Monday, October 22, 2012

பதினாறு வயது உளறல்கள் அல்லது ! விஞ்ஞானக் காதல்!

அவன் அவசரமாய் அல்லது
அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்

"இப்போது வேதியல்  வகுப்பில்
உன்னைக் குறித்துத்தான்
பாடம் எடுக்கிறார்கள் "

" என்னைக் குறித்தா?
வேதியல்  வகுப்பிலா ?"
அவள் பதில் செய்தி அனுப்பினாள்

"ஆம்.
தான் எவ்வித மாறுதலையும் அடையாமல்
பக்கத்தில் இருக்கும் பொருளை
மாறுதலடைச் செய்யும் பொருளை
டீச்சர் கிரியா ஊக்கி என்கிறார்
நான் அது நீ என்கிறேன் சரியா ?
அவன் அழகாய்ப் பிதற்றினான்

"இங்கு கூட இயற்பியல்  வகுப்பில்
உன் எதிர்காலம் குறித்துத்தான்
பாடம் எடுக்கிறார்கள் " என்றாள்

"இயற்பியல் வகுப்பிலா ?என எதிர்காலம் குறித்தா "
அவன் அதிசமாய்க் கேட்டான்

அவள் இப்படி செய்தி அனுப்பினாள்
"எந்த ஒரு செயலுக்கும்
எதிர் விளைவுகள் உண்டு என்கிறார் சார்
இப்படி படிக்கிற நேரத்தில்
செய்தி அனுப்பிக் கொண்டிருந்தால்
 நாளை  நீ
நடு ரோட்டில்தானே நிற்கவேண்டும் ? "

அவன் பதில் செய்தி அனுப்பவில்லை

69 comments:

Avargal Unmaigal said...

ஹாஹா மிக அருமையான நகைச்சுவை எப்படியெல்லாம் நீங்கல் சிந்திகீறிர்கள் பாராட்டுக்கள்

r.v.saravanan said...

அருமை நகைச்சுவை SIR

vimalanperali said...

நல்ல ஒரு காதல் கவிதையாக உருவெடுத்து வந்து சட்டென திரும்பி விட்டது.அதுவும் நன்றே/வாழ்த்துக்கள்.

vimalanperali said...
This comment has been removed by the author.
vimalanperali said...

தங்களது எழுத்துக்கு சமர்ப்பணம் செய்து ஒரு பதிவு இட்டுள்ளேன்.நேரம் கிடைக்கையில் படித்துவிட்டுக்
கூறவும் தங்கள கருத்தை/

ஸ்ரீராம். said...

விஞ்ஞானக் காதல்!

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம்.

விஞ்ஞானக் காதல்!//

அருமையான தலைப்பைக் கொடுத்தமைக்கும்
(அப்படியே சேர்த்துவிட்டேன் )
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


ஸ்ரீராம். said...

//அருமையான தலைப்பைக் கொடுத்தமைக்கும்
(அப்படியே சேர்த்துவிட்டேன் )//

நன்றி!

ஆத்மா said...

ஹா ஹா ஹா.......கலக்கல் கவிதை
சூப்பர் சார்... (3)

காரஞ்சன் சிந்தனைகள் said...

அருமை! அருமை! வினைவேகமாற்றி- இரசித்தேன்!

திண்டுக்கல் தனபாலன் said...

கலக்கல் கவிதை சார்..

நன்றி...(4)

துரைடேனியல் said...

இனி எப்படி பதில் செய்தி அனுப்புவான். அந்தப் பெண் மிகவும் புத்திசாலி. உங்கள் சிந்தனையோ அருமையிலும் அருமை. கவிதையைப் படித்து முடிக்கையில் இதழ்களில் புன்முறுவல் வருவதை தவிர்க்க முடியவில்லை. அற்புதம்...! தொடருங்கள்...!

அருணா செல்வம் said...

புத்திசாளி பெண்ணின் காதல் இப்படித்தான் இருக்கும் போல...

ரசித்தேன் இரமணி ஐயா.

Seeni said...

haa haaa!

arumai ayya!

சுதா SJ said...

ரமணி சார்...
கவிதை சூப்பர்...

ரமணி சார் காதல் கவிதை எழுத மாட்டாரா என்று ஏங்கிய நாட்களும் உண்டு...

இன்று காதல் கவிதை... :))
தேங்க்ஸ்..

ஆனாலும் உங்கள் டச்சில் கடைசியில் மெசேஜ் சொன்னீர்களே அது... அதான் ரமணி சார் :))

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

விச்சு said...

இதுதான் பெளதீகக் காதலா! நல்ல செய்தியும் சொல்லியுள்ளீர்கள்.

வெங்கட் நாகராஜ் said...

ரசித்தேன். :)))

த.ம. 8

கே. பி. ஜனா... said...

காதலும் விஞ்ஞானமும் கலந்த கவிதை நன்று!

அப்பாதுரை said...

உரக்கச் சிரித்து ரசித்தேன்.

இராஜராஜேஸ்வரி said...

எந்த ஒரு செயலுக்கும்
எதிர் விளைவுகள் உண்டு

இயற்பியலும் , வேதியலும் ..........

தி.தமிழ் இளங்கோ said...

ஒரு காலத்தில் பள்ளிகளில் ரசாயனமும், பௌதீகமும் ஒரே பாடமாக விஞ்ஞானம் என்று வைத்து இருந்தார்கள். இப்போது இரண்டையும் தனித் தனியே அவனையும் அவளையும் பிரித்தது போல பிரித்து விட்டார்கள்.

NKS.ஹாஜா மைதீன் said...

ha ha ha.....அருமை.......padithaen....ரசித்தேன்.

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா.. அசத்தல் கவிதை.

அதுவும் எதிர்வினை.. சான்ஸே இல்லை. நல்ல சூடு :-)

கதம்ப உணர்வுகள் said...

இன்றைய காலக்கட்டத்திற்கு மிக முக்கியமான விஷயத்தை கருவாக எடுத்துக்கொண்டு அதை எளிமையான நடையில் எல்லோரும் புரிந்து பயன் பெறும் விதத்தில் பகிர்ந்தமை சிறப்பு ரமணி சார்....

நான் பார்த்தவரை சமீபத்திய வருடங்களில் பத்தாம் வகுப்பு தேர்விலும் சரி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்விலும் சரி அதிக மதிப்பெண்கள் எடுத்து முதன்மை இடத்தில் இருப்பது மகளிர் என்று நினைக்கிறேன். அதன்படி பார்த்தால் இந்த கவிதை முத்தாய்ப்பாய் ஆமாம் என்று சொல்கிறது...

பதினாறுவயது என்பது உடலில் ஏற்படும் வித்தியாசங்கள் மனதில் சலனங்களையும் குழப்பங்களையும் கடந்து செல்லவேண்டிய கட்டாயமாகிறது.. எல்லோருமே இந்த வயதை கடந்து தான் வந்திருப்பார்கள்.... ஆனால் இந்த வயது பதினாறுவயது டீன் ஏஜ் பருவம் கத்தி மேல் நடப்பது போன்ற மிக மிக ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய பருவம்... மனம் எளிதில் அடுத்தவர் வசமாகிவிடும் இளகிய மனம் படைத்த பருவம் இது.... இந்த பருவத்தை கடக்கும்போது நம மனமும் பண்பட்டு பக்குவம் அடைந்துவிடும்.. நாம் செய்வது சரியா தவறா என்பதை எடுத்து புரியவைத்துவிடும்... அப்போது நாம் பதினாறு வயதில் செய்த இந்த குழப்பங்களை செயல்களை நினைத்து நாமே சிரித்துக்கொள்ளவேண்டியும் வரும்....

மிக அற்புதமாக இந்த வயதினில் பிள்ளைகளுக்கு ஏற்படும் மனதின் உணர்வுகளை கோளாறுகளை எளியவரிகளில் புரியவைத்தமை சிறப்பு ரமணிசார்...

கதம்ப உணர்வுகள் said...

இந்த வயதில் தன்னை வளர்ந்த ஆண்மகனாக நினைத்துக்கொள்வார்கள் பிள்ளைகள்.... லேசாய் இருக்கும் மீசையை மைப்பென்சில் இட்டு வரைந்து அழுத்தமாக மீசை இருப்பது போல் வைத்துக்கொள்வார்கள்.. காணும் பெண்களை எல்லாம் தன் காதலியாக கற்பனை செய்து பார்ப்பார்கள்.... ஏதாவது ஒரு பெண் சிரித்துவிட்டாலோ உடனே அடுத்த அடி எடுத்துவைக்க (அசட்டுத்)தைரியத்தில் முனைவார்கள்.... தானே காக்கும் கடவுளாகவும், தீமைகளை அழித்து (பெண்களின் முன்பு வில்லனை அடித்து நொறுக்கி) கவசமாய் நான் இருக்கிறேன் என்பது போன்ற தோற்றத்தை உண்டாக்க முனைவார்கள்... சேர்த்து வைக்கும் சேமிப்பெல்லாம் அம்மா அப்பாக்கு தெரியாமல் காதலிக்கு க்ரீட்டிங் கார்டாகவும் அலைபேசியின் டாப் அப் ஆகவும் மாறும் அதிசயத்தை அறிய மறுப்பார்கள்.... தெய்வத்துக்கு செய்யும் காணிக்கைப்போல செலவு செய்வார்கள்.... படிப்பில் கோட்டை விடுவார்கள்.. மதிப்பெண்கள் பின் தங்கி.. பின் தானே கல்வியில் பின் தங்கிவிடும்படி தன்னை காதலில் அமிழ்த்திக்கொள்வார்கள்.. எதிர்க்காலம் மட்டும் பெரிய கேள்விக்குறியாய் கண்ணுக்கு முன்....

ஆண்பிள்ளைகள் இப்படி என்றால் பெண் குழந்தைகளின் நடவடிக்கைகளில் மாறுதல்கள் மிக எளிதாய் தெரியவரும்... அலைபேசியில் அடிக்கடி மிஸ்டு கால்களும் எஸ் எம் எஸ்களும் ராத்திரி முழுக்க கதவை அடைத்துக்கொண்டு கிசு கிசுவென்று மெல்லிய குரலில் பேசிக்கொண்டும் விடிந்தப்பின் அரக்கப்பரக்க கல்லூரிக்கோ அல்லது பள்ளிக்கோ கிளம்பும்போது தன்னை அழகுப்படுத்திக்கொள்வதில் இன்னும் கூடுதல் கவனம் எடுத்துக்கொள்வார்கள்.... கூட்டத்தின் நடுவே தானே தனியாய் தனித்தன்மையாய் தெரிவது போல் அவர்களின் சிரிப்பும், செயல்களும், பேச்சும் அமையும்... சும்மா இருக்கும் ஆண்பிள்ளைகள் எதிரே அவர்களை கிண்டல் செய்தும் அவர்களே வலிய வந்து பேசும்படி இடம் கொடுப்பதுமாக இருக்கும்....

இது எதுவுமே அறியாத பெற்றோர் நம்ம பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்கள் என்ற நினைவில் தன் வேலைகளில் கவனமாக இருந்துவிடுவர்....

படிக்கும் வயதில் படிப்பினில் பட்டுமே கவனம் செலுத்தி வரும் பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் வெற்றிகள் குவித்து நல்ல வேலையில் அமர்ந்து தனக்கென அற்புதமான வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள்...

கதம்ப உணர்வுகள் said...

அப்படியில்லாமல் சில குழந்தைகள் தான் தோன்றித்தனமாய் இருக்கும்போது... நிலை தலைகீழாய் மாறிவிடுகிறது...
நம் தேவைகள் எல்லாமே அம்மா அப்பா பார்த்து பார்த்து செய்யும்போது குழந்தைகள் இந்த பருவ வயதில் வரும்போது மட்டும் காதல் என்ற உணர்வில் மாட்டிக்கொண்டு தானே முடிவு எடுத்து தாய் தந்தையரின் மனதை வருத்தும் செயல்களில் இறங்கி காதல் திருமணம் முடித்துக்கொண்டு அதன்பின் படும் சிரமங்களும் சண்டைகளும் உச்சக்கட்டமாகி பின் தற்கொலைக்கு வழி தூண்டிவிட்டுவிடுகிறது...

இங்கே கவிதை வரியில் பாடத்தில் சொல்லி கொடுப்பதைக்கூட தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ( எத்தனை அறிவு இந்த பிள்ளை... இந்த அறிவை படிப்பதில் செலுத்தினால் முதன்மை இடத்தில் வருமே) செய்தி அனுப்பியதற்கு... நச் என்று பெண்குழந்தை பதில் அனுப்பியது மிக சிறப்பு... எதிர்விளைவு... எதிர்க்காலம் கேள்விக்குறியாகி..... அதன்பின் செய்தி அனுப்பிய ஆண் பிள்ளையிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை... நல்லப்பிள்ளைக்கு இது தான் அடையாளம்.. இனி இந்த பிள்ளை இந்த ஒரு வார்த்தையையே மனதில் வைராக்கியமாக வைத்துக்கொண்டு நல்லா படித்து தன் எதிர்க்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்ளும் என்று சொல்லவும் வேண்டுமோ என்று கவிதையை முடித்திருப்பது மிக சிறப்பு ரமணிசார்....

மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் ரமணிசார் அருமையான படிப்பினை கவிதைப்பகிர்வுக்கு...

Madhavan Srinivasagopalan said...

Good one, Sir.

தமிழ் காமெடி உலகம் said...

நல்ல நகைசுவை...மிகவும் நல்லா இருந்துச்சு....பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Unknown said...

ஹ்ம்ம்... நல்ல நகைச்சுவையுடன் சிந்திக்க வைக்கும் விஷயம்...பகிர்வுக்கு நன்றி....

அகல் said...

அழகாகச் சொன்னீர்கள்... ஆனால் என்ன செய்ய.. அது ஹார்மோன்கள் செய்யும் கலவரமாயிற்றே.. சிலர் கலவரத்தில் சிக்குவதில்லை, பலர் சிக்காமல் இருப்பதில்லை..

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

தங்கள் முதல் வரவுக்கும்
வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

r.v.saravanan //

அருமை நகைச்சுவை SIR''

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிட்டுக்குருவி //

ஹா ஹா ஹா.......கலக்கல் கவிதை
சூப்பர் சார்... //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seshadri e.s. //

அருமை! அருமை! வினைவேகமாற்றி- இரசித்தேன்!//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

கலக்கல் கவிதை சார்..//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //

அருமையிலும் அருமை. கவிதையைப் படித்து முடிக்கையில் இதழ்களில் புன்முறுவல் வருவதை தவிர்க்க முடியவில்லை. அற்புதம்...! தொடருங்கள்...!//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் //

ரசித்தேன் இரமணி //


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துஷ்யந்தன் //.

ஆனாலும் உங்கள் டச்சில் கடைசியில் மெசேஜ் சொன்னீர்களே அது... அதான் ரமணி சார் :)//தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //

அருமை //


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விச்சு //

இதுதான் பெளதீகக் காதலா! நல்ல செய்தியும் சொல்லியுள்ளீர்கள்.//


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

ரசித்தேன். :)))//


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

குட்டன்ஜி said...

ஆகா!அருமையான கற்பனை1அவனை விட அவள் கெட்டிக்காரிதான்!

குறையொன்றுமில்லை. said...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கவிதை

வெற்றிவேல் said...

படித்ததும் சிரிப்பு வந்துவிட்டது...

kowsy said...

இதற்காகத்தானே புதிய கண்டுபிடிப்புக்கள். படிக்கும் நேரத்தில் இப்படி செய்திகள். ஆனாலும் இங்கு குறிச்சொல்கள் படிப்போடு பயன்படுகின்றது . உங்களால் இதுவும் முடியும் என்று காட்டி இருக்கின்றீர்கள்

Yaathoramani.blogspot.com said...

கே. பி. ஜனா... //

காதலும் விஞ்ஞானமும் கலந்த கவிதை நன்று!//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

உரக்கச் சிரித்து ரசித்தேன்.//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

தங்கள் பின்னூட்டத்திற்குப் பின்
பதிவில் பௌதீகம் ரசாயனம் என இருந்ததை
இயற்பியல் வேதியல் என மாற்றிவிட்டேன்
தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

தங்கள் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

NKS.ஹாஜா மைதீன் //

ha ha ha.....அருமை.......padithaen....ரசித்தேன்.//


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அமைதிச்சாரல் //

ஆஹா.. அசத்தல் கவிதை. //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மஞ்சுபாஷிணி //

வழக்கம்போல அருமையான விரிவான
அழகான பின்னூட்டம்
தங்கள் பின்னூட்டத்தைப் படிக்கப் படிக்க
அடுத்த பதிவுக்கான கருவொன்று
சட்டெனத் தோன்றியது
வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Madhavan Srinivasagopalan //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தமிழ் காமெடி உலகம் //

நல்ல நகைசுவை...மிகவும் நல்லா இருந்துச்சு....பகிர்வுக்கு மிக்க நன்றி...//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Ayesha Farook //

ஹ்ம்ம்... நல்ல நகைச்சுவையுடன் சிந்திக்க வைக்கும் விஷயம்..

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அகல் //

அழகாகச் சொன்னீர்கள்... ஆனால் என்ன செய்ய.. அது ஹார்மோன்கள் செய்யும் கலவரமாயிற்றே..//


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


RAMA RAVI (RAMVI) said...

அஹா..அருமை..மனம்விட்டு சிரித்தேன்.

*anishj* said...

ஹாஹா சூப்பருருரு... ரசித்தேன் !!!

- இப்படிக்கு அனீஷ் ஜெ...

Yaathoramani.blogspot.com said...

குட்டன் //

ஆகா!அருமையான கற்பனை1அவனை விட அவள் கெட்டிக்காரிதான்!//


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கவிதை//


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

இரவின் புன்னகை //

படித்ததும் சிரிப்பு வந்துவிட்டது //

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சந்திரகௌரி //

இதற்காகத்தானே புதிய கண்டுபிடிப்புக்கள். படிக்கும் நேரத்தில் இப்படி செய்திகள். ஆனாலும் இங்கு குறிச்சொல்கள் படிப்போடு பயன்படுகின்றது . உங்களால் இதுவும் முடியும் என்று காட்டி இருக்கின்றீர்கள்//


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

RAMVI //

அஹா..அருமை..மனம்விட்டு சிரித்தேன்.//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

*anishj* //

ஹாஹா சூப்பருருரு... ரசித்தேன் !!!//


தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

கதம்ப உணர்வுகள் said...

//Ramani said...
மஞ்சுபாஷிணி //

வழக்கம்போல அருமையான விரிவான
அழகான பின்னூட்டம்
தங்கள் பின்னூட்டத்தைப் படிக்கப் படிக்க
அடுத்த பதிவுக்கான கருவொன்று
சட்டெனத் தோன்றியது
வரவுக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி//

மனம் நிறைந்த சந்தோஷம் ரமணிசார்.. மனம் நிறைந்த அன்புநன்றிகள் கூட...

ADHI VENKAT said...

ஹா...ஹா...ஹா....

பிரமாதம் சார்.

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி said...

ஹா...ஹா...ஹா....பிரமாதம் சார்.//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment