Friday, May 3, 2013

ஒட்டக் காய்ச்சிய உரை நடையே

காதல் உணர்வு  பூக்கையில்
சேர்ந்தே பிறந்து பரவும்
மகரந்த மணமே

வண்ண வண்ண வார்த்தைப் பூக்களைச்
சந்தச் சரடில் சேர்த்திணைக்க வளரும்
மனங்கவர் பூமாலையே

கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அதியக் குழந்தையே

மடமை மரம் முறிக்க
சிந்தனைச் சிற்பிகளுக்கு வாய்த்த
 கூர்மிகுக்  கோடாலியே

தனிமைத் துயர் போக்கி
ஏகாந்த சுகத்தில் மிதக்கவிடும்
ரம்பையே ஊர்வசியே

குறிவைத்த இலக்கினை
மிகச் சரியாய்த்
தாக்கிக் தகர்க்கும் விசைமிகு  பான மே

எண்ணச் சுமைகளை
எளிதாக ஏற்றிச் செல்ல
ஏதுவான எழில்மிகு வாகனமே

தூங்கச் செய்யவோ
ஏக்கத்தைச்  தூதாய்ச் சொல்லவோ
கவலையை மறக்கவோ
களிப்பில் மூழ்கிச் சுகிக்கவோ
வாழ்வை ரசிக்கவோ
ரசித்தததை சுருக்கமாய் விளக்கவோ

கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்
என்றும்போல உன் அருளை
எமக்குநீ வாரிவழங்கிச் செல்

18 comments:

sury siva said...

//என்றும்போல உன் அருளை
எமக்குநீ வாரிவழங்கிச் செல்//

அதுக்குத்தானே
ஆதார் அப்படின்னு ஒரு கார்டு
அரைவ் ஆயிருக்காமே..

பார்த்தீகளா....

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

அம்பாளடியாள் said...

இதயம் என்ற ஒன்று பசுமையாய் இருக்கும் வரை
அவள் எங்கேயும் போக மாட்டாள் எமக்குள் தான்
வாழ்வாள் அவள் உங்களுக்குள்ளும் சிறப்பாக வாழ
வாழ்த்துக்கள் ஐயா .

ADHI VENKAT said...

அருமை. பாராட்டுகள்.

Seeni said...

kavithaikku...

karuththu...

arumai..!

இராஜராஜேஸ்வரி said...

கவிதைப்பெண்ணை அழகான வரிகளால்
அலங்கரித்த கவிதைக்குப் பாராட்டுக்கள்..

சசிகலா said...

கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்
என்றும்போல உன் அருளை
எமக்குநீ வாரிவழங்கிச் செல்...

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-கோலம்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.
என்ற வரிகளை நினைவு படுத்தின தங்கள் வரிகள் ஐயா.

கவியாழி said...

கவிஞனும் கற்பனையும்
கந்தர்வ மணம்புரிந்து
கூடிக் களிக்கப் பிறக்கும்
அதியக் குழந்தையே//
கவிதையே உன்னைக் காதலிக்கிறேன்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கவிதைப் பெண்ணின் துணை கொண்டு வரைந்த கவிதை அருமை.

கோமதி அரசு said...

கவிதைபெண்ணே உன்னைவிட்டால்
உலகினில் மாற்று ஏது சொல்
என்றும்போல உன் அருளை
எமக்குநீ வாரிவழங்கிச் செல்//

உங்களுக்கு என்றும் கவிதைபெண் அருளை அள்ளி வழங்கி செல்வாள்.
வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான படைப்பு. பாராட்டுக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

உண்மை! கவிதை பெண்ணுக்கு மாற்று இல்லைதான்! அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள்!

RajalakshmiParamasivam said...

கவிதைப் பெண்ணை அழகாய் அலங்கரித்து இருக்கிறீர்கள்
வாழ்த்துக்கள்....
தொடருங்கள்.....

மகேந்திரன் said...

ஒன்றிலிருந்து விடுபட்டு
மற்றொன்றில் மூழ்கித் திளைக்க
மாற்றுவழிகளும் உள்ளன.
என்று அற்புதமாகச் சொல்லி.
எமக்கான துன்பப் பின்னல்களில் இருந்து
விடுபட்டு மனம் சாந்திகொள்ள
கவியமுதே உனைவிட்டால்
யாரிங்கு உளர் என்று
முடித்தவிதம் மிகவு அழகு ரமணி ஐயா ...

kowsy said...

உள்ளத்தினுள்ளே ஊற்று எடுத்து உதிரத்தினுள்ளே கலந்து மனதினுள்ளே மணம் பரப்பி எண்ணத்தை கவரும் படி எண்ணத்தில் பாதிக்கும் கவிதைப் பெண்ணாளுக்கு வரிகள் அருமை

உஷா அன்பரசு said...

கவிதை பெண் வாரி வழங்கட்டும்! அருமை!

இராய செல்லப்பா said...

“ஒட்டக் காய்ச்சிய உரை நடையே” கவிதை என்பது அழகான சொல்லாட்சி.

VOICE OF INDIAN said...

மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்


தங்களுக்கு ஒரு வேண்டுகோள்
அத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com
அதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்
Reply

அருணா செல்வம் said...

கவிதைப் பெண்ணுக்கு
நீங்கள் சூட்டிய கவி மகுடம்
அருமை இரமணி ஐயா.

Post a Comment