Friday, January 22, 2016

கேளுங்கள் ...தட்டுங்கள்.தேடுங்கள் ..

கேளுங்கள் தரப்படும்
எனச் சொன்னவர்
தருவேன் என்றோ
தருவார் என்றோ
ஏன் உறுதி அளிக்கவில்லை

தட்டுங்கள் திறக்கப்படும்
எனச் சொன்னவர்
திறப்பேன் என்றோ
திறப்பார் என்றோ
ஏன் நம்பிக்கை அளிக்கவில்லை

தேடுங்கள் கிடைக்கும்
எனச் சொன்னவர்
கிடைக்கச் செய்வேன் என்றோ
கிடைக்கச் செய்வார் என்றோ
ஏன் அழுந்தச் சொல்லவில்லை

ஒருவேளை....

கேட்கும்
தட்டும்
தேடும்
திறம்பொருத்தே

தருதலும்
திறத்தலும்
கிடைத்தலும்
இருக்கும் என்பதை
சூட்சுமமாய் உணர்த்தத்தானோ ?

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாம் ஒரு நம்பிக்கை தான்...

Pandiaraj Jebarathinam said...

தட்டுதல் என்பது செயலில் அவரவர் முயற்சியைத் தானே. அவரும் எவரும் கூறுவதும் அதையேத்தானே

முயற்சி திருவினையாக்கும். :-)

KILLERGEE Devakottai said...

சிலருக்கு திறக்கலாம்...
சிலருக்கு கிடைக்கலாம்...
தமிழ் மணம் 3

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் சந்தேகம்.

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மாயா மாயா எல்லாம் மாயா.

அருணா செல்வம் said...

முயற்சி திருவினையாக்கும்.

சும்மா இருந்தால் எதுவும் கிடைக்காது என்பதைத் தான்....

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
எல்லாம் நம்பிகைதான் வாழ்க்கை த.ம5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

எல்லாம் வல்லவர் ஏன் தட்டச் சொல்லணும் ,கேட்கச் சொல்லணும் :)

நிஷா said...
This comment has been removed by the author.
நிஷா said...

கேட்கும்
தட்டும்
தேடும்
திறம்பொருத்தே

ஆம் கிடைக்கும் தருவார் என கேட்பதும்,
கிடைக்கும் என தேடுவதும்,திறக்கும் எனறு தட்டினால் நம் நம்பிக்கை தானேஜெயிக்கின்றது!

Unknown said...

நன்றாகஇருந்தன

Thulasidharan V Thillaiakathu said...

ஒருவேளை....

கேட்கும்
தட்டும்
தேடும்
திறம்பொருத்தே

தருதலும்
திறத்தலும்
கிடைத்தலும்
இருக்கும் என்பதை
சூட்சுமமாய் உணர்த்தத்தானோ ?// ஓ! அப்படியும் இருக்கலாமோ?!!!ம்ம்ம்ம் நம் நம்பிக்கைதானே நம்மை வழிநடத்திச் செல்கின்றது!!!

Post a Comment