Monday, June 30, 2014

சிகரத்தில் என்றும் நிலைப்போம்

தினம் தூங்கி விழிப்பவன்
பார்க்கிற பார்வையும்
புதிதாக பார்வை பெற்றவன்
பார்க்கிற பார்வையும்
நிச்சயம் வேறு வேறே

மீண்டும் வந்தவனின்
பார்வையும் செயலும்
மீண்டு வந்தவனின்
பார்வையும் செயலும்
நிச்சயம் வேறு வேறே

மற்றுமொரு நாளாக
நினைப்பவனின் நாளும்
புதியதொரு நாளாக
நினைப்பவனின் நாளும்
நிச்சயம் வேறு வேறே

சகிக்கி முடியாததைச் சகிக்கும்
இயலாதவைனின் பொறுமையும்
சகிக்க முடியாததைச் சகிக்கும்
பலசாலியின் பொறுமையும்
நிச்சயம் வேறு வேறே

சொல்லத் தெரிவதால்
சொல்பவன் படைப்பும்
சொல்லவேண்டியதைச்
சொல்பவனின் படைப்பும்
நிச்சயம் வேறு வேறே

ஒட்டித் தெரிவதின்
ஒட்டாத் தன்மையை
அறிந்து   தெளிவு கொள்வோம்
குழப்பம் ஏதுமின்றி
சிகரத்தில்  என்றும்  நிலைப்போம்

28 comments:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

//ஒட்டித் தெரிவதின்
ஒட்டாத் தன்மையை
அறிந்து தெளிவு கொள்வோம்//

அருமை ஐயா..
த.ம.2

Thulasidharan V Thillaiakathu said...

மற்றுமொரு நாளாக
நினைப்பவனின் நாளும்
புதியதொரு நாளாக
நினைப்பவனின் நாளும்
நிச்சயம் வேறு வேறே

சொல்லத் தெரிவதால்
சொல்பவன் படைப்பும்
சொல்லவேண்டியதைச்
சொல்பவனின் படைப்பும்
நிச்சயம் வேறு வேறே//

அருமையான வரிகள்! ஒவ்வொர்றும் நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கின்றது! அதைச் சரியாக, தெளிவாகப் பார்க்கக் கற்றுக் கொண்டால் சிகரம்தான்...தாங்கள் அதை அருமையாகச் சொல்லி உள்ளீர்கள்!

த.ம.

மாதேவி said...

"சிகரத்தில் என்றும் நிலைப்போம்"
நன்று.

Unknown said...

#சொல்லத் தெரிவதால்
சொல்பவன் படைப்பும்
சொல்லவேண்டியதைச்
சொல்பவனின் படைப்பும்
நிச்சயம் வேறு வேறே#
அருமையாக சொன்னீர்கள் ,இது தானய்யா உங்களுக்கும் எனக்குமுள்ள வித்தியாசம் !

தமிழ்மண வாக்கு பெட்டியை காணவில்லையே என்னாச்சு ?

Unknown said...

இதோ வந்து விட்டது வாக்குப் பெட்டி ,என் வாக்கை செலுத்திவிட்டேன் !
த ம +1

கோமதி அரசு said...

சொல்லத் தெரிவதால்
சொல்பவன் படைப்பும்
சொல்லவேண்டியதைச்
சொல்பவனின் படைப்பும்
நிச்சயம் வேறு வேறே//

அருமை, நீங்கள் சொல்வது உண்மை.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஒட்டித் தெரிவதின்
ஒட்டாத் தன்மையை......
எழுதி முடிய வரும் குளப்பமும் இதே....
ஒட்டுதா! ஒட்டவில்லையா!
வேதா. இலங்காதிலகம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிகரம் தொட்ட சிறந்த வரிகள். பாராட்டுக்கள்.

//ச கி க் க முடியாததைச் சகிக்கும்
இயலாதவைனின் பொறுமையும்
சகிக்க முடியாததைச் சகிக்கும்
பலசாலியின் பொறுமையும்
நிச்சயம் வேறு வேறே//

சிந்திக்க வைக்கும் சிறப்பான வரிகள். ;)

ADHI VENKAT said...

சிறப்பான வரிகள். த.ம. 6

ஸ்ரீராம். said...

சீரிய சிந்தனை.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

சொல்லத் தெரிவதால்
சொல்பவன் படைப்பும்
சொல்லவேண்டியதைச்
சொல்பவனின் படைப்பும்
நிச்சயம் வேறு வேறே//

வித்தியாசமான நடையில் சிகரம் தொட்ட வரிகள் ஐயா நல்ல தகவலை சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்

த.ம 8வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அம்பாளடியாள் said...

சொல்லத் தெரிவதால்
சொல்பவன் படைப்பும்
சொல்லவேண்டியதைச்
சொல்பவனின் படைப்பும்
நிச்சயம் வேறு வேறே

நெத்தியடி சத்தியமான வார்த்தைகள் இவையே :))
வாழ்த்துக்கள் ரமணி ஐயா .

Yarlpavanan said...

"சொல்லத் தெரிவதால்
சொல்பவன் படைப்பும்
சொல்லவேண்டியதைச்
சொல்பவனின் படைப்பும்
நிச்சயம் வேறு வேறே" என்பதில்
உண்மை உண்டு!
"ஒட்டித் தெரிவதின்
ஒட்டாத் தன்மையை
அறிந்து தெளிவு கொள்வோம்" என்பதை
புரிந்து கொள்வோம்!

G.M Balasubramaniam said...

அண்மைய அனுபவத்தால் வந்து விழும் வரிகள். ரசித்தேன். வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” said...

சொல்லத் தெரிவதால்
சொல்பவன் படைப்பும்
சொல்லவேண்டியதைச்
சொல்பவனின் படைப்பும்
நிச்சயம் வேறு வேறே// சிறப்பான வரிகள்! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

vimalanperali said...

”சிகரத்தில் என்றும் நிலைப்போம்” நம்பிக்கை வரிகள்/

திண்டுக்கல் தனபாலன் said...

// அறிந்து தெளிவு கொள்வோம் //

அருமை ஐயா..

வெங்கட் நாகராஜ் said...

அருமை.....

அருணா செல்வம் said...

உண்மையான கருத்துக்கள்.
அருமை இரமணி ஐயா.

kowsy said...

ஒட்டித்தெரிவதின் ஒட்டகம் தன்மை ...... அழகான வார்த்தை விளையாட்டு

Avargal Unmaigal said...


///சொல்லத் தெரிவதால்
சொல்பவன் படைப்பும்
சொல்லவேண்டியதைச்
சொல்பவனின் படைப்பும்
நிச்சயம் வேறு வேறே///

எனக்குதான் இந்த வரிகள் பிடித்திருக்கிறது என்று கருத்திட வந்து பார்த்தால் அநேகமாக அனைவருக்கும் இந்த வரிகள் பிடித்திருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன் பாராட்டுக்கள் ரமணி சார்

சொல்லத் தெரிவதால் சொல்பவன் படைப்பும்
சொல்லவேண்டியதை சொல்பவனின் படைப்பும்
நிச்சயம் வேறு வேறே இது மற்றவர்களை பொருத்த வரையில் உண்மையாய் இருக்கலாம் ஆனால் உங்களின் படைப்புகள் சொல்லத் தெரிவதால் ,சொல்லவேண்டியதை சொல்பவரின் படைப்பாகவே இருக்கிறது.

எப்படி சார் இப்படி எல்லாம் அருமையாக யோசித்து எழுதிறீங்க... அந்த ரகசியத்தை எனக்கு மட்டுமாவது சொல்லிதாங்களேன்...

Avargal Unmaigal said...

ஒரு வேளை உங்கள் மனைவி தட்டில் அருமையாக உணவை தட்டியோதோடுமட்டுமல்லாமல் உங்கள் தோளிலும் சபாஷ் என் சமத்து கணவரே என்று தட்டி கொடுப்பதால்தான் நீங்கள் இப்படி அருமையாக எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன் என் மனைவியோ பூரிக்கட்டையால் தலையில் தட்டிக் கொடுப்பதால் யோசிக்கவே கஷ்டமாக இருக்கிறது...

Seeni said...

பிரமாதம் அய்யா...

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
அருமை ஐயா

கரந்தை ஜெயக்குமார் said...

தம 13

Anonymous said...

sir pls uddate mudupani story

முனைவர் இரா.குணசீலன் said...

அழகாகச் சொன்னீர்கள் நண்பரே.

Post a Comment