Friday, June 8, 2012

ராம ராஜனும் மணிவண்ணனும் மோகனும் (எம்.ஜிஆர் ) 5 தொடர்ச்சி

ஐந்தாவது பதிவாக எனது தலைப்பினை விளக்கி
பதிவினை முடிக்கலாம் என இருந்தேன்
மக்கள் திலகமும் நடிகர் திலகமும் மறைந்து
 இத்தனை காலத்திற்குப் பின்னும் அவர்கள்
 மக்களிடம் கொண்டிருக்கிற
செல்வாக்கிற்கான காரணம் இன்னும்
விரிவாக அலச ஆசைதான் என்றாலும்
பதிவின் நோக்கம் விட்டு விட்டு செல்லும்
சாத்தியக் கூறு அதிகம் என்பதால் நான
விரிவாக எழுதவில்லை.

ஆனாலும் எம்.ஜி.ஆர் அவர்கள் குறித்த
பதிவுக்குப் பின் வந்தபின்னூட்டங்கள் அவசியம்
இன்னும் கொஞ்சம்புரட்சித் தலைவர் குறித்து
எழுதி இருக்கலாமோ என்கிற எண்ணத்தைத்
தந்ததால் இதைத் தொடர்கிறேன்

இருவர் படத்தில் மணிரத்தினம் அவர்கள்
அரசியலும் சினிமாவும் தனிப்பட்ட வாழ்வும்
புரட்சித் தலைவர் வாழ்வில் எப்படி மிகச் சரியாக
தன்னை இணைத்துக் கொண்டே வந்தன என்பதை
மிக நேர்த்தியாக பதிவு செய்திருப்பார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போதுதான்
ஒரு முழுமையான அரசியல்வாதி பொருளாளராக
நியமிக்கப் பட்டுள்ளார்.அதற்கு முன்னாள்
நடிகர்களே பொருளாளராக இருந்து வந்துள்ளர்கள்
நடிப்பிசைப் புலவர் கே.ஆர் ராமசாமி அவர்களும்
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களும்
அதற்குப் பின்னர் புரட்சித் தலைவரும்
பொருளாளரராக இருந்துள்ளனர்.

வீறுகொண்ட இரு குதிரைகளாக இருக்கிற
சினிமாத் துறையிலும் அரசியல் துறையிலும்
முன்னர் சொன்ன இருவருக்கும் பிந்தியவராக
இருந்தபோதிலும் இரண்டிலும் மிகச் சரியாக
பயணித்து வெற்றி கண்டவர் புரட்சித் தலைவர்

அரசியலில் கண்ட சாதுர்யங்களை
சினிமாவில் கிடைத்த தனது புகழை மிக நேர்த்தியாக
இடம் மாற்றம் செய்ததன் மூலம் எப்படி
அதிகாரத்தைக் கைப்பற்றி மக்களுக்கு
எப்படி நனமை செய்யலாம் என்கிற ஒரு
புதிய பாதையை உலகுக்கே காட்டியவர்
புரட்சித் தலைவர்தான்

மு. க .முத்து அவர்களுக்கு முன்பாகவே
புரட்சித் தலைவருக்கு எதிராக இலட்சிய நடிகரை
பிரதானப் படுத்த அரசியலிலும் சினிமாவிலும்
எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆயினும் அவைகள் எல்லாம் சம்பத்தப் பட்டவர்கள்
மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை
என்பதால் தோற்றும்போயின

இவர்களின் நோக்கம் அறிந்த புரட்சித் தலைவர்
அவர்கள் தனது ஒவ்வொரு அசைவிலும்
மிகக் கவனமாக இல்லையெனில் இத்தனை
உயரத்தை அடைந்திருக்கச் சாத்தியமே இல்லை

இல்லையெனில்
காமராஜர் போல் எளிமையானவராக
இலலாது போயினும்
அண்ணா போல பேரறிஞராக
இல்லாது போயினும்
இலட்சிய நடிகர் போல் அத்தனை
அழகானவராக இல்லாது போயினும்
(நான் இருவரையும் நேரடியாகப்
 பார்த்திருக்கிறேன் )
ராஜாஜி போல் மதி நுட்பம்
இல்லாத வராக இருந்த் போதிலும்
கலைஞர் போல அத்தனை
பேசுசுத் திறன் அற்றவராக இருந்தபோதிலும்
சிவாஜி போல அத்த னை சிறந்த
நடிகர் இல்லைஎன்ற போதிலும் 

இன்னும் எத்தனையோ போதினும்
சொல்லிக் கொண்டே போகலாம்

இப்படி சினிமாத் துறையில் நடிப்பில்
ஜாம்பவான்கள் எல்லாம் இருந்தபோதும்
கடைசிவரையில்
வசூல் சக்கரவர்த்தியாக இருந்ததும்

அரசியல் துறையில் சாணக்கியர்கள் கூட்டம்
நிறைந்திருந்த்போதும்
இறுதிவரையில்
எவரும் வெல்ல முடியாத்
மக்கள் தலைவராக இருந்ததும்
வெறும் சந்தர்ப்ப சூழ் நிலையால் ஏற்பட்டதில்லை

அவரை மிகச் சரியாக அறிய முயல்வது
நமக்கும் கூட நல்ல வழிகாட்டியாக அமையலாம்


(தொடரும்)


31 comments:

Seeni said...

அய்யா!

உங்களது விளக்கம் நன்றாக உள்ளது!

தொடருங்கள்!

எம்.ஞானசேகரன் said...

மிக நல்ல விமர்சனம்! நல்ல அலசல்!

பால கணேஷ் said...

எஸ்.எஸ்.ஆர் போல அழகாக இல்லாது போயினும்... இந்த வார்த்தைகளை நான் ஆட்சேபிக்கிறேன். எம்.ஜி.ஆரை விடவா அவர் அழகு? போங்க சார்...

பால கணேஷ் said...

த.ம.2

சசிகலா said...

இவர்களின் நோக்கம் அறிந்த புரட்சித் தலைவர்
அவர்கள் தனது ஒவ்வொரு அசைவிலும்
மிகக் கவனமாக இல்லையெனில் இத்தனை
உயரத்தை அடைந்திருக்கச் சாத்தியமே இல்லை// அவரின் சாதனைகளை தங்கள் வரிகளில் காண்பதில் மகிழ்ச்சி . தொடருங்கள் தொடர்கிறோம் .
Tha.ma.3

ஆத்மா said...

தொடருங்கள் சார் காத்திருக்கிறோம் மிகுதிக்கும் TM 4

கோவி said...

அருமை.. தமிழ்மணம் ஓட்டு 5

Ganpat said...

எம்.ஜி.ஆர் தி.மு.க விலிருந்து வெளியேற்றப்பட்ட காலத்தில், அவர் ஒரு மலையாளி எனும் கோஷம் அதிகம் எழுப்பப்பட்டது அப்பொழுது ஒரு பத்திரிகையில் வந்த கேள்வி பதில்:
கே:எம்.ஜி.ஆர். மேனனாமே?
ப:உண்மை;அவர் ஒரு Phenomenon

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தொடர்... தொடருங்கள்....

த.ம. ஆறு.....

G.M Balasubramaniam said...

உங்கள் அலசலுடன் பின்னூட்டங்களையும் ரசிக்கிறேன்.
மாறுபட்ட கருத்துக் கொண்டவர்கள் ,நல்ல காலம் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக் கொள்வதில்லை.

Unknown said...

மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்றார் அண்ணா! மனையடி மனோரஞ்சிதங்கள் மணத்தாலும்,மக்களை இழுக்கும் கவர்ச்சி இல்லாததாலும்,மரத்தில் காய்த்ததாலும், ஜனங்களால் அங்கீகரிக்கப்பட்டு சூட்டிக் கொள்ளப்படவில்லை!

வவ்வால் said...

//எஸ்.எஸ்.ஆர் போல அழகாக இல்லாது போயினும்... இந்த வார்த்தைகளை நான் ஆட்சேபிக்கிறேன். எம்.ஜி.ஆரை விடவா அவர் அழகு? போங்க சார்...
//

இதை நான் வழி மொழிகிறேன்.

இன்னும்சொல்லப்போனால் சிவாஜியை விடவும் போட்டோஜெனிக்,மற்றும் உடல் தகுதியென உடையவர் எம்ஜிஆர்.

குண்டுமணி என்கிற வில்லன் நடிகரை எல்லாம் டூப் போடாமல் தூக்கி வீசியவர். அன்பேவாவில் கூட வரும். கால் எலும்பு கூட முறிவுற்றது.

எல்லாம் படிச்சது தான் ,உண்மை என்னனு கணேஷ் தான் சொல்லணும்.

மாதேவி said...

நல்ல பகிர்வு.

அப்பாதுரை said...

வாயைத் திறக்காத வரை ராஜேந்திரன் அழகு. என் அனுபவம்.

பால கணேஷ் said...

@ வவ்வால...
டியர் ஃப்ரெண்ட்! குண்டு மணி என்னும் நடிகரைத் தலைக்கு மேல் தூக்கி வீசியபோது எம்.ஜி.ஆரின் கால் முறிந்தது ‘இன்பக் கனவு’ என்ற நாடகத்தில் அவர் நடித்த போது. (ஆம்! நாடகத்திலேயே சண்டைக் காட்சியை வைத்தவர் வாத்தியார்) அன்பே வாவிலும் அந்த பயில்வானிடம் அவர் செய்த சாகசம் பிரமிக்க வைக்கும்!

ஹேமா said...

எம்.ஜி.ஆர் அவர்களை நினைக்க வைத்துக் கண் கலங்கிவிட்டேன்.நல்லவர்களைக் கடவுளுக்கும் நிறையப் பிடிக்குமாம் !

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. நேரம் இருக்கும்போது வருகை தந்து கருத்தளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
http://blogintamil.blogspot.in/2012/06/7.html

மோகன்ஜி said...

எம்.ஜீ.ஆர் முக அமைதி
!காருண்யம் ததும்பும் கண்கள்!
அவருடைய அழகான முகத்துக்கு அழகு சேர்ப்பவை.

நீங்கள் சொன்ன அத்தனை பேரிலும் இல்லாத ஒன்று
அவரிடம் இருந்தது . அது அவருடைய வள்ளன்மை..

ஸ்ரீராம். said...

ராஜேந்திரன் எம் ஜி ஆரை விட அழகு அல்லது கவர்ச்சி மிக்கவர் என்ற கருத்தில் எனக்கும் உடன்பாடில்லை!

Yaathoramani.blogspot.com said...

தங்கள் முதல் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவிப்ரியன் //

மிக நல்ல விமர்சனம்! நல்ல அலசல்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பா.கணேஷ் //

எஸ்.எஸ்.ஆர் போல அழகாக இல்லாது போயினும்... இந்த வார்த்தைகளை நான் ஆட்சேபிக்கிறேன். எம்.ஜி.ஆரை விடவா அவர் அழகு? போங்க சார்../

எழுதும் போதே எனக்கு இது குறித்து
மறுப்பு இருக்கும் எனத் தெரியும்
புரட்சித் தலைவரை எப்போது நாம் பார்த்தாலும்
அவர் மீது நாம் கொண்டுள்ள அபிப்பிராயத்துடனும்
கவர்ச்சியும் சேர்ந்தே பார்க்கத் துவங்கிவிடுகிறோம்
(கரிஸ்மா ? ) தலைவரை நாம் பார்க்கையில்
தலையில் குல்லா முகத்தில் கருப்பு கண்ணாடி
கழுத்துவரை காலர் மூடிய சட்டை
தலையத் த்ழைய கட்டிய தும்பைப்பூ வேட்டி
இவைகள் அவரை முழுவதும் மறைக்க
அந்த ரோஜா இதழ் நிற கன்னக் கதுப்புகளை மட்டுமே
பார்க்கும் பாக்கியம் பெற்றிருந்தோம்
அவரிடம் அழகை மீறிய கவர்ச்சி இருந்தது என்பதே
நான் சொல்ல முயலும் கருத்து
.
ஒரு சமயம் எங்கள் ஊர் வழியாக புரட்சித் தலைவர்
ஜீப்பில் செல்கையில் நானும் நண்பர்களும் சாலையில்
நின்று வேடிக்கப் பார்த்துக் கொண்டிருந்தோம்
அவருடைய ஜீப்பில் தலைவருடன் முக்கிய தலைவர்கள்
சிலரும் இருந்தார்கள்.அவர்கள் யார் என நான்
கவனிக்கவே இல்லை.தலைவர் சென்றவுடன்
என்னுடன் தலைவரைப் பார்த்த என்னுடைய
நண்பர்களிடமும் உடன் ஜீப்பில் யார் யார் இருந்தார்கள்
என்றேன்.அவர்களும் கவனிக்க வில்லையே என்றார்கள்
அதுதான் எம்.ஜி.ஆர்.

தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

அவரின் சாதனைகளை தங்கள் வரிகளில் காண்பதில் மகிழ்ச்சி . தொடருங்கள் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிட்டுக்குருவி //
.
தொடருங்கள் சார் காத்திருக்கிறோம் மிகுதிக்கும் //

தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவி//

அருமை..//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Ganpat //


கே:எம்.ஜி.ஆர். மேனனாமே?
ப:உண்மை;அவர் ஒரு Phenomenon //

இதைவிட சுருக்கமாகவும்
மிக மிக அழகாகவும்
தலைவரைப் பற்றி சொல்வது கடினமே

தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

நல்ல தொடர்... தொடருங்கள்.... //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Ganpat said...

ரமணி ஸார்..
உங்கள் முந்தைய பதிவில் (#4) நான் போட்டிருந்த பின்னூட்டத்தை நீங்கள் overlook செய்து விட்டீர்களா என்ன?

Anonymous said...

அரட்டைகள் வாசித்தேன்.
நிறைய பிரியமானவாகள் உளர் தொடருங்கள்.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Yaathoramani.blogspot.com said...

Ganpat //


கொஞ்சம் விரிவாக பதில் எழுத நினைத்து
யோசித்தததில் கொக்ன்சம் காலதாமதமாக ஆகிவிட்டது
தங்கள் வரவுக்கும் நினைவூட்டியமைக்கும்
மனமார்ந்த் நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment