Thursday, December 15, 2016

கலைஞர் பாணியில் ...சின்னம்மா ( 2 )

அன்று அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த
காலச் சூழலில் கலைஞருக்கு இருந்த
பாதகமான சூழல் எனில்...

இலக்கியம் சார்ந்து அவரின் படைப்புகள்
ஒரு சராசரி மனிதனை முகம் சுழிக்க
வைக்கும்படியாகவே இருந்தது

கான்ஸ்டெபில் கந்தசாமி,( மகள்  மீது
 ...... புத்தகம் கிடைத்தால் படிக்கவும் ...)

மறக்க முடியுமா (போதையில் தங்கையை
புணர வரும் அண்ணன் )

"வனவாசத்தில் " கண்ணதாசன் கலைஞர் குறித்து
எழுதி இருந்த குறிப்புகள்

சட்டசபையில் அனந்த நாயகி அம்மையாரை
மடக்கும் விதமாக "அனந்த நாயகிக்கு
அண்ணாவின் மூக்கருகில் என்ன வேலை
என்றது...

பின் "நாடாவை அவிழ்த்துப் பார்த்தால் " என
இரு பொருள்படும்படி ஒரு விஷயத்திற்கு
விளக்கம் அளித்தது.

இப்படி மிக நன்றாகத் துடுக்காகப் பேசுவதான
எண்ணத்தில் பொதுவெளியில் கொஞ்சம் கூடுதலாகப்
பேசி அண்ணா, நெடுஞ்செழியன் பேராசிரியர்,நாஞ்சிலார்
சி;பி சிற்றரசு இவர்கள் எல்லாம் ஒரு நிலை என்றால்
கலைஞர் அடுத்த நிலை என்கிற அபிப்பிராயம்
தோன்றும்படி இருந்தது,,,

( இதன் தொடர்ச்சியாய் முதல்வர் பதவியில்
இருக்கையில்ஊழல் பரவலாக உள்ளதாக
 இராஜாஜி அவர்கள்சொன்னதற்கு மறு மொழியாக
"மூதறிஞரின்ஆண்மையற்றப் பேச்சு "
எனச் சொன்னது அப்போதுஅதிக
விமர்சனத்துக்குள்ளானது.

இதற்கு கடுமையான தலையங்கத்தை
அன்றைய ஹிந்து நாளிதழ்
வெளியிட்டதாக ஞாபகம் )

இது எல்லாம் கட்சிக்கு வெளியே உள்ளவர்களின்
மன நிலையில் இருந்த குமைச்சல்
.
.கலைஞர் முதல்வர் தேர்வில் இருக்கிறார்
எனக் கேள்விப்படஅப்படி நடந்து விடக் கூடாது
எனக் கட்சிச்சாராத பொது ஜனம்
எண்ணும்படியாக இருந்த சூழல்

ஆனால் முதல் தேர்வுக்கு மக்கள் தேவையில்லையே
சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால்
போதும்தானே

அதற்கு அவருக்குச் சாதகமான அம்சங்கள்
அவருக்கு அன்று நிறையவே இருந்தது

முதல் சாதகம் அண்ணா இறக்கும் தருவாயில்
தி.மு கழகம் சட்டமன்றத்தில்
 முழு மெஜாரிட்டியுடன்இருந்தது
.
.(இப்போது அ.தி.மு.க வுக்கு இருப்பதைப் போலவே )

கலைஞர் அமைச்சரவையில் பொதுப்பணித் துறை
அமைச்சராகவும், கட்சியிலும்
முக்கியப் பொறுப்பில்  இ ருந்தது

அண்ணா, பேராசிரியர்,மற்றும் நாவலர் இவர்களை விட
கட்சிக்காரர்களிடம் நெருக்கமாகவும், இணக்கமாகவும்
எப்போதும் உடன் சந்திக்கும்படியான நிலையிலும்
இருந்தது

சினிமா தொடர்புடையவராக இருந்ததால்
மக்கள் செல்வாக்குள்ள புரட்சித் தலவர் மற்றும்
இலட்சிய நடிகர் இவர்கள் ஆதரிக்கும் படியாக
இருந்தது

அண்ணா இறந்த தருணத்தில் பொதுப்பணித்துறை
அமைச்சர் என்கிற கோதாவிலும், கூடுதல்பற்றுடைய
தம்பி என உணர்த்தும்விதமாக அண்ணா நினைவிடம்
அமைப்பதற்கான செயல்பட்ட வேகம்,,

அன்று வானொலியில் கல்லும் கரையும் விதமாக
ஆற்றிய கவித்துவமான இரங்கல் சொற்பொழிவு..

இவைகள் இவருக்கு முந்தியவர்களாகத் தெரிந்தவர்களை
கொஞ்சம் பின் நகர்த்தி வைத்தது என்றால
அது மிகையில்லை

மேலும் முன் பதிவில் சொன்னபடி
 மதியழகன் அவர்களைக் கடைசி நிமிடம்வரை
போட்டியாளர் போலவே இரகசியம் பாதுகாத்து
கடைசி நிமிடத்தில் தன்னை ஆதரிப்பவராகக் காட்டி
அனைவரையும் திகைக்கச் செய்த இராஜ தந்திரம்

பேராசிரியரை அன்றுமுதல் இன்றுவரை
இணையாகவே கொண்டு செல்லும் சாதுர்யம்

இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்

அதனால்தான் அவர் முதல்வராகவும்
கட்சித்தலைவராகவும் பொறுப்பேற்கவும் முடிந்தது
தொடரவும் முடிந்தது

அதனால்தான் தான் பதவி ஏற்று அடுத்து வந்த
பொதுத் தேர்தலில் அவர் தலைமையிலான
தி.மு. கழகத்தை மீண்டும் அரியணை ஏற
வைக்க முடிந்தது

இன்றும் அதே மெஜாரிட்டி அ.தி.மு.க வுக்கு இருக்கிறது

(ஆனால் சட்டசபை அங்கத்தினராக சின்னமா இல்லை
ஆதலால் முதல்வர் என்கிற பேச்சுக்கே இப்போது
இடமில்லை )

அதே சமயம் சர்வவல்லமைப் படைத்த
பொதுச்செயலாளர் பதவிக்கு முயல்வது என்பது
அவருக்கு இப்போதுள்ள சூழ் நிலையில்
மிக மிக அவசியமானது

ஆனால் கட்சிக்கு எப்படி இருக்கும்  ?

(நீளம் கருதி அடுத்த பதிவில்  )

5 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நான் அறிந்தும் அறியாமலும், புரிந்தும் புரியாமலும் இருந்த என் பள்ளிப்பருவ இறுதி ஆண்டுக்குப்பின்னும், ஆனாலும் நான் 18-வயதை எட்டுவதற்கு முன்னும் நடைபெற்றுள்ள பல்வேறு தமிழக அரசியல் சரித்திரங்களை, தங்களின் தனிப் பாணியில் சரமாரியாக எடுத்துரைத்து சாதனை செய்துள்ளீர்கள். பாராட்டுகள். நன்றிகள்.

//அன்று வானொலியில் கல்லும் கரையும் விதமாக ஆற்றிய கவித்துவமான இரங்கல் சொற்பொழிவு..//

’ஓர் விரல் காட்டினாயே அண்ணா ....’ என ஆரம்பிக்கும் என நினைக்கிறேன்.

S.P.SENTHIL KUMAR said...

அறியாத அன்றைய அரசியலை அற்புதமான பதிவாக தந்திருக்கிறீர்கள் அய்யா. அடுத்த நடந்ததை அறிய தொடர்கிறேன்.
த ம 2

கரந்தை ஜெயக்குமார் said...

அன்றைய நிகழ்வுகளை
நினைவில் கொண்டு வந்து
எங்களுக்கும் அறியத் தந்துள்ளீர்
நன்றி ஐயா

G.M Balasubramaniam said...

என்னதான் செய்திகள் தெரிந்தாலும் நம் மக்கள் ஆட்டு மந்தைகள் போன்றவரே

வெங்கட் நாகராஜ் said...

அன்றைய அரசியலின் தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. தொடர்ந்து வாசிக்கக் காத்திருக்கிறேன்.

Post a Comment