Tuesday, December 16, 2014

லிங்கா சொல்லும் செய்தி ---விமர்சனமல்ல

அடுத்தவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தைத் 
திருடிக் கொள்ளையடித்து வாழ்வதாக
பேரன் லிங்கேஸ்வரன் அறிமுகமாகிறான்

அவனது தாத்தாவின் கொடைத் தன்மையை
அறியாமலும் தனது அரண்மனை தஙகம்
வெள்ளி மற்றும் நவரத்தினங்கள் முதலான
சொத்துக்கள் அனைத்தையும்
தனக்கென தன் குடும்பத்திற்கென ஏதும்
ஒதுக்கிவைக்காது அந்த ஊருக்கே
அனைத்தையும்கொடுத்திவிட்டுத்
தன்னை அனாதையாக
ஏதுமற்றவனாகவிட்டுச் சென்றதற்காகவே
தான் அவ்வாறுஅடுத்தவர் சொத்தைக்
கொள்ளை அடிப்பவனாக
மாறிப் போனதாகவும் விளக்கம் தருகிறான்

சந்தர்ப்ப சூழ் நிலையில் தன் ஊருக்கு வந்து
தாத்தாவின் அருமை பெருமைகளை
ஊருக்காகவும் உலகுக்காகவும் வாழ்ந்ததை
அறிந்து மனம் மாறி இனி தானும் தன் தாத்தாபோல
ஏதாவது உருப்படியாக மக்களுக்கு ஏதாவது
செய்தபின் திரும்ப அந்த ஊருக்கு வருவதாகச்
சொல்லி ஊரைவிட்டுக் கிளம்புகிறான்
லிங்கேஸ்வரன்

இது படத்தின் கதை

புரட்சித் தலவர்  அவர்களின் படத்தின் கதையையோ
அல்லது சூப்பர் ஸ்டார் அவர்களின் படத்தின் கதையோ
நாம் வெறும் கதையாகவோ அல்லது அவர்களை
நாம்வெறும்கதாப்பாத்திரமாகவோ எடுத்துக்
 கொள்வதில்லை

அதையும் மீறி அந்தப் படத்தின் மூலம்
மறைமுகமாக அவர் நமக்குச் சொல்ல
 நினைக்கும் செய்திஒன்று உண்டு
என்கிற நோக்கத்தில்தான் பார்த்துப்
பழகியுள்ளோம்.

அவர்களும் தங்கள் அனைத்துப்
படங்களிலும் பூடகமாக பல செய்திகளைச்
சொல்லியும் இருக்கிறார்கள்

அவர்கள் திரையை மீறி மக்களிடம்
மிக நெருக்கமாகஇருப்பதற்கு
இதுதான் திட்டவட்டமான
காரணமும் கூட

என்னைப் ஒருத்தவரை லிங்கேஸ்வரனின்
தாத்தாவுக்கும்புரட்சித்தலவருக்கும் அதிக
வேறு பாடுகள் இருப்பதாகத்
தெரியவில்லை.

அவர் மறைந்து எத்தனை ஆண்டு காலமானாலும்
அவர் பெயரைச் சொல்லிக் கொண்டுதான் அரசியல்
நடத்தவேண்டிய சூழலில் அவருடைய கட்சி இன்றும்
இருக்கிறது தொடர்ந்தும் இருக்கும்
லிங்கேஸ்வரனின் தாத்தாவை நினைத்தபடி வாழும்
அந்த ஊரைப் போல

தனது திருட்டில் மிக உட்ச பட்ச திருட்டின் மூலம்
திசை மாறும் பேரன் லிங்கேஸ்வரன் போல
தன் நடிப்புச் செல்வாக்கின் மூலம் இதுவரை
அடைந்த பலனின் உச்சபட்சமாக இந்த
இந்தப் படத்தின் மூலம் தனக்கென தன்
குடும்பத்திற்கென வாழும் ஸூப்பர் ஸ்டார்
அவர்கள் புரட்சித் தலைவரைப் போல
இனி தானும் மக்களுக்கென வாழ்வதற்காக
முடிவெடுப்பார் எனும்  மறைமுகச் செய்திதான்
இந்தப் படம் என்பது ஆணித்தரமான கருத்தாக
எனக்குப் படுகிறது

இவ்வளவு நாள் பொறுத்தோம்
சில அரசியல் சூழல் மாறும் நேரத்திற்காக
கொஞ்சம் பொறுக்கமாட்டாமோ என்ன ?

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மறைமுகச் செய்தி - என்றும் மறைமுகமாகவே இருக்கும்...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
UmayalGayathri said...

மறைமுகம் வெளிக்காட்டுமா..பொறுத்திருந்து பார்ப்போம். தம 3

கோமதி அரசு said...

மக்களுக்கு சேவை செய்தால் நல்லது தானே!

Thulasidharan V Thillaiakathu said...

ஆம்! தாங்கள் சொல்லுவது மிகவும் சரியே! ஏதாவது மறைமுகச் செய்தி இருக்கும் இவர்களின் படங்களில். இதிலும் நீங்கள் சொல்லியிருப்பது போல் தானோ....ம்ம்ம் பொறுத்திருப்போம்...

காமாட்சி said...

நான் லிங்கா படம் பார்த்தேன். வழக்கம்போல அவர் உயர்ந்த மனிதர். அவருக்காகவே படம். என்றுதான் தோன்றியது. அன்புடன்

கரந்தை ஜெயக்குமார் said...

///புரட்சித் தலைவரைப் போல
இனி தானும் மக்களுக்கென வாழ்வதற்காக
முடிவெடுப்பார் எனும் மறைமுகச் செய்திதான்
இந்தப் படம் என்பது ஆணித்தரமான கருத்தாக
எனக்குப் படுகிறது///
வாய்ப்பிருப்பதாகத் தோன்றவில்லை ஐயா
தம +1

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

சொல்ல வேண்டிய கருத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள். இந்த காலத்தில் அடுத்தவர் நாமத்தை சொல்லித்தான் வாழ்வு நடத்துகிறார்கள்
திரை மறைச்செய்தி திரை மறையாக இருக்கட்டும் பொறுத்திருப்போம் பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 6
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.:

கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ShankarG said...

காலம் கடந்து எடுக்கப்படும் முடிவுகள் பயன் அளிப்பதில்லை. அது சூப்பர் ஸ்டாருக்கு நன்கு பொருந்தும். மேலும் புரட்சித் தலைவரைப் போன்ற தொலை நோக்கும் திட்டமிடுதலும் இவரிடம் காணப்படுவதில்லை. இருப்பினும் ஆவலுடன் எதிர் நோக்குவோம். நல்ல கருத்து.

Post a Comment