எதைப் பறக்க வைப்பது
எதை இறக்கி வைப்பது
காற்றுக்கு அது தெரியும்
பறக்க நினைப்பதுதான்
காற்றைப் புரிந்து கொள்ளவேண்டும்
எதனைமுளைக்கச் செய்வது
எதனை மக்கச் செய்வது
மண்ணுக்கு அது தெரியும்
முளைக்க முயல்வதுதான்
தன்னுள் உயிர் கொள்ள வேண்டும்
எதனை மிதக்கச் செய்வது
எதனை மூழ்கச் செய்வது
நீருக்கு அது தெரியும்
மிதக்க நினைப்பதுதான்
தன்னை தகவமைத்துக் கொள்ளவேண்டும்
எதனை அணைத்து எரிப்பது
எதனை எரிக்காதுக் கடப்பது
நெருப்புக்கு அது தெரியும்
நிலைக்க நினைப்பதுதான்
தன்னை திடப்படுத்திக் கொள்ளவேண்டும்
எதனைக் கடத்தி ரசிப்பது
எதனை அழித்துச் சிரிப்பது
காலத்திற்கு அதுதெரியும்
காலம் கடக்க நினைப்பதுதான்
தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்
எவரை ஆளவைப்பது
எவரைப் பொறாமையில்
வேகவைப்பது
அது ஆண்டவனுக்குத் தெரியும்
நிலை மறந்ததுதான்
தன்நிலை அறியப் பயிலவேண்டும்
10 comments:
உவமை அருமை கவிஞரே
த.ம.2
கேவலமான அரசியல் நிகழ்வுகள்..... :(
அருமை ஐயா...
அருமை
உவமைகள் அழகு. நிகழ்வுகள் மோசம். நல்லது நடக்க வேண்டும்..
//எவரை ஆளவைப்பது, எவரைப் பொறாமையில்
வேகவைப்பது அது ஆண்டவனுக்குத் தெரியும்.//
தங்களின் இந்த ஆதங்கக் கவிதை மிகவும் நியாயமானது. போகப்போகத் தெரியும் !
ரசித்தேன்.
அருமை!
வார்த்தைகள் வந்து விழும் லாவகம் ரசிக்க வைக்கிறது லாவகமா லாகவமா....?
G.M Balasubramaniam //
லாவகம்தான் என நினைக்கிறேன்
Post a Comment