Tuesday, July 7, 2015

காரணப் பெயருக்கும் ஒரு நல்ல காரணம்....

ஆடிக்காற்று ஊழிக்காற்றாய்
சுழண்டறடித்துப் பயமுறுத்துகிறது

மரங்களின் பேயாட்டமும்
வீதியின் புழுதியோட்டமும்
ஆங்காங்கே ஏதேதோ
விழுந்துடைந்து வீழும் சப்தமும்
அச்சம் கூட்டிப் போகிறது

காற்றெனில்
ஒரு குளுமை
கண்ணை மூடி மெய்மறக்கும்படியான
ஒரு சுகத் தடவல்
வீணையாய் மீட்டி மெல்லிய உணர்வுகளை
கிளறச் செய்து போகும்
ஒரு மெல்லிய சுகந்தம்
இருக்க வேண்டாமோ அதனிடம் ?

புயலுக்கு வாரீசுபோல்
அழிவை மட்டும்
அள்ளித்தந்து போகும்
ஆர்ப்பாட்டம்  மட்டும் செய்து
ஒரு துளிவேர்வைத் துடைத்தெடுக்காது போகும்
இந்தப் பயனற்றக் காற்றுக்கு
எதற்கு ஆடிப் பூச்சு ?

தாங்கித் தாங்கி வளர்த்தவன்
வளர்ந்தபின் எதற்கும்
பயனற்றுப் போக அவனை
"தண்டச் சோறு"என்பதைப் போல்

சித்திரை வெயிலை
கோடை வெயில் என்பதைப் போல்

ஐப்பசி மழையை
அடைமழை என்பதைப்போல்

இந்த ஆடிக் காற்றை
தண்டக்காற்று  என்றால் என்ன ?

காரணப் பெயருக்கும்
மிகச் சரியான காரணம் இருந்தால்
இன்னும் சிறப்புதான் இல்லையா ?

9 comments:

Anonymous said...

''..வீணையாய் மீட்டி மெல்லிய உணர்வுகளை
கிளறச் செய்து போகும்
ஒரு மெல்லிய சுகந்தம்
இருக்க வேண்டாமோ அதனிடம் ?..''' ரெம்பப் பேராசை இல்லையா?...

balaamagi said...

வணக்கம்,
காரணப்பெயர் வேண்டி தங்களின் சிறப்புபெயர், அய்யோ, பொதுப்பெயர் ச்சீ,,,,,,
அதாங்க ,,,,,,
அய்யோ நான் என்ன சொல்ல வந்தேன், ஆங்,,,,
பதிவு அருமை இதைத்தான் சொல்லவந்தேன்.
நன்றி.

Unknown said...

அடிப்பது அனல் காற்று! தாங்க வில்லை!

திண்டுக்கல் தனபாலன் said...

அதானே...? என்னவொரு மூர்க்கத்தனம்...!

ஸ்ரீராம். said...

சென்னையில் காற்று என்பதற்கான பொருளை அகராதியில் தடிக் கொண்டிருக்கிறோம்!

”தளிர் சுரேஷ்” said...

ஆடிக்காற்றுக்கு பொருத்தமான் பெயர்! அருமை ஐயா!

”தளிர் சுரேஷ்” said...

தங்களின் தளத்தினை நேற்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்! சென்று பார்க்கவும்.

Thulasidharan V Thillaiakathu said...

ஆடிக் காற்றா? அப்படி என்றால்? உங்கள் ஊரில் ஆடிக் காற்று....கேரளாவில் மழை....அவ்வப்போது....சென்னையில் அனல்....காற்று மருந்திற்கு அதுவும் அனலாக....

கவிதை வரிகள் உங்கள் ஆதங்கம் "மெல்லிய சுகமாய் இருக்க வேண்டாமோ? " ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்றுதானே சொல்லப்படும்...

வரிகள் அருமை..

கரந்தை ஜெயக்குமார் said...

கோடை முடிந்த பிறகு இப்பொழுது அடிக்கும் வெயில் தாங்க முடியவில்லை ஐயா
தம +1

Post a Comment