Saturday, January 31, 2015

எறும்பூற

"முயலாமைக் கதையில் "
ஆமை ஜெயித்தல்தான் சிறப்பு
முயல் ஜெயித்தால்
அது நிச்சயம் அதிசயமே
யானை நடந்து
மண் தரையில் தடம் பதிவதுண்டு
கற்களில் பதிந்ததாக பழமொழியில்லை
எறும்பு ஊறத்தான் கற்கள் தேயும்

பணி நாட்களில் யுத்தத்தை
ஒரு நாளும் சந்திக்காது
ஓய்வுபெற்று வந்த
இராணுவ வீரர்கள்   கூட
தினமும் பயிற்சி செய்யாது
பணியில் நிலைத்திருக்க
சத்தியமாய் சாத்தியமே இல்லை

பறந்துபோய்
சிகரம் இறங்கினால்
அது சமதளம் போலத்தானே 

முட்டி தேய பகலிரவாய்
நடந்தேறிப் பார்த்தால்தான்
சிகரமே சிகரமாய்த் தெரியும்
நமக்கும் அதன் அருமை புரியும்

தொடர் முயற்சியில் வென்ற
பல முட்டாள்கள் கூட
உலகினில் உண்டு
மெத்தனத்தில் ஜெயித்த
பேரறிஞர்  எவரும் நிச்சயம் இல்லை

தெளிவாய்  இதை அறிவோம்
தொடர்ந்து நாளும் முயல்வோம்
அரியவை எதையும்
முயன்றே  அடைந்து உயர்வோம்

12 comments:

Unknown said...

உழைப்பைப் பற்றி உயர்வாக சொன்னதை ரசித்தேன் :)
த ம 2

திண்டுக்கல் தனபாலன் said...

ஓரேடியாக மேலே சென்றால்... அதே போல் கீழேயும்...

G.M Balasubramaniam said...

முயல் ஆமைக் கதைகளை இப்போதெல்லாம் இரண்டுமே ஜெயித்ததாகக் கூறும் கதை உண்டு.Win-Win situation என்பார்கள்.

UmayalGayathri said...

முயன்றே அடைந்து உயர்வோம் //

அருமை ஐயா

Yarlpavanan said...


"யானை நடந்து
மண் தரையில் தடம் பதிவதுண்டு
கற்களில் பதிந்ததாக பழமொழியில்லை
எறும்பு ஊறத்தான் கற்கள் தேயும்" என
அழகாகச் சிந்திக்க வைக்கும்
எண்ணங்களின் வெளியீடாக
தங்கள் கவிதையைப் பார்க்கின்றேன்!
தொடருங்கள்

மதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post_31.html

KILLERGEE Devakottai said...

முயலாமை கவி அருமை கவிஞரே....
தமிழ் மணம் 4

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

உழைப்பின் உயர்வை அருமையாக முன்வைக்கும் கவிதை. பாராட்டுகள்.

கே. பி. ஜனா... said...

உழைப்பே உயர்வு...

Thenammai Lakshmanan said...

கவிதை அருமை :)

வெங்கட் நாகராஜ் said...

உழைப்பின் உயர்வைச் சொல்லும் அருமையான கவிதை.

த.ம. 6

Thulasidharan V Thillaiakathu said...

கவிதை வரிகள் அருமை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எறும்பு ஊறத்தான் கற்கள் தேயும்//

//தொடர் முயற்சியில் வென்ற பல முட்டாள்கள் கூட
உலகினில் உண்டு .. மெத்தனத்தில் ஜெயித்த
பேரறிஞர் எவரும் நிச்சயம் இல்லை//

உழைப்பே உயர்வு தரும் என்பதை மிக அழகாக அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

Post a Comment