Tuesday, January 3, 2017

காலமும் வாழ்வும்

நாங்கள்  பயணித்துக்கொண்டிருந்த
புகைவண்டிப் பெட்டிக்குள் 
அந்த அழகிய வண்ணத்துப் பூச்சி
எப்படி வந்தது எனத் தெரியவில்லை

தன் வண்ணங்களில்
தானே கௌரவம் கொண்டபடி
தான் பயணிக்கும்
 திசையையும் வேகத்தையும்
முடிவெடுக்கும் அதிகாரம்
தன்னிடம் இருப்பதான மமதையில்
மிக மிக சந்தோஷமாய்
பெட்டிக்குள் வளைய வந்து கொண்டிருந்தது
அந்த வண்டி குறித்த
எவ்விதப்  புரிதலுமின்றி
 அந்த அழகிய வண்ணத்துப் பூச்சி

பெட்டிக்குள் பயணிக்கும்
 எது குறித்தும்
எவ்வித சிந்தனையுமற்று
வடக்கு திசை நோக்கி
அதி வேகத்தில் பறந்து கொண்டிருந்தது 
அந்த அதிசயப் புகைவண்டி

13 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

வடக்கு திசை நோக்கி...?

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //
வடக்கு திசை நோக்கி...?//

சரண யாத்திரை
தெற்கு நோக்கி
மரண யாத்திரை வடக்கு நோக்கித்தானே ?
வண்டியில் ஏறிய நொடி முதல்
எவ்வுயிருக்குமான பயணம்
வடக்கு நோக்கித்தான் இல்லையா ?

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நல்ல ரசனை.

மாதேவி said...

அருமை.

KILLERGEE Devakottai said...

வடக்கு திசை நான் அடிக்கடி குறிப்பிடுவேன்.... மரண திசையென்று.

Yarlpavanan said...

அருமையான பா/கவிதை வரிகள்

ஸ்ரீராம். said...

குறியீடு!

வலைய = வளைய

வெங்கட் நாகராஜ் said...

அருமை.

ஜீவி said...

வடக்கு நோக்கிய ஆராய்ச்சியில்
'புகை வண்டியும் அந்த வண்ணத்துப் பூச்சியும் '
அழகிய கனவு கலைந்து விடும் போலிருக்கே!

Thulasidharan V Thillaiakathu said...

அருமை! வடக்கு நோக்கி!!!

G.M Balasubramaniam said...

அந்த வண்ணத்துப் பூச்சி அறியுமா புகை வண்டிப்பெட்டியில் அல்லாமல் அதால் அத்தனை தூரம் கடக்க இயலாது என்று அறியாமலேயே வியக்க வைக்கும் ஒரு பயணம்

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு தத்துவ கவிதை! பாராட்டுக்கள் ஐயா!

Post a Comment