Saturday, November 29, 2014

சீமைக் கருவேல மரங்களின் தீமைகள்

சகோதர சகோதரிகளே !

சீமையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல
பண்பாட்டு மற்றும் கலாச்சாரச் சீரழிவுகளை விட
அதிகமான சீரழிவுகளைத் தருவது
வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட
இந்த விஷச் சீமைக்கருவேல மரங்களே

இந்தச் சீமைக் கருவேலமரங்கள் சுற்றுப் புறச்
சூழலுக்கு ஏற்படுத்தி வரும் அதிகமான
பாதிப்பைக் கொண்டேஅமெரிக்க தாவரவியல் பூங்கா
"வளர விடக் கூடாத நச்சு மரப் பட்டியலில் "
இந்த கருவேல மரத்தைப் பட்டியலிட்டதோடு
அதை ஒழிப்பதற்கான தீவிர பிரச்சாரத்தையும்
செய்து வருகிறது

அதன்படி

1 )இது எந்த வித வறட்சியான சூழலிலும்
  வளரவும் விரைந்து பரவவும் கூடிய விஷச் செடி

2 )பூமியின் அடி ஆழம் சென்று நிலத்தடி நீரை
  உறுஞ்சுவதோடு மட்டுமல்லாது,காற்றிலுள்ள
  ஈரப்பசையையும் உறிஞ்சி, தான் வளகிற
  பகுதியையே வறட்சிப் பகுதியாக
  மாற்றிவிடும் கொடூரத்தனமை கொண்டது

3 )இந்த மரத்தின் இலை காய் விதை எதுவும்
    எதற்கும் பயன்படாதவை மட்டுமல்ல
    பயன்படித்தினால் தீங்கு
    விளைவிக்கும் தன்மையும் கொண்டவை

4 )இதனை விறக்குக்காக எரிக்கையில் ஏற்படும் புகை
   ஆஸ்துமா மூச்சுத் திணறல் முதலான நோய்களை
   ஏற்படுத்தக் கூடியது

5 )இது மிகக் குறைந்த அளவு ஆக்ஸிஜனை
    உற்பத்தி செய்தாலும் அதிக அளவு கரிமில வாயுவை
    (கர்பன் டை ஆக்ஸைடை) வெளியேற்றுவதால்
    சுற்றுப் புறச் சூழல் அதிக விஷத்தன்மை
    உடையதாக மாறிப் போகிறது

6 )அதன் காரணமாக இதன் நிழலில் கட்டி வைக்கப் படும்
   கால் நடைகள் மலட்டுத் தனமை அடைவதோடு
   கரு அடைத்திருக்கும் பட்சத்தில் ஊனமான
   கன்றுகளை ஈனவும் செய்கின்றன்

இந்தத் தீமைகள் குறித்து மிகத் தெளிவா கப்
புரிந்துகொண்ட அதிக படிப்பறிவு விகிதத்தில் இருக்கிற
கேரள மாநில மக்கள்அரசின் ஒத்துழைப்போடு
அவர்கள் மா நிலத்தில்கருவேல மரங்களை
முற்றிலுமாக அழித்துவிட்டார்கள்
அதனாலயே அந்த மா நிலம் பசுமையான
இயற்கைச் சுழலை தொடர்ந்து பராமரிக்கமுடிகிறது

இந்தத் தீய விஷச் செடியின் தீமைகளை
முற்றிலும் அறிந்துஉச்ச நீதி மன்றமும் உடன் இந்த
கருவேல மரங்களைமுற்றிலும் அழிக்கும் படியான
அறிவுரையையும்உத்திரவையும் மா நில அரசுக்கும்
 உள்ளாட்சி அமைப்புகளுக்கும்வழங்கியுள்ளது

அதன் அடிப்படையில் நமது மாவட்ட ஆட்சித்தலைவர்
மதிப்பிற்குரிய  சுப்ரமணியம் அவர்கள் உலகின் சிறந்த
சேவை அமைப்பான அரிமா சங்கத்தின்
324 பி3 மாவட்டத்தின் ஆளுநர் லயன்.பி.ரகுவரன்
அவர்கள்ஏற்பாடு செய்திருந்த
மதுரை தல்லாகுளம் மாநகராட்சி நீச்சல் குளம் முதல்
 மா நகராட்சி வரை இருந்த கருவேலம்
புதர்களை முற்றிலுமாக வேரோடு அழிக்கும்
திட்டத்தைத் துவக்கிவைத்ததோடு மாவட்டத்தில்
இந்த விஷச் செடியை வேரோடு அழிப்பதற்கான
அனைத்து முயற்சிகளையும்
செய்து வருகிறார்

அதன் தொடர்சியாக மாவட்ட அரிமா சங்கமும்
தன் கிளை அமைப்புகள் மூலம் மதுரை திண்டுக்கல்
தேனி மற்றும் சிவகங்கை ரெவென்யூ மாவட்டங்களில்
பொது மக்களின் பூரண ஒத்துழைப்போடு
இதுவரை 10000 ஏக்கருக்கும் மேலாக இந்த கருவேலம்
மரத்தை வேரோடு அழித்ததோடு மட்டுமல்லாது
தொடர்ந்து அகற்றியும் வருகிறது

நமது வில்லாபுரம் புது நகர் குடியிருப்போர் சங்கமும்
தனது ஐந்து அம்சத் திட்டத்தில் முதல் திட்டமான
வாழ்விடங்களில் பாதுகாப்பை உறுதி செய்தல் என்கிற
அடிப்படையில் பகுதி முழுவதும்
கண்காணிப்புக் கேமிராக்களைப் பொருத்தி அதனை
காவல் துறையிடம் ஒப்படைக்க எடுத்துவரும்
நடவடிக்கையின் தொடர்சியாக..

தற்சமயம் சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாக்கும்
திட்டத்தின் அடிப்படையில் கருவேல மரங்களை
அடியோடு அழிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது

அதன் முதல் கட்டமாக சமூக விரோதிகளின்
கூடாரமாக இருந்த சமுதாயக் கூடம் மற்றும்
கட்டுமானக் கழக வெற்றிடங்களில் மண்டிக் கிடந்த
கருவேலம் புதர்களை பொது மக்களின் பங்களிப்போடும்
காவல்துறையின் முழுமையான ஒத்துழைப்போடும்
மிகக் குறிப்பாக ஆய்வாளர் திரு. சேதுமணிமாதவன்
அவர்களின் நல்வழிகாட்டுதலின் படியும்
முழுமையாக அகற்றி அவ்விடங்களை சீர்செய்துள்ளோம்
 


தாங்களும் இந்தச் சமுதாயப் பணியில் ஆத்மார்த்தமாக
முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்வதோடு
தங்களால் முடிந்த பங்க்களிப்பையும் கொடுத்து
நம் பகுதியே மதுரை மாவட்டத்திலும்
அனைத்து நிலைகளிலும் நிம்மதியாக
வாழ்வதற்குகந்த பகுதி என்கிற தகுதியை அடைய
ஒத்துழைக்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்

வாழ்த்துக்களுடன்

நிர்வாகிகள்
மதுரை வில்லாபுரம் புது நகர் குடியிருப்போர் நலச் சங்கம்

( இந்தக்  தீமையை அவரவர் பகுதிகளில் மக்களின்
ஒத்துழைப்போடு ஒழித்து தமிழகத்தையும்
ஒரு செழிப்பான பூமியாக மாற்ற
ஆவன செய்யவேண்டும் என்கிற அன்பான
கோரிக்கையோடு அதிகப் பட்சமாக
இந்தத் தகவலை அனைவரிடமும் கொண்டு செல்ல
எங்கள்  விழிப்புணர்வுப்   பேரணிக்கான நகலையே
தகவலுக்காக  பதிவு செய்திருக்கிறோம்

இதனை தங்கள் தளங்களில் பகிர்வு செய்ய வேணுமாய்
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் )

19 comments:

ஸ்ரீராம். said...

பயனுள்ள வேலை. பாராட்டப்பட வேண்டிய சேவை.

Unknown said...

super sir, hats off to you.

திண்டுக்கல் தனபாலன் said...

பணி தொடரட்டும்... சிறக்கட்டும்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வழக்கமான தங்களின் பதிவுகளிலிருந்து இது மாறுபட்டு உள்ளது. தங்களின் சமூகப் பிரக்ஞை பாராட்டத்தக்கது. தங்களின் முயற்சி சிறப்புற அமைய வாழ்த்துக்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

சீரிய முயற்சி ஐயா
பாராட்டுக்கு உரியவர் நீங்கள்
தொடரட்டும் தங்களின் சமூக சேவை

கரந்தை ஜெயக்குமார் said...

தம 2

V. Chandra, B.COM,MBA., said...

உண்மைதான். நல்ல சேவை தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வேலிகாத்தான் என்று அழைக்கப் படும் சீமைக் கருவேல மரத்தினால் இவ்வளவு தீமைகளா?
இவற்றை அகற்றும் பணியில் ஈடுபத்திக் கொண்ட தங்களுக்கு வாழ்த்துகள்

விமல் ராஜ் said...

பயனுள்ள செய்திகள்... நன்றி ஐயா..

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு விழிப்புணர்வு பணி! வாழ்த்துக்கள்!

G.M Balasubramaniam said...

முடிவில் தன் கையே தனக்கு உதவி என்று நீங்கள் செயல்படுவதுமகிழ்ச்சி அளிக்கிறது. .

G.M Balasubramaniam said...

ரஜனியின் காதுகளுக்கு உங்கள் வேண்டுகோள் எட்டவில்லை போலும்.

கோமதி அரசு said...

அருமையான சேவை. விழிப்புணர்வு
நிலத்தடி நீர் இனி உயரும்.
நாடு முழுவதும் இந்த சேவையை அந்த அந்த ஊர்காரர்கள் தொடர்ந்து செய்தால் நீர்வளம் பெருகும் என்பது உண்மை.

வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல முயற்சி. அனைவருக்கும் பாராட்டுகள்.

இளமதி said...

அறிந்திராத தகவல்கள்!
தங்கள் முயற்சி மிகச் சிறப்பானது ஐயா!
வாழ்த்துக்கள்!

தி.தமிழ் இளங்கோ said...

கவிஞர் அவர்களின் பகிர்வுக்கு நன்றி. தப்பாக எண்ண வேண்டாம். இதுபற்றிய ஆராய்ச்சி இன்னும் முற்றுப் பெறவில்லை. சீமைக் கருவேல மரம் பற்றி மாறுபட்ட ( அதாவது தீமையானது அல்ல என்ற ) கருத்தும் உண்டு. விவரம் கிடைத்தவுடன் நானும் எனது கருத்தை எழுதுகிறேன்.
த.ம.7

KILLERGEE Devakottai said...

தங்களின் சமூக அக்கரையுள்ள பதிவு இதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல் படவேண்டும்

Angel said...

அருமையான விஷயம். நான் இதனை முகபுத்தகத்திலும் பகிர்கிறேன்

மனவெளி said...

நல்ல சேவை

Post a Comment