Monday, November 24, 2014

ஆச்சாரியாரின் விபீஷண வேலையும் கலைஞரின் திருதராஷ்டிர அவஸ்தையும்

கலைஞர் அவர்களின்  இளமைக் காலம்

சமூகத்தில் புரையோடிக் கிடந்த
மூடத்தனங்களையும்முட்டாள்தனங்களையும்
தன் கூர்மிகு சொல்லாயுதங்களால்
வெட்டி வேரறுத்துக் கொண்டிருந்த காலம்

ஒரு சராசரி மனி தனைப்போல் குடும்பத்தின்
மீது மட்டும்அக்கறைகொள்ளாது சமூகத்தின் பால்
கூடுதல் அக்கறை கொண்டிருந்த
மிகச் சரியாகச் சொன்னால்
சமூகத்தின் மீதே அதிகஅக்கறை கொண்டிருந்த காலம்

அப்போது அவரின் மேடைப் பேச்சும் எழுத்தும்
மிகச் சரியாய்க்  குறிபார்த்து எய்யப்பட்ட ஈட்டியாய்
இலக்கைத் தாக்கி சின்னாபின்னப் படுத்திப் போன காலம்

அப்போது ஒரு திரைப்படத்தில் நயவஞ்சகம் குறித்துச்
சொல்லவேண்டிய இடத்தில்

 " அங்கேதான் மன்னா இருக்கிறது
ஆச்சாரியாரின் விபீஷண வேலை "

 என்கிற ஒருஅற்புதமான சொற்றொடரைப் பயன்படுத்துவார்

"கோயில்கள் கொடியோரின் கூடாரமாக
மாறிவிடக் கூடாதுஎன்பதற்காகத்தான்...

என்கிற அற்புதமான வாசகமும்

"எப்படி நோயுள்ளப் பெண்களைத் தொடுவதற்கு
டாக்டருக்கு உரிமை உண்டோ அதைப் போல
பக்தியுள்ளப் பெண்களைத் தொடுவதற்கு
பூசாரிக்கும் உண்டு"

என்கிற குயுக்தியான வாதமும் காலம்கடந்து என்றும்
பேசப்படக் கூடியது

என்ன செய்வது மாறுதல் ஒன்றே மாறாதது என்னும்
விஞ்ஞானப் பூர்வமான விதி அவரையும்
தலைகீழாக மாற்றிசமூகத்தின் பால்
கொண்டிருக்கவேண்டிய அக்கறையை
கூடுதலாக குடும்ப வாரிசுகளிடமும் மேலும்

தன் இனம் அழிந்தாலும் பதவியை கெட்டியாகப்
பிடித்துக் கொள்ளவேண்டி நடத்திய
உண்ணாவிரத நாடகமும்

எப்படியும் முதல் மற்றும் மூன்றாவது துணைவியாரின்
வாரீசுகள் மாட்டிக் கொண்டிருக்கிற
இடியாப்பச் சிக்கலில் இருந்துஅவர்களைக் காக்கவும்,
தனது இரண்டாவது மனைவியின்
வாரீசுகளின் பதவிப் போரை நிறுத்தி அவர்களை
எப்படியும்பதவிக் கட்டிலில் அமர்ந்திட வைத்திட
இந்தத் தள்ளாத வயதிலும்
ஓய்வெடுக்காது அவர் படுகிற பாடு நினைக்கையில்...

அவரைப் போலவே

"இந்தத் தள்ளாத வயதிலும் தன் குடும்ப வாரீசுகளை
பதவியில் அமர்த்தவும் தன் வாரீசுகளை இடியாப்பச்
சிக்கலில் இருந்து மாற்றவும் கலைஞர் படுகிற 
திருதராஸ்டிர அவஸ்தை.."

என்னும் புதிய சொற்றொடரை பயன்படுத்தலாமோ
எனப் படுகிறது

16 comments:

துளசி கோபால் said...

ரொம்பச் சரி.

மதுரையில் உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. அதிகம் உரையாடத்தான் நேரமில்லாமல் போய்விட்டது:(

கீதமஞ்சரி said...

எப்படியெல்லாம் அழகாக யோசிக்கிறீர்கள்? மிகச்சரியாக எய்யப்பட்ட கூர்மிகு சொல்லாயுதம். அசத்தல் ரமணி சார்.

Avargal Unmaigal said...

ஒரு காலத்தில் தனது பேச்சால் எல்லோரையும் சிந்திக்க வைச்ச தலைவர் இப்போது சிரிக்க வைத்து கொண்டிருக்கிறார்

ஸ்ரீராம். said...

சரிதான்.

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் சரி...!

மனோ சாமிநாதன் said...

திருதிராஷ்ட அவஸ்தை என்பது மிகச் சரியான சொற்றொடர் தான்! அன்றிலிருந்து இன்று வரை பாசத்தினால் நியாய தர்மங்களை மீறும் மன்னர்கள் வரிசையில் இவரும் என்றோ வந்து விட்டார்!Thulasidharan V Thillaiakathu said...

இது நிச்சயமாக திருதாஷ்டிர அவஸ்தையே! ஒரு அரசனுக்கு எது கூடாதோ அது - குடும்பப் பாசம் - கண்மூடித்தனமானப் பாசம் வந்துவிட்டால் இந்த அவஸ்தைக்கு உள்ளாக வேண்டியதுதான்....

”தளிர் சுரேஷ்” said...

உண்மைதான்! கலைஞரின் சொல்லாடல்கள் அன்று பெரிதும் ரசிக்கப்பட்டு வாக்குகளாயின. இன்று அவருக்கு நீங்கள் சொன்ன உவமானம் மிக சிறப்பு! நன்றி!

G.M Balasubramaniam said...

dynastic power வேண்டுவோர் இந்த இடியாப்ப சிக்கலில் மாட்டுவது கண்கூடாய்த் தெரிகிறது. விபீஷணரின் வேலை சரணாகதி தத்துவம் அல்லவா.......!

ravikumar said...

I think u have to go thro Kannadhasan' Vanavasam

அருணா செல்வம் said...

அன்று பாண்டவர்கள் என்ற நல்லவர்கள் இருந்தார்கள்.
இன்று எங்கும் எல்லோரும் கௌரவர்களாக....

பீஷ்மர் தான் நமக்கெல்லாம் இல்லாமல் போனார் இரமணி ஐயா.

KILLERGEE Devakottai said...

சரியான நேரத்தில் சரியாக போட்ட பதிவு ஐயா அருமை,

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சரியான பாடம் இப்பதிவு. சிறந்த உதாரணங்களைப் பயன்படுத்தியமைக்கு நன்றி.

சிவகுமாரன் said...

தள்ளாத வயதிலும் அவரை இப்படி பளார் பளார் என அறைந்து விட்டீரே

Anonymous said...

NO COMMENTS

மனவெளி said...

ஒரு காலத்தில் ,நான் திமுககாரன்ன்னு பெருமையா சொல்லிக்கொண்டவன் எல்லாம் இன்று அவ்வாறு சொல்ல வெட்கபப்டுகிறான் ,அவருடைய செய்கையால் .

Post a Comment