Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Wednesday, August 31, 2016

ரஜினி ,ரஞ்சித், கபாலி ( 8 )

                                      காட்சி  ( 7  )

(பண்ணை வீட்டை சுற்றி வந்த பின் டீ அருந்திவிட்டு
ஆசுவாசப்படுத்திக் கொண்டு புல் வெளியில்
போடப்பட்டிருந்த மர நாற்காலியில் அனைவரும்
அமரவும்...

(கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டவராகவே )

ரஜினி:
தாணு சார் நாமளும் படம் சக்ஸஸ் ஆகணும்னு
எவ்வளவோ  மூளையைக் கசக்கி
எவ்வளவோ செலவழிச்சு எவ்வளவோ கஷ்டப்பட்டு
ஒரு படம் பண்றோம்

அப்ப்டியும் எப்படியும் ஒரு சில படம் ஃபிளாப்
ஆகிப்போகுது. படம் ஃபிளாப் ஆகணுன்னு
யாரும் படம் பண்றதில்ல

(சற்று நிறுத்தி )ஆனா அந்த சமயத்தில
மீடியாவா ஆகட்டும், டிஸ்ட்ரிபூட்டர்களாகட்டும்
கொடுக்கிற ஆண்டி ரியாக்ஸன்
ரொம்ப் ரொம்ப ஓவர் நான் ரெண்டு படத்தில
ரொம்ப அப்செட் ஆகிட்டேன்

ஆகையால இந்த முறை எப்பவும் போல்
நாம படத்தை வியாபாரம் பண்ணப் போறதில்லை
எல்லாம் வித்தியாசமா.. வித்தியாசமா செய்யப்போறோம்

(எனச் சொல்லியபடி இருவர் முகத்தையும் பார்க்கிறார்
இருவரும் ஒன்றும் புரியாமல்..ஆனால் ஆவலுடன்
தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்ததும்
உற்சாகத்துடன் மீண்டும் தொடர்கிறார் )

ஆமா ..எப்படி ஒரு பொருளுக்கு அதுக்கான
பெறுமான விலையை விட  கூடுதலா விக்கணும்னா
அந்த பொருளுக்கு செயற்கையா ஒரு டிமாண்டை
உருவாக்கி நினைச்ச விலைக்கு
வியாபாரி விக்குறாரோ
அதே  ஃபார்முலாவை இந்தப் படத்துக்குப்
பயன்படுத்தறோம்

எவ்வளகெவ்வளவு படத்தோட கதை லீக் ஆகாம
டீஸரை மட்டும் பயன்படுத்தமுடியுமோ

எவ்வளவுகெவ்வளவு எல்லா வகையான
மீடியாக்களையும் பயன்படுத்த முடியுமோ

அவ்வளவு பயன்படுத்தி அளவுக்கதிகமான
எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி எப்பவும் போல
முதல் வார கலெக்ஸன்னு இல்லாம

படம் வெளிவருவதற்கு முன்னாலேயே
அட்வான்ஸா எவ்வளவு கலெக்ஸன்
பண்ணமுடியுமோ அவ்வளவு பண்றோம்

எவ்வளவு காசு கொடுத்துன்னாலும் முதல் நாள்
பார்க்கறது முதல் வாரத்தில பார்க்கிறது
ஒரு கௌரவம்னு நினைக்கிற மாதிரி
ஒரு செயறகையா ஒரு சூழலை உருவாக்கறோம்
இதுவரை நம்ம தமிழ் பட உலகில யாரும்
செய்யாத மாதிரி.. இனி செய்ய முடியாத மாதிரி
அதுக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க

(என மூச்சு விடாமல் பேசி சற்று மூச்சு
வாங்க..)

(.தாணு தன் கை வசம் வைத்திருந்த
ஒரு சூட்கேஸைத் திறந்து சில
ஃபைல்களை வெளியே எடுத்தபடி.....)

தாணு:
சார்  நீங்க முதல் நாள் சொல்றப்போதே எனக்கு
கொஞ்சம் புரிஞ்சது சார்..அதை வைச்சு
பாலிவுட்ல் படத்தை ப்ரொமோட் பண்றவங்களை
வச்சு, வாரம் வாரம் செய்ய வேண்டியது
மாதா மாதம் செய்ய வேண்டியது
படம் ரிலீஸுக்கு முதல் வாரம் செய்ய வேண்டியது
முதல் நாள் செய்யவேண்டியன்னு
ஒரு பக்கா பிளான் ரெடி பண்ணிட்டேன் சார்

கிராமத்துல சின்ன சம்சாரி
எல்லா செலவும் செஞ்சு
கதிர்  பால்வைக்கிற நேரத்தில ,மேலுரத்துக்கும்
இரண்டு பாய்ச்சலுக்கும்  காசு இல்லாம
படற  கஷ்டம் மாதிரி நம்ம தயாரிப்பாளருங்க
எல்லாம்  இருக்கிற காசையெல்லாம்
தயாரிப்புக்கே செலவழிச்சுட்டு பிரிண்ட்டுக்கும்
விளம்பரத்துக்கும் இல்லாம படுகிற பாடுதான்
இங்கே வாடிக்கையாகிப் போச்சுசார்

நாம இந்தப் படத்துக்கு அப்படி இல்ல சார்
பட ப்ரோமோஷனுக்கே தயாரிப்புச் செலவு அளவு
பண்றோம் சார்

நிறைய ஸ்பான்ஸர் கூட நம்மளோட   சேர்ந்து  
 செலவு செய்யவும் ரெடியா இருக்காங்க சார்

(எனச் சொல்லி ஒரு ஃபைலை  எடுத்து
மெல்ல இருவர் முன் விரிக்கிறார் )

(தொடரும் )

Tuesday, August 23, 2016

ரஜினி ...ரஞ்சித்...கபாலி ( 3 )

                                காட்சி 4

(தனது பிரத்யேக அறைக்குள்
ரஞ்சித் அவர்கள் நுழைந்ததும், ரஜினி அவர்கள்
மிக வேகமாக முன்வந்து அவரைக் கட்டி அணைத்து
கைக்குலுக்கி வரவேற்கிறார் )

ரஜினி;
வாங்க ரஞ்சித் வாங்க...
ரொம்பக் காக்க வைச்சுட்டேனோ சாரி.சாரி

ரஞ்சித்:
இல்லைங்க சார். இப்பத்தான் வந்தேன்

 (எனச் சொல்லியிபடித்  தான் கொண்டுவந்திருந்த
 மலர்ச் செண்டினைக் கொடுத்தபடித் தொடர்கிறார்)

உங்களைப் பார்க்க எத்தனை மணி நேரம்
வேணுமானாலும் காத்திரும்படியா
கோடிச் சனம் இருக்க என்னையும் மதிச்சு.....

ரஜினி:
நோ ஃபார்மாலிடீஸ் ரஞ்சித்..திறமை எங்கிருந்தாலும்
பாராட்டப்படணும் பாராட்டணும்.அதுதான் நல்லது
அதுதான் பாராட்டிறவன் வளரவும்
பாராட்டப்படறவன் வளரவும் உதவும்
சரி நேரடியா விஷயத்துக்கு வருவோம்
மேடம் போனில் சொன்னாங்களா ?

ரஞ்சித்:
ஆமாம் சார் என்னால நம்பவே முடியலை
அவங்க போனை வைச்ச அரை மணி நேரத்தில
நான் திரும்பவும் ஒரு முறை நானே பேசி
கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டேன்
இப்ப கூட உங்க கூட உட்கார்ந்து பேசறது
நிஜந்தானான்னு குழம்பிக்கிடக்கு சார்.. நிஜமா...

ரஜினி
(தொடர்ந்து அவரைப் பேசவிடாதபடித் தடுத்து )

ரொம்ப எக்ஸைட் ஆகுறீங்க ரஞ்சித்..இப்ப முதல்ல
நாம சந்திக்கும்படியா இங்க ஏற்பாடு செஞ்சதே
இந்த ஃபார்மாலிடி பேரியரை உடைக்கத்தான்
கொஞ்சம் மனம் திறந்து பேசத்தான்
படம் பத்தியெல்லாம் அடுத்த மீட்டில் பேசலாம் சரியா

ரஞ்சித்
(தன்னை  மனரீதியாக சரிப்படுத்திக் கொள்வது போல்
மூச்சை இழுத்து விட்டு தன்னைத் தளர்த்தியபடி)
புரியுது சார் ...சொல்லுங்க சார்

ரஜினி:
நான் உங்க அட்டைக்கத்தி படம் பார்த்தேன்
கொஞ்சம் வித்தியாசமா கவனிக்கும்படியா இருந்தது
பிற்படுத்தப்பட்ட ஒருவனின் சூழல் ,
அவன் விடலைத்தனம்
எல்லாம் ரொம்பச் சிறப்பா இருந்தாலும்
ஒரு நிறைவு  ஏனோ இல்லை

ஒருவேளை முதல் படம் என்பதால கொஞ்சம்
கூடுதல் கவனத்தில சொல்ல வேண்டியதை
சொல்லத் தயக்கம் இருந்திருக்கலாம்
பட் வெரி நைஸ்  மூவி

ஆனால் மெட்றாஸ் .. சான்ஸே இல்லை
வெரி வெரி சூப்பர்..இப்படி வடக்குசென்னை
ஒரு குடியிருப்பைப் பத்தி, அவங்க வாழ்க்கைச்
சூழல்பத்தி,அவங்க வாழ்க்கையோட
விளையாடுற அரசியல் பத்தி ..ரியலி வெரி சூப்பர்
குறிப்பா ..தனியா ஒரு நைட் ஸாட் வைச்சிருத்தீங்களே
ஒரு லாங்க்  ஸாட் ..அந்த சுவத்து ஓவியத்தக் காட்டி
ஒரு ஸைலண்ட் சாட்...அதுவும்  கிரேன்சாட் ...

அந்த ஸாட்டைப் பார்த்ததும்
நிமிர்ந்து உட்கார்ந்தவன்தான்
அப்புறம் சாய்ஞ்சு உட்காரவே இல்லை

(இதைச் சொன்னவுடன் அவருக்கே உரித்தான
மௌனத்தில் சிறிது ஆழ்ந்து போகிறார்)

அப்பத்தான் எனக்கு உங்க டைரக்ஸன்ல
ஒரு படம் பண்ணனுனு முதல்ல தோணிச்சு
அந்தப் படம் மட்டும் இல்லாம
தொழில் ரீதியா நாம இணைஞ்சு படம் பண்ணினா
ஒரு பெரிய எதிபார்ப்பை உண்டாக்கும்னும் தோணிச்சு
அது எப்படின்னு உதாரணத்தோடச் சொன்னாத்தான்
கொஞ்சம் தெளிவாப் புரிஞ்சிக்க முடியும்

(எனச் சொல்லி கண்களை மூடி
 விஸுவலாக ஏதோ  ஒன்றைப் மனக் கண் முன்
பார்ப்பது போல் தலையாட்டி இரசிக்கிறார் )

நம்மைப் போலவே ரஞ்சித் அவர்களும் அது
என்னவாக இருக்கும் என்கிற ஆர்வத்தில்
ஸோபாவின் நுனிக்கு நகர்கிறார்


தொடரும்

Monday, August 22, 2016

ரஜினி ,தாணு , கபாலி ( 2 )

                                  காட்சி 3

டிரைவர் ஒரு பழக்கூடையுடன் பின் தொடர
பூச்செண்டுடன் ரஜினி அவர்களின் வீட்டில்
நுழையும் தாணு ஹாலில் இருந்து வரவேற்கும்
லதா அவர்களிடம் பழக் கூடையைக் கொடுத்து
நலம் விசாரித்து விட்டுப்   பூச்செண்டுடன்
ரஜினி அவர்கள் இருக்கும் அறைக்குள்
நுழைகிறார் )

 ரஜினி ( தான் அமர்ந்திருந்த ஸோபாவில் இருந்து
            வேகமாய எழுந்து வந்து தாணு அவர்களை
            கட்டிப் பிடித்து வரவேற்றபடி )

            வாங்க தாணுசார் வாங்க..வீட்டில் எல்லோரும்
            சௌக்கியமா ?

தாணு (மலர்ச்செண்டி கையில் கொடுத்தபடி )
             எல்லோரும் நல்ல சௌக்கியம், மேடம் போனில்
             தகவல் சொன்னதும் கூடுதல் சௌக்கியம்
             எல்லாம் தங்கள் சித்தம்....

ரஜினி (சட்டென இடைமறித்தபடி )
              எல்லாம் அவன் சித்தம் என்று சொல்லுங்க
   
தாணு அவர் கூட தானாக எதுவும் செய்ய முடியாதே
              யார் மூலமாகத்தானே முடியும்
              நீங்கள்தான் எங்களுக்கு...

ரஜினி (அவர் வார்த்தையை முடிக்க விடாதபடி )
              திருநெல்வேலிக்கே அல்வாவா...சரி சரி
              அதையெல்லாம் அப்புறம் பேசலாம்
              முதலில் உட்காருங்கள்...

              (என தன் ஸோபா அருகில்  இருக்கும்
              இருக்கையில் அமரும்படி
              சைகைக் காட்டுகிறார்
              இருக்கையின் முன் நுனியில் பௌயமாய்
               தாணு அமர..
              எப்படித் துவங்கலாமென்பது போலச் சிறிது
              நேரம் தரையைப் பார்த்தபடி
              குனிந்து கொண்டிருந்த
              ரஜினி அவர்கள் சட்டென நிமிர்கிறார்..

               ஆம் தாணு மேடம் சொல்லி இருப்பாங்களே
               ஆமாம் நாம இணைஞ்சு ஒரு படம் பண்றோம்
               இதுவரை யாரும் செய்யாத மாதிரி...
               வித்தியாசமா... புதுமாதிரியா....

தாணு   செய்துடும்வோம் சார்..இதுவரை யாரும்
                செலவழிக்காதபடி.. பிரமாண்டமா...

ரஜினி   (இடைமறிக்கிறார் ) என வார்த்தையை நீங்க
               சரியா உள் வாங்கல.. நான் சொல்ற
               வித்தியாசமா...புதுமாதிரியாங்கறது
               செலவழிப்பைப்பத்தி இல்லை
               வரவுப் பத்தி.....

தாணு   (சற்று யோசித்தபடி ) சார் சொல்றது
               கொஞ்சம் புரியலை சார்

ரஜினி   (சோபாவை விட்டு எழுந்து சிறிது நேரம்
              முன் பின்னாக நடக்கிறார். அவர் ஏதோ
              பழைய நினைவுகளின் தொடர்ச்சியாய்ப்
              பேசுவது போலப் பேசுகிறார்...

              ஆமாம் தாணு சார்.  புதுமாதிரியாகத்தான்
              ஒவ்வொரு முறையும் அதிகமா செலவழிச்சு
              லாபம் சேத்து அதிகமா வித்து,அந்த அளவு
              படம் வசூல் தராம, டிஸ்டிரிபூட்டர்கள்
             போராட்டம்அ து இதுன்னு அசிங்கப்படுத்தி,
             பின்னால நான்பணம் செட்டில் பண்ணி ....

              (சிறிது பெருமூச்சு விட்டுப்பின் தொடர்கிறார்)
              அது இனி வேண்டாம்....முதல்ல செலவுப் பத்தி
              பேசிப்பேசி வரவைப் பத்திப் பேசாததால
              இந்த தடவ வரவைப்பத்தி முதல்ல பேசுவோம்
              அப்புறம் செலவைப் பத்திப்... புரியுதா

             (சட்டென பேசுவதை நிறுத்தி
             தாணுவைப் பார்க்கிறார்
              தாணு ஒன்றும் புரியாது விழிக்கிறார்
             ரஜினி சார் அவருக்கே உரித்தான ஒரு பெரும்
             சிரிப்பைச் சிரித்து விட்டு பின் தொடர்கிறார்

             ஆமாம் இந்தத் தடவை நாம் படத்தை எடுத்து
             டிஸ்டிரிபூட் பண்ணலை, படத்தை விக்கலை
             படத்தை மார்கெட் பண்றோம்
             ப்ரமாண்டமா.. பாலிவுட்ல பண்ற மாதிரி
             ஹாலிவுட்ல பண்ற   மாதிரி ..இப்பப் புரியுதா...

தாணு (தலையை ஆட்டியபடி ) இப்ப கொஞ்சம்
              புரியுது சார்... நான் என்ன செய்யணும்..
              எப்படிச் செய்யனும்னு மட்டும் சொல்லுங்க
              மிகச் சரியாய்ச் செஞ்சிடறேன்

ரஜினி (நிதானமாய் )
             அதை அடுத்த முறை சொல்றேன்
             அதுக்குள்ள படம் சூட்டிங்க
             ஆரம்ப்த்தல இருந்து முடிகிற வரை

             மீடியாவுல பிரமாண்டமா எப்படி
             எப்படிபி படத்தை  பூஸ்ட் பண்றதுங்கிறதை ஒரு
             ப்ராஜெக்ட் ரிப்போர்ட்  மாதிரி...
             புரிஞ்சதா  பிராஜெக்ட்ரிப்போர்ட்  மாதிரி

             அடுத்த வாரத்துக்குள்ள
             தயார் செய்துட்டு வாங்க
             நீங்க அனுபவமான பெரிய ப்ரடூஸர்
             உங்களுக்குச்சொல்லவேண்டியதில்லை
             முதல் ஒரு வாரத்தில் டிக்கெட் கிடைப்பதே
             பெரிய விஷயம் மாதிரி,
             படம் பார்த்துட்டேன் என்கிறது
             மிகப்பெரிய விஷயம் மாதிரி
             ஆமா படம் ரிலீசுக்கு முன்னாலயே
             செலவுப்பணம்கைக்கு வந்துடற மாதிரி...
             புரியுதா தாணு சார்

தாணு (மிகச் சந்தோஷமா )புரியுது சார் ...
             பாலிவுட் முடிஞ்சா
              ஹாலிவுட் ப்ரொமோட்டர்களை வைச்சே
             இதைப்பிரமாண்டமா தயாரிச்சுட்டு
             வாரேன்  சார்

ரஜினி    மகிழ்ச்சி... நீங்க உறுதியா செஞ்சிருவீங்க
             வாழ்த்துக்கள்

             ( எனச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே
             அறையில்  உள்ள செல் போன் மணி யடிக்க
             ரஜினி எடுத்துப் பேசுகிறார்

             (பின் தாணுவின் கைபிடித்துக்  குலுக்கியபடி
           
             அப்ப நீங்க கிளம்புங்க சார்...ரஞ்சித் சாரை
             வரச் சொல்லி இருந்தேன்..
             வந்து காத்திருக்கிறார் போல
             அவரிடமும் ஒரு ரவுண்ட் பேசிடறேன்
             அடுத்த வாரம் உங்க ப்ராஜெக்ட்டோட அவர்
             கொண்டுவர்ற கதை அவுட்லயனோட
             சேர்ந்து பேசுவோம்   சரியா ...

தாணு (பணிவாய்க் குனிந்தபடி )
            ரொம்ப சந்தோஷம் சார்
              நான் அடுத்த வாரம் சந்திக்கிறேன் சார்

ரஜினி (மீண்டும் கை குலுக்கியபடி )
             நிச்சமா..நிச்சயமா


             தாணு மெல்ல நடந்து அறையின்
             வாசலைக் கடக்கையில்
             ஏதோ சட்டென நினைவுக்கு வந்ததைப் போல

             தாணு சார் மறக்காம சாப்பிட்டுப்போங்க
             இல்லையானா அவங்க என்னைத்தான்
             கோபிப்பாங்க சரியா.....

தாணு நீங்க சொல்லணுமா சார்
             அவங்களே விடமாட்டாங்க

             எனச் சொல்லியபடி அறைவிட்டு வெளியேற...

                               ( காட்சி  நிறைவு )


(தொடரும்)

Sunday, August 21, 2016

ரஜினி...பா. ரஞ்சித்...கபாலி ( 1 )

                                  காட்சி-1  

(ரஜனி  சுற்றிலும் கண்ணாடிப் பதித்த தனது
அறைக்குள் அதீதச் சிந்தனையுடன்
தன் மோவாயைத் தடவியபடி ஆழ்ந்த யோசனையில்
இருக்கிறார்.

சட்டென நெற்றியைத்
தேய்த்தபடியும்,சடாரெனத் திரும்பியப்படியும்
கண்களை கண்ணாடியின் மிக அருகில்
கொண்டுபோய்விழித்துப் பார்ப்பதும்
ஏதோ அவசியமாய் ,அவசரமாய்
ஒரு முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்தில் அவர்
இருப்பதை நமக்குப் புலப்படுத்துகிறது

திடீரென சட்டென முன்பிருந்த கண்ணாடி டேபிளில்
ஓங்கிக் குத்தியபடி நிமிர்கிறார்

கண்ணாடியில் அவர் மெல்லப் புன்னகைப்பது
நமக்குத் தெரிகிறது.அவசரமாய் கதவைத் திறந்து
வெளியேறுகிறார் )


               காட்சி -2

( கல்யாண மண்டபம் போல் இருக்கிற ஹாலின்
ஊஞ்சலில்  எங்கோ வெறித்துப் பர்ர்த்தபடி
மிக வேகமாக ஆடியபடி இருக்கிறார் ரஜினி
இடது புறம் அவர் மனைவி லதா அவர்களும்
வலது புறம் இரண்டுப் பெண்களும் பதட்டத்துடன்
நிற்கிறார்கள். வேகமாக ஒரு முறை ஊஞ்சலை
ஆட்டிவிட்டு அதுவாக ஓய்கிறவரை விட்டு விட்டு
அது நின்றவனுடன் பேசத் துவங்குகிறார் )

ரஜினி  (மனைவியைப் பார்த்தபடி )
            எஸ் எஸ். நானும் ரெண்டு நாளா நீ
            சொன்னதையெல்லாம்..
            ஆமாம்..நீ.... சொன்னதையெல்லாம்...

            (என்றபடி தன் மூத்த மகளைப்பார்க்கிறார்
             அவர் தரையைப் பார்த்தபடி குனிந்து நிற்கிறார் )

            பின் தன் மனைவியைப்பார்த்தபடி

            ..."அடுத்து ஒரு படம் நடிக்க
             முடிவெடுத்து விட்டேன்
             சந்தோஷந்தானே "

அதுவரை எட்டி இருந்த இரண்டு பெண்களும்
ஓடி வந்து  அப்பாவை
அணைத்துக் கொள்கிறார்கள்

மெல்ல நடந்து வந்த அவரது பின்புறம் வந்த
அவரது துணைவியார்  மெல்ல அவரது கழுத்தைக்
கைகளால் சுற்றியணைத்துக் கொள்கிறார்
.
அந்த அன்புப் பிடியில் சிறிது நேரம் கண்மூடி
இருந்தவர்..பின் பேசத் துவங்குகிறார்...

           (எதிரே இருந்த ராகவேந்திரர் படைத்தை
            வெறித்து நோக்கியபடி )

           "ஆம் நடிக்கமுடிவெடுத்து விட்டேன்
            ஆனால் எப்போதும் போல இல்லை
            மிக வித்தியாசமாய்... ஆம்  
             மிக மிக வித்தியாசமாய்
            படத்தில் மட்டுமல்ல...எல்லா விதத்திலும்
            ஆம் எல்லா விதத்திலும் ...

           எனச் அழுத்தமாய்ச் சொல்லியபடி அவருக்கே
           உரித்தா அந்த "ஹா...ஹா.." என்று
          சப்தமாய்ச் சிரிக்கிறார்
            எல்லோரும் என்ன சொல்லப் போகிறாரோ என
            ஆவலுடனும் அதிர்ச்சியுடனும் அவரைப்
             பார்த்தபடித்  திகைத்து நிற்கிறார்கள்

             பின் அவரே தொடர்கிறார்

ரஜினி  ( தன் மனைவியை நோக்கி )
            உடன் தாணுவுக்கும்ரஞ்சித்துக்கும்
            ஒரு போன் போட்டு அவர்களுடன்
           ஒரு படம் பண்ண விரும்புவதாகச் சொல்லு
           இன்னைக்கே..அதாவது இன்னைக்கே "

           எனச் சொல்லியபடி பெண்கள் இருவரின்
           கன்னங்களில்அன்பாய்த் தட்டியபடி
           எழுந்து செல்கிறார்
         
           லதா ரஜினி அவர்கள் மெல்ல திரும்பிக்
            காலண்டரைப் பார்க்க அதிலிருந்த
            வியாழக்கிழமைப் பெரிதாகி பெரிதாகி
            திரை மறைக்க காட்சி முடிகிறது

Friday, July 22, 2016

இது கபாலிக்கும் பொருந்தும்...

எத்தனைச் சிறப்பாக
வடிவமைக்கப்பட்டிருக்கினும்
அதை இயக்குவோன்
எத்தனைத் திறன்
மிக்கவனாயினும்

வாகனம் பொறுத்து
அதற்கென ஒரு
வேக அளவுண்டு

அது
மிதி வண்டி ஆயினும்
நவீன விமானமாயினும்

அளவை மீறுகையில்

அந்த அற்புத
வாகன்ம் மட்டுமல்ல
அந்தத் திறன் மிக்க
இயக்குவோன் கூடத்

தனக்கான மதிப்பினிலிருந்து
இறங்கவே சாத்தியம்
தனக்கான இடத்திலிருந்து
சரியவே சாத்தியம்

இது
கட்டை வண்டிக்கு மட்டுமல்ல
கபாலிக்கும் பொருந்தும்

Wednesday, June 15, 2016

இறைவி--விமர்சனம் போல

ஜெயகாந்தன் அவர்களின்" சில நேரங்களில்
சில மனிதர்கள் " நாவலில்

"சீட்டாடுகிற
எல்லோரும் தோற்பதில்லை. ஜெயிக்கவும்
செய்கிறார்கள் .அப்படியிருக்க சீட்டாட்டத்தை ஏன்
தீமையானது என்கிறார்கள் " என ஒரு கேள்வி
எழுப்பி,கதாபாத்திரத்தின் மூலம் அதற்கான பதிலை
இப்படிச் சொல்வார்

"சீட்டாடி ஜெயித்த பணம் வீடு வந்து சேராது
ஆனால் தோற்றால் பணமெடுக்க வீடுதான்
வரவேண்டி இருக்கும் "என்பார்

வென்றால் கொண்டாட வெளி உறவுகள்
ஆயிரம் இருக்கும். ஆனால் தோற்றால்
வந்து விழுகிற அதனால பாதிக்கிற இடம்
நிச்சயம் வீடாகவும் மனைவியாகவும்
குழந்தைகளுமாகத் தான்  நிச்சயம் இருக்கும்

வாழ்க்கை என்பது கணவன், குழந்தைகள்
வீடு என மட்டுமே எனக் கொள்ளுகிறாள் பெண்

வாழ்க்கையென்றால் குடும்பமும் என மட்டுமே
கொள்ளுகிறான் ஆண்

இந்த இரண்டு எதிர் எதிர் நிலைகள்
ஒன்றை ஒன்று  புரிந்து கொண்டு கொஞ்சம்
 அனுசரித்து விட்டுக் கொடுத்துப்போகிற நிலை
வாழ்வைச்  சுவையானதாக்கிப் போகிறதோ
இல்லையோ, பிரச்சனையற்றதாகிப் போகிறது

அதன் காரணமாகவே சில சமூக இயக்கங்களில்
 ( அரசியல்தவிர்த்து  )பயிற்சியின் போது,
முதலில் உன்னைக் கவனி,பின் குடும்பம்,
பின் தொழில்,பின்னரே இந்த சமுக
இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடு என்பதாக
பயிற்றுவிக்கிறார்கள்

சொல்லப் பட்டதிலிருந்து, சொல்லப்படாத
பலவற்றை சிந்திக்குமாறு (நல்ல திசையில்  )
ஒரு படைப்பது தூண்டிப்  போகுமானால்
அதுவே மிகச் சிறந்த படைப்பாக இருக்கும்
எனக் கொண்டால்  இறைவி திரைப்படம்
ஒரு  சிறந்த திரைப்படம்எ ன்பதுவே என் கருத்து

வாழ்த்துக்களுடன்...

Wednesday, December 23, 2015

"அவர் " ( 2 )

தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களில்
தொடர்ந்து நீங்காது இடம்பெற்றிருக்கிற
தலைவர்களில்"இவரும் " முக்கியமானவர்
என்றாலும்.....

முன்பு சினிமாத் துறையினரால் எம். ஆர். டி. கெ
எனச் சுருக்கமாக அழைக்கப் பட்ட மதுரை/
இராமனாதபுரம்/திருநெல்வேலி/ கன்னியாகுமரி
மாவட்டங்களில் அவருக்கிருந்த செல்வாக்கு
இன்னும் அதிகமானது

அதிலும் மிகக் குறிப்பாக மதுரை எனச் சொல்லலாம்

அரசியல் வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும்
வீரவாள் வழங்கியது/ கணக்குக் கேட்டது/
புரட்சித்தலைவிக்கு கொள்கைப்பரப்புச் செயலாளர்
பதவி வழங்கியது/ உலகத் தமிழர் மா நாடு நடத்தியது
என   அவரின் பல முக்கிய நிகழ்வுகள்
இப்படி மதுரையை அனுசரித்தே இருக்கும்

அப்படித்தான் அன்றைய முக்கிய நடிகர்களின்
புதுப்பட வெளியீடு பொதுப்பண்டிகையான
 தீபாவளி மற்றும் பொங்கலின் போதுதான்இருக்கும்
என்றாலும் ...

"இவரின் " சொந்தப் படம் ஒன்று
மதுரையின்முக்கியத் திரு நாளான சித்திரைத்
திரு நாளின் போது வெளியிடப்பட்டது.

அப்போதெல்லாம் இப்போதைப்போல டீஸர்கள்
கிடையாது என்றாலும் போஸ்டர்களும் அன்றாடம்
அது குறித்து வெளியிடப்படும் பத்திரிக்கை
 விளம்பரங்களும்படத்திற்கான சிறப்புப்புத்தகங்களும்
இப்போதையடீஸர்களை விட அதிக தாக்கத்தை
ஏற்படுத்திப் போகும்

இந்தப் படத்தைப் பொருத்தவரை , "இவர் " மற்றும்
"அவர் " இரண்டுவேடம் என்றதும்,இருவரும் அந்த ராஜா
ராணி உடையில் ஜெய்பூர் அரண்மனைப் பின்புலத்தில்
நடந்துவரும் படமும்,"அவரின்" மார்ப்புப் பிளவுகள்
தெரியும்படியான வித்தியாசமான உடையில்
சிங்கத்தின்வாய்ப் பிளப்பதுமான படங்களைப்
 பார்த்து நாங்கள் மெய் சிலிர்த்துக் கிடந்தோம்

எப்படியும் இப்படத்தை வந்த முதல் நாளே பார்த்து
விடுவது எனத் தீர்மானித்தோம்

அது மதுரையில் அவ்வளவு எளிதில்லை என்றுத்
தெளிவாகத் தெரிந்த போதும். நிற்க

(நிற்க . என்பதைப் பார்த்து யாரும் எழுந்து
நின்று விட வேண்டாம்

என்போன்ற அந்த காலத்து நபர்களுக்கு
நிற்க என்பதன் பொருள் நன்றாகத் தெரியும்.
இப்போதைய இளைஞர்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை.

முன்பெல்லாம் நேரடியாகப் பேசுவதை விட
விரிவாகவும் உணர்வு பூர்வமாகவும்
கடிதம் எழுதுவார்கள்.

அப்படி எழுதிக் கொண்டுவருகையிலேயே
அதன்தொடர்புடைய வேறு விஷயத்தைச்சொல்ல
வருகையில்இந்த நிற்க. என்கிற வார்த்தையைப்
போடுவார்கள்.

அதைப்போலத்தான் இந்த நிற்க.)

தொடரும்

Wednesday, September 25, 2013

சினிமா -ஒரு மாய மோகினி- (2)

ஒரு மாறுதலாக புராண நாடகங்களுக்குப் பதிலாக
சமூக நாடகம் போடுகிறோம் என்கிற
மன நிலையைத் தாண்டி ஏதோ  ஒருபெரும் புரட்சி
செய்யப்போகிறோம் என்கிற மனோபாவம்
எங்களில் சிலருக்கு இருந்ததால்....

நிச்சயம் இதற்கு ஊரில் அதிக எதிர்ப்பும்
எதிர்பார்ப்பும் இருக்கும் எனக் கருதியதால்...

எங்கள் நோக்கத்திற்கு உடன்பட்டவர்களைத் தவிர
வேறு  யாரையும் கூட்டத்தில் கலந்து கொள்ள
அனுமதிப்பதில்லை என் முடிவு செய்து
முதல் கூட்டத்தை ஒரு ரகசியக் கூட்டம் போலவே
ஏற்பாடு செய்திருந்தோம்.

முதல் கூட்டமே மிகவும் வித்தியாசமாக இருந்தது

பள்ளி செல்லாத மைக் செட் வைத்திருந்த மணி,

சைக்கிளிலில் பால் வியாபாரம் செய்து கொண்டு
இடையிடையே மேடையில் ரிகார்ட் டான்ஸ்
ஆடிக்கொண்டு மேடை அனுபவம் பெற்றிருந்த
மணிக்கு உறவினனான கந்தன்,

கவிதையும் கதையும் எழுதிக் கொண்டு
அது பத்திரிக்கையில் வராது போக
கையெழுத்துப் பிரதி நடத்திக் கொண்டிருந்த
என் போன்ற இலக்கிய ஆர்வலர்கள் சிலர்.
,
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் சிலர்
,
முற்போக்கு முகாமைச் சேர்ந்த சில தோழர்கள் என

அந்த முதல் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
அனைவருமே மன நிலையிலும்,
சிந்திக்கும் நிலையிலும் முற்றிலும்
மாறுபட்டவர்களாயிருந்தோம்.

ஜாதிப் பெயரிலேயே தெருப்பெயரினையும்
ஜாதிப் பெயரைச் சொல்லியே ஒருவரை ஒருவர்
அழைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்த அந்த ஊரில்
ஜாதி கடந்து மதம் கடந்து ஒரு பொது நோக்கத்திற்காக
ஒன்றுபட்ட கூட்டமாக இந்தக் கூட்டம்
இருந்த போதிலும்இதில் கலந்து கொண்ட
 ஒவ்வொருவருக்கும் இந்த நாடகத்தின் மூலம்
 நிறைவேற்றிக் கொள்ளவென
ஒவ்வொரு விதமான அபிலாஷைகளும்
நோக்கங்களும்  இருந்தது என்பது
முதல் கூட்டத்திலேயே தெளிவாகத் தெரிந்தது

தனிமனித சிந்தனையை கூட்டாக
 ஒரு செயல்வடிவம்கொடுக்க முயல்கையில்
 ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும்
மிகச் சரியாகக் கையாளப்படவில்லையெனில்
நம் நோக்கத்திற்கு முற்றிலும் மாறுபாடானதாக
அது எப்படி மாறிவிடும் என்பதையும்
அனுபவப் பூர்வமாக உணர என்போன்றோருக்கு
அந்த முதல் கூட்டமும் அதைத் தொடர்ந்த
 நிகழ்வுகளும் பாலபாடமாக அமைந்தது என்றால்
அது மிகையில்லை

(தொடரும் )

Wednesday, January 23, 2013

கடுங் காஃபியும் கமலஹாஸனும்

காபி டிகாக்ஸனைப் போல
பல உண்மைகள் கசப்பானவைகளே
அதிலும்
நம்பிக்கைகளுக்கு எதிரான உண்மைகள்
அதீதக் கசப்பானவைகளே

பாலைப் போல
பெருகும் கற்பனைகள் ருசியானவைகளே
அதிலும்
யதார்த்தம் தொடாத கற்பனைகள்
அதிக ருசி கொண்டவைகளே

சர்க்கரையைப் போல
மகிழ்வூட்டும் சுவாரஸ்யங்கள் சிலிர்ப்பூட்டுவைகளே
அதிலும்
கிளுகிளுப்பூட்டும் சுவாரஸ்யங்கள்
அடி மனம் தொடுபவைகளே

நுனி நாக்கில் கசப்பினை நிறுத்தாத காஃபியை
சிலர் காஃபியென ஒப்புக் கொள்வதில்லை
சமூகத்தை புரட்டிப்போட முயற்சிக்காத
எந்தப் படைப்பினையும்
சிலர் படைப்பென ஏற்றுக் கொள்வதில்லை

அந்தச் சிலர் இப்போது வெகு சிலரே

பலராக  அந்தச் சிலர் பரவிப்பெருகும் வரை
பாலையும் சீனியையும் அதிகம் கூட்டி
காஃபியின் கலரை மட்டும் காட்டி
கல்லாக் கட்டுதலே இன்று பிழைக்கும் வழி
படைப்பாளிகள் விழிமூடி ஓடி
காலம் காலமாய் தொடர்ந்து நிலைத்த வழி

உலக நாயகனே

இந்தச்  சிறு மொழியை இனியேனும்
தெளிவாய்அறியா முயல்வாயா ?
உன் பங்காளியைப் போல்
மாயத் திரையுலகில் இனியேனும்
பிழைக்கும் வழியை அறிவாயா?