Tuesday, July 26, 2016

கணந்தோறும் தினந்தோறும்

கணந்தோறும்
தினந்தோறும்

நகரக் காடுகளில்
காங்கிரீட் கூடுகளில்
தவித்துக் கிடக்கின்றன
தாய்ப்பறவைகள்

உடல் அலகுகள்
மனச் சிறக்குகள்
உறுதிப் பெற
பயிற்சிப் பெற

வெளிச் சென்ற
இளங்குஞ்சுகள்

காதல் வலைவிரித்துக்
காத்திருக்கும்
கயவர்களிடன் சிக்கிவிடாது

காம வில்லேந்திக்
காத்திருக்கும்
வேடர்களால் வீழ்ந்திடாது

கூடு வந்துச்
சேர வேண்டி

நாளும்பொழுதும்
இறைவனை வேண்டியபடி

நாளும்
வலையில் வீழும்
குஞ்சுகளின்
எண்ணிகையறிந்து
பயந்தபடியும்

தினமும்
அடிபட்டுப்பட்டுச் சாகும்
குஞ்சுகளின்
நிலையறிந்து
நொந்தபடியும்

நகரக் காடுகளில்
காங்கிரீட் கூடுகளில்
தவித்துக் கொண்டிருக்கின்றன
தாய்ப்பறவைகள்

தினந்தோரும்
கணந்தோரும்

இதற்கொரு
விடிதலை  வேண்டியபடியும்
முடிவினை நாடியபடியும்



7 comments:

”தளிர் சுரேஷ்” said...

விடியல் பிறக்கட்டும் என்று நம்புவோம்!

ஸ்ரீராம். said...

ம்ஹூம்..... (பெருமூச்சு!)

KILLERGEE Devakottai said...

ஒருநாள் விடியலை நம்புவோம் கவிஞரே

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நம்பிக்கை வைப்போம்.

வெங்கட் நாகராஜ் said...

ம்ம்ம்... விடியல் என்றோ?

த.ம. +1

மனோ சாமிநாதன் said...

உருவம் வேறானாலும் தாய்மை என்பது ஒரே மாதிரி தான்!

Thulasidharan V Thillaiakathu said...

ம்ம்ம் அந்த தாய்ப்பறவைகள் பாவம் தான்...ஏக்கம்தான்

Post a Comment