Saturday, December 24, 2016

" உங்களால் நான் உங்களுக்காக நான் " என முழங்கிய புரட்சித் தலைவியை

Image may contain: 4 people, people standing and text

" உங்களால் நான்
உங்களுக்காக நான் ".....
என முழங்கிய
புரட்சித் தலைவியை முன் இருத்தி

"உங்களால் நாங்கள்
எங்களுக்காக நீங்கள் "
என  மறைமுகமாய்
நீங்கள்ஆடிய கூட்டத்தின்
அலங்கோலங்கள்
வெட்டவெளிச்சமாகி வருகின்றன

உயிரிடன் இருக்கையில்
இருளில் எங்கேயோ
மறைந்து அதிகார வேட்டை
ஆடியிருந்த கூட்டம்...

அமரரானதும்
அவரைச் சுற்றி நின்று
கோரமுகம் காட்டியது
எங்களுக்கு ஒரு தெளிவைத் தருகிறது

நின்றவர்களுக்கும்
நிற்க உதவியவர்களுக்கும்
எங்கள் மனமார்ந்த நன்றி

"ஓநாய்களும் நரிகளும்
மறைந்து "பிழைத்தலே " சரி
அணில்போல,குருவிபோல
வெட்டவெளியில் உலவுமெனில்
அது நாடாயிருக்கச் சாத்தியமில்லை

மக்கள் நாங்கள்
இது விஷயத்தில்
மிகத் தெளிவாய் இருக்கிறோம்

பதவியைத் தக்கவைக்க
உடன் படம்  மாற்றுவோரே
நீங்கள்தான் தெளிவு கொள்ளவேண்டும்

பதவியில் இருந்தோர்
ஆதரித்த ஜா  அணி கண்ட
பெரும்தோல்வியையும்

தொண்டர்கள்  மக்கள்
ஆதரித்த ஜே அணிகண்ட
மாபெரும் வெற்றியையும்

ஒரு பாடமாய் பதவியிலிருப்போர்
கொள்ளவில்லை எனில்....

முடிவினைச் சொல்லவேண்டுமா என்ன ?

9 comments:

K. ASOKAN said...

நல்ல பதிவு

G.M Balasubramaniam said...

முடிவு நீங்கள் நினைக்கும்படி இருக்க வாழ்த்துகிறேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

"உங்களால் நான் உங்களுக்காக நான்" என புரட்சித் தலைவி அவர்கள் முழங்கியது, தமிழ்நாட்டு ஏழை எளிய மக்களையும், எந்த அரசியல் கட்சிகளையும் சாராத பொதுவான வாக்காளப் பெருமக்களையும், தனது சொந்தக் கட்சியின் ஒன்றரைக்கோடி தொண்டர்களையும் பார்த்து மட்டுமே.

தனது தோழியையோ, தனது அமைச்சரவை சகாக்களையோ, தன் கீழ் வேலைபார்க்கும் அதிகாரிகளையோ பார்த்துச் சொன்னது அல்ல, அந்த வாசகம் என்பதை அனைவரும் இங்கு நினைவில் கொள்வது நல்லது.

சமீபத்திய தேர்தலில் பெரும்பான்மை வாக்குகள் குவிந்து தனியாக ஆட்சி அமைக்க உதவியது, புரட்சித் தலைவி என்ற மாபெரும் செல்வாக்கினைப் பெற்றிருந்ததோர் உருவத்திற்காக மட்டுமே அல்லாமல் வேறு யாருக்காகவும் இல்லை என்பது, அடுத்த பொதுத்தேர்தல் வந்தால் மட்டுமே அனைவருக்கும் உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரியவரும்.

திண்டுக்கல் தனபாலன் said...

விரைவில் முடிவுக்கு...?

கரந்தை ஜெயக்குமார் said...

நல்லதே நடக்கட்டும்
அறம் வெல்லட்டும் ஐயா
அருமை
தம +1

தி.தமிழ் இளங்கோ said...

நன்றாகவே சொன்னீர்கள். // ஆகட்டும் பார்க்கலாம்; ஆட்டத்தின் முடிவிலே //

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.

நல்லது நடக்க வேண்டும்....

இராய செல்லப்பா said...

"நிலை மாறினால் குணம் மாறுவார் - பொய்
நீதியும் நேர்மையும் பேசுவார்..." என்று கண்ணதாசன் சொன்னது பொய்யாகுமா? கொஞ்சகாலம் பொறுப்போம், உண்மை தெரியாமலா போகும்? - இராய செல்லப்பா நியுஜெர்சியில் இருந்து

Thulasidharan V Thillaiakathu said...

அருமை!

Post a Comment