுவோ...
அது போல..

அதற்கும் நாம் எதுவோ தான்..

அழகான பதிவு அன்பரே..

ஷைலஜா said...

வண்ணத்துப்பூச்சிக்கு வாழ்க்கை முழுவதும் வாசல்கள் எங்கே வேண்டுமானாலும் கவலையின்றி பறக்கும்!
அழகிய கவிதை..தீபாவளிவாழ்த்துகள்!

Yaathoramani.blogspot.com said...

ShankarG //

தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

.ரிஷபன் //
தங்கள் உடன் வருகைக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

முனைவர்.இரா.குணசீலன் //

தங்கள் உடன் வருகைக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஷைலஜா //

தங்கள் உடன் வருகைக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

எங்கே குரு கிளம்பிட்டீங்க...???

MANO நாஞ்சில் மனோ said...

இன்னைக்கு என்ன சிம்பிளா முடிச்சிட்டீங்க, அருமையான வர்ணனை...!!!!

Anonymous said...

எவ்வித சிந்தனையுமற்று அந்த அதிசயப் புகைவண்டிசிந்திக்க வைக்கிறது...


பிடித்தது ரமணி சார்...

வெங்கட் நாகராஜ் said...

அழகிய கவிதை...

நன்றாக இருந்தது இக்கவிதை....

வாழ்த்துகள்..

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

அருமை.

தீபாவளி வாழ்த்துக்கள்!

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ //

தங்கள் உடன் வருகைக்கும்
வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //


தங்கள் உடன் வருகைக்கும்
வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் உடன் வருகைக்கும்
வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Rathnavel .

தங்கள் உடன் வருகைக்கும்
வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி //

தங்கள் உடன் வருகைக்கும்
வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

காட்டான் said...

வணக்கமையா..
தீபாவளி நல் வாழ்த்துக்கள்..  
பயணம் செய்யும் வண்ணத்து பூச்சி..?? அழகிய கவிதை ஐய்யா வாழ்த்துக்கள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம் 7

அழகிய கவிதை அந்த அழகிய வண்ணத்துப் பூச்சி போலவே. பாராட்டுக்கள். vgk

நிலாமதி said...

பயணத்திலும் ஒரு பாடம் சொல்லபடுகிறது . பாராட்டுக்கள்.தீபாவளி நல் வாழ்த்துக்கள்..

ஸாதிகா said...

சிம்பிளான கவிதையாயினும் சிறப்பான கவிதை!

Selmadmoi gir said...

Happy dewali

Yaathoramani.blogspot.com said...

காட்டான் //

தங்கள் உடன் வருகைக்கும்
வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //


தங்கள் உடன் வருகைக்கும்
வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

நிலாமதி //

தங்கள் உடன் வருகைக்கும்
வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா

தங்கள் உடன் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

அவரவர் பயணம் தனித்தனி! எண்ணங்களும் தனித்தனி! த.ம 9!

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

தங்கள் வருகைக்கும்
வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

அப்பாதுரை said...

கவிதை எழுதக் கரு உங்களுக்கு எங்கிருந்து தான் கிடைக்கிறதோ?!
மிகவும் ரசித்தேன்.

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

தங்கள் வருகைக்கும்
வாழ்த்துக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பயணங்களே எப்போதும் அழகு தான் ரமணி சார், தீபாவளி சிறப்பு தானா?

Yaathoramani.blogspot.com said...

rufina rajkumar //

தங்கள் வருகைக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

மாய உலகம் said...

பயணம் பற்றிய பகிர்வுக்கு பாராட்டுக்கள் சகோ!

Yaathoramani.blogspot.com said...

மாய உலகம் //

தங்கள் வருகைக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

SURYAJEEVA said...

நல்ல அருமையான சிந்தனை, அந்த பட்டாம் பூச்சி நீங்கள் சென்ற புகைவண்டி வேகத்தில் பரந்திருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

K.s.s.Rajh said...

நல்ல படைப்பு வாழ்த்துக்கள் பாஸ்

Yaathoramani.blogspot.com said...

suryajeeva //

என் கருத்தை மிகச் சரியாக பின்னூட்டமிட்டமைக்கு
நன்றி சூர்ய ஜீவா
வண்ணத்துப் பூச்சியை மனித வாழ்வுக்கும்
புகைவண்டியை பூமிக்குமாக உருவகப் படித்தி
சொல்ல முயன்றிருக்கிறேநாம் பூமியின் வேகத்திற்கு தகுந்தாற்ப்போலவடக்கு நோக்கிய மரண ஊருக்கு அதன் வேகத்தில் தானேபோய்க் கொண்டிருக்கிறோம்
நம் வேகமும் நம் திறனும் அதற்கு ஒருபொருட்டே இல்லை
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

K.s.s.Rajh //

தங்கள் வருகைக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

கே. பி. ஜனா... said...

வண்ணத்துப் பூச்சி இன்னும் மனதில் பறந்து கொண்டிருக்கிறது...

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா... //


தங்கள் வருகைக்கும்
வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

RAMA RAVI (RAMVI) said...

வண்ணத்துப்பூச்சி மாதிரியே மிக அழகான கவிதை.

சக்தி கல்வி மையம் said...

சிந்திக்க வைக்கும் வரிகள்.,

Yaathoramani.blogspot.com said...

RAMVI //

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வேடந்தாங்கல் - கருன் *! //

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

சாந்தி மாரியப்பன் said...

பட்டாம்பூச்சியின் பயணம் அருமையா இருக்கு.

M.R said...

அழகான கற்பனை ,அதிலே கருத்தும் பொதிந்துள்ளது ,அருமை நண்பரே ,நன்றி

த.ம 12

சென்னை பித்தன் said...

யதார்த்தம்.அருமை.

சத்ரியன் said...

இதற்கு பெயர்தான் “ஜென்”. லயித்து போதல்!

தீபாவளி வாழ்த்துக்கள்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இதுவரை வழக்கமான உங்கள் பாணியிலிருந்து விலகி புதிய வடிவமும் மெருகும் கொண்ட கவிதை ரமணியண்ணா.

வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பை அதன் திசையை யார் தீர்மானித்துவிட முடியும்?

Yaathoramani.blogspot.com said...

அமைதிச்சாரல் //


தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

M.R //

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சென்னை பித்தன் //

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சத்ரியன் //

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சுந்தர்ஜி //

தங்கள் உடன் வருகைக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

G.M Balasubramaniam said...

எத்தனை பெரிய விஷயம். எவ்வளவு எளிதாகக் கூறிவிட்டீர்கள். இதை படித்தபோது எனக்கு சில விஷயங்கள் நினைவுக்கு வருகிறது. மனித மனம் பற்றியது. கையில் கடிகாரம் கட்டிக்கொண்டவன் காலத்தையே ஆள்வதாக நினைப்பது போலவும், ஆங்கிலத்தில் AS THE FOOL THINKETH, THE CLOCK CLICKETH என்பது போலவும் நிலையில்லா வாழ்வின் திசையை நாமே நிர்ணயிப்பது போலவும் எண்ணங்கள் தோன்றுகின்றது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

போளூர் தயாநிதி said...

பெட்டிக்குள் பயணிக்கும் எது குறித்தும்
எவ்வித சிந்தனையுமற்று
வடக்கு திசை நோக்கி
அதி வேகத்தில் பறந்து கொண்டிருந்தது
அந்த அதிசயப் புகைவண்டி// ஆழ மான சிந்தனை பாராட்டுகள்

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

போளூர் தயாநிதி //

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

மகேந்திரன் said...

கண்ணால்கண்டதை
கவியாய் வடித்தமை அழகு.....

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

கீதமஞ்சரி said...

சார்பியல் தத்துவத்துக்குள் பொதிந்த ஒரு வாழ்க்கைத் தத்துவம். கவிதையின் கருவும் உருவும் அழகு. பாராட்டுக்கள் ரமணி சார்.

Yaathoramani.blogspot.com said...

கீதா //

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

விச்சு said...

நமக்கும் ஒரு இறக்கை இருந்தால் நல்லாயிருக்கும். நல்ல கற்பனை..

Yaathoramani.blogspot.com said...

விச்சு //

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

அழகிய வண்ணத்துப் பூச்சி கவிதை

Yaathoramani.blogspot.com said...

விக்கியுலகம் //

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

சுந்தரா said...

அழகான கவிதை.

காட்சியைக் கண்முன் கொண்டுவருவது கூடுதல் சிறப்பு.

பாராட்டுக்கள் சார்!

Yaathoramani.blogspot.com said...

சுந்தரா //

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

ஜோசப் இஸ்ரேல் said...

சில வரிகளில் எவ்வளவு பெரிய வார்த்தைகள் ...

vanathy said...

சூப்பர் கற்பனை. தொடர வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

உங்கள் நண்பன்

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

vanathy //

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

ராஜி said...

தமிழ்மணம் 15

ராஜி said...

நல்லதொரு பயணம்

Yaathoramani.blogspot.com said...

ராஜி //

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

நல்ல அருமையான பயணம்

Unknown said...

வடக்கு திசை நோக்கி
அது என்ன வடக்கு திசை நோக்கி

Yaathoramani.blogspot.com said...

தெற்கு நோக்கிய பயணத்தை சரண யாத்திரை என்பார்கள்
வடக்கு நோக்கிய பயணத்தை மரண யாத்திரை என்பார்கள்
அதை குறியீடாகச் சொல்லவே வடக்கு நோக்கி என எழுதினேன்
இன்னும் தெளிவாகச் சொல்லி இருக்கலாமோ ?

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

நம்பிக்கைபாண்டியன் said...

சிறந்த கவிதைகளாக தொடர்ந்து வருகின்றன உங்களிடமிருந்து!

Yaathoramani.blogspot.com said...

நம்பிக்கைபாண்டியன் //

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

r.v.saravanan said...

தன் வண்ணங்களில்
தானே கௌரவம் கொண்டபடி
தான் பயணிக்கும் திசையையும் வேகத்தையும்
முடிவெடுக்கும் அதிகாரம்
தன்னிடம் இருப்பதான மமதையில்

அந்த அழகிய வண்ணத்துப் பூச்சி

பெட்டிக்குள் பயணிக்கும் எது குறித்தும்
எவ்வித சிந்தனையுமற்று

அதி வேகத்தில் பறந்து கொண்டிருந்தது
அந்த அதிசயப் புகைவண்டி

நல்ல கற்பனை ஒப்பீடு சார்

Yaathoramani.blogspot.com said...

r.v.saravanan //

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Karthikeyan Rajendran said...

http://sparkkarthikovai.blogspot.com/2011/07/blog-post_24.html

Karthikeyan Rajendran said...

நல்லாயிருக்கு, அந்த வண்ணத்துப்பூச்சியின் குணமும், புகைவண்டியின் மனமும் அமைய vendukiren.

Yaathoramani.blogspot.com said...

! ஸ்பார்க் கார்த்தி //

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Thooral said...

வண்ணத்துப்பூச்சி போல் ஒரு அழகான கவிதை:)

Yaathoramani.blogspot.com said...

jayaram thinagarapandian //

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment