Wednesday, June 27, 2012

புதிய பாதை

என்னுடல்
என் மனம்
என் சுகம்
இதைக் கடந்து

சமயலறை
படுக்கையறை
வாசல்படி
இதைக் கடந்து

என் ஜாதி
என் மதம்
என் இனம் கடந்து

எனது தெரு
எனது ஊர்
என் நாடு கடந்து

என்பணி
என் சகா
என் வர்க்கம் கடந்து..

இப்படி

எல்லாவற்றியும் கடந்து கடந்து
அனைத்தையும்
மிகச் சரியாகக்
கடந்துவிட்டதாக எண்ணி
மகிழ்ந்து அமர்கையில்
எதிரே

"உன்னத வாழ்வுக்கான பாதை
இங்குதான் துவங்குகிறது "
என்கிற அறிவ ப்புப் புடன்
நீண்டு செல்கிறது
ஆளரவமற்ற
ஒரு புதியசாலை

குழம்பிபோய்
கடந்துவந்த பாதையைப் பார்க்க
காலம், சக்தி ,செல்வம்
அனைத்தையும்
ஏய்த்துப் பிடுங்கிய
எக்களிப்பில்
எகத்தாளமாய் சிரிக்கிறது அது

61 comments:

Unknown said...

வாய்க்கப் பெற்றது இதுதான் என்பதைக் காலம் கடந்த பின்னே தான் உணர்கிறோம்!
முத்திரைக் கவிதை! வாழ்த்துக்கள்!

Seeni said...

eakka peru moochi!

anupavangal!
ungal pakirvukal!

வெங்கட் நாகராஜ் said...

//குழம்பிபோய்
கடந்துவந்த பாதையைப் பார்க்க
காலம், சக்தி ,செல்வம்
அனைத்தையும்
ஏய்த்துப் பிடுங்கிய
எக்களிப்பில்
எகத்தாளமாய் சிரிக்கிறது அது///

நல்ல கவிதை....

த.ம. [3]

ஆத்மா said...

நல்லதொரு வாழ்க்கை தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்........

த ம..4

தி.தமிழ் இளங்கோ said...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
........... ....... ........ ...... ...........
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
- (பாடல்: கண்ணதாசன். படம்: நெஞ்சில் ஓர் ஆலயம்)

Unknown said...

தம்பி இளங்கோ சொன்னதை நானும் வழிமொழிகிறேன் கருத்து மிகவும் அருமை!

த ம ஓ 6 சா இராமாநுசம்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒரு முழு வாழ்க்கையை அப்படியே படம் பிடிக்கும் வரிகள்...

இதுதான் வாழ்க்கை....


ஒவ்வொறு நிமிடமும் நம்முன் விரிந்துக்கொண்டே இருக்கிறது புதிய புதிய வழிகள்...

அவைகள் நம் வாழ்க்கையின் வெற்றிக்கான வழிகள் என்று நாம் கடந்துக்கொண்டுதான் இருக்கிறோம்...

முடிவதில்லை வழிகளும்...
வாழ்க்கை பயணங்களும்...

Avargal Unmaigal said...

வாழ்க்கையின் பயணப்பாதை வட்ட வடிவமானது அது முடிவில் ஆரம்பிக்கும் மற்றொரு முடிவில்லாத வாழ்க்கை

CS. Mohan Kumar said...

Arumai

குறையொன்றுமில்லை. said...

மிகவும் அர்த்தமுள்ள கவிதை. வாழ்த்துகள்.

சசிகலா said...

என் ஜாதி
என் மதம்
என் இனம் கடந்த
இந்த முகமூடிக்குள்ளே தொலைந்து போன காலங்கள். அர்த்தமுள்ள வரிகள் .

சசிகலா said...

த.ம.9

செய்தாலி said...

வாழ்வின் அர்த்தம் சொல்லும் கவிதை சார்

சீனு said...

//"உன்னத வாழ்வுக்கான பாதை
இங்குதான் துவங்குகிறது "
என்கிற அறிவ ப்புப் புடன்
நீண்டு செல்கிறது
ஆளரவமற்ற
ஒரு புதியசாலை//

ஏதோ ஒன்றை நோக்கி பயணிக்கும் ஒரு வாழ்க்கையைப் பற்றி அருமையான படைப்பு


படித்துப் பாருங்கள்

காவி நிறத்தில் ஒரு காதல்

seenuguru.blogspot.com/2012/06/blog-post_28.html

சீனு said...

த.ம.10

MARI The Great said...

அருமையான கவிதை நண்பரே!

த.ம.ஒ 11

ஸாதிகா said...

அருமையான கவிதை.அழகிய வாழ்வியல் தத்துவம்

G.M Balasubramaniam said...

மலையாளப் படம் ஒன்று கண்டேன், பல நாட்களுக்கு முன். அதுதான் நினைவுக்கு வந்தது. படத்தின் தலைப்பு என்ன தெரியுமா.? “ இதா, இவிடம் வரெ “
வாழ்த்துக்கள்.

பால கணேஷ் said...

மனதில் பதிந்த கவிதை. கவிதை சொன்ன கருத்தும் அருமை. (12)

ஸ்ரீராம். said...

முடிந்து விட்டது என்று நினைக்கும்போது தொடங்குவதும், தொடங்கப் போகிறது என்று எதிர்பார்க்கும்போது முடிவதும் வாழ்க்கை விளையாட்டு! 'என் வீடு என் மனைவி என்றே தொடங்கும் பாரதிதாசன் பாடல் நினைவுக்கு வந்தது.

மனோ சாமிநாதன் said...

மிகவும் அருமையான கவிதை!

கே. பி. ஜனா... said...

அருமையான கவிதை.
காலம் எங்கே இட்டுச் செல்கிறது என்பதை அறியும்போது காலம் முடிய நிற்கிறது என்பதே காலத்தின் வி(த்)ந்தை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

கே. பி. ஜனா... said...

//காலம் எங்கே இட்டுச் செல்கிறது என்பதை அறியும்போது காலம் முடிய நிற்கிறது என்பதே காலத்தின் வி(த்)ந்தை!//

கவிதையும் அருமை, நண்பர் திரு, கே.பி.ஜனா அவர்களின் கருத்துக்களும் உண்மை.

பாராட்டுக்கள் இருவருக்கும்.

தி.தமிழ் இளங்கோ said...

REPLY TO புலவர் சா இராமாநுசம் said...
//தம்பி இளங்கோ சொன்னதை நானும் வழிமொழிகிறேன் //
புலவர் அய்யாவுக்கு! அது என்னுடைய கருத்து அல்ல. கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள். மேற்கோள் காட்டி கீழே குறிப்பும் (படம்: நெஞ்சில் ஓர் ஆலயம் ) தந்து இருந்தேன்.

Kumaran said...

பிரமிப்பு நீங்காது நாம் வாழ்க்கை முழுதும் பார்த்துக் கொண்டே இருப்பது காலம் மட்டுமே!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கவிதை சார் ! எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று !

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

படம் : சுமைதாங்கி (1962) பாடியவர் : P B ஸ்ரீநிவாஸ்
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல் எழுதியது : கண்ணதாசன்.

திண்டுக்கல் தனபாலன் said...

த.ம. 14

MANO நாஞ்சில் மனோ said...

புதியபாதை கவிதை சொல்லும் ரகசியம், முற்றும் உண்மை குரு....!

ஹ ர ணி said...

ரமணி சார்..


எல்லோருக்கும் விதிக்கப்பட்டது இதுதான். இதுதான் மாற்றமில்லாதது. எளிய செர்ற்கள். அனுபவ வாழ்க்கை.

Admin said...

நல்லதொரு கவிதை..
"உன்னத வாழ்வுக்கான பாதை
இங்குதான் துவங்குகிறது "
என்கிற அறிவ ப்புப் புடன்
நீண்டு செல்கிறது
ஆளரவமற்ற
ஒரு புதியசாலை"
அருமை ஐயா..

Anonymous said...

இது தான் வாழ்க்கை அது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது....
வேதா. இலங்காதிலகம்.

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

முத்திரைக் கவிதை! வாழ்த்துக்கள்!//

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //

anupavangal!
ungal pakirvukal!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

நல்ல கவிதை.... //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிட்டுக்குருவி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான
விரிவான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //

கருத்து மிகவும் அருமை! //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவிதை வீதி... // சௌந்தர் // //

ஒரு முழு வாழ்க்கையை அப்படியே படம் பிடிக்கும் வரிகள்...//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான
விரிவான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மோகன் குமார் //

Arumai//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

மிகவும் அர்த்தமுள்ள கவிதை. வாழ்த்துகள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

அர்த்தமுள்ள வரிகள் .//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

செய்தாலி//

வாழ்வின் அர்த்தம் சொல்லும் கவிதை சார் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சீனு //.

ஏதோ ஒன்றை நோக்கி பயணிக்கும் ஒரு வாழ்க்கையைப் பற்றி அருமையான படைப்பு//

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வரலாற்று சுவடுகள் //

அருமையான கவிதை நண்பரே!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //
.
அருமையான கவிதை
.அழகிய வாழ்வியல் தத்துவம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தங்கள் வரவுக்கும் மனம் திறந்த ஒளிவுமறைவற்ற
அருமையான விமர்சனப் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பா.கணேஷ் //

மனதில் பதிந்த கவிதை. கவிதை சொன்ன கருத்தும் அருமை //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம்.//
.
முடிந்து விட்டது என்று நினைக்கும்போது தொடங்குவதும், தொடங்கப் போகிறது என்று எதிர்பார்க்கும்போது முடிவதும் வாழ்க்கை விளையாட்டு! 'என் வீடு என் மனைவி என்றே தொடங்கும் பாரதிதாசன் பாடல் நினைவுக்கு வந்தது.//

தங்கள் வரவுக்கும்
வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான
விரிவான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மனோ சாமிநாதன் //

மிகவும் அருமையான கவிதை!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா... //

அருமையான கவிதை.
காலம் எங்கே இட்டுச் செல்கிறது என்பதை அறியும்போது காலம் முடிய நிற்கிறது என்பதே காலத்தின் வி(த்)ந்தை!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

கவிதையும் அருமை, நண்பர் திரு, கே.பி.ஜனா அவர்களின் கருத்துக்களும் உண்மை.
பாராட்டுக்கள் இருவருக்கும்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

தங்கள் அருமையான விளக்கத்திற்கு
மனமார்ந்த நன்றி.

Yaathoramani.blogspot.com said...

Kumaran //

பிரமிப்பு நீங்காது நாம் வாழ்க்கை முழுதும் பார்த்துக் கொண்டே இருப்பது காலம் மட்டுமே!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

நல்ல கவிதை சார் ! //!

தங்கள் வரவுக்கும்வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும் அருமையான
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ //

புதியபாதை கவிதை சொல்லும் ரகசியம், முற்றும் உண்மை குரு..../

தங்கள் வரவுக்கும்வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும் அருமையான
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹ ர ணி //

இதுதான் மாற்றமில்லாதது. எளிய செர்ற்கள். அனுபவ வாழ்க்கை./

தங்கள் வரவுக்கும்வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும் அருமையான
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மதுமதி //

நல்லதொரு கவிதை..//

தங்கள் வரவுக்கும்வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப் போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

இது தான் வாழ்க்கை அது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது...//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

vanathy said...

சூப்பர் கவிதை. வரிகள் அழகோ அழகு.

Yaathoramani.blogspot.com said...

vanathy //

சூப்பர் கவிதை. வரிகள் அழகோ அழகு.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Post a Comment