Thursday, June 16, 2016

தினமலரின் " நடுநிலைமை "

தமிழகத்தில் பெரும்பாலாக எந்தப் பத்திரிக்கையும்
செய்திகளைச் செய்திகளாகத் தருவதில்லை
மாறாக தங்கள் கருத்தைச் செய்திகள் போல்
தருவதில்தான் அதிக அக்கறை கொள்கின்றன
அதில் முன் வரிசையில் உள்ளது
தின மலர் என்றால் அது மிகையில்லை

கடந்த தேர்தலில் போது தி.மு க. வெல்லும் போல
ஒரு அபிப்பிராயம் நடு நிலை வாக்காளர்களுக்கு
அதிகம் இருந்தது. அதனை பிரதிபலிக்கும் விதமாகவும்
அப்படி ஒருவேளை தி. மு.க ஆட்சிக்கு வருமானால்
நிச்சயம் அரசின் சலுகைகள் பெற  உதவும் என்று
ஒரு பொதுப் பத்திரிக்கை என்கிறப் போர்வையில்
தி.மு.க வுக்கு சாதகமாகத் தெரியும் படியாக
தினமலர் கருத்துக் கணிப்பு வெளியிட்டது

அந்தக் கருத்துக் கணிப்பில் ஒரு சூட்சுமம் இருந்தது
மிகத்  திட்டவட்டமாக அ. இ அ. தி.மு க. வெல்லும்
இடங்களை அது வெல்லும் எனக் குறிப்பிட்டு விட்டு
குழப்பம் ஏற்படுத்தும்படியாக திட்டவட்டமாக
இல்லையெனினும் வெற்றி வாய்ப்புள்ளத்
தொகுதிகளை தி. மு. க வுக்கு சாதகமாக
வெளியிட்டுத் திருப்திப்படுத்திக் கொண்டது.

(எங்கள் திருப்பரங்குன்றம் தொகுதியில்
 அ. இ அ. தி. மு.க வேட்பாளர் 20,000 க்கும்
 மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில்
வென்ற தொகுதியை தி. மு.. க வுக்கு வாய்ப்புள்ளத்
தொகுதியாக கருத்துக்கணிப்பில் வெளியிட்டிருந்தது
ஒரு உதாரணம்.. )

அதற்காக பதவிக்கு வந்தவுடன் இந்த அரசு
மிகச் சரியான நேரத்தில் குழப்படி ஏற்படுத்திய
பத்திரிக்கைக்கு இருக்கை ஒதுக்கீட்டில் பின் தள்ளியது
சரியில்லை என்றாலும்,

அதற்காக ஆளுநர் உரையினை இன்றைய பதிப்பில்
ஒன்பதாம் பக்கத்திற்கும் பதிமூன்றாம் பக்கத்திற்கும்
தள்ளிவிட்டு தங்கள் பத்திரிக்கைக்கு இட ஒதிக்கீட்டு
விஷயத்தை முன் பக்கத்தில் எந்த விதத்தில் சரி

பொது ஜனத்திற்குத் தேவையான விஷயத்திற்கு
முக்கியத்துவம் தராமல் தன் சுய நலத்திற்கு
முக்கியத்துவம் தரும் பத்திரிக்கையை எப்படி
நடு நிலை நாளேடாகக் கொள்ள முடியும் ?

பிற ஊடகங்களின் மூலம் இந்த இருக்கை மாற்றம்
பற்றித் தெரிந்தவுடன்,இது அரசியல் நாகரீகமில்லை
எனப் பட்ட எனக்கு, இந்த செய்தி வெளியீட்டைப்
பார்த்ததும் அவர்கள் செய்ததும்
சரியெனத்தான் பட்டது

பொது ஜனத்திற்கு தேவையானதிற்கு முக்கிய
தராமல், தனக்கு முக்கியத்துவம் தருவது
எந்த விதத்தில் நாகரீகம் என்பது
எனக்குப் புரியவில்லை

முக்கியத்துவமான செய்தி என்பது
செய்தி  பொறுத்தல்ல
நாங்கள் முடிவு  செய்வதைபி பொறுத்து
என ஒரு நாளிதழை நினைக்குமானால்
அது எப்படி ஒரு  நடு நிலை நாளேடாக
இருக்கச் சாத்தியம்  ?

 இனி நடு நிலைச் செய்திகளைப் படிக்க
வேறு ஒரு நாளேட்டத் தேர்ந்தெடுத்தலே சரி எனப்
படுகிறது  எனக்கு

உங்களுக்கு ?

13 comments:

ஜீவி said...

தமிழக செய்தித்தாட்களில் அப்படி நடுநிலையுடன் செயல்படும் ஏதாவது செய்தித்தாளை எடுத்துக்காட்டாகச் சொல்ல முடியுமா?.. ஒரே செய்தியை தங்கள் சார்புநிலைக்கேற்ப வெளியிடுவது தான் பத்திரிகைகளின் பல ஆண்டுப் பழக்கமாக இருக்கிறது.

எல்லா வாசகர்க்ளுக்கும் ஏதோ ஒரு அரசியல் இருப்பதால், அவர்களும் அதற்கேற்ப 'தங்கள்' செய்தித்தாளைத்
தேர்ந்தெடுத்து வாசித்து மகிழ்கிறார்கள்.
'தங்கள்' அரசியலிருந்து அந்த பத்திரிகை
அரசியல் மாறுமானால், அதற்கேற்ப வாசிப்பவரும் தங்களுக்கான செய்தித்தாளை மாற்றிக் கொள்கிறார்கள். இதான் காலாதிகாலமாக இங்கு நடந்து வருவது.

ஒரே செய்தித்தாளைப் படிப்பதும் அந்தச் செய்தித்தாள் கொண்டிருக்கும் அரசியலின் ஊதுகுழலாக உங்களை மாற்றி விடும் ஆபத்தும் இருக்கிறது.

என் வழக்கம் என்னவென்றால் வாக்கிங் போகையில், தினம் ஒரு செய்தித்தாள
என்று மாற்றி மாற்றி வாங்குவது தான். இந்தக் கிழமைக்கு இந்தச் செய்தித்தாள் என்று கூட இதில் உண்டு. செய்திதாளுடன் வரும் இணைப்பின் அடிப்படையிலும் கூடுதலான பக்கங்களின் காரணமாகவும் இது தீர்மானம் செய்யப்படுகிறது.

ஆக என் நுகர்வு அடிப்படையில் தான் வாங்கும் செய்தித்தாள் தீர்மானமாகிறதே தவிர செய்திதாளின் அரசியல் அடிப்படையில் அல்ல.

இந்த பழக்கத்திற்கு மாறிப்பாருங்கள். உங்களுக்கும் பிடித்துப் போகும்.

Yaathoramani.blogspot.com said...


ஆக என் நுகர்வு அடிப்படையில் தான் வாங்கும் செய்தித்தாள் தீர்மானமாகிறதே தவிர செய்திதாளின் அரசியல் அடிப்படையில் அல்ல.

இந்த பழக்கத்திற்கு மாறிப்பாருங்கள். உங்களுக்கும் பிடித்துப் போகும்.//

மிகச் சரியான கருத்து
விரிவான பின்னூட்ட்டத்திற்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

”தளிர் சுரேஷ்” said...

உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன்! தினமலரின் போக்கு சிலவருடங்களாகவே சரியில்லைதான். ஜீவி சார் சொன்ன யோசனை சூப்பர்! நன்றி!

sury siva said...

ஒரு நாளிதழ் நடப்பத்தைச் சொல்லவேண்டும்.
தற்போது எந்த நாளிதழும் அது போல இல்லை.

நடுநிலை என்ற போர்வையும் தேவை இல்லை.
நடப்பதைச் சொல்லும்போது, தான் எந்தப்பக்கம், இந்தப்பக்கமா, அந்தப்பக்கமா என்ற சிந்தனைக்கே இடமில்லை.

சுப்பு தாத்தா.

வெங்கட் நாகராஜ் said...

எந்த நாளிதழும், ஊடகமும் நடுநிலையாகச் செயல்படுவதில்லை.....

G.M Balasubramaniam said...

தமிழ் நாளிதழ் பற்றி ஏதும் சொல்வதற்கில்லை எனக்கு அவற்றைப்படிக்கும் வாய்ப்பு இல்லை. பொதுவாகவே எல்லா ஊடகங்களும் பத்திரிக்கைகளும் ஏதோ சாயம் பூசிக் கொண்டுதான் வருகிறது

S.Venkatachalapathy said...

இந்தப் பத்திரிகைக்கு ஒரு பள்ளி-கல்லூரி வளாகம் உண்டு. அதில் நடக்கும் சின்ன சின்ன, குட்டி குட்டி ஏன் பொடிப்பொடி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் இவர்கள் வெளியிடும் செய்தி ....ஐயோ, என்னா தம்பட்டம் என்னா தம்பட்டம் !!!

S.Venkatachalapathy said...

இந்தப் பத்திரிகைக்கு ஒரு பள்ளி-கல்லூரி வளாகம் உண்டு. அதில் நடக்கும் சின்ன சின்ன, குட்டி குட்டி ஏன் பொடிப்பொடி நிகழ்ச்சிகளுக்கெல்லாம் இவர்கள் வெளியிடும் செய்தி ....ஐயோ, என்னா தம்பட்டம் என்னா தம்பட்டம் !!!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இது ஒருவகையான வியாபாரம்தான் ஐயா.

Unknown said...

நான்தினமலர்படிப்பதைநிறுத்தி ஆண்டுகள்ஓடிவிட்டனபத்திரிகைகளளும் செய்திகளும்விலைபேசப்பட்டுஅதற்கேற்றபடிவெளியாகின்றன

Unknown said...

நான்தினமலர்படிப்பதைநிறுத்தி ஆண்டுகள்ஓடிவிட்டனபத்திரிகைகளளும் செய்திகளும்விலைபேசப்பட்டுஅதற்கேற்றபடிவெளியாகின்றன

Unknown said...

நான்தினமலர்படிப்பதைநிறுத்தி ஆண்டுகள்ஓடிவிட்டனபத்திரிகைகளளும் செய்திகளும்விலைபேசப்பட்டுஅதற்கேற்றபடிவெளியாகின்றன

Yarlpavanan said...

அருமையான பதிவு

http://ypvn.myartsonline.com/

Post a Comment