Tuesday, December 13, 2016

கலைஞர் பாணியில்......சின்னம்மா

அண்ணா அவர்கள் மறைந்து அடுத்த
சட்டசபைத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய
காலச் சூழல்

ஏற்கெனவே அண்ணா அவர்களால் எனக்குப் பின்
நாவலர் நெடுஞ்செழியன் எனப் பகிங்கிரமாகவே
அறிவிக்கப்பட்டிருந்த நிலைமை

ஆயினும் கூட சட்டசபை உறுப்பினர்கள் மற்றும்
கட்சித் தொண்டர்கள் மத்தியில் நாவலரை விட
கலைஞருக்கு நெருக்கமும் செல்வாக்கும்
இருக்கும் நிலைமை

சட்டமன்றத் தலைவர் தேர்வில் நெடுஞ்செழியன்
கலைஞர் மற்றும் மதியழகன் ஆகிய மூவரும்
போட்டியிடப் போவதாக பரவலானத் தகவல்

பரபரப்பாக இருக்கிறது தமிழகம்

நாவலர் பெயர் முதலாவதாக முன்மொழியப்பட
பின்  எதிர்பார்த்தபடி கலைஞர் அவர்களது
பெயரும் முன் மொழியப்பட அடுத்து மதியழகன்
பெயரும் முன்மொழியப்படும் ,

அந்த மும்முனைப்
போட்டியில் தான் எளிதாக வெல்ல முடியும்
என நாவலர் அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கும்
வேளையில்,

எதிர்பாராத விதமாக

மதியழகன் அவர்கள் போட்டியிடாது கலைஞர்
அவர்கள் பெயரை முன்மொழியப் புரட்சித் தலைவரும்
கலைஞரை ஆதரிக்க யாரும் எதிர்பாராத வகையில்
கலைஞர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்

பின் நெடுஞ்செழியன் அவர்கள் விலகியதும்
தொடர்ந்து அவர் இடம் காலியாகவே இருப்பதாக
சொல்லிச் சொல்லிச் அவரைச் சேர்ந்ததும் ,
போட்டியிடத் தக்க செல்வாக்கு மிக்கத்
தலைவராக இருந்த மதியழகன் அவர்களை
கட்சித் தொடர்பில் இருந்து விலகி இருக்கும்படியான
சபா நாயகர் ஆக்கியதும், இவையெல்லாம்
கலைஞரின் சாணக்கியத் தனத்திற்கு எடுத்துக் காட்டு

(கட்டுரையின் நோக்கம் அது குறித்து இல்லாத
காரணத்தால்,அது குறித்து விரிவாக எழுத வில்லை )

அன்று கலைஞர் அவர்களின் செல்வாக்கு
சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்
கட்சித் தொண்டர்களிடம் இருந்த அளவு
பொதுமக்களிடமில்லை

பொதுமக்களின் எண்ணத்தில் அண்ணாவுக்குப் பின்
நெடுஞ்செழியன், பேராசிரியர் அவர்களுக்குப் பின் தான்
கலைஞர் என்கிற வரிசையே இருந்தது

கலைஞர் முதல்வர் ஆனதும் பொது மக்களிடம்
தனது இம்மேஜை இவர்களையும் மீறி முன்னெடுத்துச்
செல்லவேண்டிய கட்டாயம்

அப்போதுதான்  அரசின் சேம நலத் திட்டங்களை
மக்களிடம் கொண்டு செல்வது என்கிற நோக்கில்
மக்கள் தொடர்பு அதிகாரிகள் 59 பேர் நியமிக்கப்பட்டது
(அந்தப் பதவியில் உள் நுழைந்தவர்தான்
சசிகலா நடராஜன் அவர்கள் )

அப்போது கலைஞர் அவர்களின் புகைப்படம்
மிக அதிகமாக இருக்கும்படியாக
அதிக அரசு விளம்பரங்கள் வெளியிடப்பட்டன

( மிகக் குறிப்பாக சமூக நலத் துறை சார்பில்
வெளியிடப்பட்ட நாம் இருவர் நமக்கு இருவர்
என்கிற விளம்பரம் கலைஞர் அவர்களின்
உருவம் தாங்க அதிகம் வெளியிடப்பட்ட ஞாபகம்

அப்போது பழைய காங்கிரஸில் முன்னணிப்
பேச்சாளராக இருந்த தீப்பொறி ஆறுமுகம் அவர்கள்
"இந்தப் படத்தைப் பார்த்து விளம்பரத்தைப்
படிக்கிற பெண்களையெல்லாம்
இது கேவலப்படுத்துவதாக்இருக்கிறது.
காரணம் கலைஞர் அந்தப் பெண்களைப்
பார்த்து நாம் இருவர் நமக்கு இருவர் எனக்
கேவலப்படுத்துவதுப் போல இருக்கிறது என
பேசிய ஞாபகம் இன்னமும் என் போன்றோரிடம் உள்ளது )

இத்தனை ஆண்டு காலம் கழித்து...

சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியில்
பதவியில் இருப்பவர்களிடம்
(எல்லோரும் பின்புலத்தில்சின்னம்மா அவர்களிடன்
 ஆதரவுடன் அல்லது அவரைப் பகைக்காது
பதவியைப் பெற்றவர்கள் என்பதால்)
சின்னம்மா அவர்களின் செல்வாக்கு உள்ளது
வெகு ஜன மக்களிடம் இல்லை
கலைஞருக்கு  அப்போதிருந்த
நிலைமையைப் போலவே

ஆனாலும் அன்று கலைஞருக்கு இருந்த
சில எதிர்மறையான விஷயங்களைக் காட்டிலும்
அதிகமாக பல நேர்மறையான விஷயங்கள்
இருந்ததைப் போல இன்று சின்னம்மாவுக்கு இல்லை

மாறாக சில நேர்மறையான விஷயங்களை விட
பல எதிர்மறையான விஷயங்களே அதிகம் உள்ளது

(பதிவின் நீளம் கருதி,
அது என்ன கலைஞரின் பாணி  என்பது
   அடுத்த பதிவில் )

தொடரும்

15 comments:

G.M Balasubramaniam said...

கலைஞருக்குப் பொதுமக்களிடம் அப்போது செல்வாக்கு இருந்தது ஆனால் சசிகலாவுக்கு பொது மக்களிடம் அது இல்லை என்பது என் கருத்து

மனோ சாமிநாதன் said...

மிகுந்த சுவாரஸ்யமாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்!

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

அடுத்த பதிவில் இது குறித்து
கொஞ்சம் விரிவாகவே எழுத வேண்டியது
அவசியம் என தங்கள் பின்னூட்டம் மூலம்
புரிந்து கொண்டேன் உடன் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...


மனோ சாமிநாதன் //

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

இருதயம் said...

சின்னம்மாவா.....? யாருக்கு....? முதல இப்படி கூப்பிடுறத நிறுத்துங்க பாஸ்....

கரந்தை ஜெயக்குமார் said...

பொறுத்திருந்து பார்ப்போம்
என்ன நடக்கப்போகிறது என்று

Avargal Unmaigal said...

டிபன் சாப்பிட வந்தால் விருந்துக்கு ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறீர்களே....விருந்தை எதிர்பார்த்துகொண்டிருக்கிறேன் உங்களைப் போல அனுபவம் உள்ளவர்கள் அரசியல் பாடம் நடத்த வேண்டும்

Yaathoramani.blogspot.com said...

இருதயம் said...//
சின்னம்மாவா.....? யாருக்கு....? முதல இப்படி கூப்பிடுறத நிறுத்துங்க பாஸ்....//

இந்தப் பதிவு எழுதுவதே
அண்ணா தி.மு.க சகோதரர்களுக்காகவே
அவர்கள் சின்னம்மா இல்லை
சசி மேடம் தான் என்பது பதிவினை
முடிக்கையில் புரியவேண்டும்
என எழுதிக்கொண்டிருக்கிறேன்
முதலில் அவர்கள் படிக்க வேண்டுமே
அதற்காகத்தான் அந்தத் தலைப்பு
உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகவும்
பிடித்திருக்கிறது.பின்னூட்டத்திற்கு வாழ்த்துக்கள்

bandhu said...

சசிகலா அவர்களுக்கு மக்களிடையே செல்வாக்கு இல்லை என்பதை விட, அதிமுக ஆட்சியின் எல்லா தவறுகளுக்கும் அவரே காரணம் என்ற கோபம் இருக்கிறது. இந்த கோபம் இல்லாததால்தான் கருணாநிதி தன் இமேஜை மாற்றிக்கொள்ள முடிந்தது. இவரால் அப்படி முடியாது என நினைக்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

bandhu //

.மிகச் சரி
இதைத்தான் சாதக பாதகம் என்கிற வகையில்
விரிவாக எழுதத்தான் இத்தனை முன்னுரை
அருமையான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

செல்வாக்கு இல்லையென்பது கூட
ஒரு பிரச்சனை இல்லை
அம்மாவின் கஷ்டங்களுக்கு (சொத்து குவிப்பு
வழக்கு முதலான விஷயங்கள் )
அவர்தான் காரணம் என்கிற
எதிர்மறையான அபிப்பிராயமே
அதிகம் உள்ளது


Yaathoramani.blogspot.com said...

மனோ சாமிநாதன் //

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

உடன் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //

உடன் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு ஒப்பீடு. மேலும் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதைப் படிக்க ஆவலுடன்.

Post a Comment