Friday, January 23, 2015

சேவைப் பொங்கல்

எண்ணத்தால் இமயம் அசைப்பதை விட
செயலால் துரும்பசைப்பதே மேல் என்கிற
கருத்துடையவர்கள்  எம்போன்று
சேவை இயக்கத்தில் ஈடுபட்டுள்ள  எனது
நண்பர்கள் அனைவரும் .
(உரையாற்றிக் கொண்டிருப்பது அடியேன்

 நடுநாயகமாக வீற்றிருப்பது
மாவட்ட ஆளு நரின்  துணைவியார்
டாக்டர் ஆனந்தி   அவர்கள்
அடுத்தது ஆளு நர் , டாக்டர் ப ரகுவரன் அவர்கள்
அடுத்து அமர்ந்திருப்பவர் இந்த நிகழ்ச்சிக்குத்
தலைமைப் பொறுப்பேற்றும்  ,இந்த  நிகழ்வுக்கான
செலவின் பெரும்பகுதியை  தன சொந்தப் பொறுப்பில்
செய்தவருமான   வள்ளல்  டாக்டர் ,எம்  சுப்ரமணியம்
வட்டாரத் தலைவர் அவர்கள்  )

அந்த வகையில்  நான் தலைமைப்  பொறுப்பேற்றுள்ள
டிலைட்  அரிமா  சங்கத்தின் மூலம்
 கடந்த பொங்கல் பண்டிகைத்
திரு நாளை முன்னிட்டு  350 ஏழைத்
தாய்மார்களைத் தேர்ந்தெடுத்து புத்தாடைகள்
வழங்கினோம்

மிகச் சரியானவர்களைச் சேவை சென்றடைய
வேண்டும் என்பதற்குத்தான் மிகவும்
மெனக்கெடவேண்டியிருந்தது

(சேலையில் மதிப்பு ரூபாய்300 என்றால்
மிகச் சரியானநபர்களைக் கண்டு பிடிக்கவும்
அவர்களைஅழைத்து வந்து பின் அனுப்பிவைக்கவும்
ரூபாய் 120 ஆனது )


0

எமது பகுதியில் நல்லாசிரியர் விருது பெற்ற
மதிப்பிற்குரிய ஆசிரியர் எஸ் கனகராஜ் அவர்களுக்குவிருதுவழங்கிகௌரவித்தோம்


தொடர்ந்து அரிமா சேவையில் ஈடுபட்டுவரும்
தம்பதிகளைக் கௌரவிக்கும் விதமாக
நாங்கள் தொடர்ந்து வழங்கிவரும்
ஆதர்ச அரிமா தம்பதிகள்  விருதினை இம்முறை
மதிப்பிற்குரிய அரிமா  மோகன்-உஷா
 தம்பதியினருக்கு வழங்கி கௌரவித்தோம்

இந்தத் தம்பதியினர் தொடர்ந்து அரிமா இயக்கத்தில்
இணைந்து 20 ஆண்டுகள் தொடர்ந்து சேவை செய்து
வருவதோடு, மாவட்ட அதிகாரிகளாக அரசுத் துறையில்
பணியாற்றி ஓய்வு பெற்றபின்னரும் தங்கள்
வருடாந்திர ஓய்வுத் தொகையில்
ஒரு மாதத் தொகையைசேவைக்கெனவே ஒதுக்கி
 மக்கள் சேவைசெய்து வருகிறார்கள்என்பது
குறிப்பிடத் தக்கது(அது சுமார்  அறுபதாயிரத்திற்குக்
குறையாமல் இருக்கும்  )எங்கள் பகுதியின் அருகில் உள்ள
இரண்டு பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து
விளையாட்டுப் போட்டி நடத்தி வெற்றி பெற்ற
மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினோம்


சக்கரைப் பொங்கலை  விட  இந்த
சேவைப் பொங்கல்  மிக இனிப்பாகவும்
மகிழ்வளிப்பதாகவும் இருந்தது என்பதைச்
சொல்லத்தான் வேண்டுமா  ?

17 comments:

ப.கந்தசாமி said...

நல்ல சேவை. பாராட்டுக்கள்.

V. Chandra, B.COM,MBA., said...

மக்கள் தொண்டு மகேசன் தொண்டு. நல்ல மனது, நல்ல சேவை தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
தங்களின் சேவையை பார்த்து வியந்து விட்டேன்.. தொட எனது வாழ்த்துக்கள் த.ம2

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தி.தமிழ் இளங்கோ said...

சேவைகள் பல தொடரட்டும். நெஞ்சங்கள் வாழ்த்தட்டும்.
த.ம.3

கவியாழி said...

பாராட்டுக்கள்.தங்களின் சேவைத் தொடர வாழ்த்துக்கள்

KILLERGEE Devakottai said...

சேவைகள் தொடரட்டும் வாழ்த்துகள்
தமிழ் மணம் 5
எனது பதிவு
பொ.பொ.பொ. காண்க....

Yarlpavanan said...

உயர்ந்த நற்பணி முயற்சி
தொடருங்கள்


யாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்!
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_21.html

Unknown said...

சேவை நன்று!

RajalakshmiParamasivam said...

உங்கள் சேவை மென் மேலும் வளர வாழ்த்துக்கள் ரமணி சார்.

திண்டுக்கல் தனபாலன் said...

சேவைகள் தொடரட்டும்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

சென்னை பித்தன் said...

உயர்ந்த பணி.தொஅடருங்கள்.வாழ்த்துகள் த ம 8

வெங்கட் நாகராஜ் said...

சீரிய பணி.... தொடரட்டும். வாழ்த்துகள்.

Unknown said...

உன்னத பணி(ஒரு வழியா வார்த்தையைக் கண்டு பிடிச்சிட்டேன் ) தொடருங்கள்..வாழ்த்துகிறோம் !
த ம 9

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சிறப்பான சமூகச் சேவை. தொடர வாழ்த்துக்கள்.

துரை செல்வராஜூ said...

வாழ்க நலம்!..
அன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!..

Thulasidharan V Thillaiakathu said...

மேன்மையான பணியை மேற்கொண்ட தங்களின் சேவைகள் பெருக எங்கள் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதுபோன்ற சேவைகள் தொடரட்டும். வாழ்த்துகள்.

Post a Comment