Sunday, September 30, 2012

கவிஞனாக-எளிய வழி

கவிதைத் தாயின் கருணை  வேண்டி
நாளும் தொழுதிடு-அவள்
பாதம் பணிந்திடு-நெஞ்சில்

தகிக்கும் உணர்வை சொல்லில் அடக்கி
கொடுக்கத் துடித்திடு-கவியாய்
நிலைக்கத் துடித்திடு-நாளும்

தவிக்கும் உந்தன் தவிப்பைக் கண்டு
கருணை கொள்ளுவாள்-தாயாய்
பெருமை கொள்ளுவாள்-முதல்

அடியை எடுத்துக் கொடுத்து உன்னைப்
பாடச் சொல்லுவாள்-அவளே
பாடல் ஆகுவாள்-அவள்-

பார்வை பட்ட கணமே நீயும்
மாறிப் போகலாம்-ஏதோ
ஆகிப் போகலாம்-உடன்

நீரைக் கண்ட பாலை நிலமாய்
சிலிர்ப்பைக் காணலாம்-உன்னுள்
விழிப்பைக் காணலாம்-மயக்கும்

வார்த்தை ஜாலம் வடிவ நேர்த்தி
ஏதும் இன்றியே-துளியும்
தெளிவு இன்றியே-மிரட்டும்

சீர்கள் அணிகள் எதுகை மோனை
அறிவு இன்றியே-புலவர்
தொடர்பும் இன்றியே-

நினைவைக் கடந்து கனவை அணைந்து
கிறங்கிப் போகலாம்-உன்னுள்
கரைந்தும் போகலாம்-காட்டில்

விதைப்போர் இன்றி தானே வளரும்
செடியைப் போலவே-முல்லைக்
கொடியைப் போலவே-உன்னுள்

விரைந்துப் பெருகும் உணர்வு நதியில்
நீந்திக் களிக்கலாம்-உன்னை
மறந்துக் களிக்கலாம்-என்றும்

நிறைந்த ஞானம் உயர்ந்த கல்வி
ஏதும் இன்றியே-கவிதை
வானில் உலவவே -நாளும்        (கவிதைத் தாயின் )

23 comments:

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கவிதை.....

த.ம. 2

Anonymous said...

''...நீரைக் கண்ட பாலை நிலமாய்
சிலிர்ப்பைக் காணலாம்-உன்னுள்
விழிப்பைக் காணலாம்...''
நன்றாகக் கூறினீர்கள்! உண்மை.
சிறப்பு!. சரளமான வரிகள்.
பணி தொடர வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

முனைவர் இரா.குணசீலன் said...

நல்லதொரு கவிதை அன்பரே.

செய்தாலி said...

ம்ம்ம் நல்ல கவிதை சார்

வை.கோபாலகிருஷ்ணன் said...

கவிஞனாக எளிய வழியைச் சொல்லியுள்ளீர்கள்.

//முதல் அடியை எடுத்துக் கொடுத்து உன்னைப்
பாடச் சொல்லுவாள்-அவளே
பாடல் ஆகுவாள்-அவள்-

பார்வை பட்ட கணமே நீயும்
மாறிப் போகலாம்-ஏதோ
ஆகிப் போகலாம்-உடன்

நீரைக் கண்ட பாலை நிலமாய்
சிலிர்ப்பைக் காணலாம்-உன்னுள்
விழிப்பைக் காணலாம்-//

அருமையான நம்பிக்கையூட்டும் வரிகள்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

அன்பு உள்ளம் said...

நீரைக் கண்ட பாலை நிலமாய்
சிலிர்ப்பைக் காணலாம்-உன்னுள்
விழிப்பைக் காணலாம்-//

பிடித்த வரிகள் .மிகச் சிறப்பாக உள்ளது .
மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

ஆத்மா said...

அழகான வார்த்தைகளைக் கோர்வையாக்கி ஒரு அறிவுரை சொன்னது போல இருக்கிறது கவிதை..

த. ம.4

திண்டுக்கல் தனபாலன் said...

/// நினைவைக் கடந்து கனவை அணைந்து
கிறங்கிப் போகலாம்-உன்னுள்
கரைந்தும் போகலாம் ///

மிகவும் பிடித்த வரிகள்... (த.ம.5)

Avargal Unmaigal said...

கவிஞனாகி கவிதை எழுத வேண்டுமானால் காதல் செய் காவியம் படைக்க வேண்டுமானால் காதலில் தோல்வி அடை என்ன நான் சொன்னது சரிதானே சார்

குறையொன்றுமில்லை. said...

கவிதை ரொம்ப நல்ல இருக்கு வாழ்த்துகள்

காரஞ்சன் சிந்தனைகள் said...

அவள்-
பார்வை பட்ட கணமே நீயும்
மாறிப் போகலாம்-ஏதோ
ஆகிப் போகலாம்-உடன்

நீரைக் கண்ட பாலை நிலமாய்
சிலிர்ப்பைக் காணலாம்-உன்னுள்
விழிப்பைக் காணலாம்//
இரசித்தேன்!
-காரஞ்சன்(சேஷ்)

தி.தமிழ் இளங்கோ said...

படிக நிறமும் பவளச்செவ் வாயும்
கடிகமழ்பூந் தாமரைபோற் கையுந் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்
கல்லுஞ்சொல் லாதோ கவி.

- கம்பர் ( சரசுவதி அந்தாதி )

கோமதி அரசு said...

நீரைக் கண்ட பாலை நிலமாய்
சிலிர்ப்பைக் காணலாம்-உன்னுள்
விழிப்பைக் காணலாம்//

அருமையான வரிகள்.
வாழ்த்துக்கள்.

NKS.ஹாஜா மைதீன் said...

அருமை சார்...

Admin said...

அழகாக சொன்னீர்கள் தலைவரே..

Unknown said...

நல்ல தெளிவாக கூறியுள்ளீர்கள் அய்யா!.... கவிதைக்கு இது ஒரு சிறப்பு...

ADHI VENKAT said...

அருமையான கவிதை. பாராட்டுகள் சார்.

குட்டன்ஜி said...

சிறப்பாகச் சொன்னீர்கள்.
த.ம.10

அருணா செல்வம் said...

அருமையான கருத்து கவிதை.

நீங்கள் பாடிய வழியில் நானும் முயற்சிக்கிறேன் ரமணி ஐயா.

கரந்தை ஜெயக்குமார் said...

அடியை எடுத்துக் கொடுத்து உன்னைப்
பாடச் சொல்லுவாள்-அவளே
பாடல் ஆகுவாள்

அருமையான வரிகள் ஐயா.

அப்பாதுரை said...

தானே கவிதையாவாள் - மிகவும் ரசித்த வரி.
சிறிது யோசித்தால் நீங்கள் சொல்வதன் உண்மை புரிகிறது. நிறைந்த ஞானம் உயர்ந்த கல்வி
ஏதும் இன்றி எழுதிய கவிதைகள் பல இன்றைக்கும் வானில் உலாவும் உண்மை. நாட்டுப்புறப் பாடல்களையும் வாய்வழிப் பரந்த பாட்டுக்களையும் தொகுத்து சேமிக்க வேண்டும். 'சட்டி சுட்டதடா' பாணிச் சிந்தனை திருமூலருக்கும் சரி கண்ணதாசனுக்கு சரி.. கிராம வயலோரம் கிடைத்தததாகப் படித்திருக்கிறேன். 'மூங்கிலிலை மேலே' கதையும் நினைவுக்கு வருகிறது.

Unknown said...

//நீரைக் கண்ட பாலை நிலமாய்
சிலிர்ப்பைக் காணலாம்-உன்னுள்
விழிப்பைக் காணலாம்//
அற்புதமான வரிகள் சார்....அந்த சிலிர்ப்பை உங்களின் கவிதையினால் உணர்ந்தேன்.

அருமையான கவிதைக்கு நன்றி !!

senniyoorfm said...
This comment has been removed by the author.

Post a Comment