Tuesday, June 4, 2013

எமனோடு விளையாடி எமனோடு உறவாடி (5)

அன்று இரவு வயிறு வலி கொஞ்சம்
குறைந்திருந்ததாலா  அல்லது பேச்சு சுவாரஸ்யத்தில்
வயிற்று வலியை கணேசன் மறந்திருந்தானா
எனத் தெரியவில்லை.இரவு வெகு நேரம்
நாட்டு நடப்பு மற்றும் அப்போது வெளியாகி
பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த ஒரு புதிய இயக்குநர்
திரைப்படம் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம்
அப்படியே மறு நாள் டாக்டரின் செல்வதற்கான
ஏற்பாடுகளை நான் செய்து விடுவதாகவும் அவன்
ஒன்பது மணிக்கு வீட்டில் கிளம்புவதற்குத் தயாராக
மட்டும் இருக்கும்படியாகச் சொல்லிவிட்டு வந்தேன்

எனது வீடும் கணேசன் வீடும் ஆஸ்பத்திரியும்
இரண்டு கிலோ மீட்டர் வித்தியாசத்தில் வேறு வேறு
திசையில் இருந்தன,நான் காலை எட்டு மணிக்கு
ஆஸ்பத்திரிக்குச் சென்று டோக்கன் போட்டுவிட்டு
(காலையில் நாற்பது மாலையில் ஐம்பது அல்லது
அறுபது நோயாளிகளை மட்டுமே அந்த டாக்டர்
பார்ப்பார்,டோக்கன் போடவில்லையெனில்
பார்ப்பது கடினம் )  அவன் ஹோட்டலில்
சாப்பிடமாட்டான் என்பதால் வீட்டிற்கு வந்து
இட்லி பார்சல் மற்றும் தண்ணீர் பாட்டில்
எடுத்துக் கொண்டு அவன் வீட்டிற்குச் சென்று
அவனை டூவிலரில் ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரி
வரவும் எங்கள் டோக்கன் நம்பர் வரவும்
சரியாக இருந்தது

டாக்டரிடம் என் நண்பனை அறிமுகம் செய்துவிட்டு
ரூமை விட்டு வெளியேறப்போன என்னை உள்ளேயே
இருக்கும்படிச் சொல்லிவிட்டு அவனை அந்தப்
பரிசோதனை மேஜையில் படுக்கவைத்து
வயிற்றுப்பகுதியை ஒவ்வொரு இடமாக
அழுத்தத் துவங்கினார்,சிறிது நேரம் பல்லைக்
கடித்துக் கொண்டு வலியைப் பொறுத்துக் கொண்டு
வலிக்கிறது  என மட்டும் ஜாடை
காட்டிக் கொண்டிருந்தவன் அடிவயிற்றில் டாக்டர்
அழுத்தத் துவங்கியதும்  வலி பொறுக்காது
சப்தமாக  கத்தத் துவங்கிவிட்டான்.

பின் அவனை அருகில் அமரவைத்து
இரண்டாண்டுகளாக வலி வந்து போகிற விஷயம்
இப்போது சில நாட்களாக அதிகமாக
வலி வருகிற விஷயம்
குரலில் மற்றும் எடையில்  ஏற்பட்டுள்ள மாற்றம்,
ஆறாத புண், உணவுப் பழக்கம் மற்றும்
தூக்கப் பழக்கத்தில்ஏற்பட்டுள்ள
மாறுதல்களையெல்லாம் என்னிடமும்
அவனிடமும் மாறி மாறிக் கேள்வி கேட்டு
குறித்துக் கொண்ட  டாக்டர் முடிவாக......

" நாளைக் காலை வெறும் வயிற்றுடன்
ஆறு மணிக்கெல்லாம் ஆஸ்பத்திரி வந்து
நான் குறிப்பிட்டுள்ள டெஸ்டுகளையெல்லாம் லேபில்
எடுத்துவிடுங்கள் மாலையில் எல்லா ரிபோர்ட்டும்
என் கைக்கு வந்து விடும்.நீங்கள் அவசியம்
நாளை மாலை என்னைப் பாருங்கள்
தாமதப் படுத்தவேண்டாம் " என கொஞ்சம்
அழுத்தமாகச் சொன்னதும்  அந்த டெஸ்டுக்கான
பட்டியலில் "பயாப்ஸி "டெஸ்டும் இருந்ததும்
எனக்குள் லேசான கலக்கத்தை உண்டாக்கிப் போனது

(தொடரும் )

45 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இன்னும் திகில் தொடர்கிறதே. நாளை லாப் டெஸ்ட் என்ன சொல்லுமோ? மேலும் என்னென்ன நடக்குமோ?. ஒரே கவலையாக உள்ளது. தொடருங்கள்.

அருணா செல்வம் said...

எனக்கு அதிகமான கலக்கத்தை உண்டாக்குகிறது
உங்களின் இந்தத் தொடர் இரமணி ஐயா.

கவியாழி said...

அடப்பாவமே...அப்புறம் என்னாச்சு?

தி.தமிழ் இளங்கோ said...

கவிஞருக்கு வணக்கம்! இன்று காலைதான் இந்த பதிவின் தொடர்கள் 2, 3, 4, 5, நான்கினையும் படித்தேன். தொடர் படிக்க நன்றாக இருந்தாலும் , உங்கள் நண்பன் படும் வேதனை, நான் வயிற்று வலி (APPENDIX BURST) வந்து பட்ட வேதனையையும், பின்னர் அறுவை சிகிச்சை நடந்து உயிர் பிழைத்ததையும் ஞாபகம் கொள்ளச் செய்தது. ஏற்கனவே மூன்றாம் பகுதியில் நீங்கள் சொன்ன,

// உண்மையில் நாங்கள் இருவரும் சேர்ந்து சிரிக்கும்கடைசிச் சிரிப்பு அதுவாகத்தான் இருக்கப் போகிறதுஎனத் தெரியாமலேயே நாங்கள் ஆனந்தமாகச் சிரித்துக் கொண்டிருந்தோம் //

என்ற வரிகள் இதயத்தில் ஒரு வலியாக உங்களுக்கு இருப்பதைக் காட்டியது. இதுதான் வாழ்க்கை!


பால கணேஷ் said...

பயாப்ஸி டெஸ்ட் என்றால்...? மருத்துவ அறிவு கம்மியானதால் (பொதுவாகவே அறிவு குறைவென்பார் அம்மா) சரியாகப் புரியவில்லை எனக்கு? அதனால் வரும் விளைவு கவலை தருவதாக இருக்கும் என்பதை அறிய முடிகிறது. பிறகு என்ன நேர்ந்தது என்பதை அறிய ஆர்வமும் கவலையும் ஒருசேர காத்திருக்கிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஒவ்வொரு பதிவிலும் திகில் கூடிக் கொண்டே போகின்றது அய்யா. என்னவாயிற்று தங்களின் நண்பருக்கு?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ... தொடருங்கள் .

திண்டுக்கல் தனபாலன் said...

மேலும் சிக்கல் கூடிப் போகிறது - எங்கள் மனதிலும்...

என்னவாயிற்று...?

இராஜராஜேஸ்வரி said...

"பயாப்ஸி "டெஸ்டு ----

நோய் வேதனையை விட அதிக துன்பம் தருமே...!

இளமதி said...

இதென்ன கொடுமை....

தாங்க முடியாமல் போகிறதே...சோகம்!

த ம.8

Anonymous said...

ஓ! மிக சீரியசாகப் போகிறது. பயப்ஸி டெஸ்ட் என்றால் என்ன? சொல்ல முடியுமா?....
வேதா. இலங்காதிலகம்.

ராஜி said...

சீரியல்களில் கதை சீரியசா போகும்போது தொடரும் போடுவாங்களே! அது போல இருக்கு உங்க ஸ்டைல்

G.M Balasubramaniam said...


வயிற்றின் வலது பக்க அடிப்பகுதியை அழுத்தினால் வலி வந்தால் லிவர் ப்ராப்ளமாக இருக்க வாய்ப்புண்டு.

Seeni said...

mmmm.....

சதீஷ் செல்லதுரை said...

உங்க தொடரை,சீனு தொடரை தொடர முடியாத சோகம் எனக்கு....நீங்கல்லாம் புக் போடணும்..அத நான் படிக்கணும் டீல்?

Avargal Unmaigal said...

டாக்டர் அவரை சோதிக்கும் போது வயிற்று வலியால் துடித்தார் ஆனால் நாங்களோ நீங்கள் எடுத்துரைக்கும் முறையால் மனவலி ஏற்பட்டு துடிப்பது போல துடிக்கிறோம்


ரிசல்ட் முடிவு அவருக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான்

சசிகலா said...

"பயாப்ஸி "டெஸ்டும் இருந்ததும்
எனக்குள் லேசான கலக்கத்தை உண்டாக்கிப் போனது..
அப்படியென்றால் எதாவது பெரிய நினைக்கவே பயமாக இருக்கே.

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

இன்னும் திகில் தொடர்கிறதே. நாளை லாப் டெஸ்ட் என்ன சொல்லுமோ? மேலும் என்னென்ன நடக்குமோ?. ஒரே கவலையாக உள்ளது. தொடருங்கள்.//


தங்கள் முதல் வரவுக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம்//

எனக்கு அதிகமான கலக்கத்தை உண்டாக்குகிறது
உங்களின் இந்தத் தொடர் இரமணி ஐயா./

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் உணர்வுபூர்வமான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன்//

அடப்பாவமே...அப்புறம் என்னாச்சு///

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் உணர்வுபூர்வமான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ் //.

பிறகு என்ன நேர்ந்தது என்பதை அறிய ஆர்வமும் கவலையும் ஒருசேர காத்திருக்கிறேன்//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் உணர்வுபூர்வமான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Ramani S said...
தி.தமிழ் இளங்கோ //

// உண்மையில் நாங்கள் இருவரும் சேர்ந்து சிரிக்கும்கடைசிச் சிரிப்பு அதுவாகத்தான் இருக்கப் போகிறதுஎனத் தெரியாமலேயே நாங்கள் ஆனந்தமாகச் சிரித்துக் கொண்டிருந்தோம் //

என்ற வரிகள் இதயத்தில் ஒரு வலியாக உங்களுக்கு இருப்பதைக் காட்டியது. இதுதான் வாழ்க்கை!//தங்கள் உடன் வரவுக்கும்

உற்சாகமூட்டும் உணர்வுபூர்வமான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி



Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //

ஒவ்வொரு பதிவிலும் திகில் கூடிக் கொண்டே போகின்றது அய்யா. என்னவாயிற்று தங்களின் நண்பருக்கு?//

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் உணர்வுபூர்வமான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

நண்டு @நொரண்டு -ஈரோடு /

/தங்கள் உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //
.
மேலும் சிக்கல் கூடிப் போகிறது - எங்கள் மனதிலும்...//

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் உணர்வுபூர்வமான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி ///

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் உணர்வுபூர்வமான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

இளமதி //
.
இதென்ன கொடுமை....
தாங்க முடியாமல் போகிறதே...சோகம்!//

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் உணர்வுபூர்வமான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

ஓ! மிக சீரியசாகப் போகிறது. பயப்ஸி டெஸ்ட் என்றால் என்ன? சொல்ல முடியுமா?.//

சதையை எடுத்து
டெஸ்ட் செய்வார்கள் எனச் சொல்லக்
கேள்விப்பட்டிருக்கிறேன்
இது கேன்ஸர் கன்பார்ம் பண்ண
அவசியமான டெஸ்ட் எனவும் சொல்வார்கள்
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

ராஜி //

சீரியல்களில் கதை சீரியசா போகும்போது தொடரும் போடுவாங்களே! அது போல இருக்கு உங்க ஸ்டைல்

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

வயிற்றின் வலது பக்க அடிப்பகுதியை அழுத்தினால் வலி வந்தால் லிவர் ப்ராப்ளமாக இருக்க வாய்ப்புண்டு//

நிச்சயமாக அதுதான் அவனுக்கும்
உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
.

Yaathoramani.blogspot.com said...

Seeni s/


/உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

சதீஷ் செல்லதுரை //
.
உங்க தொடரை,சீனு தொடரை தொடர முடியாத சோகம் எனக்கு....நீங்கல்லாம் புக் போடணும்..அத நான் படிக்கணும் டீல்///

தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //
.
டாக்டர் அவரை சோதிக்கும் போது வயிற்று வலியால் துடித்தார் ஆனால் நாங்களோ நீங்கள் எடுத்துரைக்கும் முறையால் மனவலி ஏற்பட்டு துடிப்பது போல துடிக்கிறோம்
ரிசல்ட் முடிவு அவருக்கு மட்டுமல்ல எங்களுக்கும்தான்//


/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் உணர்வுபூர்வமான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Sasi Kala //

"பயாப்ஸி "டெஸ்டும் இருந்ததும்
எனக்குள் லேசான கலக்கத்தை உண்டாக்கிப் போனது..
அப்படியென்றால் எதாவது பெரிய நினைக்கவே பயமாக இருக்கே.//

/தங்கள் உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் உணர்வுபூர்வமான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி





வெங்கட் நாகராஜ் said...

பயாப்சி....

அடடா பயமுறுத்துகிறீர்களே ரமணி ஜி!.....

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ்//

பயாப்சி....
அடடா பயமுறுத்துகிறீர்களே ரமணி ஜி!.///

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் உணர்வுபூர்வமான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


மாதேவி said...

பக்.....பக்...... வருகின்றேன்... அடுத்து.

கீதமஞ்சரி said...

உடல்நிலையில் நசிவுற்றுக் கலங்கி நிற்கும் நண்பனுக்கு என்னென்ன தேவை என்று பார்த்துப் பார்த்து செய்யும் செயல்கள் நல்ல நட்பைப் பறைசாற்றி நிற்கின்றன. ஆறுதலாய் அவனோடு உரையாடுதலும், முன்கூட்டியே டோக்கன் வாங்கி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்தலும், வெளியிடங்களில் உணவுண்ண மாட்டான் என்று வீட்டிலிருந்தே இட்லி, தண்ணீர் எடுத்துச் செல்லலும் மனத்தை நெகிழ்வித்தன. நண்பனின் உடல்நிலையில் ஏதோ அபாயகரமான பிரச்சனை என்று தோன்றுகிறது. கலக்கத்துடன் தொடர்கிறேன்.

ஸாதிகா said...

அந்த டெஸ்டுக்கான
பட்டியலில் "பயாப்ஸி "டெஸ்டும் இருந்ததும்
எனக்குள் லேசான கலக்கத்தை உண்டாக்கிப் போனது
//படிக்கும் அனைவருக்கும்தான் சார்.

Ranjani Narayanan said...

இந்தப் பகுதி என் அப்பாவை நினைவூட்டியது. அவருக்கும் இதேபோலத்தான் இருந்து கடைசியில் வயிற்றில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நாங்களும் உங்களுடன் கலங்கி நிற்கிறோம்.

Yaathoramani.blogspot.com said...

மாதேவி //
தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் உணர்வுபூர்வமான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...


ஸாதிகா //

..தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் உணர்வுபூர்வமான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Ranjani Narayanan //..

தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் உணர்வுபூர்வமான
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Post a Comment