Tuesday, April 3, 2012

எதிர்மறையே எப்போதும் முன்னே வா...

பசியே வா

ஊழிக்கால நெருப்பாய்
குடல் முழுதும் பரவி
முற்றாக என்னை எரி
எனக்கு ருசியின் அருமையை
முழுமையாய் ருசிக்க வேண்டும்

பிரிவே வா

இதயத்தோடு
இரண்டறக் கலந்தவைகளையெல்லாம்
கிழித்துத் தூர எறி
நான அன்பின் ஆழமதை
அணுஅணுவாய் ரசிக்க வேண்டும்

பகையே வா

உன் போர்த்தந்திரங்களையெல்லாம்
வெறியோடு பயன்படுத்தி
என்னை நிர்மூலமாக்க முயற்சி செய்
இருக்கும் பலம் போதாது
நான் இன்னும் பலம் பெற வேண்டும்

அஞ்ஞானமே வா

நீர் மறைத்த நிலமாய்
ஞானத்தை என்னிடமிருந்து
முற்றாக மறைத்துவை.
அசுர வெறியோடு தேடிப் போராடி
நானாக அதை அடைதல் வேண்டும்

எதிர்மறையே வா

பகலுக்கு முன்வரும் இரவாய்
சுகத்திற்கு முன் வரும் துயராய்
எப்போதும் நீயே முன்னே வா

நேர்மறையின்
அருமையையும் பெருமையையும்
 நான் முழுமையாய்உணர  வேண்டும்


64 comments:

vanathy said...

அருமையான வரிகள், அழகான கவிதை. தொடர வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

நேர்மறையின் அருமையையும் பெருமையையும்
உனைவைத்தே நான் முழுமையாய்உணர வேண்டும்


நேர்மறையே வாழ்விற்கு வளம் சேர்க்கிறது!

Unknown said...

பிரிவே வா
இதயத்தோடு
இரண்டறக் கலந்தவைகளையெல்லாம்
கிழித்துத் தூர எறி
நான அன்பின் ஆழமதை
அணுஅணுவாய் ரசிக்க வேண்டும்////


சூப்பர்


பிரிவே வா
இதயத்தோடு
இரண்டறக் கலந்தவைகளையெல்லாம்
கிழித்துத் தூர எறி
நான அன்பின் ஆழமதை
அணுஅணுவாய் ரசிக்க வேண்டும்

G.M Balasubramaniam said...

என் கணினியிலிருந்து இம்மாதிரி பெட்டியில் கருத்து இட முடிவதில்லை. எழுதுபவை காணாமல் போய்விடுகின்றன. ஆனால் நான் நிறைய பதிவுகளைப் படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். இது ஒரு நல்ல கருத்து .அழகாய்வடிவமைக்கப் பட்டுள்ளது. பாராட்டுக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

//எதிர்மறையே வா
பகலுக்கு முன்வரும் இரவாய்
சுகத்திற்கு முன் வரும் துயராய்
எப்போதும் நீயே முன்னே வா
நேர்மறையின் அருமையையும் பெருமையையும்
உனைவைத்தே நான் முழுமையாய்உணர வேண்டும்//

நல்ல கவிதை. இல்லாத போது தான் இருப்பதன் சுகம் புரிகிறது!

Seeni said...

வல்லவனுக்கு புல்லும்-
ஆயுதம் என்பார்கள்!

எழுத்தாளருக்கு-
வலியும் வரியாகும்!

நல்ல கருத்துக்கள் அய்யா!

VANJOOR said...

DEAR MR. RAMANI,

KINDLY ALLOW THIS COMMENT.

THANK YOU.

.

அவசியம் சொடுக்கி >>>>>> ப‌திவ‌ர்க‌ளே, வாச‌கர்க‌ளே த‌மிழ்ம‌ண‌த்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட‌ வைர‌ஸ். <<<<< படியுங்கள்

.
.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அற்புதம்...

பால கணேஷ் said...

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். எதிர்மறையின் மகத்துவம் சொன்ன அழகிய கவிதை அபாரம். மிக ரசித்தேன். (த,ம,3)

Avargal Unmaigal said...

அழகான கவிதை!!!!அருமையான வரிகள்!!!!

ராஜி said...

அசுர வெறியோடு தேடிப் போராடி
நானாக அதை அடைதல் வேண்டும்
>>>
தன்னம்பிக்கை மிகுந்த வரிகள். போராடி பெறுவதில்தான் எத்தனை சுகம் உள்ளது. அப்படி பெறுவதை இழக்க கூடாதுன்னு எவ்வளவு ஜாக்கிரதை உணர்வுடன் இருப்போம். நாலதொரு கவிதை படைத்தமைக்கு நன்றி ஐயா.

ராஜி said...

த ம 4

முத்தரசு said...

சபாஷ்.....எழுச்சி மிக்க வரிகள் வேறு என்ன சொல்வது?

சிவகுமாரன் said...

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதை
மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். அருமை.

Unknown said...

இறைக்க இறைக்கத்தான் சுரக்கும்
என்று எடுத்துரைத்த பாங்கு நளினம்! நன்றி!

ராமலக்ஷ்மி said...

அருமை.

Yaathoramani.blogspot.com said...

vanathy //.
..
அருமையான வரிகள், அழகான கவிதை.

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sathish //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

.G.M Balasubramaniam //

இது ஒரு நல்ல கருத்து .அழகாய்வடிவமைக்கப் பட்டுள்ளது. பாராட்டுக்கள் //

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

நல்ல கவிதை. இல்லாத போது தான் இருப்பதன் சுகம் புரிகிறது!//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //

வல்லவனுக்கு புல்லும்-
ஆயுதம் என்பார்கள்!
எழுத்தாளருக்கு-
வலியும் வரியாகும்!
நல்ல கருத்துக்கள் அய்யா!//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

VANJOOR //

.தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவிதை வீதி... // சௌந்தர் //


அற்புதம்...

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கணேஷ் //

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். எதிர்மறையின் மகத்துவம் சொன்ன அழகிய கவிதை அபாரம். மிக ரசித்தேன் //.

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

அழகான கவிதை!!!!அருமையான வரிகள்!!!!//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராஜி //

தன்னம்பிக்கை மிகுந்த வரிகள். போராடி பெறுவதில்தான் எத்தனை சுகம் உள்ளது. அப்படி பெறுவதை இழக்க கூடாதுன்னு எவ்வளவு ஜாக்கிரதை உணர்வுடன் இருப்போம். நாலதொரு கவிதை படைத்தமைக்கு நன்றி ஐயா //

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

.

Yaathoramani.blogspot.com said...

மனசாட்சி™ /

சபாஷ்.....எழுச்சி மிக்க வரிகள் வேறு என்ன சொல்வது? //

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிவகுமாரன் //

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதை
மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். அருமை.//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

இறைக்க இறைக்கத்தான் சுரக்கும்
என்று எடுத்துரைத்த பாங்கு நளினம்! நன்றி!//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி //

அருமை.//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ஸாதிகா said...

நேர்மறையை அருமையாக கவிதையில் வடித்திருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்.

சசிகலா said...

எழுத்தாளர்களுக்கு மட்டுமே உரிய சிறப்பு , வலியையும் இழுத்து மடியில் அமர்த்திக்கொள்ளும் குணம் . அருமை ஐயா மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன் .

ADHI VENKAT said...

அருமையான வரிகள் சார். எதுவுமே இல்லாத போதோ, அல்லது பிரிந்த பின் தானே அதன் அருமை தெரியும்.
த.ம.6

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //
.
நேர்மறையை அருமையாக கவிதையில் வடித்திருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்.//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சசிகலா //

எழுத்தாளர்களுக்கு மட்டுமே உரிய சிறப்பு , வலியையும் இழுத்து மடியில் அமர்த்திக்கொள்ளும் குணம் . அருமை ஐயா மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன் //.

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //
..
அருமையான வரிகள் சார். எதுவுமே இல்லாத போதோ, அல்லது பிரிந்த பின் தானே அதன் அருமை தெரியும் //.

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

கூடல் பாலா said...

மிக மிக மிக அருமையான கவிதை மற்றும் சிந்தனைகள்!

Yaathoramani.blogspot.com said...

koodal bala //

மிக மிக மிக அருமையான கவிதை மற்றும் சிந்தனைகள்!//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சென்னை பித்தன் said...

நிழலின் அருமை வெயிலில் தெரியும்!
சிறந்த சிந்தனைக்கவிதை!

அருணா செல்வம் said...

நல்ல ஒரு எதிர்மறையானக் கண்ணோட்டம்.
அருமை ஐயா.

Yaathoramani.blogspot.com said...

சென்னை பித்தன் /
/
நிழலின் அருமை வெயிலில் தெரியும்!
சிறந்த சிந்தனைக்கவிதை!//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //

நல்ல ஒரு எதிர்மறையானக் கண்ணோட்டம்.
அருமை ஐயா //.

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

raji said...

போராடிப் பெறும் சுகம் கவிதையில் தெரிகிறது.
நல்ல படைப்பு.பகிர்விற்கு நன்றி

Yaathoramani.blogspot.com said...

raji //
.
போராடிப் பெறும் சுகம் கவிதையில் தெரிகிறது.
நல்ல படைப்பு.பகிர்விற்கு நன்றி //

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

துரைடேனியல் said...

Unmaiyil ethirmarai than uthavi seikirathu. Azhagu kavithai.

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //
.
Unmaiyil ethirmarai than uthavi seikirathu. Azhagu kavithai.//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

MANO நாஞ்சில் மனோ said...

வாவ் வாவ் வா அருமையான சொல்லாடல் ரசித்தேன் ரசித்தேன் குரு.....!

கவி அழகன் said...

Nalla sinthanai varikalai

ananthu said...

வித்தியாசமான சிந்தனை ! அருமையா சொல்லாடல் ! என் குறும்படத்தை பார்க்க வருமாறு அன்புடன் அழைக்கிறேன் ... நல்லதோர் வீணை ... ( நேசம் + யுடான்ஸ் அமைப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படம் )

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ //

வாவ் வாவ் வா அருமையான சொல்லாடல் ரசித்தேன் ரசித்தேன் குரு.....!//

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

yathan Raj //

Nalla sinthanai varikalai //



.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ananthu //


வித்தியாசமான சிந்தனை ! அருமையா சொல்லாடல் //!

.தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

.Balaji //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

நல்ல சிந்தனையோடு கூடிய கவிதை. ரசித்தேன். பணி தொடர பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.

Murugeswari Rajavel said...

எதிர்மறைத் தலைப்பில் அருமையான நேர்மறைச் சிந்தனை.

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

நல்ல சிந்தனையோடு கூடிய கவிதை. ரசித்தேன். பணி தொடர பாராட்டுகள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Murugeswari Rajavel //

எதிர்மறைச் சிந்தனையின் மூலம் நேர்மறைச் சிந்தனையையின்
சிறப்பைச் சொல்ல முயன்றதே இந்தப் பதிவின் நோக்கம்
இதை மிகச் சரியாகப் புரிந்து யாரேனும்
பின்னூட்டமிடுவார்களா என அதிக எதிர்பார்ப்புடன் இருந்தேன்
தாங்கள்தான் அதை மிகச் சரியாகத் தெரிந்து சுருக்கமாக
ஆயினும் அருமையாக பின்னூட்டமிட்டுள்ளீர்கள்.நன்றி

மகேந்திரன் said...

கருத்தாழமிக்க வரிகள் நண்பரே.
வெயிலில் இருந்தால் தான் நிழலின் அருமை புரியும் என்பது போல எதிர்மறையை முன்னிருத்தினால் தான் நேர்மறையின் தன்மை புரியும்.

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

கருத்தாழமிக்க வரிகள் நண்பரே.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ஹேமா said...

பிரிவைக்கூட வா என்றழைத்து எதிர்மறையாக்க உங்களால் மட்டுமே முடிகிறது !

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

பிரிவைக்கூட வா என்றழைத்து எதிர்மறையாக்க உங்களால் மட்டுமே முடிகிறது !//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Meena said...

நல்ல தத்துவம். எதிர்மறையில் மூழ்கிப் போய் வெளி வருவது கூட பயனுள்ளது தானோ?

Yaathoramani.blogspot.com said...

Meena //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment