Showing posts with label கற்பனை நாடகம். Show all posts
Showing posts with label கற்பனை நாடகம். Show all posts

Monday, August 29, 2016

ரஜினி ரஞ்சித் கபாலி ( 7 )

                                    காட்சி 6  ( தொடர்ச்சி )

ரஞ்சித் :
(ரஜினி அவர்கள் ஆர்வமாக  ரஞ்சித்தின் பதிலை
எதிர்பார்த்து முன் பக்கம் முகம் சாய்க்க...
ரஞ்சித் தொடர்கிறார் )

சார்.. ஒன் லைன்னா இப்படிச் சொல்லலாம் சார்
ஒரு ஒடுக்கப்பட்டவன் தாதாவாக எழுச்சி அடைவதும்
அதனால தாதாக்களிடையே உண்டாகும் பாதிப்புக்களும்
தனி மனிதனாக அவன் அடையும் பாதிப்புக்களும் ....

(இப்படிச் சொல்லிவிட்டு ரஜினி மற்றும் தாணு
அவர்களின் முகக் குறிப்பை அறிய முயல்கிறார்)

ரஜினி:
(சிறிது நேரம் யோசித்துப் பின்..)

வெரி நைஸ் ரஞ்சித்...ரொம்ப அருமை
ஆனா இதுல நாலு விஷயத்தை மிகச் சரியா
சொல்ல வேண்டி இருக்கும் இல்லையா

ஒடுக்கப்பட்டவனாக முதல்ல
பின்னால அவனோட எழுச்சி
அதனால தாதாக்களிடையே வரும் பிரச்சனை
அப்புறம் இவனோட தனி மனிதப் பாதிப்பு

இந்த நாலு விஷயத்தையும் மிகச் சரியா
ஒரு லீட் எடுத்து இணைக்கணும்

கொஞ்சம் எதிலாவது கூடக் குறச்சுப் போனா
நாலும் தனித் தனியா திட்டுத்  திட்டா
தெரிய ஆரம்பிச்சுடும்
படம் பார்க்க ஒரு நிறைவு இருக்காது

திரைக்கதைப் பண்ணும் போது அதுல ரொம்பக்
கவனமா இருக்கணும்

நீங்க அதைச் சரியா பண்ணீடுவீங்க
எனக்குச் சந்தேகமில்லை...
இந்த படத்தைப் பொருத்த வரை நான்
கதை விஷய்த்தில தலையிடப் போவதில்லை
முழுசா இது டைரக்ரோட படமா
இருக்கணும்னு நினைக்கிறேன்

ஆகையால என ரசிகர்களை மனசுல வச்சு
பஞ்சு டயலாக அது இது எல்லாம் வேணாம்
கதைக்கு எது தேவையோ அதை மட்டும்
சரியா செஞ்சா போதும் சரியா

ரஞ்சித் :
(நெகிழ்ச்சியுடன் ) என்னை ந்ம்பி இவ்வளவு
பொறுப்புத் தர்றது பெருமையா இருந்தாலும்
கொஞ்சம் பயமாகவும் இருக்கு சார்

ரஜினி ( முன் நகர்ந்து தோளைத் தட்டியபடி)
பயம் வேண்டியதில்லை. நல்லா சுதந்திரமா
சந்தோஷமா செய்ங்க..படம் நல்லாவே  வரும்
ஆனா ஒரு சில சஜ்ஜஸன்...இதை மட்டும்
கவனத்துல வைச்சுச் செய்ங்க...

(எனச் சொல்லி நிறுத்தி விட்டு மெதுவாக
முன் பின் யோசித்தபடி நடந்து விட்டு... )

நமப்ர் ஒன்
வெளி நாடுங்கிறது இலங்கை வேண்டாம்
எப்படிச் சூதானமா செய்தாலும் ஏதாவது
பிரச்சனை வர வாய்ப்பு இருக்கும்

இரண்டு
மெயின் ரோல் நடிகைகள்
தென் இந்தியாவில் வேண்டாம்
அது பாலிவுட்டா இருக்கட்டும்
அதுதான் எல்லோரும் ஒப்புக் கொள்ளும்படியா
இருக்கும்

மூணு
தாதான்னு எனக்கு அதிக உடல் சிரமம் தராம
பாத்துக்கங்க. வயசு உடல் நிலை இதையும்
கவனமா வச்சுகங்க.அதுக்கு வில்லன் ரோல்
பண்ணுகிறவர் வெளி நாட்டுக்காரரா இருந்தாலும்
ஸ்டைலா இருக்கிறவரைப் பாருங்க
பெரிய பாடி பில்டப் ஆசாமி வேண்டாம்
அது சரியா ஈகுவலா சூட் ஆகாது

நாலு
இதுதான் முக்கியம் படத்துல எல்லோருமே
கவனிக்கும்படியா விமர்சிக்கும்படியா ஒரு
கான்ரோவர்ஸியலான பிரச்சனையை லேசா
தொட்டு விடுங்க
அதுதான் தொடர்ந்து மீடியாவுல, மத்த
ஊடகங்கள்ல தொடர்ந்து நம்ம படத்தைப்
பத்திப் பேச அவல் மாதிரிப் பயன்படும்

ரஞ்சித் இப்போதைக்கு இவ்வளவுதான்
ஊடே எதுவும் தோணினா நானே உங்களுக்கு
தகவல் தாரேன்

நீங்க மூணு மாசத்தில முழு ஸ்கிரிப்ட் செய்யுங்க

( பின் தாணுவின் பக்கம் திரும்பி)

என்ன தாணு சார்...
நான் சொன்னதெல்லாம் சரிதானா
நீங்க எதுவும் சொல்லினுமா....

தாணு
சார் நான் நீங்க டைரக்டர்கிட்ட பேசப் பேச
நான் மலைச்சுக் கேட்டுக்கிட்டே இருந்தேன் சார்
இவ்வளவு தீர்க்கமா ஒவ்வொரு விஷயத்தில
இருக்கிறதுனால தான் நீங்க தொடர்ந்து
சூப்பர் ஸ்டாரா ஜொலிக்க முடியுது
இது வெளியில எத்தனைப் பேருக்குத் தெரியும்...

ரஜினி
(தாணு பேசுவதைத் தடுத்தபடி  )
தாணு சார்.. சப்ஜெட் தடம் மாறுது
படம் படம் மட்டும் பத்தியே பேசுங்க சரியா

(ரஞ்சித் பக்கம் திரும்பி ...)
ரஞ்சித் கொஞ்சம் டென்ஸனா இருக்கீங்கன்னு
நினைக்கிறேன்..வாங்க கொஞ்சம் ரிலாக்ஸுடா
தோட்டத்தில நடந்திட்டு வரலாம்
அப்புறம் ப்ரொடூஸர்கிட்டே ஒரு ரவுண்ட்
ஓபனா பேசலாம்

(எனச் சொல்லிய்படி ரஞ்சித்தை கைகொடுத்து
எழச் செய்கிறார்.பின் மூவரும் மெல்ல
தோட்டத்தை ரசித்தபடி நடக்கத் துவங்குகிறார்கள் )

Tuesday, August 23, 2016

ரஜினி ...ரஞ்சித்...கபாலி ( 3 )

                                காட்சி 4

(தனது பிரத்யேக அறைக்குள்
ரஞ்சித் அவர்கள் நுழைந்ததும், ரஜினி அவர்கள்
மிக வேகமாக முன்வந்து அவரைக் கட்டி அணைத்து
கைக்குலுக்கி வரவேற்கிறார் )

ரஜினி;
வாங்க ரஞ்சித் வாங்க...
ரொம்பக் காக்க வைச்சுட்டேனோ சாரி.சாரி

ரஞ்சித்:
இல்லைங்க சார். இப்பத்தான் வந்தேன்

 (எனச் சொல்லியிபடித்  தான் கொண்டுவந்திருந்த
 மலர்ச் செண்டினைக் கொடுத்தபடித் தொடர்கிறார்)

உங்களைப் பார்க்க எத்தனை மணி நேரம்
வேணுமானாலும் காத்திரும்படியா
கோடிச் சனம் இருக்க என்னையும் மதிச்சு.....

ரஜினி:
நோ ஃபார்மாலிடீஸ் ரஞ்சித்..திறமை எங்கிருந்தாலும்
பாராட்டப்படணும் பாராட்டணும்.அதுதான் நல்லது
அதுதான் பாராட்டிறவன் வளரவும்
பாராட்டப்படறவன் வளரவும் உதவும்
சரி நேரடியா விஷயத்துக்கு வருவோம்
மேடம் போனில் சொன்னாங்களா ?

ரஞ்சித்:
ஆமாம் சார் என்னால நம்பவே முடியலை
அவங்க போனை வைச்ச அரை மணி நேரத்தில
நான் திரும்பவும் ஒரு முறை நானே பேசி
கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டேன்
இப்ப கூட உங்க கூட உட்கார்ந்து பேசறது
நிஜந்தானான்னு குழம்பிக்கிடக்கு சார்.. நிஜமா...

ரஜினி
(தொடர்ந்து அவரைப் பேசவிடாதபடித் தடுத்து )

ரொம்ப எக்ஸைட் ஆகுறீங்க ரஞ்சித்..இப்ப முதல்ல
நாம சந்திக்கும்படியா இங்க ஏற்பாடு செஞ்சதே
இந்த ஃபார்மாலிடி பேரியரை உடைக்கத்தான்
கொஞ்சம் மனம் திறந்து பேசத்தான்
படம் பத்தியெல்லாம் அடுத்த மீட்டில் பேசலாம் சரியா

ரஞ்சித்
(தன்னை  மனரீதியாக சரிப்படுத்திக் கொள்வது போல்
மூச்சை இழுத்து விட்டு தன்னைத் தளர்த்தியபடி)
புரியுது சார் ...சொல்லுங்க சார்

ரஜினி:
நான் உங்க அட்டைக்கத்தி படம் பார்த்தேன்
கொஞ்சம் வித்தியாசமா கவனிக்கும்படியா இருந்தது
பிற்படுத்தப்பட்ட ஒருவனின் சூழல் ,
அவன் விடலைத்தனம்
எல்லாம் ரொம்பச் சிறப்பா இருந்தாலும்
ஒரு நிறைவு  ஏனோ இல்லை

ஒருவேளை முதல் படம் என்பதால கொஞ்சம்
கூடுதல் கவனத்தில சொல்ல வேண்டியதை
சொல்லத் தயக்கம் இருந்திருக்கலாம்
பட் வெரி நைஸ்  மூவி

ஆனால் மெட்றாஸ் .. சான்ஸே இல்லை
வெரி வெரி சூப்பர்..இப்படி வடக்குசென்னை
ஒரு குடியிருப்பைப் பத்தி, அவங்க வாழ்க்கைச்
சூழல்பத்தி,அவங்க வாழ்க்கையோட
விளையாடுற அரசியல் பத்தி ..ரியலி வெரி சூப்பர்
குறிப்பா ..தனியா ஒரு நைட் ஸாட் வைச்சிருத்தீங்களே
ஒரு லாங்க்  ஸாட் ..அந்த சுவத்து ஓவியத்தக் காட்டி
ஒரு ஸைலண்ட் சாட்...அதுவும்  கிரேன்சாட் ...

அந்த ஸாட்டைப் பார்த்ததும்
நிமிர்ந்து உட்கார்ந்தவன்தான்
அப்புறம் சாய்ஞ்சு உட்காரவே இல்லை

(இதைச் சொன்னவுடன் அவருக்கே உரித்தான
மௌனத்தில் சிறிது ஆழ்ந்து போகிறார்)

அப்பத்தான் எனக்கு உங்க டைரக்ஸன்ல
ஒரு படம் பண்ணனுனு முதல்ல தோணிச்சு
அந்தப் படம் மட்டும் இல்லாம
தொழில் ரீதியா நாம இணைஞ்சு படம் பண்ணினா
ஒரு பெரிய எதிபார்ப்பை உண்டாக்கும்னும் தோணிச்சு
அது எப்படின்னு உதாரணத்தோடச் சொன்னாத்தான்
கொஞ்சம் தெளிவாப் புரிஞ்சிக்க முடியும்

(எனச் சொல்லி கண்களை மூடி
 விஸுவலாக ஏதோ  ஒன்றைப் மனக் கண் முன்
பார்ப்பது போல் தலையாட்டி இரசிக்கிறார் )

நம்மைப் போலவே ரஞ்சித் அவர்களும் அது
என்னவாக இருக்கும் என்கிற ஆர்வத்தில்
ஸோபாவின் நுனிக்கு நகர்கிறார்


தொடரும்

Sunday, August 21, 2016

ரஜினி...பா. ரஞ்சித்...கபாலி ( 1 )

                                  காட்சி-1  

(ரஜனி  சுற்றிலும் கண்ணாடிப் பதித்த தனது
அறைக்குள் அதீதச் சிந்தனையுடன்
தன் மோவாயைத் தடவியபடி ஆழ்ந்த யோசனையில்
இருக்கிறார்.

சட்டென நெற்றியைத்
தேய்த்தபடியும்,சடாரெனத் திரும்பியப்படியும்
கண்களை கண்ணாடியின் மிக அருகில்
கொண்டுபோய்விழித்துப் பார்ப்பதும்
ஏதோ அவசியமாய் ,அவசரமாய்
ஒரு முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்தில் அவர்
இருப்பதை நமக்குப் புலப்படுத்துகிறது

திடீரென சட்டென முன்பிருந்த கண்ணாடி டேபிளில்
ஓங்கிக் குத்தியபடி நிமிர்கிறார்

கண்ணாடியில் அவர் மெல்லப் புன்னகைப்பது
நமக்குத் தெரிகிறது.அவசரமாய் கதவைத் திறந்து
வெளியேறுகிறார் )


               காட்சி -2

( கல்யாண மண்டபம் போல் இருக்கிற ஹாலின்
ஊஞ்சலில்  எங்கோ வெறித்துப் பர்ர்த்தபடி
மிக வேகமாக ஆடியபடி இருக்கிறார் ரஜினி
இடது புறம் அவர் மனைவி லதா அவர்களும்
வலது புறம் இரண்டுப் பெண்களும் பதட்டத்துடன்
நிற்கிறார்கள். வேகமாக ஒரு முறை ஊஞ்சலை
ஆட்டிவிட்டு அதுவாக ஓய்கிறவரை விட்டு விட்டு
அது நின்றவனுடன் பேசத் துவங்குகிறார் )

ரஜினி  (மனைவியைப் பார்த்தபடி )
            எஸ் எஸ். நானும் ரெண்டு நாளா நீ
            சொன்னதையெல்லாம்..
            ஆமாம்..நீ.... சொன்னதையெல்லாம்...

            (என்றபடி தன் மூத்த மகளைப்பார்க்கிறார்
             அவர் தரையைப் பார்த்தபடி குனிந்து நிற்கிறார் )

            பின் தன் மனைவியைப்பார்த்தபடி

            ..."அடுத்து ஒரு படம் நடிக்க
             முடிவெடுத்து விட்டேன்
             சந்தோஷந்தானே "

அதுவரை எட்டி இருந்த இரண்டு பெண்களும்
ஓடி வந்து  அப்பாவை
அணைத்துக் கொள்கிறார்கள்

மெல்ல நடந்து வந்த அவரது பின்புறம் வந்த
அவரது துணைவியார்  மெல்ல அவரது கழுத்தைக்
கைகளால் சுற்றியணைத்துக் கொள்கிறார்
.
அந்த அன்புப் பிடியில் சிறிது நேரம் கண்மூடி
இருந்தவர்..பின் பேசத் துவங்குகிறார்...

           (எதிரே இருந்த ராகவேந்திரர் படைத்தை
            வெறித்து நோக்கியபடி )

           "ஆம் நடிக்கமுடிவெடுத்து விட்டேன்
            ஆனால் எப்போதும் போல இல்லை
            மிக வித்தியாசமாய்... ஆம்  
             மிக மிக வித்தியாசமாய்
            படத்தில் மட்டுமல்ல...எல்லா விதத்திலும்
            ஆம் எல்லா விதத்திலும் ...

           எனச் அழுத்தமாய்ச் சொல்லியபடி அவருக்கே
           உரித்தா அந்த "ஹா...ஹா.." என்று
          சப்தமாய்ச் சிரிக்கிறார்
            எல்லோரும் என்ன சொல்லப் போகிறாரோ என
            ஆவலுடனும் அதிர்ச்சியுடனும் அவரைப்
             பார்த்தபடித்  திகைத்து நிற்கிறார்கள்

             பின் அவரே தொடர்கிறார்

ரஜினி  ( தன் மனைவியை நோக்கி )
            உடன் தாணுவுக்கும்ரஞ்சித்துக்கும்
            ஒரு போன் போட்டு அவர்களுடன்
           ஒரு படம் பண்ண விரும்புவதாகச் சொல்லு
           இன்னைக்கே..அதாவது இன்னைக்கே "

           எனச் சொல்லியபடி பெண்கள் இருவரின்
           கன்னங்களில்அன்பாய்த் தட்டியபடி
           எழுந்து செல்கிறார்
         
           லதா ரஜினி அவர்கள் மெல்ல திரும்பிக்
            காலண்டரைப் பார்க்க அதிலிருந்த
            வியாழக்கிழமைப் பெரிதாகி பெரிதாகி
            திரை மறைக்க காட்சி முடிகிறது