Thursday, June 26, 2014

கலையத் துவங்கும் கரு

எங்கோ ஒளிந்துகொண்டு
நூற்கண்டை மேலும் சிக்கலாக்கிப் போகிறது
நூலின் நுனி

பயணத்தையே முடக்கிப் போகிறது
பயணத்தின் முன்
புறப்பட்ட குழப்பமும் சந்தேகமும்

எப்படிச் சிறப்பாகத் துவங்குவது என்று
விடாது தொடர்கிற சிந்தனையில்
மொட்டிலேயே கருகத் துவங்குகிறது
ஒரு தூய காதல்

அனுபல்லவியும் சரணங்களும்
மிகச் சரியாக அமைந்தும்
பல்லவி அமைந்து தொலையாததால்
கண் திறக்கப் படாத சிற்பமாய்
சிற்பக் கூடத்திலேயே
சிற்பமாகவுமில்லாது
பாறையாகவுமில்லாது
விடிவு காலம் எதிர்பார்த்து
தவமாய்த் தவமிருந்தும் பலனின்றி
கலையத் துவங்குகிறது
ஒரு கவிதைக் கரு

22 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

சரியான உவமை மிக்க வரிகளுடன் கவிதை மலர்ந்துள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா

நன்றி
அன்புடன்
ரூபன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சிற்பமாகவுமில்லாது
பாறையாகவுமில்லாது
விடிவு காலம் எதிர்பார்த்து//

அருமையான ஆக்கம். பாராட்டுக்கள்.

Anonymous said...

எப்படிச் சிறப்பாகத் துவங்குவது என்று
விடாது தொடர்கிற சிந்தனையில்
மொட்டிலேயே கருக விடாது தொடர்கிற முயற்சி வெற்றி பெறும்.
வேதா. இலங்காதிலகம்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

த.ம2வது வாக்கு

நன்றி
அன்புடன்
ரூபன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

கருவே கலைந்தாலும் குழந்தை [கவிதை] ஆரோக்யமாகப் பிறந்து விட்டதே ! சபாஷ்.

அதுவே திரு. ரமணி சாரின் சிறப்பம்சம் ;)))))

Unknown said...

கவிதைக்கு இப்படியும் ஒரு கருவா ?அருமை !
த ம 3

Avargal Unmaigal said...


அருமையான பகிர்வு பாராட்டுக்கள்.

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

சிலநேரம் இப்படித்தான் ஆகிறது ஐயா. வரைவில் வைத்துவிடுவேன், அவற்றில் சில ஒரு நாள் உயிர்த்துவிடும், சில அப்படியே இருக்கும் :)
அருமை ஐயா
த.ம.5

மகிழ்நிறை said...

அழகான உவமைகள்!!
அருமை சார்!!
தம ஆறு.

ADHI VENKAT said...

அருமையான வரிகள்.

RajalakshmiParamasivam said...

அழகிய கவிதையாக படைத்திருக்கிறீர்களே! மிகவும் ரசித்தேன் உங்கள் கவிதையை

Yarlpavanan said...

மாறுபட்ட எண்ணம் மாறுபட்ட பாவரிகள்
சிந்திக்க வைக்கும் சிறந்த பதிவு

Seeni said...

ஆழ்ந்த சிந்தனை..

Pandiaraj Jebarathinam said...

எப்படிச் சிறப்பாகத் துவங்குவது என்று
விடாது தொடர்கிற சிந்தனையில்
மொட்டிலேயே கருகத் துவங்குகிறது
ஒரு தூய காதல்/////////////

சிறப்பான வரிகள் ..சரியான உவமையுடன் ஒரு கவிதை..அழகு..மேலும் சிந்தனைக்குரியது

அருணா செல்வம் said...

கண்டுபிடிக்க முடியாத குழப்பம் வந்தால் இப்படித்தான் கருவிலேயே கலைந்து விடும் போல....

அருமை இரமணி ஐயா.

G.M Balasubramaniam said...

கரு கிடைத்து எழுதத் துவங்கிவிட்டால் சிக்கலான நூல்கண்டின் நுனி கிடைத்துவிடும் பாறை சிற்பமாக மாறும் வழியும் கிடைக்கும். பகிர்வுக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

எப்படி சார் இப்படியெல்லாம்! மிக அருமையான சிந்தனை! சிறப்பான கவிதை! நன்றி!

மகிழ்நிறை said...

தலைப்பே வலிதருகிறது!!
அருமையான கவிதை ஐயா!

kingraj said...

அருமையான வடிவாக்கம் ஐயா.

vimalanperali said...

கவிதையின் கருவை கண் திறக்கவைத்துவிட வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

மாறுபட்ட ஒரு சிந்தனை.

Post a Comment