SATHEE (Self Assessment Test and Help for Entrance Exams) என்பது இந்திய அரசின் கல்வி அமைச்சகம்மற்றும் IIT கான்பூர் இணைந்து உருவாக்கியுள்ள ஒரு மிகச்சிறந்த இலவச ஆன்லைன் கல்வித் தளமாகும்.
பணவசதி இல்லாத அல்லது விலையுயர்ந்த கோச்சிங் சென்டர்களுக்குச் செல்ல முடியாத மாணவர்களும்கூட JEE, NEET போன்ற போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இது தொடங்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்து பயிற்சியை பெற்றுகொள்ளலாம். இந்த இணையதளம் மூலம் சுமார் 4.5 லட்சட்த்திற்கும் மேற்பட்டோர் இதுவரை முன்பதிவு செய்து பயிற்சி பெற்று வருகின்றனர். முன்னணி கல்வி நிறுவங்களின் பேராசிரியர்கள் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு உயர்கல்வியை தொடர நுழைவு தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் முதல் அரசு வேலைவாய்ப்பிற்கு தயாராகும் இளைஞர்கள் வரை இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதன் சிறப்பம்சங்கள் மற்றும் மாணவர்கள் இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி பார்ப்போம்..
❖ இந்தத் தளம் மாணவர்களுக்கு எப்படிப் பயன்படுகிறது?
⊛ இலவச உயர்தரக் கல்வி: JEE, NEET, CUET, SSC, Banking, CLAT, RRB போன்ற பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கான கோச்சிங் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
⊛ என்சிஆர்டி பாடத்திட்ட புத்தகங்கள் முதல் வினாத்தாள், மாடல் தேர்வு முறை ஆகியவை வரை இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
⊛ தமிழ் மொழியிலும் படிக்கலாம்: தமிழ் உட்பட இந்தியாவின் 13 முக்கிய மொழிகளில் இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மாணவர்கள் தங்கள் தாய்மொழியிலேயே பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
⊛ IIT மற்றும் AIIMS நிபுணர்களின் வழிகாட்டுதல்: இதில் உள்ள வீடியோக்கள் மற்றும் பாடத்திட்டங்கள் அனைத்தும் IIT மற்றும் AIIMS போன்ற இந்தியாவின் முதன்மை நிறுவனங்களின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால் தயாரிக்கப்பட்டவை.
⊛ சந்தேகங்களைத் தீர்க்கும் வசதி: தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஆன்லைன் ஃபோரம் மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
⊛ மாதிரித் தேர்வுகள் (Mock Tests & AI Tools): உண்மையான தேர்வு எப்படி இருக்குமோ அதே போன்ற ஆன்லைன் மாதிரித் தேர்வுகள் மற்றும் AI தொழில்நுட்பம் மூலம் இயங்கும் சுயமதிப்பீட்டு கருவிகள் இதில் உள்ளன.
⊛ மத்திய அரசு பணிகளுக்கும் பயிற்சி :
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தேர்வுகள் (SSC) மற்றும் வங்கி (IBPS) பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், ICAR தேர்விற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
❖ மாணவர்கள் இதை எவ்வாறு அனுகுவது?
மாணவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்த இரண்டு வழிகள் உள்ளன..
1. SATHEE இணையதளத்திற்குச் ( sathee.iitk.ac.in ) சென்று பயன்படுத்துதல்
2. SATHEE செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.
உங்களது மொபைல் அல்லது கணினியில் sathee.iitk.ac.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும். அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து SATHEE Mobile App-ஐ பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
❖ மாணவர்கள் இதை எவ்வாறு பயன்படுத்துவது?
⊛ மொழியைத் தேர்ந்தெடுத்தல்
முதலில் இணையதளத்தின் மேல் பகுதியில் உள்ள மொழிப் பட்டியலில் "தமிழ்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதனால் பாடங்கள் மற்றும் வழிமுறைகள் தமிழிலேயே உங்களுக்குக் கிடைக்கும்.
⊛ கணக்கு உருவாக்குதல்
"Login/Register" என்பதை கிளிக் செய்து, மாணவரின் பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் மற்றும் நீங்கள் தயாராக தேர்வு/ நுழைவுதேர்வின் பெயர் தேர்வு போன்ற ஆகிய விவரங்களை உள்ளிட்டு இலவசமாகப் பதிவு செய்துகொள்ளவும்.
❖ பாடங்களைக் கற்றல்
பதிவு செய்த பிறகு, தினசரி நேரலை வகுப்புகள் (Live Lectures) அல்லது ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வீடியோக்களைப் (Recorded Lectures) பார்த்து படிக்கத் தொடங்கலாம்.
❖ பயிற்சி மற்றும் தேர்வுகள்
ஒவ்வொரு பாடத்திற்கும் வழங்கப்படும் 'தினசரி பயிற்சி வினாக்களை' சால்வ் செய்து பழகவும். வாராந்திர மற்றும் மாதாந்திர மாதிரித் தேர்வுகளை எழுதி உங்களது கற்றல் நிலையைச் சரிபார்க்கவும்.
SATHEE-யுன் கூடுதல் சிறப்புகள் (Value-added Features)
⊛ NCERT Solutions: பள்ளிப் பாடப் புத்தகங்களான NCERT (9 முதல் 12 ஆம் வகுப்பு வரை) புத்தகங்களின் கணக்குகள் மற்றும் அறிவியல் கேள்விகளுக்கான வீடியோ விளக்கங்கள் இதில் உள்ளன.
⊛ முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் (PYQs): கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட JEE மற்றும் NEET வினாத்தாள்கள் தீர்வுகளுடன் கிடைக்கின்றன.
⊛ தனியார் பயிற்சி மையங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்த முடியாத கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த SATHEE தளம் ஒரு வரப்பிரசாதமாகும்.
⊛ கூடுதல் தகவல்களுக்கு: https://sathee.iitk.ac.in
No comments:
Post a Comment