Wednesday, September 25, 2013

சினிமா -ஒரு மாய மோகினி- (2)

ஒரு மாறுதலாக புராண நாடகங்களுக்குப் பதிலாக
சமூக நாடகம் போடுகிறோம் என்கிற
மன நிலையைத் தாண்டி ஏதோ  ஒருபெரும் புரட்சி
செய்யப்போகிறோம் என்கிற மனோபாவம்
எங்களில் சிலருக்கு இருந்ததால்....

நிச்சயம் இதற்கு ஊரில் அதிக எதிர்ப்பும்
எதிர்பார்ப்பும் இருக்கும் எனக் கருதியதால்...

எங்கள் நோக்கத்திற்கு உடன்பட்டவர்களைத் தவிர
வேறு  யாரையும் கூட்டத்தில் கலந்து கொள்ள
அனுமதிப்பதில்லை என் முடிவு செய்து
முதல் கூட்டத்தை ஒரு ரகசியக் கூட்டம் போலவே
ஏற்பாடு செய்திருந்தோம்.

முதல் கூட்டமே மிகவும் வித்தியாசமாக இருந்தது

பள்ளி செல்லாத மைக் செட் வைத்திருந்த மணி,

சைக்கிளிலில் பால் வியாபாரம் செய்து கொண்டு
இடையிடையே மேடையில் ரிகார்ட் டான்ஸ்
ஆடிக்கொண்டு மேடை அனுபவம் பெற்றிருந்த
மணிக்கு உறவினனான கந்தன்,

கவிதையும் கதையும் எழுதிக் கொண்டு
அது பத்திரிக்கையில் வராது போக
கையெழுத்துப் பிரதி நடத்திக் கொண்டிருந்த
என் போன்ற இலக்கிய ஆர்வலர்கள் சிலர்.
,
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் சிலர்
,
முற்போக்கு முகாமைச் சேர்ந்த சில தோழர்கள் என

அந்த முதல் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
அனைவருமே மன நிலையிலும்,
சிந்திக்கும் நிலையிலும் முற்றிலும்
மாறுபட்டவர்களாயிருந்தோம்.

ஜாதிப் பெயரிலேயே தெருப்பெயரினையும்
ஜாதிப் பெயரைச் சொல்லியே ஒருவரை ஒருவர்
அழைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்த அந்த ஊரில்
ஜாதி கடந்து மதம் கடந்து ஒரு பொது நோக்கத்திற்காக
ஒன்றுபட்ட கூட்டமாக இந்தக் கூட்டம்
இருந்த போதிலும்இதில் கலந்து கொண்ட
 ஒவ்வொருவருக்கும் இந்த நாடகத்தின் மூலம்
 நிறைவேற்றிக் கொள்ளவென
ஒவ்வொரு விதமான அபிலாஷைகளும்
நோக்கங்களும்  இருந்தது என்பது
முதல் கூட்டத்திலேயே தெளிவாகத் தெரிந்தது

தனிமனித சிந்தனையை கூட்டாக
 ஒரு செயல்வடிவம்கொடுக்க முயல்கையில்
 ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும்
மிகச் சரியாகக் கையாளப்படவில்லையெனில்
நம் நோக்கத்திற்கு முற்றிலும் மாறுபாடானதாக
அது எப்படி மாறிவிடும் என்பதையும்
அனுபவப் பூர்வமாக உணர என்போன்றோருக்கு
அந்த முதல் கூட்டமும் அதைத் தொடர்ந்த
 நிகழ்வுகளும் பாலபாடமாக அமைந்தது என்றால்
அது மிகையில்லை

(தொடரும் )

27 comments:

தி.தமிழ் இளங்கோ said...

// ஜாதிப் பெயரிலேயே தெருப்பெயரினையும் ஜாதிப் பெயரைச் சொல்லியே ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்த அந்த ஊரில் ஜாதி கடந்து மதம் கடந்து ஒரு பொது நோக்கத்திற்காக ஒன்றுபட்ட கூட்டமாக இந்தக் கூட்டம் இருந்த போதிலும் இதில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் இந்த நாடகத்தின் மூலம் நிறைவேற்றிக் கொள்ளவெனஒவ்வொரு விதமான அபிலாஷைகளும்நோக்கங்களும் இருந்தது என்பது
முதல் கூட்டத்திலேயே தெளிவாகத் தெரிந்தது //

பரவாயில்லை! அப்போதே ஒரு சமூகப் புரட்சிக்கு அடிகோலி இருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதவும்.

திண்டுக்கல் தனபாலன் said...

இடர்பாடுகள் வர வர தானே எல்லாவற்றையும் அறிந்து கொள்ள முடியும்... தொடர்கிறேன் ஐயா...

ஸ்ரீராம். said...

பலமான அனுபவமாக இருக்கும் என்று எண்ண வைக்கும் வலுவான முன்னுரை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சுவையான அனுபவங்கள் சுவாரஸ்யமாகத் தொடரட்டும். பகிர்வுக்கு நன்றிகள்.

ராமலக்ஷ்மி said...

/இந்த நாடகத்தின் மூலம்
நிறைவேற்றிக் கொள்ளவென
ஒவ்வொரு விதமான அபிலாஷைகளும்
நோக்கங்களும் இருந்தது என்பது/ மனித மனம். தொடருங்கள்.

கோமதி அரசு said...

இந்த நாடகத்தின் மூலம்
நிறைவேற்றிக் கொள்ளவென
ஒவ்வொரு விதமான அபிலாஷைகளும்
நோக்கங்களும் இருந்தது என்பது
முதல் கூட்டத்திலேயே தெளிவாகத் தெரிந்தது//
ஒவ்வொருக்கும் ஒவ்வொரு ஆசைகள் இருக்கும் தானே!
அனுபவங்கள் படிக்க தொடர்கிறேன்.

Anonymous said...

வணக்கம்
ஐயா
நிச்சயம் இதற்கு ஊரில் அதிக எதிர்ப்பும்
எதிர்பார்ப்பும் இருக்கும் எனக் கருதியதால்...

(தடைகள் தாண்டிய வெற்றிப் படிகள்)
சுவாரஸ்யமான பதிவு வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

முற்போக்கு சிந்தனைகள் உருவானால்தானே ஓர் சமூக புரட்சியும் வரும்...!

Avargal Unmaigal said...

பதிவர் கூட்டம் போல அந்த காலத்திலேயே கூட்டங்கள் நடத்திய அனுபவங்கள் நிறைய இருக்கும் போலிருக்குதே.

Unknown said...

பழமைக்கும் புதுமைக்கும் போராட்டம்! இளவயதில் எனக்கும் இந்த அனுபவம் உண்டு!

உஷா அன்பரசு said...

// மிகச் சரியாகக் கையாளப்படவில்லையெனில்
நம் நோக்கத்திற்கு முற்றிலும் மாறுபாடானதாக
அது எப்படி மாறிவிடும்// - நிஜம்தான் ஒரு சில நல்ல விஷயங்களை செய்து கொண்டிருக்கிறேன்.. சின்ன நூலிழையில் கூட நோக்கம் சிதைந்து விடாமல் தெரிந்து கற்று கொள்ள நிறைய இருக்கிறது. உங்கள் அனுபவங்கள் எனக்கும் பாடமாகும் தொடருங்கள்..

Anonymous said...

பலமிக்க கூட்டணியில் பிற்போக்கு
நிலைமையா ? இருக்காதே ...
முடிவு சுபம் தானே ...

கதம்ப உணர்வுகள் said...

எப்போதும் எங்காவது ஒரு மாறுதல் ஏற்பட்டால் அதில் நன்மை தீமைகளை அலச ஆராய நேரம் இருப்பதில்லை. ஆனால் நாம் தேடும் முன்பே நான் வேண்டியது முட்டி நிற்கத்தான் செய்கிறது.. புராண நாடகங்கள் எப்போதும் ஒரு சிலரை மட்டுமே கவர்கிறது. அதாவது வயதானவர்களை. ஆன்மீகம் தேடி அலைபவர்களை. ஒரு மாறுதலுக்காக சமூக நாடகம் போடுவது அருமையான யோசனை. ஆனால் அதில் ஒரு புரட்சி செய்ய தானே மனம் ஒன்றி இப்படி ஒரு திட்டமே வகுத்தது.

நாம் ஒரு காரியம் செய்ய முயலும்போது முதலில் அதில் ஒருங்கிணைபவர்களின் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் அதிக பங்கு வகிக்கிறது. எனக்கு இது பிடிக்காது எனக்கு அவரை பிடிக்காது நான் இதை செய்யமாட்டேன் அப்டின்னு எடுத்ததுமே அவரவர் நியாயத்தை பார்க்க ஆரம்பித்தால் அங்கு ஒருங்கிணைப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாது போகிறது.

எதிர்ப்பு இருக்கும் இடத்தில் ஏதோ மைக்செட் மணி பால்கார கந்தன் கையெழுத்துப்பிரதி நடத்தும் இலக்கிய ஆவலர்கள் இப்படின்னு கிளம்பி நல்லவிதமா கூட்டம் நடந்ததுன்னு பார்த்தால்..

கதம்ப உணர்வுகள் said...

நச்னு தலையில் அடிப்பது போல் நிதர்சனத்தை சொல்லிட்டீங்க ரமணிசார். இதுக்காக தானே காத்திருந்தேன் நானும். எழுதும் வரிகளில் எப்போதும் சாதாரணமாக சொல்லிக்கொண்டே வந்து நச்னு ஒரு இடத்தில் சாட்டையை சுழற்றும் வித்தை உங்க எழுத்துகளில் எப்போதும் நான் ரசிப்பதுண்டு. இங்கும் அப்படியே..

எதை எதிர்க்க கூட்டம் போட நினைத்தோமோ. அதையும் தாண்டி வேறு பிரச்சனைகள் முளைப்பதை அறியமுடிந்தது எழுத்துகளில்.

ஜாதி, மதம் எல்லாவற்றையும் தாண்டி ஒரு புதிய யுகம் சமைக்கும் முயற்சியில் அடி எடுத்து வைக்க முனைந்தால்..

நம் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வடிகாலாக இதை நம் வசதிக்கேற்ப மாற்றிக்கொண்டது படிக்கும்போதே கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. கசப்பு என்பதற்காக முழுங்காமல் இருக்க முடியுமா?

கதம்ப உணர்வுகள் said...

பாலபாடம் சொல்லிக்கொடுத்த அனுபவமாக இந்த கூட்டம் இப்படியாக முடிந்தது.

அற்புதமான நடை ரமணிசார். ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கேன்னு நினைக்கிறேன்… எப்போதும் போல் ரசிக்கவும் சிந்திக்கவும் கருத்துகளை தைரியமாக சொல்லவும் செய்கிறது ரமணிசார் உங்க எழுத்துகள். ஹாட்ஸ் ஆஃப்.

கதம்ப உணர்வுகள் said...

tha.ma.7

G.M Balasubramaniam said...


எந்த விஷயத்தையும் நினைத்தால் மட்டும்போதாது. துணிந்து இறங்கினால்தான் அனுபவம் என்பது கிடைக்கும். சைக்கிள் ஓட்டுவது நீச்சல் அடிப்பது போன்று. வாழ்த்துக்க்ள்

Unknown said...

முதல் கூடம் நடத்தியதை கண் முன்னே கொண்டு வந்துள்ளீர்கள்..... சிரமங்கள், அந்த கால ஜாதி முறைகள், நண்பர்கள் என்று எழுத்து அருமை. தொடர்கிறோம்.... சீக்கிரம் நாடகத்தை ஆரம்பியுங்கள் சார் !

மாதேவி said...

நல்ல அனுபவம். முயற்சிக்கு வாழ்த்துகள்.

ஸாதிகா said...

சுவாரஸ்யமான அனுபவங்கள்.தொடருங்கள்.

அப்பாதுரை said...

தொடர்கிறேன்.

vimalanperali said...

இது போன்ற கூட்டங்கள் மனிதனை செதுக்கி விடும்/

Anonymous said...

''..நிகழ்வுகளும் பாலபாடமாக அமைந்தது என்றால்
அது மிகையில்லை..''
இனிமை தொடருங்கள் வருவேன்.
இனிய நன்றியுடன் இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.


Ranjani Narayanan said...

நீங்கள் கற்றுக் கொண்ட பாடங்களை அறிய நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம்.

கரந்தை ஜெயக்குமார் said...

சுவையான அனுபவங்கள். தொடருங்கள், தொடரக் காத்திருக்கின்றோம்

கவியாழி said...

ஒவ்வொரு மாதமும் புதுபுது யுக்தியில் தொடரை நகர்த்தி செல்கிறீர்கள்.இவ்வளவு அனுபவமும் ஆர்வமும் உள்ள உங்களைப் பயன்படுத்த கலையுலகம் தவறிவிட்டதோ?

பால கணேஷ் said...

பால பாடத்தைத் தொடர்ந்து வேறென்ன பாடங்கள் கிடைத்தன என்பதை உங்களுடன் பயணித்து அறிய ஆவலுடன் நானும்...!

Post a Comment