Monday, June 17, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (11)

சென்னை மருத்துவர் புற்று நோய்
மருத்துவத்தில் மட்டுமல்லாது நோயாளிகளுக்கு
கவுன்ஸ்சிலிங் தருவதிலும் அனுபவமிக்கவர் என்பது
நோயைப்பற்றி சொல்லத் துவங்குவதற்கு முன்னால்
தன்னைப்பற்றியும் தன் மனைவி குறித்தும்
சுருக்கமாகச் சொன்னதில் புரிந்து கொள்ள முடிந்தது

புற்று நோயின் காரணமாக தந்தை இறந்ததும்
சராசரிக் குடும்பத்தில் பிறந்ததால் மிகவும்
கஷ்டப்பட்டுப் படித்ததும் ஆசிரியர் தொழிலைப்
போலவே மருத்துவத் துறையும்
சேவைத் துறை என்கிற கருத்தில் ஆணித்தரமாக
தன்னைப்போலவே தன் மனைவியும் இருந்ததால்
காதலித்துத் திருமணம் செய்து கொண்டது குறித்தும்
சொல்லிமுடித்த பின்னே அவர் புற்று நோய் குறித்து
சொல்லத் துவங்கியது எங்களுக்குள் அவர்மேல்
கூடுதல் மதிப்பும் மரியாதையும் உண்டாகியது

அவர் விரிவாகச் சொன்னதின் சாராம்சம் இதுதான்

புற்று நோயை ஆரம்பத்தில் கண்டுபிடித்துவிட்டால்
குணப்படுத்துவது எளிது,அது காட்டும் ஆரம்ப
அறிகுறிகள் ந்ம்மை அதிகம் கஷ்டப்படுத்தாது
இருப்பதால்அதை நாம் மிகச் சிறிய நோய் என
அனுமானித்துஅதற்கு மட்டுமே வைத்தியம் செய்து
 புற்று நோயைஅதிகம் வளரவைத்துவிடுகிறோம்

நாள் பட்ட ஆறாத புண்
இடைவிடாத இருமல்
குரல் மாற்றம்
உணவு விழுங்குவதில் சிரமம்
மச்சத்திலோ கரணையிலோ ஏற்படும் மாற்றம்
நாள்பட்ட மலச்ச்சிக்கல்
உடல் எடையில் மாற்றம்
உணவுப் பழக்கத்திலோ தூக்கத்திலோ மாற்றம்

இப்படி மிகச் சிறிய அறிகுறிகள் கூட
 புற்று நோய்க்கானஅறிகுறிகளாக
 இருந்துவிடுவதுண்டு
.நாற்பத்து ஐந்துக்கு மேற்பட்ட எவரும்
 இதுபோன்றஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
அறிகுறிகள் இருப்பின் முதலிலேயேமருத்துவரிடம்
 பரிசோதனை செய்து கொள்வது நல்லது
மேற்குறித்த அறிகுறிகள் அனைத்துமே
 புற்று நோய்க்கான அறிகுறிகள்தான் என
 திட்டவட்டமாக கூறமுடியாதுஆயினும்சகஜமான
 சிகிச்சையில் இவை குணமடையாவிட்டால்
புற்று நோய்க்கான சாத்தியக் கூறு உண்டு என
அனைவரும்மனதில் கொள்ள வேண்டும் என்றார்.

மாலை மெல்ல மெல்ல மயங்கத் துவங்க
இருள் பரவத் துவங்க டாக்டரின் மனைவி வாசல்
வராண்டா விளக்கை எரியவிட்டு
எங்கள் அனைவருக்கும் ஒரு தட்டில் ஸ்னேக்ஸும்
 காப்பியும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு
அருகில் அமர்ந்து கொள்ளடாக்டர் தொடர்ந்து பேசினார்

"இப்படித்தான் கணேசன் உங்களுக்கு வயிற்றில்
தொடர்ந்து மூன்று வருடங்களாக வலி இருந்தும்
நீங்கள் அதை பரிசோதனை செய்யாது நீங்களாகவே
அது சூட்டுக்கான வலி அது இதுவென்று
நீங்களாகவே வைத்தியம் பார்த்துக் கொண்டு
குடலில் புற்று நோயை முற்றவைத்துக்
கொண்டிருக்கிறீர்கள் "எனச் சொல்லி நிறுத்த
நாங்கள் அதிர்ந்து போனோம்

வெளியில் சூழ்ந்த இருளெல்லாம் இப்போது
எங்கள் இருவருக்குள்ளும் சூழ்ந்ததைப் போலிருந்தது

நடுங்கிய குரலில்
"புற்று நோய் சிகிச்சைக்காக அதி நவீன மருந்துகள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும். குணப்படுத்துவது
முன்புபோல அத்தனை கடினமில்லை  எனவும்
சொல்கிறார்களே "நான்தான் கேட்டேன்

விரக்தியுடன் சிரித்தபடி டாக்டர் தொடர்ந்தார்

"புற்று நோய்க்கான அதி நவீன மருந்துகள்
கண்டுபிடிக்கப்பட்டாலும் அவைகளைப் பாவிக்கையில்
அது புற்று நோய் செல்களை மட்டும் அல்லாது
நல்ல செல்களையும் அழிக்கிறது
இதனால் நாளடைவில் இந்த மருந்துகளாலேயே
 நோயாளி வேறு பல இன்னல்களுக்கு
ஆளாகிப் போகிறான்

தலை ரோமம் உதிர்தல்,வாயில் சிறுகுடலில்
ஆறாத புண் தோன்றுதல் இரத்த சோகை முதலான
நோய்கள் பெருக நோயாளி  மிக அவதியுறுகிறான்

கதிரியக்கச் சிகிச்சையும் செய்யலாம்தான்
அது புற்று நோய்க் கிருமிகளை அழிப்பதுடன்
இரத்த உற்பத்திக்கு காரணமான
எலும்பு மஜ்ஜையையும் மிகவும் பாதிக்கிறது "
எனச் சொல்லி நிறுத்த
நாங்கள் பாதி செத்துப்போனோம்

ஏண்டா சென்னை வந்தோம் பேசாமல் இன்னும்
சில நாள் மோரில் வெந்தயத்தைப் போட்டுக்
குடித்துக் கூட பொழுதை ஓட்டிக் கொண்டு
போகிற நேரத்தில் போய்ச் சேர்ந்திருக்கலாமோ
எனக் கூடத் தோன்றியது

கணேசன் தான் பொறுக்கமுடியாமல் கேட்டான்
"அப்போ சாவதைத் தவிர வேறு வழி இல்லையா
டாக்டர் "

"கணேசன் இல்லையெனச் சொல்வதற்கா நாங்கள்
டாக்டருக்குப் படித்திருக்கிறோம்
,நிச்சயமாக இருக்கிறது
பொய்யான நம்பிக்கையை விட உண்மை நிலையை
அறிந்து கொண்டு மனதில்  நிஜநம்பிக்கை கொள்வது
புற்று நோய் சிகிச்சைக்கு மிகவும் அவசியம் "என்றார்

நாங்கள் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சுவிட்டோம்

ஆயினும் அவர் அடுத்து சொன்ன விஷயங்கள்
இன்னும் எங்களை அதிகம் நிலை குலையச்
செய்துவிட்டது

(தொடரும் )

26 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// வெளியில் சூழ்ந்த இருளெல்லாம் இப்போது
எங்கள் இருவருக்குள்ளும் சூழ்ந்ததைப் போலிருந்தது... ///

எங்களுக்கும் அப்படித்தான் இருக்கிறது...

மேலும் அறிய பயத்துடன்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நீங்கள் சொல்லும்போதே கலக்கமாக இருக்கிறது.
நல்லதே நடக்க வேண்டும்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம. 3

கவியாழி said...

இதையல்லாம் தெரிந்தும் நீங்கள் அவருக்கு துணை இருப்பதால் நாம் பிழைத்துவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் இருந்திருகிறார்.
ஆனாலும் கொடுமைக்கார கொள்ளை வியாதி எப்படியும் சீரழித்துவிடும் என்பது அவருக்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.
என் அப்பாவும் புற்றுநோயால் இறந்தவர் என்பதால் அவர்களின் வலி எனக்கும் நல்ல பரிச்சயம்.

நான் வேண்டுவதும் இந்த நோய் று யாருக்கும் வரக்கூடாது என்பதே.சரியான மருத்துவரும் விரைவான தெரிதலுமே இந்த நோயிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.அலட்சியம் வேண்டாம்

இதை தெளிவாக எடுத்துக் கூறியமைக்கும் ஒரு உயிர் பிழைக்க வேண்டும் என்ற நோக்குடன் உதவி செய்த உங்களுக்கு பாராட்ட வார்த்தையில்லை வணங்குகிறேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வெளியில் சூழ்ந்த இருளெல்லாம் இப்போது
எங்கள் இருவருக்குள்ளும் சூழ்ந்ததைப் போலிருந்தது//

இப்போது இதைப்படிக்கும் எங்களுக்குள்ளும் அல்லவா சூழ்ந்து விட்டது. ;(((((

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பொய்யான நம்பிக்கையை விட உண்மை நிலையை
அறிந்து கொண்டு மனதில் நிஜநம்பிக்கை கொள்வது
புற்று நோய் சிகிச்சைக்கு மிகவும் அவசியம் "//

நல்லதொரு பயனுள்ள விஷமாக உள்ளது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

//கதிரியக்கச் சிகிச்சையும் செய்யலாம்தான். அது புற்று நோய்க் கிருமிகளை அழிப்பதுடன் இரத்த உற்பத்திக்கு காரணமான எலும்பு மஜ்ஜையையும் மிகவும் பாதிக்கிறது "//

மிகவும் கொடுமை தான்.

//நாங்கள் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சுவிட்டோம்

ஆயினும் அவர் அடுத்து சொன்ன விஷயங்கள் இன்னும் எங்களை அதிகம் நிலை குலையச் செய்துவிட்டது//

அடடா, அப்புறம் என்ன ஆச்சு?

தொடருங்கள். நாங்களும் தொடர்கிறோம்.

மாதேவி said...

"உண்மை நிலையை
அறிந்து கொண்டு மனதில் நிஜநம்பிக்கை கொள்வது மிகவும் அவசியம்" அப்புறம்......

இளமதி said...

கொடிய நோய் ஐயா.
தாங்கும் வலிமை நோய்கண்டவருக்கும் நோயாளியைக் கண்டவருக்கும் இருக்காது.

வலியுடன் நானும் பின்தொடர்கிறேன்...

த ம.5

கரந்தை ஜெயக்குமார் said...

எனது தந்தைக்கு வயிற்றில் , குடலில் புற்று நோய் இருந்தது அய்யா. புற்று நோய் பரவிய குடல் முழுவதும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு விட்டது. எனது தந்தை கால் பங்கு குடலுடனே இருக்கிறார். பிரச்சினை இல்லை. அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. நலமுடன் உள்ளார்.
நண்பரின் கதை மனதில் சுமையினை ஏற்றுகிறது.

தி.தமிழ் இளங்கோ said...

// அவர் விரிவாகச் சொன்னதின் சாராம்சம் இதுதான் //

பயனுள்ள சாராம்சம்தான்.

இராஜராஜேஸ்வரி said...

பொய்யான நம்பிக்கையை விட உண்மை நிலையை
அறிந்து கொண்டு மனதில் நிஜநம்பிக்கை கொள்வது
புற்று நோய் சிகிச்சைக்கு மிகவும் அவசியம்

விரிவான தகவல்கள்..!

Seeni said...

vethanaiyaaka irukkuthu ayya...

கீதமஞ்சரி said...

புற்றுநோயின் தன்மை குறித்து மருத்துவர் சொன்ன செய்திகள் பலருக்கும் பயன்தரும். எந்த ஒரு உடல் உபாதையும் ஒருமுறை இருமுறைக்குமேல் தொடர்ந்து வந்து படுத்தினால் உடனடியாக மருத்துவரை நாடுதலே நலம். இப்போது நண்பரின் நிலை என்ன? எவ்வளவு நம்பிக்கையுடன் வந்திருந்தார்? மருத்துவர் சொன்ன நிலைகுலையச் செய்த தகவல் என்ன?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடர்கிறேன்

அப்பாதுரை said...

எலும்பு மஜ்ஜை - புதுச் சொல்.
என் பின்னூட்டத்தில் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேனோ?

MANO நாஞ்சில் மனோ said...

மனசு கனத்துப் போச்சே குரு.

MANO நாஞ்சில் மனோ said...

புற்று நோயின் தன்மையை அறியும்போது அதன் வலி கொடுமையாகத்தான் இருக்கிறது இல்லையா.

RajalakshmiParamasivam said...

நல்ல விழிப்புணர்வு பதிவு.
நமக்குத்தேவை விழிப்புணர்வு பயம் இல்லை!
சரிதானே ...

Anonymous said...

''...ஆயினும் அவர் அடுத்து சொன்ன விஷயங்கள்
இன்னும் எங்களை அதிகம் நிலை குலையச்
செய்துவிட்டது..''
mmm.....NeXT.....
Vetha.Elangathilakam

G.M Balasubramaniam said...


தொடர்கிறேன்....

சக்தி கல்வி மையம் said...

மனதை நெகிழ வைத்துவிட்டது..

அருணா செல்வம் said...

தொடருகிறேன் இரமணி ஐயா.

Unknown said...

// ஏண்டா சென்னை வந்தோம் பேசாமல் இன்னும்
சில நாள் மோரில் வெந்தயத்தைப் போட்டுக்
குடித்துக் கூட பொழுதை ஓட்டிக் கொண்டு
போகிற நேரத்தில் போய்ச் சேர்ந்திருக்கலாமோ
எனக் கூடத் தோன்றியது //

இந்த வரிகள் அமரர் சுஜாதாவின் ஒரு கதையை யாபகபடுதுகிறது, அருமையான நடையில் திகிலை கிளப்புகிறீர்கள் சார்.....அடுத்தது என்ன ?


ஸாதிகா said...

துன்பத்திலும் சிறு இன்பம் என்பதைப்போல் நல்ல ஒரு மருத்துவர் கிடைத்து இருக்கிறார்.

12 பகுதியையும் ஒரே மூச்சில் வாசித்து விட்டேன்.அடுத்த பகுதிகளைதினம் ஒன்றாக போடுங்கள்.

Ranjani Narayanan said...

ஸாதிகா போலவே நானும் இன்று இதுவரை படித்துவிட்டேன். எவ்வளவு முடிகிறதோ படித்துவிடுவது என்றிருக்கிறேன்.

டாக்டர் கொடுத்த நம்பிக்கை, உங்கள் நண்பருக்குக் கை கொடுத்து அவர் இந்த கடும் நோயிலிருந்து பிழைத்து எழட்டும்.

நம்மில் பலர் இப்படித்தான் நோய்களின் அறிகுறிகளைப் புறக்கணிக்கிறோம்.

Post a Comment