Saturday, February 25, 2012

டியூப் லைட் படைப்பாளியும் தடாலடி வாசகனும்

எப்போதும் மூன்று விஷயங்களை
தனித்தனியாகச் செய்யும் என் நண்பன்
இன்று ஒன்றாய்ச் செய்திருந்தான்

"என்ன விஷேசம் " என்றேன்

"ஒரு கிடாவெட்டு " என்றான்
மது வாடை குப்பென அடித்தது 

"சரி வரட்டுமா " என்றேன்

"உன்னிடம் பேசத்தான்
செட்- அப் பாக வந்திருக்கிறேன்
நீ போனால் எப்படி " என்றான்

அவன் பேசவில்லை
மப்பு  பேசுகிறது எனத் தெரிந்து கொண்டேன்

இந்த நண்பன் என்னோடு பள்ளி
இறுதி வகுப்புவரை தொடர்ந்து வந்தவன்
அப்போது அவனுக்கு வந்த காதலினால்
படிப்பையும் வாழ்வையும் குட்டிச் சுவராக்கி
கொண்டவன் .எழுதுபவ ன் எல்லாம் எல்லாம்
தெரிந்தவன் என்றோ அல்லது இப்படிப்
பேசினால் தானும் எல்லாமும் தெரிந்தவன்
என எண்ணிக்கொள்வார்கள் என  எண்ணியோ
என்னை சந்திக்கிறபோதெல்லாம் இப்படி
"பெண்களின் முடிக்கு     இயற்கையில் மணமுண்டா "
என்பது மாதிரியான ஏதாவது ஒரு
அசட்டு பிசட்டான கேள்வியை வைத்திருப்பான்
நானும் வார இதழ்களில் தாடி மீசை மற்றும்
பட்டை அடித்துக் கொண்டு வாராவாரம்
 பசு மாட்டுக்கு எந்தக் கிழமையில் எது கொடுத்தால்
செத்த மாமனார் சொர்க்கத்தில் சந்தோஷமாகச்
சாப்பிடுவார் என்பதற்கு பதில் சொல்லும்
ஆன்மிகப் பெரியவர் போல எதையாவது
நான்தான்  அதாரிட்டி போலச் சொல்லிப் போவேன்
அவனும் மகிழ்ந்து போவான் '

அது மாதிரித்தான் இன்றும் பிடித்துக் கொண்டான் 

  அவனே தொடர்ந்தான்
" முதலில் கிடாவெட்டுக்குத் தயாராக
ஒயின்ஸ் போனேன்அங்கே குடி குடியைக்
கெடுக்கும் எனப் போட்டிருந்தது
படித்துவிட்டு ஒரு ஃபு ல் போட்டேன்.
கரி சூப்பரா இற்ங்கிச்சு.செமிக்க வெத்தலை பாக்கு
போடப்போனா புகையிலை விளம்பரத்திலே
புகையிலை புத்து நோயை வரவழைக்கும்ன்னு
போட்டிருந்தது.அதைப் படிச்சுப் பாத்து ஒரு
பொட்டலம் வாங்கிப் போட்டேன்.இதோ இந்த
சிகரெட் விளம்பரத்திலே புகைபிடித்தல் கேடுன்னு
போட்டிருக்கு.படிச்சுட்டு ஒன்னு பத்தவச்சிருக்கேன்
ஏனப்பா இப்படியெல்லாம் எழுதி வைக்கிறாங்க
எழுதறதுல என்னப்பா பிரயோஜனம்  "என்றான்

அவன் சுற்றி வளைத்து எங்கு வருகிறான் எனத்
தெரிந்தது

" எந்த எழுத்தைச் சொல்றே.அதுல இருக்கிறதயா
இல்லை நாங்கள் எல்லாம் எழுதறதையா " என்றேன்

"இரண்டையும்தான் "என்றான் நக்கலாக

இவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை
இந்த எழுதுவது குறித்து எனக்கே குழப்பம்
இதனால் பயன் இருக்கிறதா அல்லது நம்மை
உயர்த்திக் காட்டிக் கொள்வதற்காக நாமும்
கஷ்டப்பட்டு அடுத்தவரகளையும் கஷ்டப்-
-படுத்துகிறோமாஎன்கிற எண்ணமும்
எனக்கு    பல நாட்களாக உண்டு

இந்த நிலையில் இவனுக்குஎப்படி பதில் சொல்வது
அல்லது எப்படித் தப்பிப்பது என
யோசித்துக் கொண்டிருந்தேன்

நல்லவேளையாக ஆபத்பாந்தவனாக  என நண்பன்
மணி எதிரே சைக்கிளில் வந்து நின்றான்
அவன் எங்கள் இருவருக்கும் ஒரு வருடம் சீனியர் .
அவன் எழுதுவதில்லையென்றாலும் வாசிப்பில் அதிக
ஆர்வம் உள்ளவன்

அவன் எடுத்த எடுப்பில் என்னைப் பார்த்து
லேசாக கண்ணடித்துவிட்டு " அதிகமாக மது வாடை
அடிக்கிறதே யார் குடித்திருக்கிறீர்கள் ?
தூரே இருந்து பார்க்கையில்
இருவரும் குடித்துப் பேசுவது போலத்தான் பட்டது
குடித்திருப்பவர் சைக்கிளில் ஏறலாம்
வீட்டில் விட்டு விடுகிறேன் " என்றான்

நண்பன் சட்டென குரலை உயர்த்தினான்
"இப்போது பிரச்சனை குடிப்பது
குடிக்காம இருப்பது பத்தி இல்லை
பேச்சை மாற்றாமல்  நீயாவது பதில் சொல்லு
இவன் முழிக்கிறான் " எனச் சொல்லி மீண்டும்
ஏற்கெனவே சொன்னபடி "கிடாவெட்டுக்கு
ஒயின்ஸ் போனேன் ".. எனத் தொடர்ந்து
பேச ஆரம்பித்துவிட்டான்

மணிக்கு நிலைமை புரிந்து போனது
"தம்பி நீ கேட்கிற கேள்வி பெரும் கேள்வி
இதற்கு பதில் சொல்லும் அளவு
நான் அறிவாளி இல்லை ஆனாலும்
தீயணைப்புத் துறையில் நான் வேலைக்குச்
சேர்ந்தபோது ட்ரைனிங்கில் ஒரு விஷயம் சொல்லிக்
கொடுத்தார்கள் அதை வேண்டுமானால்
சொல்கிறேன் " என்றான்

போதை நண்பன் சப்தம் போட்டு சிரிக்கத்
துவங்கினான் " அப்ப நீயும் போட்டுகிட்டுத்தான்
வந்திருக்கையா எதையோ கேட்டால்
எதையோ சொல்கிறாயே " என்றான்

"எல்லாம் தண்ணி  சம்பத்தப்பட்டதுதானே
போதையேறவும் தண்ணி வேணும்
தீ அணைக்கவும் தண்ணி வேணும்
முதலில் நான் சொல்றதைக் கேளு
அப்புறம் உன் கேள்விக்கு பதில் தேடுவோம் "
எனச் சொல்லிவிட்டுசொல்ல ஆரம்பித்தான்

"முதலில் தீ பிடித்த வீட்டுக்குப் போனவுடன்
அந்த வீட்டில் உயிருடன் எவரும் உள்ளே
மாட்டிக் கொண்டிருக்கிறார்களா எனப்
பார்க்கச் சொல்வார்கள் இல்லையெனில்
உயரிய பொருட்கள் எதுவும் இருந்தால்
அதை மீட்கச் சொல்வார்கள்.
அதுவும் இல்லையென்றால்
எரிகிற வீட்டைவிட தீ பரவாமல்
பார்த்துக் கொள்வதில்தான்
அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என
சொல்லிக் கொடுத்தார்கள்  "
எனச் சொல்லி சிறிது நிறுத்தி பின் போதை
நண்பனை உற்றுப் பார்த்துவிட்டு "எந்த பயனும்
அற்றதை காப்பதை விட வேறு பயனுள்ளவை
எரிந்துவிடாமல் காப்பதில்தான் அதிகம் கவனம்
கொள்ளவேண்டும் எனபதைத்தான் பால பாடமாகச்
சொல்லிக் கொடுத்தார்கள்" என்றான்

"என் கேள்விக்கு பதில் சொல்லாமல்
வேறு எதையோ சொல்கிறாயே " என்றான்

"  அவசரப்படாதே  ஒவ்வொன்னா
சொல்லிவாரென்  " என சைக்கிளை
ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு விவரமாக்ப்
பேசத்துவங்கினான்

"ஒயின்ஸ் கடை வாசலில் ஒயின்ஸ் ஷாப்
என எழுதி இருப்பது குடிகாரர்கள் கடையைத்
தெரிந்து கொள்வதற்காகவும் உள்ளே நுழைந்து
குடித்து மகிழ்வதற்காகவும்தான்

.குடிப்பது உடல் நலத்திற்கு
தீங்கானது  என எழுதி இருப்பது என்பது
குடிக்காதவர்கள் மனதில்
தொடர்ந்து பதியவைத்துக் கொள்வதற்காகவும்
தொடந்து குடிப் பழக்கத்திற்கு
அடிமையாகாமல் இருப்பதற்காகவும்தான்

நல்ல விசயங்களைத் தொடர்ந்து
எழுதுவது கூட கெட்டுக் குட்டிச் சுவர்
ஆனவர்களைத் திருத்துவதற்காக இல்லை
நல்லவர்களை தொடர்ந்து நல்லவர்களாகவே
இருக்கவைக்கத்தான் " என்றான்

போதை நண்பனுக்கு இந்தப் பதில்
உடன்பாடானதாகத் தெரியவில்லை       
"இது சரியில்லை உளறுகிறாய்
இன்னும் விளக்கமாகச் சொல்" என்றான்

"சரி சரி அப்படியே இருக்கட்டும் இப்போது
தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு மூன்றுபேரும்
குடித்து பினாத்துவது போல் தெரியும்
நான் இவனை சைக்கிளில் கூட்டிப் போகிறேன்
நாளை விளக்கமாகப் பேசிக் கொள்ளலாம் "
எனச் சொல்லி என்னை ஏற்றிக் கொண்டு
சைக்கிளைக் கிளப்பினான்

நானும் அவஸ்தையில் இருந்து தப்பினேன்
இவன் விளக்கம் என்னுடைய நெடு நாளைய
குழப்பத்திற்கு சரியான பதில் போலவும் பட்டது  

எனக்கென்னவோ வர வர  வித்வானை விட ரசிகனும்
படைப்பாளியைவிட வாசகனுமே எப்போதும்
தெளிவானவர்களாகவும் யதார்த்தவாதிகளாகவும்
 இருப்பதாக மனதிற்குப்படுகிறது


68 comments:

Anonymous said...

ME FIRST

Anonymous said...

நல்ல விசயங்களைத் தொடர்ந்து
எழுதுவது கூட கெட்டுக் குட்டிச் சுவர்
ஆனவர்களைத் திருத்துவதற்காக இல்லை
நல்லவர்களை தொடர்ந்து நல்லவர்களாகவே
இருக்கவைக்கத்தான் ----------SUPER AYYAA...

NAALLA KARUTHU SONNINGA

துரைடேனியல் said...

Arumai.

துரைடேனியல் said...

TM 2.

Admin said...

உங்கள் தீயணைப்பு நண்பர் சரியான விளக்கம் கொடுத்தார்..வாசித்தேன் வாக்கிட்டேன்.நன்றி.

Seeni said...

நல்ல அனுபவம்!

கடைசியி நீங்கள்-
சொன்னதும்!
தீயணைப்பு நண்பர்-
சொன்னதும்'!

ஹாலிவுட்ரசிகன் said...

//படைப்பாளியைவிட வாசகனுமே எப்போதும்
தெளிவானவர்களாகவும் யதார்த்தவாதிகளாகவும்
இருப்பதாக மனதிற்குப்படுகிறது//

நண்பரின் விளக்கம் அருமை. நல்ல ஒரு அனுபவத்தை விளக்கியதற்கு நன்றி.

Madhavan Srinivasagopalan said...

//குடிக்காதவர்கள் மனதில்
தொடர்ந்து பதியவைத்துக் கொள்வதற்காகவும்
தொடந்து குடிப் பழக்கத்திற்கு
அடிமையாகாமல் இருப்பதற்காகவும்தான்//

Very nice.. I understand the importance of the sentence.
Thanks for sharing

Anonymous said...

என்ன இருந்தாலும் கடவுள் கடவுள் தான்
பக்தன் பக்தன் தான் சார் . கடவுள் பக்திக்கு
உருகுவார் , பக்தன் கருணைக்கு உருகுவார்.
நல்லதொரு படைப்பு ரமணி சார்.

Unknown said...

எச்சரிக்கை வாசகங்களை கொடுப்பதர்க்கு ஆளிருக்கு,,கேட்பதற்குதான் யாருமில்லை..ஏன் எழுதுகிறார்கள் என மயக்கப்பார்ட்டி கேட்கிறார் அல்லவா? அதிலும் சிறிது உண்மை இருக்கிறது!

இப்படித்தான் பாருங்க..கல்யாணமாகிய ஆண்கள் கஷ்டப்படுவதை பத்தி யார் சொல்லக் கேட்பினும்,காது கொடுத்துக் கேட்கும் இளைஞர்கள் உண்டோ!

மற்றபடி தீயணைப்பு நண்பர் சொல்லிய கருத்து மிகவும் சரியே!

வேர்கள் said...

//இந்த எழுதுவது குறித்து எனக்கே குழப்பம்
இதனால் பயன் இருக்கிறதா அல்லது நம்மை
உயர்த்திக் காட்டிக் கொள்வதற்காக நாமும்
கஷ்டப்பட்டு அடுத்தவரகளையும் கஷ்டப்-
-படுத்துகிறோமாஎன்கிற எண்ணமும்
எனக்கு பல நாட்களாக உண்டு//
இந்த எண்ணம் தவறு
உங்கள் எழுத்து என்பது உங்கள் எண்ணங்களின் வடிகால் இணயம் என்பது அதற்கான தளம்
இப்படிதான்
திருவள்ளுவர் முதற்கொண்டு பல்வேறு எழுத்தாளர்கள் தம் எண்ணங்களை எழுத்தில் பகிர்ந்தார்கள்
இன்று அது உலக பொதுமறையாக நம்மால் கொண்டாடப்படுகிறது யார் கண்டது அவர் எழுதிய காலத்தில் அவருக்கு எந்த அளவுக்கு அங்கிகாரம் கிடைத்தது என்று அவரும் அதை எதிர்பார்த்திருக்கமாட்டார்,
நாம் எழுத்தால் நம் தமிழ் சமூகத்திற்கு சிறிதளவேனும் பயன்கிட்டுமாயின் அதை செய்ய தயங்காதீர்கள் .
நமது நோக்கம் அறிவார்ந்த தமிழ் சமூகத்தை கட்டி எழுப்புவதாக இருக்கவேண்டும் இந்த வேண்டுகோள் நம் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும்....

துரைடேனியல் said...

//இந்த எழுதுவது குறித்து எனக்கே குழப்பம்
இதனால் பயன் இருக்கிறதா அல்லது நம்மை
உயர்த்திக் காட்டிக் கொள்வதற்காக நாமும்
கஷ்டப்பட்டு அடுத்தவரகளையும் கஷ்டப்-
-படுத்துகிறோமாஎன்கிற எண்ணமும்
எனக்கு பல நாட்களாக உண்டு//

- இந்த கருத்தோடு நானும் முரண்படுகிறேன். முனைவர் குணசீலன் அவர்களின் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். வாழும் காலத்தில் எந்த எழுத்தாளனும் அல்லது கவிஞனும் கௌரவிக்கப்பட்டதில்லை. ஆனால் அவன் மறைந்த பிறகு அவன் எழுத்துக்கள் வானளாவ போற்றப்படுகின்றன. நாம் மறைந்துவிட்டாலும் நம் எழுத்துக்கள் காலாகாலத்துக்கும் நின்று தலைமுறையினரை வாழவைக்கும். தரமான எழுத்துக்களை மட்டுமே நான் சொல்கிறேன். நீங்களும் தரமான எழுத்தாளர் என்பதால் தைரியமாக எழுதுங்கள். குறைநிறை சொல்ல நாங்க இருக்கிறோம் சார். பிறகென்ன ஜமாய்ங்க...! வாழட்டும் நீங்களும் உங்கள் தமிழும்!

என்றும் அன்புடன்

- துரை டேனியல்.

துரைடேனியல் said...

ஒரு சின்னத் தவறு. இந்த சகோ.வேர்கள் எழுதியதை நான் முனைவர் சொன்னதாக சொல்லி விட்டேன். சாரி. பெயர் குழப்பம் மட்டுமே. மற்றபடி கருத்தில் மாற்றமில்லை. நன்றி !

Yaathoramani.blogspot.com said...

தங்கள் முதல் வரவுக்கு நன்றி
கருத்தைக் கூறிச் சென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி
தரமான பதிவுகளை மட்டுமே தருவது என்கிற
வைராக்கியத்தோடு எழுதிவரும் தங்களால்
பாராட்டப்படுவதை உண்மையில்
பெரும் பேறாகக்கருதுகிறேன்

Yaathoramani.blogspot.com said...

மதுமதி //

உங்கள் தீயணைப்பு நண்பர் சரியான விளக்கம் கொடுத்தார்..வாசித்தேன் வாக்கிட்டேன்.நன்றி//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் வாக்கிற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni

நல்ல அனுபவம்!

கடைசியி நீங்கள்-
சொன்னதும்!
தீயணைப்பு நண்பர்-
சொன்னதும்'!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹாலிவுட்ரசிகன் //

நண்பரின் விளக்கம் அருமை. நல்ல ஒரு அனுபவத்தை விளக்கியதற்கு நன்றி.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Madhavan Srinivasagopalan //

Very nice.. I understand the importance of the sentence.
Thanks fo..r sharing //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //.

நல்லதொரு படைப்பு ரமணி சார்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

துளசி கோபால் said...

//நாமும்
கஷ்டப்பட்டு அடுத்தவரகளையும் கஷ்டப்-
-படுத்துகிறோமாஎன்கிற எண்ணமும்
எனக்கு பல நாட்களாக உண்டு//

ஆஹா.... நம்ம மேட்டரை இப்படி பப்ளிக்காப்போட்டு ஒடைச்சுப்புட்டீகளே:-)))))

தனிமரம் said...

எனக்கென்னவோ வர வர  வித்வானை விட ரசிகனும்
படைப்பாளியைவிட வாசகனுமே எப்போதும்
தெளிவானவர்களாகவும் யதார்த்தவாதிகளாகவும் 
 இருப்பதாக மனதிற்குப்படுகிறது// சரியாகத்தான் சொல்லி இருக்கின்றீங்கள் ரமனி ஐயா.

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா தீயணைப்பு செய்தி எனக்கு புதுசு குரு....!!!

MANO நாஞ்சில் மனோ said...

எது எழுதினாலும் அதில் ஒரு உள் அர்த்தம் சூப்பரா ஒளிஞ்சி இருக்கு சூப்பர்...!!!

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

எச்சரிக்கை வாசகங்களை கொடுப்பதர்க்கு ஆளிருக்கு,,கேட்பதற்குதான் யாருமில்லை..ஏன் எழுதுகிறார்கள் என மயக்கப்பார்ட்டி கேட்கிறார் அல்லவா? அதிலும் சிறிது உண்மை இருக்கிறது!//

மற்றபடி தீயணைப்பு நண்பர் சொல்லிய கருத்து
மிகவும் சரியே! //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வேர்கள் //...

நாம் எழுத்தால் நம் தமிழ் சமூகத்திற்கு சிறிதளவேனும் பயன்கிட்டுமாயின் அதை செய்ய தயங்காதீர்கள் .
நமது நோக்கம் அறிவார்ந்த தமிழ் சமூகத்தை கட்டி எழுப்புவதாக இருக்கவேண்டும் இந்த வேண்டுகோள் நம் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும்...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //

நம் எழுத்துக்கள் காலாகாலத்துக்கும் நின்று தலைமுறையினரை வாழவைக்கும். தரமான எழுத்துக்களை மட்டுமே நான் சொல்கிறேன். நீங்களும் தரமான எழுத்தாளர் என்பதால் தைரியமாக எழுதுங்கள்//.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

துளசி கோபால் //

ஆஹா.... நம்ம மேட்டரை இப்படி பப்ளிக்காப்போட்டு ஒடைச்சுப்புட்டீகளே:-))))) //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தனிமரம் //

// சரியாகத்தான் சொல்லி இருக்கின்றீங்கள் ரமனி ஐயா

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ //

எது எழுதினாலும் அதில் ஒரு உள் அர்த்தம் சூப்பரா ஒளிஞ்சி இருக்கு சூப்பர்...!!!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

கலை //

நல்ல விசயங்களைத் தொடர்ந்து
எழுதுவது கூட கெட்டுக் குட்டிச் சுவர்
ஆனவர்களைத் திருத்துவதற்காக இல்லை
நல்லவர்களை தொடர்ந்து நல்லவர்களாகவே
இருக்கவைக்கத்தான் ----------SUPER AYYAA...
NAALLA KARUTHU SONNINGA

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

சசிகுமார் said...

அருமை...

முத்தரசு said...

தீ அணைப்பு தகவல் எனக்கு புதுசு - அனுபவம்


//நாளை விளக்கமாகப் பேசிக் கொள்ளலாம் "
எனச் சொல்லி என்னை ஏற்றிக் கொண்டு
சைக்கிளைக் கிளப்பினான்//

ஆமா சைக்கிள்லில் உங்களை எதுக்கு ஏத்திட்டு போனார் உங்க நண்பர்?

Yaathoramani.blogspot.com said...

சசிகுமார் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

மனசாட்சி //

தீ அணைப்பு தகவல் எனக்கு புதுசு - அனுபவம் //

தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

வெங்கட் நாகராஜ் said...

தீயணைப்பு துறை நண்பர் சொன்ன விளக்கம் அருமை....

நல்லதோர் பகிர்வுக்கு நன்றி சார்.

குறையொன்றுமில்லை. said...

எனக்கென்னவோ வர வர வித்வானை விட ரசிகனும்
படைப்பாளியைவிட வாசகனுமே எப்போதும்
தெளிவானவர்களாகவும் யதார்த்தவாதிகளாகவும்
இருப்பதாக மனதிற்குப்படுகிறது

எஸ் உண்மைதான்

சசிகலா said...

எனக்கென்னவோ வர வர வித்வானை விட ரசிகனும்
படைப்பாளியைவிட வாசகனுமே எப்போதும்
தெளிவானவர்களாகவும் யதார்த்தவாதிகளாகவும்
இருப்பதாக மனதிற்குப்படுகிறது///
எனக்கும் இந்த -யோசனை உண்டுங்க . படிப்பாளிகள் எதையாவது நினைத்து குழம்பிக்கொண்டே தான் இருக்கிறோம் . ஒரு தாயின் பிரசவ வேதனை அது . அதோடு முடிவதில்லை வரும் காலத்தில் அதற்க்கு கிடைக்கும் வரவேற்ப்பை பொருத்தும் காத்திருக்கிறோம் . இந்த சமயத்தில் எங்களை தெளிவாக சிந்திக்கும் படி அமைந்தது தங்கள் பதிவு . நன்றி ஐயா.

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

நல்லதோர் பகிர்வுக்கு நன்றி சார். //

தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

சாந்தி மாரியப்பன் said...

//வித்வானை விட ரசிகனும்
படைப்பாளியைவிட வாசகனுமே எப்போதும்
தெளிவானவர்களாகவும் யதார்த்தவாதிகளாகவும்
இருப்பதாக மனதிற்குப்படுகிறது//

ஜூப்பர்... தீயணைப்பு வீரர் சொன்னதும் அருமை.

Yaathoramani.blogspot.com said...

சசிகலா //

சமயத்தில் எங்களை தெளிவாக சிந்திக்கும் படி அமைந்தது தங்கள் பதிவு . நன்றி ஐயா.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

அமைதிச்சாரல் //

ஜூப்பர்... தீயணைப்பு வீரர் சொன்னதும் அருமை.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! //நல்ல விசயங்களைத் தொடர்ந்து எழுதுவது கூட கெட்டுக் குட்டிச் சுவர் ஆனவர்களைத் திருத்துவதற்காக இல்லை
நல்லவர்களை தொடர்ந்து நல்லவர்களாகவே இருக்க வைக்கத்தான் // என்ற தங்களது புதிய சிந்தனை புதுமை.

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

தங்களது புதிய சிந்தனை புதுமை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

கடம்பவன குயில் said...

தங்கள் அனுபவ பகிர்வுகள் எங்கள் தேடுதல்களுக்கும் விடைதாங்கி வருவது சிறப்பு. நன்றி சார்.

நெல்லி. மூர்த்தி said...

வாழ்வில் சின்ன சின்ன சம்பவங்களில் தான் எத்தனை அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன!? அருமையான பதிவு!

Anonymous said...

எல்லோரும் எல்லாமே எழுதிவிட்டார்கள். நல்ல பதிவு. நமது பணியை எந்தத் தயக்கமும் இன்றி நல்லபடி செய்வோம். விளைவு நல்லதாகட்டும். வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.

Yaathoramani.blogspot.com said...

கடம்பவன குயில் //

தங்கள் அனுபவ பகிர்வுகள் எங்கள் தேடுதல்களுக்கும் விடைதாங்கி வருவது சிறப்பு. நன்றி சார்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

நெல்லி. மூர்த்தி //
.
வாழ்வில் சின்ன சின்ன சம்பவங்களில் தான் எத்தனை அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன!? அருமையான பதிவு//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

நல்லபடி செய்வோம். விளைவு நல்லதாகட்டும். வாழ்த்துகள் சகோதரா.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி .

ஹேமா said...

உங்கள் நண்பர் சொன்ன நீதி அருமை.வாழ்வின் அனுபவங்கள்கூடப் பாடமாகிறது வாழ்க்கைக்கு !

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

உங்கள் நண்பர் சொன்ன நீதி அருமை.வாழ்வின் அனுபவங்கள்கூடப் பாடமாகிறது வாழ்க்கைக்கு !//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

உங்கள் நண்பர் சொன்ன நீதி அருமை.வாழ்வின் அனுபவங்கள்கூடப் பாடமாகிறது வாழ்க்கைக்கு !//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Avargal Unmaigal said...

குடிக்காதவர்களின் சார்பில் நீங்க சொன்னது சரிதான் ..

ஆனால் குடிப்பவனின் சார்பாக சிலவற்றை நான் சொல்ல விரும்புகிறேன்.

குடி குடியை கெடுக்கும் என்று ஒயின் ஷாப் முன்னால் எழுதி இருப்பது போல

ஸ்வீட் ஸ்டால் முன்னால் ஸ்வீட் ஸ்வீட்டாக கொல்லும் என்று எழுதி வைத்திருக்கலாமோ என்று நினைக்கிறேன்.காரணம் ஸ்விட்டும் உடலை பாதிக்கிறதுதானே. இதில் மட்டும் ஏன் வேறுபாடு

//குடிக்காதவர்கள் மனதில்
தொடர்ந்து பதியவைத்துக் கொள்வதற்காகவும்//
"
அது போல நீரிழிவு நோய் அதிகம் உள்ள இந்தியாவில் ஸ்வீட் ஸ்டால் முன்னால் "ஸ்வீட் ஸ்வீட்டாக கொல்லும்' என்று எழுதிவைத்து அவர்கள் மனதிலும் இதை பதிய வைக்கலாமே.

குடிப்பதாகட்டும் அல்லது வேறு எந்த விஷயமாகட்டும் எதிலும் அளவோடு இருந்தால் வளமாக வாழலாம்.குடிப்பவர்களின் குடும்பங்கள் மட்டும் அழியும் மற்றவர்கள் குடும்பங்கள் எல்லாம் அழியாது இருக்கின்றன என்பதற்கு ஆதாரம் இல்லை. அதனால் குடிப்பவர்களின் குடும்பங்க

கீதமஞ்சரி said...

\\நல்ல விசயங்களைத் தொடர்ந்து
எழுதுவது கூட கெட்டுக் குட்டிச் சுவர்
ஆனவர்களைத் திருத்துவதற்காக இல்லை
நல்லவர்களை தொடர்ந்து நல்லவர்களாகவே
இருக்கவைக்கத்தான் " என்றான்\\

குழம்பியவன் இதைப்படித்துத் தெளிந்திருப்பானா என்பது சந்தேகம்தான் என்றாலும் தெளிந்திருப்பவன் குழப்பத்துக்கு ஆளாகாமல் இருப்பான் என்பது உறுதி.

படைப்பாளியின் வட்டத்தை விடவும் வாசகனின் வட்டம் பெரியதல்லவா? அதனாலேயே அவனால் தன் எண்ணங்களை விஸ்தாரமாக விரிக்கமுடியும் என்றும் யதார்த்தவாதியாக இருக்கப் பெரும் வாய்ப்புள்ளது என்றும் எண்ணமுடிகிறது.

நல்லதொரு சிந்தனைப் பகிர்வுக்கு நன்றி ரமணி சார்.

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

தங்களின் விரிவான அழகான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நன்றி
வெளி நாடுகளில் குடும்பத்தோடு வீட்டில் அமர்ந்துதான்
குடிக்கிறார்கள்.அது அங்கு யாருக்கும் தவறாகப் படவில்லை
காரணம் அவர்களுக்கு குடிப்பது எப்படி எனத் தெரியும்
இங்கிருப்பவர்களுக்கு அது தெரியவில்லை என்பது ஒரு விஷயம்
இங்கு இருக்கும் கிளப் களில் குடிக்கிற பழக்கம் உள்ள்ளவர்கள்
இருக்கிறார்கள்.அவர்கள் அதை ஒரு ஸ்டேடஸ் சிம்பளகாகக் கூடச்
செய்கிறார்கள்.அதுவும் தவறாகப் படவில்லை.ஏனெனில்
அவர்களுக்கும் குடிப்பது குறித்து ஒரு தெளிவான பார்வை இருக்கிறது
வசதி வாய்ப்பும் இருக்கிறது .இங்கு குடி குடி கெடுக்கும் என்பது
அடித்தட்டு மக்கள் குறித்தேதான்.தனது அன்றாட வருவாயில்
பாதிக்கு மேல் குடிப்பதுவும் அளவு தெரியாமல் குடிப்பதுவும்
போதையில் நடு வீதியில் கிடப்பதுவும் குடும்ப வாழ்வை
குடியின் காரணமாகவே சீரழித்துக் கொள்வதுமாக இருக்கிறார்கள்
என்னுடைய பார்வை இவர்கள் மீதுதான்
என்னுடைய பரிவும் இவர்கள் மீதுதான்
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் மீண்டும் நன்றி கூறி...

Yaathoramani.blogspot.com said...

கீதமஞ்சரி //

குழம்பியவன் இதைப்படித்துத் தெளிந்திருப்பானா என்பது சந்தேகம்தான் என்றாலும் தெளிந்திருப்பவன் குழப்பத்துக்கு ஆளாகாமல் இருப்பான் என்பது உறுதி.

படைப்பாளியின் வட்டத்தை விடவும் வாசகனின் வட்டம் பெரியதல்லவா? அதனாலேயே அவனால் தன் எண்ணங்களை விஸ்தாரமாக விரிக்கமுடியும் என்றும் யதார்த்தவாதியாக இருக்கப் பெரும் வாய்ப்புள்ளது என்றும் எண்ணமுடிகிறது.

நல்லதொரு சிந்தனைப் பகிர்வுக்கு நன்றி ரமணி சார்.//

மிக மிக அருமையான தெளிவான
உற்சாகமூட்டும் பின்னூட்டம்

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

உமா மோகன் said...

இந்த எழுதுவது குறித்து எனக்கே குழப்பம்
இதனால் பயன் இருக்கிறதா அல்லது நம்மை
உயர்த்திக் காட்டிக் கொள்வதற்காக நாமும்
கஷ்டப்பட்டு அடுத்தவரகளையும் கஷ்டப்-
-படுத்துகிறோமாஎன்கிற எண்ணமும்
எனக்கு பல நாட்களாக உண்டு

எனக்கும் கூட ரமணி சார்

Avargal Unmaigal said...

//என்னுடைய பார்வை இவர்கள் மீதுதான்
என்னுடைய பரிவும் இவர்கள் மீதுதான்//

ரமணி சார் உங்கள் எழுத்தின் மூலம் உங்கள் இதயம் புரிந்து கொண்டவன் நான். நான் போட்ட பின்னுட்டம் "குடிப்பது" என்றால் வாழ்க்கையில் செய்யக்கூடதா தவறை செய்துவிட்டதாக எண்ணி நினைப்பவர்களுக்காக மட்டுமே. அது உங்களுக்கு அல்ல

எனது வலைத்தலத்தில் நான் குடிப்பது பற்றிய ஒரு பதிவை கடந்த வருட இறுதியில் போட்டேன். அதை படித்த சில பதிவாளர்கள் நான் ஏதோ சொல்லகூடாததை சொன்னது மாதிரி என்னங்க நீங்க இப்படி ஒரு பதிவு எழுதலாமா என்று மெயில் அனுப்பிவிட்டு அதன் பிறகு என் பதிவு பக்கமே வருவதில்லை. நான் குடிக்கு அடிமையானவன் அல்ல ஒரு சோசியல் கெட்டுகெதருக்காக குடிப்பவன். அது எனக்கும் பிடித்து இருக்ககிறது மேலும் நான் குடிப்பவன் என்ற உண்மையை சொல்ல வெட்கப்படுவதில்லை. காரணம் அது எனக்கு தப்பாக படவில்லை.

Yaathoramani.blogspot.com said...

தங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி
குடிப்பது தவறு என்கிற பத்தாம்பசலித்தனமான எண்ணம்
என்னிடம் இல்லை.தன்நிலையினை மறந்து போதையில் தன்னிலை
மறப்பவர்கள் குறித்தே இப்பதிவு
மிகச் சரியாகப் புரிந்து கொண்டு தெளிவான பின்னூட்டமிட்டமைக்கு
மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

சக்தி //

தங்களைப் போல தரமான பயனுள்ள பதிவுகளை
மட்டுமே தரும்பதிவர்களுக்கு
லேசான மனச் சுணக்கம் கூட
வந்துவிடக் கூடாதே என்பதற்காகவே இந்தப் பதிவு
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Sankar Gurusamy said...

மிக ஆழமான கருத்து.. சற்று கலோக்கியலாக சொல்லியது சிறப்பு..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

Yaathoramani.blogspot.com said...

Sankar Gurusamy //

மிக ஆழமான கருத்து.. சற்று கலோக்கியலாக சொல்லியது சிறப்பு..பகிர்வுக்கு மிக்க நன்றி..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

அருணா செல்வம் said...

எதார்த்தத்தையும் எழுத்தால் எழுதினால் தான் எல்லோருக்கும் தெரியும்.
தெரிய வைத்தமைக்கு நன்றி!

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //

எதார்த்தத்தையும் எழுத்தால் எழுதினால் தான் எல்லோருக்கும் தெரியும்.
தெரிய வைத்தமைக்கு நன்றி!

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

ஸ்ரீராம். said...

எளிமையான வரிகளில் பெரிய விஷயம்.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Post a Comment