Friday, May 31, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (3 )

நான் காம்பவுண்ட் கேட்டைத் திறக்கிற
சப்தம் கேட்டதுமே நண்பனின் மகள் ஷாலினியும்
மகன் முகுந்தும் சட்டென "வாங்க மாமா "
எனக் குரல் கொடுக்க, நண்பனின் மனைவி மீனாட்சியும்
உடன் எழுந்து திரும்பி "வாங்க அண்ணே  "என
அன்புடன் அழைத்து வராண்டா இரும்புக்
கேட்டைத் திறக்க  என் நண்பன் கணேஷனோ
சுரத்தில்லாமல் "வாடா "என்றான்

ஒரு வார முடி அடர்ந்த அவன் முகமும்
குழி விழுந்தக் கண்களும் அந்தப் பழைய கைலியுடனும்
துண்டுடன் அவனைப் பார்க்க ஏதோ ஒரு மாதம்
பெரும் வியாதியில்  ஆஸ்பத்திரியில் கிடந்து
இப்போதுதான் மீண்டு வந்தவனைப் போல
இருந்தான்.அவனை இதற்கு முன்பு இது போன்ற
நிலையினில் நினைவுக் கெட்டிய அளவில்
பார்த்ததே இல்லை என்பதால் எனக்கு கொஞ்சம்
அதிர்ச்சியாகவே இருந்தது.

அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல்"என்னடா ஆச்சு
ஏன் இப்படி டல்லடிச்சுப் போய் இருக்கே"என்றேன்,
அவன் பதிலேதும் பேசவில்லை

அவன் மனைவி மீனாட்சிதான் மனச் சோகத்தையே
துடைத்தெறிவது போல முந்தானையால் முகத்தை
அழுத்தித் துடைத்தபடி பேசினார்

"என்னன்னு தெரியலைண்ணே .நாலு நாளைக்கு
முன்னாலே ராத்திரியிலே வயித்து வலின்னு
சொன்னார்எப்பவும் உஷ்ணத்துக்கு வர்ற
வயித்து வலிதானேன்னு சொல்லி
வெந்தயமும் மோரும் கொடுத்தேன்
சாப்பிட்டவர் அப்படியே வாந்தி எடுத்திட்டார்
அவர் அப்படி எல்லாம் வாந்தி எடுத்ததே இல்லை
அப்புறம் நைட்டு பூரம் அடிவயித்தைப் பிடிச்சுட்டு
வலியால துடிச்சுப்போயிட்டார்.அப்புறம்
காலையிலே மந்தையிலே  இருக்கிற டாக்டர் கிட்டே
போனோம்.அவர் ஊசி போட்டு மருந்து மாத்திரை
கொடுத்தார்.இரண்டு நாளா வலி தேவலைன்னு
சொன்னாலும் சரியா சாப்பிட முடியலை
சரியான தூக்கமும் இல்லை,
இப்ப திரும்பவும் வலிக்குதுன்னு சொல்றார்.
அதுதான் என்ன செய்யறதுன்னு தெரியாம
முழிச்சிக்கிட்டு  இருக்கோம் நல்லவேளை
நீங்களே வந்திட்டீங்க  " என்றார்

"சரி இவ்வளவு நடந்திருக்கே முன்னாடியே
ஏன் எங்கிட்டே சொல்லலை
ஒரு போன் போட்டிருந்தா வந்திருப்பேன்
இல்லை"என்றேன்

"நானும் சொன்னேன் அண்ணே நீங்க ஏதோ
அவசரமாய் ஊருக்குப் போயிருக்கீங்க
வர எப்படியும் ரெண்டு நாளாகும்.
தொந்தரவு செய்ய வேண்டாம்னு சொல்லிட்டாரு "
என்றார்

சரி அவனுக்கு இன்னமும் நம் மீது உள்ள கோபம்
தீரவில்லை எனவும் என்னைப்போலவே இது போல
எங்களிடையே வருகிற சிறுச் சிறு சண்டைகள்
வீட்டிற்குத் தெரிவது அசிங்கம் எனவும் நினைக்கிறான்
எனபதைப் புரிந்து கொண்டு  நானும்
"ஆமாம்  தங்கச்சி நானும் அவசர வேலையா
ஊருக்குத்தான் போயிருந்தேன், இன்னைக்குக்
காலையிலேதான் வந்தேன் "எனச் சொல்லி நிறுத்தி
அவன் முகத்தைப் பார்த்தேன்

அதுவரை இறுக்கமாக முகத்தை
வைத்திருந்தவன் நான் இப்படிச் சொன்னதும்
சப்தமாகச்  வயிறு குலுங்க சிரிக்கத் துவங்கினான்
அவன் சிரிப்பதைப் பார்க்க என்னாலும் சிரிப்பை
அடக்கமுடியவில்லை நானும் அவனைக்
கட்டிப்பிடித்தபடி சப்தமாகச் சிரிக்கத் துவங்கினேன்

முகுந்தும் ஷாலினியும் நாங்கள் இருவரும் இப்படி
சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சிரிப்பதைப் பார்த்ததும்
என்ன நினைத்தார்களோ அவர்களும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டும் எங்களைப்
பார்த்த படியும் கைதட்டிச் சிரிக்கத் துவங்கினார்கள்

மீனாட்சி என்ன நடக்கிறது என்பது தெரியாமல்
குழம்பியபடி எங்களையே ஆச்சரியமாகப்
பார்த்துக் கொண்டிருந்தார்

உண்மையில் நாங்கள் இருவரும் சேர்ந்து சிரிக்கும்
கடைசிச் சிரிப்பு அதுவாகத்தான் இருக்கப் போகிறது
எனத் தெரியாமலேயே நாங்கள் ஆனந்தமாகச்
சிரித்துக் கொண்டிருந்தோம்

(தொடரும்)

36 comments:

பால கணேஷ் said...

கடைசி சிரிப்பா சார், படிக்கவெ வருத்தமாயிடுசு.

Anonymous said...

ஓ! அவர் மறைவின் தாக்கம் வெளியிடும் ஆக்கம்.
சோகம் தான் தொடருங்கள் வருவேன்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

திண்டுக்கல் தனபாலன் said...

என்ன சார்... முடிவு திக்... (கதையாகவே கொள்வோம்)

உஷா அன்பரசு said...

இப்படி ஒரு சோகத்தை படிக்க மனதுக்கு கஷ்டமா இருக்கு.. நிஜமாக இருக்க கூடாது..

த.ம-3

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உண்மையில் நாங்கள் இருவரும் சேர்ந்து சிரிக்கும்
கடைசிச் சிரிப்பு அதுவாகத்தான் இருக்கப் போகிறது
எனத் தெரியாமலேயே நாங்கள் ஆனந்தமாகச்
சிரித்துக் கொண்டிருந்தோம்//

இந்தச் சோக முடிவினை நான் எதிர்பார்த்தேன். ஏற்கனவே முதல் பகுதியில் என் பின்னூட்டத்திலும் குறிப்பிட்டிருந்தேன்.

எப்படியோ தாங்கள் அவரை சந்தித்துப்பேசி சிரித்து மகிழ்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.தொடருங்கள்.

சசிகலா said...

கடைசி சிரிப்பா அடுத்த பகிர்வை படிக்கவே பயமாக இருக்கிறது. சும்மா சொன்னதாக எதாவது சொல்லிவிட மாட்டீங்களா என தவிக்கிறேன்.

கோமதி அரசு said...

உண்மையில் நாங்கள் இருவரும் சேர்ந்து சிரிக்கும்
கடைசிச் சிரிப்பு அதுவாகத்தான் இருக்கப் போகிறது
எனத் தெரியாமலேயே நாங்கள் ஆனந்தமாகச்
சிரித்துக் கொண்டிருந்தோம்//
இதை படிக்கும்போது மனதுக்கு மிகவும் வருத்தமாய் இருக்கிறது.

குட்டன்ஜி said...

மேற்கொண்டு படிக்க வேண்டுமா என யோசிக்க வைக்கிறது எதிர் வரும் சோகம்!

MANO நாஞ்சில் மனோ said...

அட....சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் அந்த கடைசி என்பதுதான் மனசுக்கு வருத்தமாக இருக்கிறது குரு.

வெங்கட் நாகராஜ் said...

கடைசி சோகம்...... அடாடா....

ஆனந்தமான சிரிப்பிற்குப் பிறகு சோகம்.... ம்....

த.ம. 6

கரந்தை ஜெயக்குமார் said...

கடைசிச் சிரிப்பா,,,
மனம்
வாடுகிறது அய்யா

இளமதி said...

வணக்கம் ஐயா! இது தொடர் என்பதால் இதற்கு முதல் தந்தவைகளையும் படித்து பின்னர்வந்து கருத்தெழுதுகிறேன். சற்று நேரப்பற்றாக்குறை.

அங்கும் வந்து வாழ்த்தியமைக்கும் மனமார்ந்த நன்றி!

த ம. 7

சக்தி கல்வி மையம் said...

உண்மையில் நாங்கள் இருவரும் சேர்ந்து சிரிக்கும்
கடைசிச் சிரிப்பு அதுவாகத்தான் இருக்கப் போகிறது///

வருத்தம் ...

கவியாழி said...

உண்மையில் நாங்கள் இருவரும் சேர்ந்து சிரிக்கும்
கடைசிச் சிரிப்பு அதுவாகத்தான் இருக்கப் போகிறது//அய்யய்யோ அப்புறம் ?

அப்பாதுரை said...

அய்யோ..

G.M Balasubramaniam said...


நான் எழுதிய பின்னூட்டம் என்னாயிற்று.? இருவரும் சேர்ந்து சிரிக்கும் கடைசி சிரிப்பு எனும்போதே உங்கள் நண்பருக்கு ஏதோ ஆகிவிட்டது புரிகிறது.

Seeni said...

ayyayyo....

மாதேவி said...

இருவரினதும் ஆரம்ப சிரிப்பில் மகிழ்ந்த நாங்கள் கடைசி சிரிப்பு என்றதும்

முழித்துத்தான் போனோம்.... மிகுந்த சோகம்.....

அருணா செல்வம் said...

என்னது... கடைசி சிரிப்பா...?

Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ்''//
.
கடைசி சிரிப்பா சார், படிக்கவெ வருத்தமாயிடுசு//.

தங்கள் முதல் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi ''

ஓ! அவர் மறைவின் தாக்கம் வெளியிடும் ஆக்கம்.
சோகம் தான் தொடருங்கள் வருவேன்/

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //
..
என்ன சார்... முடிவு திக்... (கதையாகவே கொள்வோம்)//

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/


Yaathoramani.blogspot.com said...

உஷா அன்பரசு //
.
இப்படி ஒரு சோகத்தை படிக்க மனதுக்கு கஷ்டமா இருக்கு.. நிஜமாக இருக்க கூடாது.


தங்கள் உடன் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

.

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //
//
இந்தச் சோக முடிவினை நான் எதிர்பார்த்தேன். ஏற்கனவே முதல் பகுதியில் என் பின்னூட்டத்திலும் குறிப்பிட்டிருந்தேன்.

எப்படியோ தாங்கள் அவரை சந்தித்துப்பேசி சிரித்து மகிழ்ந்ததில் எனக்கும் மகிழ்ச்சியே.//


தங்கள் வாழ்த்து எனக்கு
அதிக உற்சாகம்ளிக்கிறது
தங்கள் உடன் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

கடைசி சிரிப்பா அடுத்த பகிர்வை படிக்கவே பயமாக இருக்கிறது. சும்மா சொன்னதாக எதாவது சொல்லிவிட மாட்டீங்களா என தவிக்கிறேன்

தங்கள் உடன் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

.

Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு //
//
இதை படிக்கும்போது மனதுக்கு மிகவும் வருத்தமாய் இருக்கிறது//

தங்கள் உடன் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/

வல்லிசிம்ஹன் said...

ஏன் இந்த சோகத்தை இறைவன் கொடுக்கிறார்.

Avargal Unmaigal said...

கடைசியான சிரிப்பு என்று சொல்லும் போதே அங்கே அழுகை வரப் போகிறது என்று தெரிகிறது

Yaathoramani.blogspot.com said...

வல்லிசிம்ஹன் /

ஏன் இந்த சோகத்தை இறைவன் கொடுக்கிறார்./

தங்கள் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

கடைசியான சிரிப்பு என்று சொல்லும் போதே அங்கே அழுகை வரப் போகிறது என்று தெரிகிறது/

/தங்கள் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

கீதமஞ்சரி said...

நல்லதொரு நட்புக்கு கெடு வைத்தது காலமா? காலனா? விதிர்விதிர்க்கும் மனத்தோடு அடுத்த பகுதிக்கு விரைகிறேன்.

ஸாதிகா said...

உண்மையில் நாங்கள் இருவரும் சேர்ந்து சிரிக்கும்
கடைசிச் சிரிப்பு அதுவாகத்தான் இருக்கப் போகிறது
எனத் தெரியாமலேயே நாங்கள் ஆனந்தமாகச்
சிரித்துக் கொண்டிருந்தோம்//ஐயய்யோ..அப்புறம்?இதோ அடுத்த பகுதிக்கு போகிறேன்.

Yaathoramani.blogspot.com said...

கீத மஞ்சரி said..//
.
நல்லதொரு நட்புக்கு கெடு வைத்தது காலமா? காலனா? விதிர்விதிர்க்கும் மனத்தோடு அடுத்த பகுதிக்கு விரைகிறேன்.///

தங்கள் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //
.
//ஐயய்யோ..அப்புறம்?இதோ அடுத்த பகுதிக்கு போகிறேன்.//

தங்கள் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//


Ranjani Narayanan said...

கடைசி சிரிப்பாக இருக்கும் என்று நீங்கள் சொன்னாலும், அப்படியெல்லாம் இருக்காது என்று மனதிற்குத் தோன்றுகிறது.

Yaathoramani.blogspot.com said...

Ranjani Narayanan /

/தங்கள் வரவுக்கும்
உணர்வுபூர்வமான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Post a Comment